காக்கா - கழுகு ஒப்பீட்டைப் பேசி ‘ஜெயிலர்’ படத்துக்கு இலவச பப்ளிசிட்டியை தேடிக் கொடுத்த ரஜினி, இமயமலை சென்ற கையோடு உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் ‘ஜெயிலர்’ படம் பார்க்கவிருப்பதாகக் கூறியதோடு, அவர் காலைத் தொட்டு வணங்கியிருப்பது புதிய சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்காக ரஜினி குரல் கொடுக்கப் போவதற்கான முன்னோட்டமா இந்த சந்திப்பு? ‘‘ஸ்டாலின் மட்டும் படம் பார்க்கலாமா?’’எம்.சக்கரவர்த்தி, பா.ஜ.க. மாநில துணைத் தலைவர்நடிகர் ரஜினியைப் பொறுத்தவரை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட பல பா.ஜ.க. தலைவர்-களுடன் இணைக்கமாக இருக்கக்கூடியவர். ‘அமித்ஷாவும் மோடியும் கிருஷ்ணன்-அர்ஜுனனைப் போன்றவர்கள். அவர்களில், யார் கிருஷ்ணன்... யார் அர்ஜுனன் என்பது, அவர்களுக்குத்தான் தெரியும்’ என சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புகழ்ந்து பேசினார்.ரஜினிகாந்த், கட்சி தொடங்குவதாக அறிவித்தபோதுகூட பா.ஜ.க. தான் பின்னிருந்து இயக்குவதாகப் பேசினார்கள். உண்மையில் ரஜினிகாந்த் ஆன்மிகத்தை விரும்பக்கூடியவர்.அந்த-வகையில் ஆன்மிக அரசியலை முன்னெடுத்து வரும் பா.ஜ.க.வின் கொள்கையும் நடிகர் ரஜினியின் கொள்கையும் ஒத்துப்போகிறது. இதையெல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாத சிலர், ரஜினி_- பா.ஜ.க. இடையே பிரச்னை ஏற்படுத்தப் பார்க்கிறார்கள்.இமயமலை சென்றிருக்கும் ரஜினி, அங்கிருந்து லக்னோ சென்றிருக்கிறார். அங்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்தியநாத்துடன் ’ஜெயிலர்’ படம் பார்க்க இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். இதில் என்ன தவறு? முதல்வர் யோகி ஆதித்தியநாத்துடன் படம் பார்க்கப்போவதாக அறிவித்ததற்கே சிலர் அரசியல் சாயம் பூசத் தொடங்கிவிட்டார்கள்.நாங்குநேரியில் பள்ளி மாணவர் ஒருவரை, வேறு சில மாணவர்கள் கத்தியால் கடுமையாகத் தாக்கிய சம்பவம் நடந்தது. இந்த விஷயம் தமிழகத்தை உலுக்கிய நேரத்தில், அந்தப் பகுதிக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் சொல்லவில்லை. அதற்கு பதிலாக ஜெயிலர் படத்தை பார்க்கவில்லையா?தமிழகமே சோகத்தில் மூழ்கியிருந்த நேரத்தில், ஸ்டாலின் மட்டும் சினிமா பார்க்கலாம்; யோகி ஆதித்தியநாத் ஜெயிலர் படம் பார்ப்பது தவறா? கேரளமுதல்வர் பினராயி விஜயன்கூட இதே ஜெயிலர் படத்தைப் பார்த்தாரே? அப்போதெல்லாம் அமைதியாக இருந்தவர்கள், இப்போது குதிப்பது ஏன்?ரஜினி ரசிகர்களை பா.ஜ.க.வுக்கு எதிராக திசை திருப்பவே, இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் பேசிவருகின்றன. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்குத் தோல்வி என்பது கருத்துக்கணிப்பில் உறுதியாகிவிட்டது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல், ரஜினி விவகாரத்தை, அவர் தனது சொந்த விருப்பத்தின்பேரில் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்ததையெல்லாம் கையில் எடுத்து மக்களை திசைதிருப்பப் பார்க்கின்றனர்..‘‘தேர்தலுக்காக பா.ஜ.க. செய்யும் செயல்!’’-பழ.கருப்பையா, தலைவர் -தமிழ்நாடு தன்னுரிமை கழகம்நடிகர் ரஜினிகாந்த், 2020ம் ஆண்டு கட்சி தொடங்கப்போவதாக அறிவித்தார். அப்படி அவர் கட்சி தொடங்குவதாக அறிவித்ததற்குக் காரணமே பா.ஜ.க.தான்.ரஜினி கட்சி தொடங்குவதாகச் சொன்னபோது, அந்தக் கட்சியைக் கட்டமைக்க ஆர்.எஸ்.எஸ்.காரர்கள்தான் பின்புலமாக இருந்தனர். இதிலிருந்து ரஜினியும்ஆர்.எஸ்.எஸ்.காரர் என்பதை அனைவருக்கும் புரிந்துகொள்ள முடியும்.2021 சட்டமன்றத் தேர்தலில் ரஜினி தொடங்கும் கட்சியுடன் பா.ஜ.க. தேர்தலை சந்திக்கலாம் என நினைத்துக் கொண்டிருந்தது. அதற்காக, ‘புதிய கட்சிக்கு செலவு, 2021 சட்டமன்றத் தேர்தல் செலவு என அனைத்தையும் பா.ஜ.க. பார்த்து கொள்ளும்’ என ரஜினியிடம் வாக்குறுதி கொடுத்தது.‘முதல்வராக மட்டும் நீங்கள் இருந்தால் போதும், அமைச்சரவை உள்பட மற்ற அனைத்தையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்’ என ரஜினியிடம் பா.ஜ.க. கூறியது. ஆனால், சூப்பர் ஸ்டாராக இருந்துவிட்டு, ஒரு பொம்மையாக, அடிமையாக இருக்க ரஜினி விரும்பவில்லை. அதனால்தான், தனது உடல்நலனைக் காட்டி அரசியல் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தார்.ஆனாலும், ரஜினியை பா.ஜ.க.விடுவதாக இல்லை. உ.பி. முதல்வர் யோகி ஆதித்தியநாத்தை பார்க்க வைப்பது, இருவரும் இணைந்து ‘ஜெயிலர்’ படம் பார்ப்பது... அதேபோன்று பா.ஜ.க. முதல்வர்களை நடிகர் ரஜினியை சந்திக்க வைப்பது எல்லாம் தேர்தலுக்காக பா.ஜ.க. செய்யும் செயல். மீண்டும் பா.ஜ.க. ஆட்சி மத்தியில் அமைந்துவிடும் என நடிகர் ரஜினிகாந்த் நம்புகிறார்.தேர்தல் நேரத்தில் மக்கள் மனநிலை எப்படி மாறும் என்பது, யாராலும் கணிக்க முடியாது. ரஜினியுடன் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்தியநாத் ஜெயிலர் படம் பார்க்கப் போவதால், சமுதாயத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படப் போவதில்லை. ஜெயிலர் படத்தை ஓட்ட வேண்டும் என்பதற்காகச் செய்யும் செயலாகக்கூட இருக்கலாம். அதேநேரம் நடிகர் ரஜினியும் அரசியலுக்கு வரப்போவது கிடையாது.நாட்டில் எவ்வளவோ பிரச்னைகள் இருக்கின்றன. அவற்றில் கவனம் செலுத்திக்கொண்டு போகவேண்டும். அதை விட்டுவிட்டு பா.ஜ.க, யோகி ஆதித்யநாத், ரஜினி, ஜெயிலர் என்று பேசுவது நிச்சயமாக நேர விரயம்தான். - ரய்யான் பாபு