-மனோசௌந்தர் `சிரிச்சு சிரிச்சு பேசுனது… ஆடிப் பாடுனது அத்தனையும் நடிப்பா?' - சிவாஜி கணேசனின் ஃபேமஸான இந்த டயலாக்கை நினைவூட்டுகிறது, காவலர் சிவராஜின் ஊடக பேட்டிகள். பயிற்சி மையத்தில் படித்து நீட் தேர்வில் பாஸானதை அவர் மறைத்ததுதான், கல்வித்துறையை கலங்கடிக்கும் டாபிக். தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகில் உள்ள முத்துகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர், சிவராஜ். 2020ம் ஆண்டு பி.எஸ்சி. வேதியியல் முடித்துவிட்டு, காவலர் தேர்வில் வென்று காவல் பணியில் சேர்ந்தார். சென்னை ஆவடியில் உள்ள சிறப்பு காவல்படையில் பணியாற்றியபடியே நீட் தேர்வுக்கான பயிற்சிகளை எடுத்துவந்தார். நடப்பு ஆண்டு நடந்த நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவருக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது..இதனால் உற்சாகமடைந்த சிவராஜ், தான் நீட் தேர்வுக்காக கடுமையாக படித்து வந்ததாகவும் நீட் பயிற்சி மையங்களுக்கு செல்லாமல் வேலைப்பளுவுக்கு மத்தியிலும் படித்ததாகவும் ஊடகங்களிடம் பேசி வருகிறார். தவிர, தூத்துக்குடி மருத்துவக் கல்லூரியில் பயிலும் தன் தம்பியின் ஆலோசனைப்படியே நடந்துகொண்டதால் தேர்ச்சிபெற்றதாகவும் பெருமைப்பட்டார். சிவராஜின் பேட்டியை டேக் செய்த சிலர், `நீட் தேர்வை எதிர்ப்பவர்கள் சிந்திக்கவேண்டிய நேரமிது' என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதேநேரம், `சிவராஜ் சொல்வது சுத்தப் பொய்' என்ற எதிர்வினைகளும் கிளம்பியுள்ளன..இதுகுறித்து உள்விவரம் அறிந்தவர்களிடம் பேசினோம். ``ஈரோட்டில் உள்ள தனியார் நீட் பயிற்சி மையத்தில் 2022 மார்ச் 3ம் தேதி பணம் கட்டி சேர்ந்துள்ளார், காவலர் சிவராஜ். அங்கு ஆன்லைன் மூலம் படித்துதான் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். அந்தப் பயிற்சி மையம் தயாரித்துக் கொடுத்த புத்தகங்களின் அடிப்படையில் ராஜேஷ் வரதராஜ் என்ற ஆசிரியர்தான் ஆன்லைன் வகுப்பு மூலம் இவருக்குப் பயிற்சி கொடுத்துள்ளார். அப்படிப் படித்து தேர்ச்சி பெற்றதில் எந்தத் தவறும் இல்லை. இதனால், துறைரீதியாகவும் யாரும் கேள்வி கேட்கப்போவதில்லை. ஆனால், அதை ஏன் மறைக்கவேண்டும்?" எனக் கேள்வி எழுப்பியதுடன், அதனால் ஏற்படப்போகும் விளைவுகளையும் சுட்டிக்காட்டினார்கள். .``நீட் தேர்வை தமிழக அரசு எதிர்ப்பதற்குக் காரணமே, ஓர் ஏழை மாணவர் அரசுப் பள்ளியில் சிறப்பாகப் படித்து அதிக மதிப்பெண் எடுத்தாலும் நீட் கோச்சிங் சென்டரில் பணம் கட்டிப் பயிற்சி எடுத்தால்தான் டாக்டர் ஆகமுடிகிறது. அப்படியென்றால், பள்ளியில் கஷ்டப்பட்டு படித்தால் மட்டுமே ஒருவரால் டாக்டர் ஆக முடியாது. பணம் இருந்தால்தான் டாக்டர் ஆக முடியும் என்பதை நீட் தேர்வு உணர்த்துகிறது. அப்படியிருக்க, காவலர் சிவராஜ் தனியார் நீட் கோச்சிங் சென்டரில் பயிற்சி பெற்றதை மறைத்து, தானாகவே படித்து நீட் தேர்வில் தேர்ச்சிபெற்றதைப் போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறார். அதுதான், தவறு. இதன்மூலம், நீட் தேர்வுக்கு கோச்சிங் சென்டருக்கு போகாமலேயே தேர்ச்சி பெறமுடியும் என்கிற பொய்யான நம்பிக்கையை அவர் விதைக்கிறார்..அதுமட்டுமல்ல, பெற்றோர் மத்தியிலும் இது தாக்கத்தை ஏற்படுத்தும். ‘கோச்சிங் சென்டருக்குப் போகாமல் போலீஸ் வேலையில் இருந்துகொண்டே சிவராஜ் என்பவர் நீட் தேர்வில் பாஸ் ஆகிவிட்டார். உனக்கு ஃபீஸ் கட்டி முழுநேரமும் படிக்கவைக்கிறோம். பாஸ் பண்ண வக்கில்லையா?’ என்று மாணவர்களுக்கு பெற்றோர் தரப்பில் அழுத்தம் தருவதற்கும் வாய்ப்புகள் அதிகம். இது தேவையற்ற பிரச்னைகளை ஏற்படுத்தும். `கோச்சிங் சென்டரில் படிக்கவில்லை என்றாலும் அரசுப் பள்ளி மாணவர்களால் தேர்ச்சி பெறமுடியும். நீட் ஒரு எளிமையான தேர்வுதான். எனவே, தமிழ்நாட்டுக்கு நீட் விலக்கு தேவையில்லை' என்று பா.ஜ.க உள்ளிட்ட நீட் ஆதரவாளர்கள் பிரசாரம் செய்வார்கள். ஆகவே, வீண் பெருமைக்காக மாணவர்கள், பெற்றோர் மத்தியில் தவறான நம்பிக்கைகளை விதைக்கக் கூடாது" என்றனர், கொதிப்புடன்..``கோச்சிங் சென்டரில் பணம் கட்டிப் படித்தது உண்மைதானா?" என காவலர் சிவராஜிடம் கேட்டோம். ``அப்படி எந்தப் பயிற்சி மையத்திலும் நான் சேரவில்லை, ஆன்லைனிலும் பயிற்சி பெறவில்லை" என மறுத்தார். ஆனால், அவர் பயிற்சி பெற்ற மையத்தின் பெயரையும், அவருக்கு இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடம் எடுத்த ஆசிரியர்களின் பெயர்களையும், பயிற்சி மையத்துக்கு அவர் பணம் கட்டிய ரசீது விபரங்களையும் அவரிடம் புட்டு புட்டு வைத்தோம். இதையடுத்து, பதில் சொல்லத் திணறியவர், “இதையெல்லாம் உங்ககிட்ட சொல்லணும்னு அவசியமில்ல” என்றபடி இணைப்பைத் துண்டித்தார். `டாக்டரிடம் பொய் சொல்லக் கூடாது' என்பார்கள். வருங்கால டாக்டர் பொய் சொல்லலாமா?