தலைநகரை மட்டுமல்லாது, மொத்த தமிழகத்தையும் வாட்டி வதைக்கிறது டெங்கு. கூடவே, மர்ம காய்ச்சல் பீதியும் சேர்ந்துவிட்டதால் அரசு மருத்துவமனைகளுக்கு படையெடுக்கின்றனர் மக்கள். இந்த காய்ச்சலால் தமிழகத்தில் அடுத்தடுத்து நடந்த இரு மரணங்களும் அதையொட்டிய அலட்சியங்களும் அரசு நிர்வாகத்தை உலுக்கும் எச்சரிக்கை கேள்விகள்!மழைக் காலம் தொடங்கிவிட்டாலே அழையா விருந்தாளியாக வகை வகையான காய்ச்சல்களும் வரத் தொடங்கிவிடுகின்றன. இந்த ஆண்டு மதுரவாயலில் நான்கு வயதுச் சிறுவன் ஒருவன், டெங்கு காய்ச்சலுக்கு பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சோகத்தில் இருந்து மக்கள் மீள்வதற்குள் திருவாரூரில் பயிற்சி மருத்துவர் சிந்து, காய்ச்சலால் உயிரிழந்த சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.டெங்கு காய்ச்சலின் பரவல் குறித்துப் பேசும் அரசு மருத்துவர்கள் சிலர், ``வெப்ப மண்டல, துணை வெப்ப மண்டல நாடுகளிலேயே டெங்கு நோய் அதிகமாகக் காணப்படுகிறது. `ஏடிஸ் எஜிப்தி’ வகையான பெண் கொசுக்கள் கடிப்பதால் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. ஒவ்வோர் ஆண்டும் இந்த நோய்க்கு 40 ஆயிரம் மக்கள் பலியாகிறார்கள். இதில் கொடுமையான விஷயம், டெங்குவை தடுப்பதற்கோ, குணப்படுத்துவதற்கோ இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதுதான்.தமிழ்நாட்டில் காய்ச்சலால் அடுத்தடுத்து உயிரிழப்புகள் ஏற்பட்டதால் அரசு தீவிரமாக களமிறங்கியுள்ளது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஏற்கெனவே இருக்கும் ‘டெங்கு’ வார்டுகள் தூசி தட்டப்பட்டன. சென்னையைப் பொறுத்தவரை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை மற்றும் தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனை ஆகியவற்றில் ‘டெங்கு’வால் பாதிக்கப்பட்டவர்களை அனுமதிப்பது வழக்கம்.ஆனால், இந்த ஆண்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையை நோக்கி ‘டெங்கு’ நோயாளிகள் திருப்பிவிடப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதர அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல் நோயாளிகள் குவிந்தால், ஊடகங்களின் பார்வை விழுந்துவிடும் என்ற அச்சம்தான் காரணமாம். இந்த டேக் டைவர்ஷன் முறையால், ராயப்பேட்டையில் 14 பேரும் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ஆறு குழந்தைகளும் டெங்கு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மாநகராட்சி தொற்றுநோய் மருத்துவமனையில் பல்வேறு காய்ச்சல் தொடர்பாக 232 பேர் வெளிப்புற நோயாளிகளாக சிகிச்சை பெற்றுச் சென்றுள்ளனர். இங்குள்ள ‘டெங்கு’ வார்டில் நான்கு பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்" என்றனர்.டெங்கு பரவல் குறித்து நம்மிடம் பேசிய சூழலியலுக்கான மருத்துவர்கள் சங்கத்தைச் சேர்ந்த டாக்டர் வீ.புகழேந்தி, ‘‘புவி அதிக வெப்பம் அடைந்தால் கொசுக்களின் இனப்பெருக்கம் குறையும். அதேநேரம், கொசுவின் உடம்பில் இருக்கக்கூடிய வைரஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். எனவே, புவி வெப்பம் அடைதலும் டெங்குவுக்கு ஒரு காரணம்..அதேபோல், எதிர்பாராமல் பெய்யக்கூடிய மழையும் பிரச்னைகளை ஏற்படுத்தும். தற்போது மழையின் ‘பேட்டர்ன்’ மாறிவிட்டது. வேகமாக சில நிமிடங்கள் கொட்டித் தீர்க்கும். அதன்பிறகு பெய்யாது. இதனால் தண்ணீர் தேங்குவதுதான் பிரச்னை. சுத்தமான தண்ணீரில்தான் டெங்கு கொசுக்கள் இனவிருத்தி செய்யும். அந்தவகையில், மழைநீர்தான் சுத்தமான நீர். சென்னையில் சின்ன மழை பெய்தாலே தண்ணீர் தேங்குகிறது. எனவே, டெங்குவை உற்பத்தி செய்யக்கூடிய கொசுக்களும் வேகமாக இனவிருத்தி செய்கின்றன. மழைநீரை தேக்கி வைப்பதற்காகவே சென்னையில் பள்ளங்கள் தோண்டி வைக்கப்பட்டிருப்பது வேதனையிலும் வேதனை.இன்னொரு அதிர்ச்சியான விஷயம், டெங்கு தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்ள அரசுத் தரப்பில் பரிசோதனைக்கூடங்களே இல்லை. தனியார் மருத்துவமனைகளில்தான் டெங்கு குறித்த பரிசோதனையை செய்யமுடியும். அரசு இதைக் கண்டுகொள்வதில்லை. நான்கு வயதுச் சிறுவன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தவுடன் அரசு ஆலோசனை நடத்துகிறது. அப்படியென்றால் இவ்வளவு நாளாக அரசு செய்தது என்ன?டெங்குவை உருவாக்கக்கூடிய மூன்றுவகை கொசுக்களும் தமிழகத்தில் இருக்கின்றன. சென்னையில் மட்டும் 96 சதவிகிதம் டெங்கு பாதிப்பு இருக்கிறது. கொசுக்களை ஒழிக்க மருந்து தெளிக்கிறார்கள். கொசுக்கள் உற்பத்திக்கு காரணமாக இருக்கும் சிலர் மீது அபராதம் விதிக்கிறார்கள். இதைத் தாண்டி என்ன செய்கிறார்கள்?முதலில் புவி வெப்பம் அடைதலை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீர் தேங்குவது தடுக்கப்பட வேண்டும். ஆனால், கொசு மீதும் மழை மீதும் பழிபோட்டு அரசு தப்பித்துக் கொள்கிறது. அடிப்படையை சரிசெய்யாமல் டெங்குவை கட்டுப்படுத்த ஆலோசனை நடத்துவது அவசியமற்றது" என்றார் காட்டமாக.தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியத்திடம் பேசியபோது, ‘‘அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்படும் நோயாளிகளை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். தவிர, டெங்கு காய்ச்சலை முன்கூட்டியே கண்டறிந்து, முறையான சிகிச்சை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.வீடுகள் மற்றும் கடைகளில் தேங்கிக் கிடக்கும் நல்ல தண்ணீர் மூலம் இக்கொசு உற்பத்தியாவதால் இதை ஒழிக்க சுகாதாரத் துறையினர் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். டெங்கு கட்டுப்படுத்தப்படும். பொதுமக்கள் யாரும் பீதியடையவேண்டாம்" என்றார் உறுதியாக.டெங்கு காய்ச்சல், கட்டுக்குள் வரட்டும்!- கணேஷ்குமார்