தலைநகரை மட்டுமல்லாது, மொத்த தமிழகத்தையும் வாட்டி வதைக்கிறது டெங்கு. கூடவே, மர்ம காய்ச்சல் பீதியும் சேர்ந்துவிட்டதால் அரசு மருத்துவமனைகளுக்கு படையெடுக்கின்றனர் மக்கள். இந்த காய்ச்சலால் தமிழகத்தில் அடுத்தடுத்து நடந்த இரு மரணங்களும் அதையொட்டிய அலட்சியங்களும் அரசு நிர்வாகத்தை உலுக்கும் எச்சரிக்கை கேள்விகள்!மழைக் காலம் தொடங்கிவிட்டாலே அழையா விருந்தாளியாக வகை வகையான காய்ச்சல்களும் வரத் தொடங்கிவிடுகின்றன. இந்த ஆண்டு மதுரவாயலில் நான்கு வயதுச் சிறுவன் ஒருவன், டெங்கு காய்ச்சலுக்கு பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சோகத்தில் இருந்து மக்கள் மீள்வதற்குள் திருவாரூரில் பயிற்சி மருத்துவர் சிந்து, காய்ச்சலால் உயிரிழந்த சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.டெங்கு காய்ச்சலின் பரவல் குறித்துப் பேசும் அரசு மருத்துவர்கள் சிலர், ``வெப்ப மண்டல, துணை வெப்ப மண்டல நாடுகளிலேயே டெங்கு நோய் அதிகமாகக் காணப்படுகிறது. `ஏடிஸ் எஜிப்தி’ வகையான பெண் கொசுக்கள் கடிப்பதால் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. ஒவ்வோர் ஆண்டும் இந்த நோய்க்கு 40 ஆயிரம் மக்கள் பலியாகிறார்கள். இதில் கொடுமையான விஷயம், டெங்குவை தடுப்பதற்கோ, குணப்படுத்துவதற்கோ இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதுதான்..தமிழ்நாட்டில் காய்ச்சலால் அடுத்தடுத்து உயிரிழப்புகள் ஏற்பட்டதால் அரசு தீவிரமாக களமிறங்கியுள்ளது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஏற்கெனவே இருக்கும் ‘டெங்கு’ வார்டுகள் தூசி தட்டப்பட்டன. சென்னையைப் பொறுத்தவரை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை மற்றும் தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனை ஆகியவற்றில் ‘டெங்கு’வால் பாதிக்கப்பட்டவர்களை அனுமதிப்பது வழக்கம்.ஆனால், இந்த ஆண்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையை நோக்கி ‘டெங்கு’ நோயாளிகள் திருப்பிவிடப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதர அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல் நோயாளிகள் குவிந்தால், ஊடகங்களின் பார்வை விழுந்துவிடும் என்ற அச்சம்தான் காரணமாம். இந்த டேக் டைவர்ஷன் முறையால், ராயப்பேட்டையில் 14 பேரும் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ஆறு குழந்தைகளும் டெங்கு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மாநகராட்சி தொற்றுநோய் மருத்துவமனையில் பல்வேறு காய்ச்சல் தொடர்பாக 232 பேர் வெளிப்புற நோயாளிகளாக சிகிச்சை பெற்றுச் சென்றுள்ளனர். இங்குள்ள ‘டெங்கு’ வார்டில் நான்கு பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்" என்றனர்.டெங்கு பரவல் குறித்து நம்மிடம் பேசிய சூழலியலுக்கான மருத்துவர்கள் சங்கத்தைச் சேர்ந்த டாக்டர் வீ.புகழேந்தி, ‘‘புவி அதிக வெப்பம் அடைந்தால் கொசுக்களின் இனப்பெருக்கம் குறையும். அதேநேரம், கொசுவின் உடம்பில் இருக்கக்கூடிய வைரஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். எனவே, புவி வெப்பம் அடைதலும் டெங்குவுக்கு ஒரு காரணம்..