கணேஷ்குமார்படங்கள்:செந்தில்நாதன்வரிந்துகட்டும் வேல்முருகன்… சுங்கச்சாவடிகள் என்றாலே பண்ருட்டி எம்.எல்.ஏ வேல்முருகனுக்கு அலாதி பிரியம்போல. சாதாரணமாகவே அடித்து ஆடிவிட்டுச் செல்பவர், தமிழகத்தில் 54 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு என்றால் சும்மாவா இருப்பார். அடுத்த கதகளி ஆட்டத்துக்கு தயாராகிக் கொண்டிருந்தவரை, இடைமறித்து கேள்விகளை அடுக்கினோம்..சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்திவிட்டார்களே, நீங்கள் கிளம்பி செல்லவில்லையா? “இதோ தயாராகிக்கொண்டிருக்கிறோம். மிகப் பெரிய போராட்டத்தை நடத்துவிருக்கிறோம். மேலும் சட்டசபை மழைக்கால கூட்டத்தொடரிலும் இதை மிகப்பெரிய விவாதமாக எழுப்புவேன். தமிழகத்தில் தினந்தோறும் சுங்கச்சாவடிகள் திறக்கப்பட்டு வருகின்றன. ’டெண்டர்’ விதிகளின்படி எந்த சுங்கச்சாவடியும் தமிழகத்தில் இயங்குவது இல்லை. சட்டவிரோத சுங்கச்சாவடிகளை இழுத்து மூடும்வரை விடமாட்டேன்.”.கேஸ் விலையை மத்திய அரசு குறைத்துவிட்டதே? “தொடர்ந்து ஒன்பது ஆண்டுகாலமாக ஏறுமுகத்தில் இருக்கிற பெட்ரோல், டீசல், கேஸ் விலையை திடீரென குறைத்தது நாடாளுமன்றத் தேர்தலுக்கான நாடகம். ஆனாலும் இதை நான் வரவேற்கிறேன். மக்கள் விலைவாசி உயர்வில் சிக்கித் தவிக்கிறார்கள். சிலிண்டர் விலையை நினைத்து ரத்தக்கண்ணீர் வடிக்கிறார்கள். அந்த வகையில் இது ஆறுதல்தான்.” இந்தியாவின் பெயரை `பாரத்' என மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறதே? “பாரதம் என்று பழங்காலத்தில் அழைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்திய அரசியலமைப்பு சட்டம் என்றுதான் இன்றுவரையில் நடைமுறையில் இருக்கிறது. பாரத அரசியலமைப்புச் சட்டம் என்று இல்லை. அம்பேத்கரும் அதற்கேற்ப சட்டங்களை வகுத்துக் கொடுக்கவில்லை. தங்களுக்கு தனி மெஜாரிட்டி இருக்கிறது. அதிகாரம் கையில் இருக்கிறது என்பதற்காக எதையும் செய்ய முடியும் என்ற நினைப்பில் மத்திய பா.ஜ.க அரசு செயல்பட்டு வருகிறது. ராமாயணம், மகாபாரத காலகட்டங்களில்கூட, ’பாரதம்’ என்றுதான் பேசப்பட்டிருக்கிறது. அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், `இந்தியாவை பாரத் என அழைக்கவேண்டும்' என நேரு உட்பட எந்த தலைவர்களும் சொன்னதில்லை.”. ‘இந்தியா’ கூட்டணியில் ’யார் பிரதமர்’ என்பதை அறிவிப்பதில் சிக்கல் நீடிக்கிறதே? ”அப்படி இல்லை, ‘இந்தியா’ கூட்டணி மிகப்பெரிய அளவில் வலுவாகிக்கொண்டே செல்கிறது. காங்கிரஸை பொறுத்தவரை ‘எங்களுடைய கூட்டணி அல்லது கட்சி வெற்றிபெற்ற பிறகு கூடி ஆலோசித்துதான் பிரதமரை தேர்வு செய்வோம்’என்கிறது. இதை வைத்துப் பார்க்கும்போது, பா.ஜ.க.வின் பாசிச போக்கை கட்டுப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் ’இந்தியா’ கூட்டணி இயங்குவதை பார்க்க முடியும். இக்கூட்டணியில் இருக்கின்ற 26 கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களில் யாராவது ஒருவர் பிரதமர் ஆக வாய்ப்பு இருக்கிறது. எங்களைப் பொறுத்தவரை பா.