‘தி.மு.க. ஆட்சி இன்னும் பத்து பவுர்ணமிக்கு தாங்காது. ஐந்து அமாவாசைக்குள் முடிந்துவிடும்’ என்று சோழி உருட்டாமலே ஜோசியம் சொல்லிக்கொண்டிருந்த பொள்ளாச்சி ஜெயராமனின் `திடீர்' டெல்லி விசிட், கொங்கு மண்டலத்தின் லேட்டஸ்ட் பரபரப்பு! மேட்டர் இதுதான்... கோவை மாவட்டம், பொள்ளாச்சி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஜெயராமன். மாஜி துணை சபாநாயகரான இவர், பொதுவாக கோவை, திருப்பூர் மாவட்டங்களைத் தாண்டி பரபர அரசியல் எதுவும் செய்யமாட்டார். ஆனால், கடந்த வாரம் டெல்லிக்குப் படை பரிவாரத்துடன் சென்றவர் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஸ் கோயல் ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனுக்களைக் கொடுத்ததோடு, தனிப்பட்ட முறையில் சில நிமிடங்கள் உரையாடிவிட்டு வந்ததும்தான் சென்சேஷனை உருவாக்கியிருக்கிறது. சந்திப்புக்குப் பிறகு வெளியே அவர் ‘தேங்காய் கொப்பரை தொழிலை மீட்டெடுக்கும் நோக்கில் நடந்த சந்திப்பு’ என்று சொன்னாலும், உள்ளூர சில காரணங்கள் சொல்லப்படுகின்றன. இதுபற்றி பேசும் அ.தி.மு.க நிர்வாகிகள், “கர்நாடக சட்டசபைத் தேர்தலின்போது டெல்லியில் தன்னை சந்திக்க எடப்பாடி பழனிசாமி வந்தபோது, அமித் ஷாவே அண்ணாமலையை வரச்சொல்லி, ‘ஒற்றுமையா அரசியல் பண்ணுங்க’னு சொன்னார். ஆனால், அதுக்குப் பிறகும் அண்ணாமலை தன்னை மாத்திக்கலை, தொடர்ந்து எடப்பாடியாரை சீண்டியே அரசியல் பண்றார். இதுபற்றி பா.ஜ.க.வின் முக்கிய நிர்வாகிகளிடம் புகார் தரவே எடப்பாடியின் பிரதிநிதியாக பொள்ளாச்சி ஜெயராமன் டெல்லிக்கு வந்தார். ‘அண்ணாமலை இப்படியே செய்து கொண்டிருப்பது நல்லதில்லை. அவரால், கூட்டணிக்குள் சுமூகநிலை பாதிக்கப்படுது. அது ஒட்டுமொத்தமா நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியையும் பாதிக்கும்’ என்கிற எடப்பாடியின் கருத்தையே பதிவு செய்துவிட்டுச் சென்றிருக்கிறார்'' என்றார்கள்..பொள்ளாச்சி ஜெயராமனிடம் இதுபற்றிக் கேட்டபோது, ``பொள்ளாச்சி தென்னை விவசாயத்துக்கு உலகப் புகழ் இருக்குது. ஆனா, கடந்த இரண்டாண்டு தி.மு.க. ஆட்சியில இந்தத் தொழிலை சிதைச்சுட்டிருக்காங்க. நேரடி தேங்காய் விற்பனை மட்டுமில்லாம அதை சார்ந்து இயங்குகிற பல்வேறு தொழில்களை ஊத்தி மூடிட்டு இருக்கிறாங்க. பல்லாயிரம் கோடிகள் புழங்குகிற இந்த வர்த்தகத்தை அழிவிலிருந்து மீட்கத்தான் மத்திய அமைச்சர்களை சந்திக்க டெல்லி சென்றேன்.அதாவது, இந்த வருஷம் ஏப்ரல் 1 முதல் தென்னை விவசாயிகளிடம் இருந்து ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதிகாரிகள் தேங்காய் கொப்பரையை கொள்முதல் பண்ணினாங்க. ஆனால், முழுமையாக கொள்முதல் பண்ணல. அரவை கொப்பரை, பந்து கொப்பரைன்னு ரெண்டு வகை கொப்பரைகளும் பொள்ளாச்சி தென்னை விவசாயிகளிடம் இன்னமும் அதிகமாக ஸ்டாக் இருக்குது.