உள்ளாட்சிகளில் ஐம்பது சதவிகித இடங்களை பெண்களுக்கு ஒதுக்கினாலும் கணவர்கள் போடும் குதியாட்டம் கதிகலங்க வைக்கிறது. இந்த ஆட்டத்தால் பாதிக்கப்படப் போவது என்னவோ, ஆளும்கட்சியின் வாக்குவங்கிதான். அதில் லேட்டஸ்ட் வரவு, திருவண்ணாமலை நகராட்சி.``என்னதான் பிரச்னை?" என திருவண்ணாமலை மாவட்ட தி.மு.க. நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். “திருவண்ணாமலை நகராட்சி சேர்மனாக நிர்மலா வேல்மாறன் இருக்கிறார். பேருக்குத்தான் இவர் சேர்மன். அனைத்து நகராட்சிப் பணிகளையும் அதிகாரங்களையும் கையில் எடுத்துக்கொண்டு ஆட்டம் போடுவது சேர்மனின் கணவர் கார்த்திக் வேல்மாறன்தான்.நகராட்சி அலுவலகத்தில் உட்கார்ந்துகொண்டு அங்கு வருபவர்களிடம் மனுக்களைப் பெற்று, அதில் பென்சிலில் எழுதி நகராட்சி அதிகாரிகளுக்கு அனுப்பிவைக்கிறார். அவர் சொல்லும் மனுக்கள் மீது மட்டும்தான் அதிகாரிகள் கவனம் செலுத்துகிறார்கள். அதேபோல், `திருவண்ணாமலை பஸ் நிலையம் மற்றும் கிரிவலப் பாதையில் அமைந்திருக்கும் கழிவறைகளை பொதுமக்கள் இலவசமாகப் பயன்படுத்தி கொள்ளலாம்' என அரசு அறிவித்துள்ளது.ஆனால், ஆட்களை வைத்து கட்டணத்தை வசூலித்து வருகிறார். மேலும், திருவண்ணாமலை கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் கார், வேன், தனியார் பஸ்கள் ஆகியவற்றுக்கு 20 முதல் 50 ரூபாய் வரை மட்டுமே பார்க்கிங் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றும் கிரிவல நாள்களில் பார்க்கிங் கட்டணத்தை வசூலிக்க வேண்டாம் எனவும் அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டிருக்கிறார். ஆனால், அமைச்சர் பேச்சைக் கேட்காமல் 250 முதல் 300 ரூபாய் வரை கார் உள்ளிட்ட வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்கிறார், கார்த்திக்.கிரிவலப் பாதையில் புதிதாக கடைகள் அமைக்க நீதிமன்றத் தடை உள்ளது. ஆனால், வடக்கு கோபுர வீதி, ரமணர் ஆசிரமம் ஆகிய இடங்களில் ஏற்கெனவே ஆவின் பாலகம் உள்ளது. ஆனாலும், நீதிமன்ற தடையை மீறி கிரிவலப் பாதையில் மூன்று ஆவின் பாலகங்களுக்கு அனுமதி வாங்கிக் கொடுத்திருக்கிறார்.கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு நகராட்சி சார்பில் குடிநீர் ஏற்பாடு செய்து தராமல், ஆவின் பாலகம் மூலம் மினரல் வாட்டர் விற்பனையை செய்து வருகிறார். இவரின் ஆட்டங்களுக்கு அறிவாலயம்தான் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்” என்கின்றனர், கொதிப்புடன்.கார்த்திக் வேல்மாறனிடம் கேட்டபோது, “மனைவியின் பின்னால் நின்று சில ஆலோசனைகளை வழங்குவது உண்மைதான். மற்றபடி, நகராட்சி நிர்வாகத்தில் நான் தலையிடுவது இல்லை. வாகன பார்க்கிங் கட்டணம் தொடர்பாக அமைச்சர் சொன்ன அறிவுரையைக் கேட்டு செயல்படுத்தி வருகிறோம். அதிலும், அதிக கட்டணம் வசூலிப்பது இல்லை. கிரிவலப் பாதையை பொறுத்தவரை 40 சதவிகிதம் நகராட்சியிலும் 60 சதவிகிதம் ஊராட்சியிலும் வருகிறது. அங்கு வேறு யாராவது ஆவின் பாலகத்தைப் புதிதாக அமைத்திருக்கலாம். எனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை” என்றார்.ஓஹோ! - பாபு