-அபிநவ் பழங்குடியின மக்களின் ஏழ்மையையும் அப்பாவித்தனத்தையும் சாதகமாக்கிக்கொண்டு, அவர்களைத் துன்புறுத்துவதும், அவர்கள் உழைப்பைச் சுரண்டுவதும் இன்றும் பல இடங்களில் நடந்துகொண்டேதான் இருக்கிறது..அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் சுமார் 20 குடும்பங்களை ஒருவர் கொத்தடிமையாகவும், அந்தக் குடும்பத்துப் பெண்களை செக்ஸ் அடிமையாகவும் வைத்து கொடுமைப்படுத்திய விஷயம் தற்போது வெளியாகிப் பதறச் செய்திருக்கிறது. என்ன நடந்தது என்று, மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆசீர்வாதத்திடம் கேட்டோம். “ ‘பழங்குடி இனப் பெண் ஒருத்தரை தோப்புல இருக்கற மரத்துல கட்டிவைச்சு அடிக்கிறாங்க!”ன்னு தகவல் வந்துச்சு. உடனே அங்கே போனோம். நாங்க பார்த்த காட்சி அப்படியே பதற வைச்சுடுச்சு. இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை மரத்துல கட்டிவைச்சு, அவர் கதறக் கதற ஒரு கும்பல் அடிச்சுகிட்டு இருந்துச்சு. நாங்க போய் அந்தப் பெண்ணை விடுவிச்சு, அடைக்கலம் குடுத்து, ஆதரவா பேசி விசாரிச்சோம். அப்போ தெரியவந்த விஷயங்கள் எல்லாம் பகீர் ரகம்!” சொன்னவர், கொஞ்சம் நிறுத்திவிட்டுத் தொடர்ந்தார். “ இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த அந்தப் பொண்ணு பேரு நாகவள்ளி. அவங்க குடும்பம் உள்ளிட்ட இருபது இருளர் குடும்பங்கள், நாலுவருஷத்துக்கு முன்னால, வேலைதேடி செங்கல்பட்டு பகுதிக்கு வந்திருக்காங்க. மரவியாபாரியான பாலுங்கறவர், கொஞ்சம் முன் பணம் குடுத்து இவங்களை வேலைக்கு சேர்த்துகிட்டிருக்கார். செங்கல்பட்டுல கேளம்பாக்கத்தை அடுத்த படூர் பகுதியில உள்ள சவுக்கு, வேலிக்காத்தான் மரங்களைபகல் முழுக்க வெட்டச் சொல்ற பாலு, சாயந்தரம் ஆனதும் வெட்டின மரங்களை லோடு ஆட்டோவுல ஏத்திட்டு, கூடவே இருளர் ஆண்களையும் அனுப்பிடுவாராம்..கொண்டுபோற சரக்கை இறக்கி வைக்கறதுக்காகன்னு அவர் சொன்னாலும், அதுக்குப் பின்னால ஒரு குரூரம் இருந்திருக்கு. ஆண்கள் வெளியே போனதுக்கு அப்புறம், இருளர் பெண்களை மிரட்டி, தன்னோட இச்சையைத் தீர்த்துக்கறதை வழக்கமா வைச்சிருந்திருக்கார், பாலு. அதுலயும் தாய் கண் எதிர்லயே மகள்களோட உறவு வைச்சுக்கறது, மகள்களைப் பார்க்க வைச்சு தாயைத் தழுவறது இதெல்லாம் இவரோட ஸ்டைலாம்.இதுல பாலு ஒரு விஷயத்துல கவனமா இருந்திருக்கார். அது என்னன்னா, கணவர் உள்ள பெண்களை மட்டும்தான் இவர் அனுபவிப்பாராம். காரணம், கரு எதுவும் உண்டாயிட்டா, பழி தன்மேல வராதுங்கற முன் எச்சரிக்கையாம். நாலுவருஷமா நடந்த இந்தமாதிரியான கொடுமைகளையெல்லாம் நாகவள்ளி ஒவ்வொண்ணா சொல்லச் சொல்ல எங்களுக்குக் குலையே நடுங்கிடுச்சு! கடந்த மாசம், பாலுவோட பொண்ணுக்கு மஞ்சள் நீராட்டுவிழா நடந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திகிட்டு நாகவள்ளி அங்கே இருந்து தப்பிச்சு, திருவள்ளூர்ல இருக்கற தன்னோட உறவினர்கள் வீட்டுக்கு வந்து நடந்ததைச் சொல்லி கதறியிருக்காங்க. அதுக்கப்புறம் அசந்து தூங்கிக்கிட்டு இருந்த நாகவள்ளியைத்தான் வீடு புகுந்து தூக்கிட்டு வந்து மரத்துல கட்டிவைச்சு அடிச்சிருக்காங்க. நாங்க தலையிட்டஅப்புறம் செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. தலைமையிலான அரசு அதிகாரிகள் வந்து பாலுகிட்ட கொத்தடிமைகளா இருந்த இருளர்களை மீட்டிருக்காங்க. அவங்களை விசாரிச்சப்போ, மொத்தம் பன்னிரண்டு பெண்கள் பாலியல் வன்கொடுமையால பாதிக்கப்பட்டிருக்கறது தெரிஞ்சுது. ” என்றவர், இது குறித்து புகாரளித்தும் பயனில்லாத அவலத்தையும் பகிர்ந்துகொண்டார்..“நாக வள்ளியை மீட்டதுமே பாலு மேல கேளம்பாக்கம் காவல்நிலையத்துல புகார் குடுத்தோம். எந்த நடவடிக்கையும் இல்லை. இதையடுத்துதான் பாலு மேல நடவடிக்கை எடுக்கணும்னு புகாரளிக்க, டி.ஜி.பி அலுவலகத்துக்கு வந்தோம். ஆனா அங்கேயும் புகாரை வாங்காம அலைக்கழிக்கிறாங்க! ’’ என்று முடித்தார்.இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக பாலுவை தொடர்புகொண்டு பேசினோம். “என்னோட மூணு பிள்ளைங்க மேல சத்தியமா நான் எந்தத் தப்பும் என்மேல சொல்லப்படறதெல்லாம் அபாண்டமான பொய்!” என்றார்,ஆவேசம் தெறிக்க.பாலு மீது எஃப்.ஐஆர் பதிவு செய்த பிறகும் அவரைக் கைது செய்யாதது ஏன் என்று செங்கல்பட்டு எஸ்.பி. சாய் பிரணித்திடம் கேட்டோம். 'புகார் கிடைத்ததுமே உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் குற்றவாளி கைதுசெய்யப்படுவார்!” என்றார். அப்பாவிகளை அடிமைப்படுத்தும் அப் ‘பாவி’களை கடுமையாக தண்டிப்பது அவசியம்!