வாயிலேயே அணுகுண்டை வைத்துக்கொண்டு திரிகிறார் சீமான். அதுவும் சாதாரண அணுகுண்டு அல்ல, மைக்கை நீட்டினாலோ கூட்டத்தைப் பார்த்துவிட்டாலோ தானாகவே வெடிக்கும் அணுகுண்டு. அப்படித்தான் மணிப்பூர் சம்பவத்தைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில்கூட “இஸ்லாத்தையும் கிறிஸ்துவத்தையும் ஏற்றுக்கொண்டவர்கள் சாத்தானின் பிள்ளைகள்” எனப் பேசி ஆட்டோபாம் வீசியிருக்கிறார் சீமான். அப்புறமென்ன கொந்தளிக்கிறார்கள் சம்பந்தப்பட்டவர்கள்…“வெறுப்புப் பரப்புரை வேடதாரி”ஜவாஹிருல்லா, ம.ம.க தலைவர்கிறிஸ்துவர்களையும் முஸ்லிம்களையும் இழிவாகப் பேசியிருப்பதும் வாக்கு சேகரிக்க வரும் வேட்பாளர்கள் மீது அமிலம் வீசுமாறு கூறி வன்முறையை தூண்டும் வகையில் பேசியதும் கண்டிக்கத்தக்கது. தி.மு.க.வுக்கும் காங்கிரஸுக்கும் தொடர்ந்து வாக்களித்து வருவதால், ‘முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் சாத்தானின் பிள்ளைகளாக மாறிவிட்டார்கள்’ என்று சீமான் பேசியுள்ளார். இது கயமைத்தனமான பேச்சு.தன் கட்சிக்கு வாக்களிக்காத காரணத்தாலேயே சிறுபான்மையின மக்களை சாத்தானின் பிள்ளைகள் என்று வர்ணிப்பது அநாகரிகமானது; அரசியல் நேர்மையற்ற செயல். மணிப்பூரில் நடக்கின்ற வன்முறைகளுக்கு யார் காரணமோ? யார் மௌனமாக இருந்து வன்முறைகளை ஆதரிக்கிறார்களோ? அவர்கள் கிறிஸ்துவர்களையும் முஸ்லிம்களையும் தங்களுடைய தாக்குதல் இலக்காக வைத்திருக்கும்போது, சீமானுக்கு கிறிஸ்துவர்களும் முஸ்லிம்களும்தான் தாக்குதல் இலக்குகளாக இருக்கிறார்கள். இதுவே, இவர் யாருக்காகப் பேசுகிறார், யாருடைய நலனுக்காக செயல்படுகிறார் என்பதை வெட்டவெளிச்சம் ஆக்குகிறது.`சாத்தானின் பிள்ளைகள்' என்று கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ள சீமான், இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். முன்பு, ‘தாய் மதத்துக்குத் திரும்புங்கள்’ என சங்பரிவார் தொண்டர்போல் பேசியவர் சீமான். தற்போது தன்னை வெளிப்படையாகவே அம்பலப்படுத்திக் கொண்டுள்ளார். இத்தகைய வேடதாரிகளிடம் மக்கள் எச்சரிகையாகவே இருக்க வேண்டும்.மீலாது நபிக்கு முதன்முதலாக அரசு விடுமுறை அளித்தது. உருது பேசும் முஸ்லிம்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது, சென்னை அரசினர் மகளிர் கல்லூரிக்கு, காயிதே மில்லத் பெயர் சூட்டியது, சிறுபான்மையினர் நல ஆணையம் தொடங்கியது என தி.மு.க ஆட்சியின் சாதனைகள் ஏராளம். எனவே, `சிறுபான்மை மக்களுக்கு தி.மு.க என்ன செய்தது?' என்று சீமான் போன்ற நேற்றைய அரசியல்வாதிகளுக்குத் தெரிய வாய்ப்பில்லை..“அறச் சீற்றத்தின் வார்த்தை!”இடும்பாவனம் கார்த்திக், நாம் தமிழர் கட்சி செயலாளர்பா.ஜ.க.வும் அ.தி.மு.க.வும் ஒருபக்கம் தீமை என்றால், தி.மு.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இன்னொரு பக்கம் தீமையாக இருக்கிறது. ‘இஸ்லாமிய, கிறிஸ்துவ மக்களுக்கு நாங்கள் துணை நிற்கிறோம். அவர்களது உரிமைக்காகத்தான் நாங்கள் போராடுகிறோம்’ என்றுகூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க., பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை கைது செய்தது. இத்தனைக்கும் அவர் தி.மு.க.வுக்காக வாக்கு சேகரித்தவர். `தி.மு.க., பா.ஜ.க.வை விமர்சித்துப் பேசினார்' என்ற காரணத்துக்காக அவர் கைது செய்யப்படுகிறார்.அதேபோல், இஸ்லாமிய மக்களில் பெரும்பாலானோர் தி.மு.க.-வுக்குத்தான் வாக்களித்தார்கள். ஆனால், இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிப்பதற்கு இப்போது வரையில் தி.மு.க. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.‘இஸ்லாமிய சிறைவாசிகளை தி.மு.க விடுவிக்கட்டும், நாங்களும் அவர்களுக்கே வாக்களிக்கிறோம்’ என்று சீமான் சொல்லியிருந்தார். காங்கிரஸும் தி.மு.க.வும் சாத்தான்களாக இருக்கிறார்கள். `அநீதியை விளைவிக்கிறவர்களிடம் அதிகாரத்தைக் கொடுக்கிறார்கள்' என்ற கருத்தே முன்வைக்கப்பட்டது. சீமான் பேசிய கருத்து திரித்து சொல்லப்படுகிறது. இதற்குக் காரணம் தி.மு.க-வினர்தான். நாளைக்கு நாம் தமிழர் கட்சியின் பக்கம் சிறுபான்மையினர் திரும்ப வாய்ப்பு இருக்கிறது. அதனால்தான், ‘பா.ஜ.க.-வின் பி டீம்தான் நா.த.க' என்ற கருத்தை உருவாக்க திட்டமிடுகிறார்கள். நபிகள் சொல்கிறார், ‘வாக்குகளைக் கொடுத்து நிறைவேற்றாமல் காலம் கடத்துபவன் ஆகக் கொடுமையானவன்’ என்று.இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிப்பது தொடர்பாக ஆதிநாதன் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழு அமைத்து ஓராண்டாகிறது. இதுவரை எந்தத் தகவலும் இல்லை. தன்னை விடுவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தின் படியேறிய நெட்டை இப்ராகீமுக்கு எதிராக வாதங்களை முன்வைத்து அவருக்கு விடுதலை கிடைக்கவிடாமல் செய்தது இதே தி.மு.க.தான்.இப்படிப்பட்ட தி.மு.க.-வை எப்படி நம்புகிறார்கள் என்பதுதான் எங்கள் கருத்து. அநீதிக்கு துணையாக நின்று சாத்தான்களின் பிள்ளைகளாக மாறிவிட்டார்கள் என்று கூறியது ஒரு உவமைக்காகத்தான். நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டியவர்கள், தேவனை வழிபடுகிறவர்கள், நபிகளின் வழியைப் பின்பற்றுகிறவர்கள்... இப்படி அநீதிக்கு துணை போகிறார்களே என்ற ஆதங்கத்தில், அறச்சீற்றத்தின் வார்த்தையே தவிர வேறெந்த உள்நோக்கமும் இல்லை. - தர்ஷினி