-அபிநவ்ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சியின் தலைவர் லாலுபிரசாத் யாதவின் பேச்சில் எப்போதுமே கிண்டல் கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக இருக்கும். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் சமயத்தில், ‘மனைவி இல்லாதவருக்கு இனி பிரதமர் பதவி கிடையாது. பிரதமர் இல்லத்தில் மனைவி இல்லாமல் வசிப்பது தவறு!’ என்று கொளுத்திப் போட்டிருக்கிறார். லாலு சொன்னது சரியா? தவறா?.லாலுவின் கருத்து குடும்ப அரசியலுக்கு ஆதரவானது!எஸ்.ஆர்.சேகர், மாநில பொருளாளர் - பா.ஜ.க பிரதமர் பதவிக்குப் போட்டியிட விரும்பும் ஒருவருக்கு கொள்கை, லட்சியம், பொருளாதார அறிவு, செயல்திட்டம், ஆளுமைத் திறன் போன்ற பல தகுதிகள் இருப்பது அவசியம். இதில் ஏதாவது ஒன்று மிஸ் ஆகும் பட்சத்தில் அதை ஒரு தகுதிக் குறைபாடாகக் கருதுவது அறிவுடைமை. ஆனால் பிரதமராக வருபவர் கட்டாயம் மனைவியோடு இருக்கவேண்டும் என்று லாலு பிரசாத் யாதவ் சொல்லியிருப்பது, வீண் விதண்டாவாதம். ஜனநாயக நாட்டில் யார் பிரதமராக வரவேண்டும், வரக்கூடாது என்று முடிவு செய்பவர்கள், மக்கள்தான். மோடி மீண்டும் பிரதமராக வரக்கூடாது என்று, எந்தத் தலைவரும் தன்னிச்சையாகத் தீர்மானித்துவிட முடியாது. லாலுபிரசாத் யாதவ் எந்த வகையிலும் நாட்டின் நலனை வைத்து இந்தக் கருத்தைச் சொன்னதாக தெரியவில்லை. உண்மையில் இது பிரதமர் மோடி மீதான தனிப்பட்ட தாக்குதலாகும். சரி, மனைவி இல்லாதவர்கள் பிரதமராகக் கூடாது என்ற லாலுவின் பேச்சை ஒரு வாதத்துக்காக ஏற்றுக்கொண்டால், நேரு பிரதமராக இருந்தபோது அவருக்கு மனைவி இல்லை. அப்படியென்றால் நேரு பிரதமாரக இருந்ததைத் தவறு என்று சொல்கிறாரா லாலு? நேருவின் கொள்ளுப்பேரன் ராகுல் காந்திக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ராகுல் காந்தியை எப்படியாவது பிரதமர் நாற்காலியில் அமரவைக்க வேண்டும் என்று, அவர் குடும்பம் துடித்துக்கொண்டிருக்கும் இந்தவேளையில், அவருக்குப் பிரதமராகும் தகுதி இல்லை என்கிறாரா லாலு? உண்மையைச் சொன்னால், லாலு உட்பட நாட்டில் உள்ள பெரும்பான்மையான கட்சிகள் மற்றும் அதன் தலைவர்கள் குடும்ப அரசியலையே பின்பற்றுகிறார்கள். ஆனால் பா.ஜ.கவில் மட்டுமே குடும்ப அரசியல் ஆதரிக்கப்படுவதில்லை. இந்தக் கட்சி மட்டுமே வாஜ்பாய், நரேந்திர மோடி ஆகிய இரண்டு பேச்சிலர் பிரதமர்களை வழங்கியிருக்கிறது. லாலு பிரசாத் யாதவுக்கு வயதாகிவிட்டது. அதனால் அவருக்கு மனநலக் குறைபாடு ஏற்பட்டிருக்கலாம் அல்லது குடும்ப அரசியலுக்கு எதிராக பா.ஜ.க செயல்படுவதால் ஏற்பட்ட கடுப்பில் பேசியிருக்கலாம்..லாலுவின் பேச்சில் ஆழமான கருத்து உள்ளது! டி.கே.எஸ்.இளங்கோவன், மாநில செய்தித் தொடர்புத் தலைவர் -தி.மு.க இந்தியாவிலுள்ள அரசியல் தலைவர்களிலேயே அதிக நகைச்சுவை உணர்வுமிக்கவர், லாலு பிரசாத் யாதவ். அவர் பல விஷயங்களை நகைச்சுவையாகச் சொல்வதை வழக்கமாகக் கொண்டவர். சில நேரங்களில் அதன் அர்த்தங்கள் எதிர்மறையாகப் புரிந்துக்கொள்ளப்பட்டு சர்ச்சையாகிவிடுவது வழக்கம். அந்தவகையில் இதையும் பார்க்க வேண்டும். அவர் நேரடியாக எங்குமே மோடி மீண்டும் பிரதமராகக் கூடாது என்று சொல்லவில்லை. அதனால், ’இது பிரதமர் மோடியைக் குறிவைத்து அவமானப்படுத்தும் முயற்சி’ என்று பா.ஜ.க சொல்வதை ஏற்க முடியாது. அதேநேரம், இதில் வேறு சில ஆழமான கருத்துகள் பொதிந்துள்ளன. அடிப்படையில் திருமணம் என்பது மிகப்பெரிய பொறுப்பு. திருமணம் செய்து, குழந்தைகள் பெற்று அவர்களை நல்லபடியாக வளர்த்து ஆளாக்குவது என்பது லேசுப்பட்ட காரியம் அல்ல. அதற்கு ஏராளமான பொறுமை, பொறுப்புணர்வு, அர்ப்பணிப்பு, உழைப்பு, தியாகம் தேவை. அதனால் திருமணமாகாதவர்களைவிட திருமணமானவர்கள் இயல்பிலேயே அதிக பொறுப்புணர்வோடு நடந்து கொள்கிறார்கள். இந்த நாடும் ஒரு குடும்பத்தைப் போன்றதுதான். இங்கே பல்வேறு இன மக்கள் தனித்துவமான பழக்கவழக்கங்களுடன் வாழ்ந்து வருகிறார்கள். அப்படிப்பட்ட இந்த நாட்டை ஆள வேண்டும் என்றால், அதற்கு திருமணமாகி பண்பட்ட ஒரு தலைவர்தான் தேவை. பக்குவமில்லாத ஒருவர் பிரதமர் ஆனால், நாடு திண்டாடிவிடும். அந்தவகையில் திருமணமான ஒருவரே பிரதமராக வரவேண்டும் என்று லாலுபிரசாத் யாதவ் கருத்து தெரிவித்திருக்கலாம். நேரு பிரதமராக இருந்தபோது அவருக்கு மனைவி இல்லை என்றாலும், அவர் திருமணமாகி குழந்தை பெற்றவர். குடும்பம் நடத்தி அதில் பக்குவப்பட்டவர், அவருடன் மனைவி இல்லாமலிருந்தாலும், அனுபவசாலியான பிரதமராகவே அவர் செயல்பட்டார். மோடியும் திருமணமானவர்தான். ஆனால் குடும்ப வாழ்க்கையில் அவர் ஈடுபட்டதே இல்லை. இதனால் லாலுவின் கருத்து முன்னாள் பிரதமர் நேருவுக்கு பொருந்தாது. மோடிக்கு மட்டுமே பொருந்தும். தவிர, இங்கு கட்சிகள் குடும்ப அரசியலில் ஈடுபடுவதில்லை. மாறாக, தொண்டர்கள் விரும்பும் தலைவர்களே கட்சியை வழிநடத்துகிறார்கள்.