-எஸ். ஷக்தி`முகத்தை சிதை, கைகளை வெட்டு.. துள்ளத் துடிக்க சாகணும்.. அள்ளிகிட்டு ஆஸ்பத்திரி போகணும்' -இப்படியொரு கொலைவெறியோடு ஒரே குடும்பத்தில் நான்கு பேரைக் கொன்று ரத்தம் குடித்த கும்பலால், திருப்பூர் பல்லடம் மட்டுமல்லாமல், தமிழகமே தடதடத்துக் கிடக்கிறது..திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மாதப்பூர் கள்ளக்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். பருத்திக்கொட்டை, அரிசி வியாபாரியான இவரின் சித்தப்பா மகன் மோகன்ராஜ். இவர், அப்பகுதியில் பா.ஜ.க. கிளைத் தலைவராக உள்ளார். இவர்கள் இருவரின் குடும்பம் உட்பட நெருங்கிய சொந்தங்கள் ஒரே பகுதியில் பக்கத்து பக்கத்து வீடுகளில் வசிக்கின்றனர்.அதே ஊரை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் கடந்த 3ம் தேதி இரவு மோகன்ராஜின் வீட்டுக்கு தன் நண்பர்களுடன் கடும்போதையில் வந்துள்ளார். வீட்டுவாசலில் நின்று மோசமான வார்த்தைகளால் திட்டிக் கொண்டே திடீரென்று மோகன்ராஜை தெருவில் இழுத்துப்போட்டு வெட்டியுள்ளார். இதனைக் கண்டு பதறிப்போய் தடுக்கவந்த மோகன்ராஜின் தாய் புஷ்பவதி, உறவுப்பெண் ரத்தினம், செந்தில்குமார் ஆகியோரை வெங்கடேஷுடன் வந்த கும்பல் கொலைவெறியோடு தாக்கியுள்ளது..தன் கண் எதிரே உறவினர்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டு துடிப்பதைப் பார்த்த மோகன்ராஜின் மகனான சிறுவன், பயந்து அலறியபடி உறவினர்களை உதவிக்கு அழைக்க ஓடியுள்ளான். இதற்குள் தாங்கள் வந்த பைக்கை அங்கேயே போட்டுவிட்டு, புதர்களுக்குள் புகுந்து தப்பியது கொலைகார கும்பல்.அடுத்த சில நிமிடங்களில் இந்தப் படுகொலை விஷயம் தீயாக ஊருக்குள் பரவ, திரண்டுவந்த ஊர்மக்களால் பல்லடம் சுற்றுவட்டாரமே பதற்றத்தில் மூழ்கியது. அழுகுரலும் ஆதங்கக்குரலும் மேலோங்க கொதித்துப்போயிருந்த மக்கள், ‘குற்றவாளிகளை உடனே கைது செய்’ என்ற கோஷம் எழுப்பிக் குழுமினர். இதற்கிடையே மிகுந்த சிரமப்பட்டு இறந்தவர்கள் உடலை, பிரேதப் பரிசோதனைக்கு போலீஸார் எடுத்துச் சென்றனர்..கொல்லப்பட்ட மோகன்ராஜ் பா.ஜ.க. நிர்வாகி என்பதால் மறுநாள் அதிகாலையில் இருந்தே பல்லடம் அரசு மருத்துவமனையின் முன்பாக அக்கட்சியினர் குவியத் தொடங்கினர். உறவினர்கள், ஊர்மக்கள் எனப் பெருங்கூட்டமாக சாலைமறியலில் அமர்ந்தனர். சட்டென கலவரம் வெடிக்கும் சூழல் உருவானதையடுத்து, மேற்கு மண்டல ஐ.ஜி. பவானீஸ்வரி தலைமையில் ஐந்து மாவட்ட எஸ்.பி.க்கள் களமிறங்கினர்.இதற்கிடையில், பல்லடம் அரசு மருத்துவமனை பிணவறையில் குளிரூட்டும் பெட்டி பல மாதங்களாக பழுதாகிக் கிடப்பதால் சடலங்களை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்..