ஒரு செல்போனும் வலைவீச சில வார்த்தைகளும் இருந்தால் போதும்போல… படித்தவர், படிக்காதவர் என பணத்தைக் கொடுத்து ஏமாறுவதில் யாரும் சளைத்தவர்கள் அல்ல. அந்தவரிசையில், ஆசிரியர்களை ஏமாற்றி லட்சங்களை சுருட்டிய தொண்டு நிறுவனத்தின் செயல், தூத்துக்குடியின் வைரல் டாபிக்.``என்ன நடந்தது?" என ஆசிரியைகளுக்கு நீதி கேட்டுப் போராடிவரும் மைக்கேல் அன்டோ ஜீனியஸிடம் கேட்டோம். “தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள்தான் `நீம்' அறக்கட்டளையின் இலக்காக இருந்துள்ளனர். இந்நிறுவனத்தின் தலைவர் லூயிஸ் ராஜ்குமார், தனது மனைவியுடன் சேர்ந்து தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியைகளின் விவரங்களைச் சேகரித்துள்ளார்.அவர்களைத் தொடர்புகொண்டு, ‘சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றைக் கொண்டுவந்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உங்களுக்கு வேலை தயார். மாவட்ட கல்வி அதிகாரிகளிடமும் அனுமதி வாங்கிவிட்டோம்’ என்று வலைவிரித்துள்ளது. இதை நம்பி பேசியவர்களிடம், ‘வேலை கியாரண்டி. அதற்காக நீம் ஃபவுண்டேஷனுக்கு 50 ஆயிரம் ரூபாயை டெபாசிட் செய்யவேண்டும். ஆரம்பத்தில் 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைக்கும். பிறகு, திறமையைப் பொறுத்து சம்பளம் உயரும்’ என்று அள்ளிவிட்டுள்ளனர்.அதை நம்பி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் முன்னூறுக்கும் மேற்பட்டவர்களிடம் வசூல் வேட்டையை நடத்தியுள்ளனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து ஐந்து மாதங்களுக்கு சம்பளம் கொடுத்தனர். அதன்பிறகு கொடுக்கவில்லை. கேட்டால், ‘ முன்ன பின்னதான் வரும். பயப்படத் தேவையில்லை’ என்று லூயிஸ் சமாளித்திருக்கிறார். ஒருகட்டத்தில் அவரை போனில்கூட பிடிக்க முடியவில்லை.அதன்பிறகுதான், தாங்கள் ஏமாற்றப்பட்டதை ஆசிரியர்கள் உணர்ந்தனர். இதுதொடர்பாக, காவல் நிலையத்தில் புகாரும் கொடுத்தனர். ஆரம்பத்தில் வேலைக்குச் சேர்ந்தவர்கள் எல்லாம் கொடுத்த பணத்தை சம்பளமாக வாங்கிவிட்டனர். கடந்த நான்கு மாதங்களில் வேலைக்கு சேர்ந்தவர்களுக்கு ஏமாற்றம்தான். ஒரு தனிநபர், ஆசிரியர் வேலையும் கொடுத்து சம்பளமும் கொடுக்கிறார் என்றால் அதைப்பற்றி அதிகாரிகள் விசாரிக்க வேண்டாமா? அதிகாரிகளின் அலட்சியமே அனைத்துக்கும் காரணம்” என்றார்..நீம் ஃபவுண்டேஷன் தலைவர் லூயிஸ் ராஜ்குமாரிடம் விளக்கம் கேட்க அவரின் அலுவலகம் சென்றோம். அது பூட்டிக் கிடந்ததால், அவரின் செல்போன் எண்ணுக்குத் தொடர்பு கொண்டோம். அப்போதும் பதில் வரவில்லை. வாட்ஸ்ஆப் மற்றும் குறுஞ்செய்தி மூலமாக தகவல் அனுப்பியும் அவரிடம் எந்தப் பதிலும் இல்லை.நீம் ஃபவுண்டேஷன் மோசடி குறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜிடம் கேட்டபோது, “ அண்மைக்காலமாக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. அதற்குக் காரணம், அரசுப் பள்ளிகளில் கட்டமைப்பு சிறப்பாக இருப்பதுதான். அதனால்தான் தொண்டு நிறுவனங்கள் மூலம் வந்த ஆசிரியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், அது தவறாகப் போய்விட்டது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனையில் இருந்து தப்பித்துவிடக்கூடாது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க போலீஸ் எஸ்.பி.க்கு பரிந்துரை செய்திருக்கிறேன்” என்றார்.ஆசிரியர்களே ஏமாந்தால் யார் பாடம் எடுப்பது? - எஸ்.அண்ணாதுரை