ஜ.க வீழ்த்தப்படவேண்டும், அதுதான் முக்கியம்!”.இந்தக் கூட்டணியால் மோடியை வீழ்த்த முடியுமா? “இந்தியா முழுவதும் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் இன்று ஒரேவரிசையில் திரண்டுள்ளன. பா.ஜ.க கூட்டணியில் அ.தி.மு.கவை தவிர வேறு பெரிய கட்சிகள் இல்லை. எனவே, பா.ஜ.க.வுடன் ஒப்பிடும்போது ’இந்தியா’ கூட்டணி வலுவாக இருக்கிறது. மோடிக்கு செல்வாக்கு இருக்கிறது என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை. ஆனால், அதைவிட வலுவான எதிர்க்கட்சிகள் ’இந்தியா’ கூட்டணியில் இருக்கின்றன. எங்களால் மோடியை வீழ்த்த முடியும்.”.அமைச்சர் உதயநிதியின் ’சனாதன பேச்சு’ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதே? “அவர் பேசியதை திரித்து உண்மைக்கு மாறான செய்திகளை வடமாநிலங்களில் வெளியிட்டு வருகின்றனர். மனிதர்களுக்கு இடையில் வேற்றுமையை உருவாக்குகின்ற, ஏற்றத்தாழ்வுகளை கற்பிக்கின்ற சனாதான கோட்பாடுகள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதைதான் உதயநிதி பேசியிருக்கிறார். பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் ஆண்டாண்டுகாலமாக சொன்னதைத்தான் அவர் பேசியிருக்கிறார். இதில் என்ன தவறு?” .வரும் நாடாளுமன்ற தேர்தலில் உங்கள் கட்சி போட்டியிடுமா? “தி.மு.க தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றிருக்கிறோம். தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு எங்கள் கட்சிக்கான ஓர் அங்கீகாரத்தைக் கோருவோம். நாற்பது ஆண்டுகாலமாக அரசியலில் இருக்கிறேன். கட்சி தொடங்கி 12 ஆண்டுகளைக் கடந்துவிட்டோம். நாடாளுமன்றத்தில் எங்கள் கட்சியின் குரல் ஒலிக்கவேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பம். ஆனால், அதை நான் மட்டுமே நிறைவேற்ற முடியாது.”என்.எல்.சி விவகாரத்தில் மீண்டும் போராட்டம் வெடிக்குமா? “விவசாயிகளிடம் இருந்த நிலத்தை என்.எல்.சி நிர்வாகம் தனது பயன்பாட்டுக்காக இன்று தனதாக்கிக்கொண்டிருக்கிறது. அவர்களின் நியாயமான கோரிக்கை, `வீட்டுக்கு ஒருவருக்கு நிரந்தரமான வேலை’ என்பதுதான். அது இன்றுவரையில் நிறைவேற்றப்படவில்லை. எனவே, விவகாரம் நீறுபூத்த நெருப்பாக இருந்து வருகிறது. அது எப்போது வேண்டுமானாலும் விஸ்வரூபமாக வெடிக்க வாய்ப்புள்ளது.”.தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சி யார்? “அ.தி.மு.க இன்று ஒன்றுபட்ட அ.தி.மு.கவாக இல்லை. கட்சி தன் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதை நிரூபிக்கவே எடப்பாடி பழனிசாமிக்கு நேரம் போதவில்லை. ஆதலால், பிரதான எதிர்க்கட்சிக்கு உரிய பணிகளை அவரால் செய்ய முடியவில்லை. எனவே, பா.ஜ.க.தான் எதிர்க்கட்சியாக இயங்கிவருகிறது.”