-தர்ஷினி அமைச்சர் உதயநிதி கொளுத்திப்போட்ட சனாதன சர்ச்சை, இந்தியா கூட்டணியிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. ‘உதயநிதியின் தலையை சீவினால் 10 கோடி ரூபாய் பரிசு’ என உ.பி சாமியார் அறிவிக்க, `தலையை சீவ பத்து ரூபாய் சீப்பு போதும்' என உதயநிதி கலாய்க்க, டுவிட்டர் தளமே பற்றியெறிந்து கொண்டிருக்கிறது. சரி.. இதற்கு இவர்கள் என்ன சொல்கிறார்கள்? .“உதயநிதியின் பேச்சு அறியாமையின் வெளிப்பாடு!" -கே.டி.ராகவன், பா.ஜ.க முன்னாள் பொதுச்செயலாளர் ‘சனாதன தர்மத்தை ஒழிப்போம்’ என்று விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருப்பது நகைச்சுவையாக இருக்கிறது. ஆதியும் அந்தமும் இல்லாதது சனாதன தர்மம். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு குணம் உண்டு என்பதுபோல ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு குணம் உண்டு. இந்தியாவின் அடித்தளம் ஆன்மிகம். இதையே சுவாமி விவேகானந்தரும் மகாத்மா காந்தியும் வலியுறுத்தி உள்ளனர். சனாதன தர்மம் என்பது மனித குலத்துக்கு வழிகாட்டியாக இருந்துவருகிறது. இந்திய நாட்டின் ஆன்மாவாக உள்ள சனாதன தர்மத்தை ஒழித்துக் காட்டுவேன் என்று கூறுவது அதைப்பற்றிய புரிதல் இல்லாததையே காட்டுகிறது. தமிழகம் ஆன்மிக பூமி. ஆழ்வார்களும் நாயன்மார்களும் அவதரித்த பூமி, சித்தர்கள் வாழ்ந்த, வாழுகின்ற பூமி. .`அரசியல்ரீதியாக வெற்றி பெற்றுள்ளதால், நாம் பேசுவதை தமிழக மக்கள் ஆதரிப்பார்கள். அதனால் என்ன வேண்டுமானாலும் பேசலாம்' என்று நினைத்தால் இதைவிட அறியாமை எதுவும் இல்லை. தமிழக மக்களில் பெரும்பாலானோர் இந்துக்கள். அப்படியிருக்கையில் இந்து நம்பிக்கைகளையும் அதனைச் சார்ந்த தர்மங்களையும் கொச்சைப்படுத்துவது தி.மு.க-வினருக்கு தோல்வியைத்தான் தரும். மேலும், அரசியல் சட்டப்படி மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒருவர், அதிலும் ஓர் அமைச்சராக இருப்பவர் பெரும்பான்மை சமூகத்தின் நம்பிக்கைகளை இழிவுபடுத்துவது என்பது அமைச்சர் பதவிக்கே கேடானது. தேர்தல் வரும்போது, ‘எங்களின் கட்சியில் இருப்பவர்கள் 90 சதவிகிதம் இந்துக்கள்தான்’ என்பதும் தேர்தல் முடிந்தபின் இந்து நம்பிக்கைகளை நிந்திப்பதும் தி.மு.க.வின் வாடிக்கையாகிவிட்டது. .ஆனால், இந்தமுறை நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே இப்படிப் பேசத் தொடங்கியுள்ளனர். இது நிச்சயம் நாடு முழுவதும் எதிரொலிக்கும். தேர்தலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். உதயநிதி ஸ்டாலினின் சனாதன தர்ம எதிர்ப்பு பேச்சுகள் நாட்டு மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. இதனை சமூக வலைதளங்களில் காண முடிகிறது. சனாதன தர்மத்தை ஒழிக்க நம் நாட்டை ஆக்ரமித்த மொகலாயர்களும் ஆங்கிலேயர்களும் முயன்றும் தோற்றுப் போனார்கள் என்பதை வரலாறுகள் மூலமாக தி.மு.க தெரிந்து கொள்ளவேண்டும். “வன்முறையைத் தூண்டி குளிர்காய நினைக்கிறார்கள்” -ஐ.பரந்தாமன், தி.மு.க எம்.எல்.ஏ அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது சரிதான். அவர் சனாதனம் பற்றித்தான் பேசினாரே தவிர இந்துக்கள் பற்றியோ, இந்து மதம் பற்றியோ எதுவும் பேசவில்லை. இந்து மதத்தில் குறிப்பாக உயர் வகுப்பில் இருக்கும் பிராமண சமுதாயத்தில்கூட ஆண்களுக்கு சாதகமாகத்தான் சனாதனம் இருக்கிறது. அங்கு இருக்கும் பிராமணப் பெண்களுக்கு இவர்கள் சொல்லும் சனாதனம் எதிராக உள்ளது. .சனாதனத்தில் சொல்வது என்னவென்றால், ‘பிராமணப் பெண்கள் கணவர் மறைந்த பிறகு, வெள்ளை புடவை அணியவேண்டும், மொட்டை அடித்துக் கொள்ளவேண்டும், கல்வி கற்றுக்கொள்ள கூடாது’ போன்ற எண்ணற்ற விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இது குறிப்பிட்ட வகுப்பைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் எல்லா சாதியிலும் சனாதனம் இருக்கிறது. இதனை எதிர்த்துதான் உதயநிதி பேசினார். பிறப்பால் உயர்வு, தாழ்வு இல்லை. பிறப்பின் அடிப்படையிலும் தொழிலின் அடிப்படையிலும் அவர்களை அணுகுவது தவறு. எல்லாரும் சமம் என்பதைத்தான் அமைச்சர் பேசினார். ஆனால், அதை பா.ஜ.க.வினர் அப்படியே திரித்துப் பேசி வருகின்றனர். மரபை அழிக்க வேண்டும், ஒழிக்க வேண்டும் என்பதற்கும் மனிதனை அழிக்க வேண்டும், ஒழிக்க வேண்டும் என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. மரபை அழிக்க வேண்டும் என்று பேசியது இனப்படுகொலை கிடையாது. சனாதனம் என்கிற மரபைத்தான் அழிக்க வேண்டும் என்று அவர் சொன்னார். மனிதனை அழிக்க வேண்டும் என்று பேசினால்தான் இனப்படுகொலை. பா.ஜ.க.வினரிடம் கேட்கிறேன்... வடமாநிலத்தில் இருக்கும் பா.ஜ.க. தலைவர்கள், `இஸ்லாமிய சகோதர, சகோதரிகளை வேரோடு களைய வேண்டும். அவர்கள் பாகிஸ்தான் நாட்டுக்குப் போகவேண்டும். அவர்கள் இந்தியாவில் இருக்கக்கூடாது’ என்று பேசினார்களே? அது இனப்படுகொலை ஆகாதா? `இந்தியா’ கூட்டணி, பெருமளவுக்கு வேகமெடுத்துப் போகிறது. பிரதமர் மோடியை மாற்றுவதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள். எல்லாவற்றையும் திசைதிருப்பவே இதுபோன்ற வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. அமைச்சர் பேசிய கருத்தை கருத்தியலாக எதிர்கொள்ளலாமே? கருத்துக்கு கழுத்தை அறுப்பேன் என்று சொல்வது படுகொலை கிடையாதா? .வட இந்தியாவில் எப்படி வன்முறைகள், கலவரத்தைத் தூண்டி குளிர்காய முற்பட்டார்களோ, அதேபோல் தமிழ்நாட்டிலும் செய்யமுடியுமா? என்று பா.ஜ.க ஏங்கிக்கொண்டிருக்கிறது.