ஆனால், திடுதிப்புன்னு இந்த அதிகாரிகள், ‘இலக்கு முடிஞ்சுது. போதும்’ன்னு சொல்லி நிறுத்திட்டாங்க. இது எந்த வகையில் நியாயம்? கையிருப்பில் உள்ள கொப்பரை வீணாவதால் ஒட்டுமொத்தமாக பல கோடிகள் நஷ்டமாகுது. ஒவ்வொரு தனி விவசாயிக்கும் லட்சக்கணக்கில் இழப்பு. இதை இப்படியேவிட்டால் தென்னை விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேற வழி தெரியலை.இந்த அவலங்களைப் பற்றி தமிழக முதல்வர் உட்பட அரசின் கவனத்துக்கு பலமுறை கொண்டு போயிட்டோம். ஆனால், ஒரு பலனுமில்லைங்க. தென்னையை அடிப்படையாகக் கொண்ட காயர் தொழிலை மீட்கவும் தி.மு.க.வுக்கு எண்ணமில்லை.பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதி எம்.பி.யான தி.மு.க.வின் சண்முகசுந்தரமும் டெல்லிக்கு போறார்.. வாரார். அவருக்கு தென்னை விவசாயிகள் மீது அக்கறையில்லை. அது சரி, தி.மு.க.விடம் நல்லதை எதிர்பார்க்குறது கானல் நீர்ல மீன் பிடிக்கிறதுக்கு சமம்தானே. அதனாலதான் நாங்களே களமிறங்கினோம்.தமிழ்நாடு தென்னை உற்பத்தியாளர்கள் நிறுவனங்கள் கூட்டமைப்பின் தலைவர் சக்திவேல் உள்ளிட்ட நிர்வாகிகளை அழைச்சுட்டு டெல்லி போய் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியூஸ் கோயல் என ரெண்டு பேரையும் பார்த்தோம்..கொப்பரைத் தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதார விலையை 150 ரூபாயாக உயர்த்துமாறும் வெளிமார்க்கெட்டில் விலை உயரும் வரையில் 50 நாள்களுக்கு ஒருமுறை வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலமாக கொப்பரையை கொள்முதல் செய்வது உட்பட பல கோரிக்கைகளை வெச்சிருக்கோம். எங்களோட கோரிக்கைகளை அமைச்சர்கள் இருவரும் அக்கறையோடு கேட்டுக்கிட்டாங்க. நல்லது நடக்கும்னு நம்புறோம்.இதுதான் என் டெல்லி பயணத்துக்கான காரணம். ஆனால், அரசியலுக்காக நான் டெல்லி போனேன்னு சொல்றது தப்பான கருத்து. ஏற்கெனவே, ஸ்டாலின் அரசு மீது விவசாயிகள் கடும் கோபத்துல இருக்காங்க. இந்தநேரத்தில் டெல்லி போனதன் மூலம் பல லட்சம் விவசாயிகளின் நம்பிக்கையை நாங்க தக்க வெச்சிருக்கிறதைப் பார்த்து தி.மு.க.வுக்குப் பயம். அதனால், அந்த நோக்கத்தைத் திசை திருப்பத்தான் ‘கூட்டணி பிரச்னைகள் பத்தி பேசத்தான் பொள்ளாச்சி ஜெயராமன் டெல்லிக்குப் போனார்’ன்னு வேணும்னே கௌப்பிவிட்டிருக்காங்க'' என்றார் விரிவாக.பொள்ளாச்சி தி.மு.க. எம்.பி. சண்முகசுந்தரத்திடம், இந்த விவகாரம் குறித்து கேட்டபோது, “பொள்ளாச்சி எம்.பி.யாக நான் இந்தத் தொகுதியின் தென்னை விவசாயிகளுக்கு நன்மை பண்ணலைன்னு ஜெயராமன் சொல்றது முழுப் பொய். தென்னை உள்ளிட்ட அத்தனை வகை விவசாயிகளின் நலனுக்காகவும் மிக மிக அதிகமாக உழைச்சிட்டு இருக்கேன். விவசாயிகளை வெச்சு அரசியல் பண்ணும் பழக்கம் எங்களுக்கு இல்லை. ஒருநாள் அலுவலகம் வாங்க, தென்னை விவசாய மேம்பாட்டுக்காக எவ்வளவு உழைச்சிருக்கேன் என்பதை விளக்குறேன்'' என்றார் கொதிப்புடன்.தென்னை விவசாயிகளுக்கு தீர்வு கிடைத்தால் சரி! - எஸ்.ஷக்தி