பல்லடத்தில் நடந்த கொடூர கொலைகள் குறித்து போலீஸாரிடம் கேட்டபோது “கொலைகார டீமின் தலைவன் வெங்கடேசன், ஒரு டிரைவர். கொலையான மோகன்ராஜ், செந்தில்குமார் இருவரிடமும் டிரைவராக வேலை பார்த்துள்ளார். வேலைக்கு வராமல் மட்டம்போடுவது முதல் பலவிஷயங்களில் அடாவடியாக செயல்பட்டதால், அவனை வேலையில் இருந்து நீக்கியுள்ளனர். அன்று முதல் இருவரிடமும் முட்டல் மோதல் போக்கிலேயே இருந்துள்ளான். போதாக்குறைக்கு சம்பள பாக்கி உட்பட பணப்பிரச்னையும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.செந்தில்குமாரையும் மோகன்ராஜையும் சீண்டும்விதமாக சரக்கடித்துவிட்டு அவர்களின் வீட்டருகே நண்பர்களுடன் கூடி கலாட்டா செய்வதை வாடிக்கையாகவே செய்து வந்திருக்கிறான். ஊரில் இவனது போக்கு பலருக்கும் தெரியும் என்பதால் விலகியே இருந்துள்ளனர். சம்பவத்துக்கு சில நாள் முன்பு, போதையில் வந்து நிலத்தில் பாட்டில்களை உடைத்துப்போட்ட வெங்கடேசனிடம் கொஞ்சம் கடுமையாகவே வாக்குவாதம் செய்திருக்கிறார்கள், சகோதரர்கள் இருவரும்.இதனால் ஆவேசப்பட்டவன், தேனியில் இருந்து சிலரை தயார் செய்து கூட்டிவந்துள்ளான். சம்பவத்தன்று வழக்கம்போல குடித்துவிட்டுவந்து, வாய்த்தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான். அப்போது, திடீரென அரிவாளால் மோகன்ராஜை வெட்டத்தொடங்க, அவனுடன் வந்தவர்களும் சேர்ந்துகொண்டு கொலைவெறித் தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் நான்கு பேரை கூறுபோட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர்.இதில் ஆண்களின் முகத்தை சிதைத்தவர்கள், வாய்ச்சண்டை போட்டபோது பெண்கள் செருப்புகளை எடுத்துக்காட்டி திட்டியதால் ஏற்பட்ட கோபத்தில் அவர்களின் கைகளை முதலில் வெட்டி எறிந்துவிட்டுப் பிறகு கொலை செய்திருக்கிறார்கள்" என்றனர்..மேலும், “கொங்கு மண்டலத்தில் இப்படியெல்லாம் குரூரத்தனமான கொலைகள் நடக்காது, தென் தமிழகத்தில் இருந்து பிழைக்க வருபவர்களில் சிலர்தான் இப்படி வெறியாட்டம் ஆடுகிறார்கள். இந்தக் கொலையில்கூட முக்கிய கொலையாளியான வெங்கடேசன், திருநெல்வேலி பக்கத்தில் இருந்து இங்கேவந்து செட்டில் ஆனவன்தான். கொலையாளிகளில் ஒருவனான செல்லமுத்துவை கைது செய்துவிட்டோம், வெங்கடேசன் சிக்கியதும் இந்தப் படுகொலைக்கான முழு காரணமும் தெரியவரும்” என்றனர் விரிவாக.இந்த குரூரக் கொலைகளின் சில காட்சிகள் அப்பகுதியில் உள்ள சில சி.சி.டி.வி.களில் பதிவாகியுள்ளன. அதில், கொலைச் சம்பவத்தின் தொடக்கத்திலேயே மோகன்ராஜின் மகன் உறவினர்களை உதவிக்கு அழைக்கப் பதறி ஓடுவது பதிவாகியிருக்கிறது. அவன் இங்கேயே இருந்திருந்தால், வெறிகொண்ட கும்பல் அவனையும் போட்டுத் தள்ளியிருக்கும்" என்கின்றனர், ஊர்மக்கள்.இதில் கொலையான நபர் பா.ஜ.க கிளைத் தலைவர் என்பதால் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, ‘தெருவெங்கும் மதுக்கடைகளை திறந்து வைத்து விற்பனையை ஊக்குவிக்கிறது தி.மு.க. அரசு. சாராய வியாபாரிகள் பணம் சம்பாதிக்க இன்னும் எத்தனை பொதுமக்கள் பலியாக வேண்டுமோ’ என்று ஆவேசம் காட்டினார்.பல்லடம் படுகொலைகளுக்கு உரிய நீதி கிடைக்கட்டும்!