’அரிசியை அரைச்சா மாவு…எங்க தளபதியைத் தொட்டா சாவு..', `சிங்கம் இல்லாத காடா.. எங்க தளபதி இல்லாத தமிழ்நாடா?’ வாட்ஸ்ஆப் வீடியோ ஒன்றில் மாணவி ஒருவரின் முழக்கத்தை ரசித்தபடியே என்ட்ரி கொடுத்த வம்பானந்தாவுக்கு ராகி மால்ட் கொடுத்து வரவேற்றார் சிஷ்யை.“ தளபதி விவகாரம் வைரலாகி வருகிறதே, சுவாமி?”``நடிகர் விஜய் மிகப்பெரிய அரசியல் நகர்வை முன்னெடுத்துள்ளார். `இனி ரசிகர்கள் தன்னை `விஜய் அண்ணா' என்று அழைப்பதற்குப் பதிலாக `தளபதி' என்று அழைக்க வேண்டும்' என்று உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரம் உடன்பிறப்புகள் மத்தியில் புகைச்சலைக் கிளப்பியுள்ளது. காரணம், தமிழகத்தைப் பொறுத்தவரை ‘தளபதி’ என்றால் அது, மு.க.ஸ்டாலினையே குறிக்கும். சினிமாவில் ஸ்டாராக விஜய் உருவாகத் தொடங்கியகாலத்தில், ஸ்டாலினுக்காக ‘இளைய தளபதி’ என்ற பட்டத்தை வைத்துக்கொண்டார். பிறகு சினிமாவில் வளர வளர, `இளைய தளபதி' என்ற பட்டத்தை `தளபதி'யாக மாற்றிக் கொண்டார். அப்போதே, தி.மு.க.வினர் கடுகடுத்தனர்.சரி.. `அவர் சினிமாவில் தளபதி, ஸ்டாலின் அரசியலில் தளபதி' என்று தங்களுக்கு தாங்களே சமாதானம் செய்துகொண்டனர். ஆனால். விஜய்யின் அரசியல் ஆசை வெளிப்படையாகிவிட்ட நிலையில், தன்னை `தளபதி' என்று அழைக்க அறிவுறுத்தியிருப்பது தி.மு.க.வினரை ரொம்பவே சீண்டிப் பார்த்துவிட்டது. `நேரடியாக இதற்குப் பதில் கொடுத்தால் அது விஜய்க்கு பூஸ்ட் ஆகிவிடும்' என்பதால் மாற்று வழிகளை தீவிரமாக யோசித்து வருகின்றனர்".``புஸ்ஸி ஆனந்தும் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கிவருகிறாரே?”``விஜய் ரசிகர் மன்றத் தலைவர் புஸ்ஸி ஆனந்தின் நடவடிக்கையைப் பார்த்தால், ஆட்சியைப் பிடித்துவிட்ட தோரணை இருப்பதாக ரசிகர் மன்றத்தினரே புலம்புகிறார்கள். செப்டம்பர் 9ம் தேதி பனையூரில் நடந்த மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இரண்டு வீடியோக்களும் புஸ்ஸியின் பெயரை பஞ்சர் ஆக்கியிருக்கிறது. ஒரு வீடியோவில், மன்ற நிர்வாகி ஒருவரை முதுகில் ஓங்கி அடித்தது, அடுத்தது, விஜய்யை பேர் சொல்லி அழைத்த ஒரு பெண்ணிடம், ‘இனிமே பேர் சொல்லி எல்லாம் கூப்பிடக்கூடாது. `தளபதி'ன்னுதான் சொல்லணும்’ என மிரட்டியது”``நாடே சனாதன சர்ச்சையில் இருக்கும்போது ரெண்டு வீடியோக்களுமே கொஞ்சம் ஓவர் ரகம்தான் சுவாமி”``நிஜம்தான். இன்றைய தேதிக்கு இந்தியாவின் டாப் டாபிக் சனாதனம்தான். உதயநிதிக்கு எதிராக வடமாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியிருப்பதோடு, பா.ஜ.க. தலைவர்களும் தொடர்ந்து உதயநிதிக்கு கண்டனத்தைப் பதிவுசெய்து வருகின்றனர். அதையே மையக் கருவாக வைத்து உதயநிதிக்கு எதிராக அண்ணாமலைக்கு பேசிவருகிறார். அந்தவகையில், சனாதனம் பற்றி மதுரையில் அண்ணாமலை கொடுத்த விளக்கமும் பூதாகரமாகி உள்ளது..`திருப்புன்கூர் என்ற ஊருக்கு சென்றால் இன்றும்கூட அங்கே உள்ள கோயிலில் நந்தியின் சிலை சற்று விலகி இருக்கும். அங்கே கீழ்சாதியை சேர்ந்த ஒருவருக்கு சிவனை பார்க்க அனுமதியில்லை என்று சொன்னதால், நந்தியை விலகச்சொல்லி சிவன் காட்சியளித்த தர்மம், நம்முடைய சனாதனம்' எனப் பேசினார், அண்ணாமலை.இது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. `கோயிலுக்கு உள்ள நுழையக்கூடாது என சொன்னது சனாதனம். அதைக் கடவுள் தடுக்காமல், நந்தியை விலகச்சொன்னது சரியா? என ஒரு சாராரும் `விலகச் சொன்னது சனாதனம்.. கோயிலுக்குள் கூட்டிச் சென்றது திராவிடம்' என தி.மு.க.வினரும் பொங்கிவருகின்றனர்”``இப்போதைக்கு சனாதன சர்ச்சை ஓயாதுபோல. சசிகலா தொடர்பாக தாங்கள் சொன்னது நடந்துவிடும்போல தெரிகிறதே?”``அ.தி.மு.க.வில் தன்னை எப்படியாவது இணைத்துக்கொள்ள வேண்டுமென சசிகலா மெனக்கட்டு வருகிறார். இதற்காக, தினகரன் உள்பட தன்னைத் தேடிவந்த பன்னீர்செல்வத்தைவிட்டும் சசிகலா விலகியே நிற்கிறார். தன்னை மீண்டும் அ.தி.மு.க.வில் இணைத்துக் கொள்ள எடப்பாடியிடம் தூது அனுப்பி பேச்சுவார்த்தையும் நடத்திவருகிறார். இரு தரப்பிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறதாம்.கடந்த மாதம் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி, கொடநாடு தொடர்பான கேள்விக்கு ’சசிகலா அம்மா’ எனக் கூறியிருக்கிறார். இதையே, ரீ என்ட்ரிக்கு எடப்பாடி கொடுத்த கிரீன் சிக்னலாக சசிகலா தரப்பு பார்க்கிறது. இந்நிலையில், தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் அ.தி.மு.க. சார்பில் பங்கேற்பவர்கள், `சசிகலாவை விமர்சித்துப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்' எனக் கண்டிப்பான உத்தரவும் எம்.ஜி.ஆர்.மாளிகையில் இருந்து சென்றிருக்கிறதாம்.”``எடப்பாடியின் நடவடிக்கைகளிலும் மாற்றங்கள் தென்படுகிறதே?”``உண்மைதான். நாளையே நாடாளுமன்றத்தேர்தல் நடைபெற இருப்பதைப்போல் அவ்வளவு உற்சாகமாக வலம் வருகிறார். தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்களும் இப்போதே எடப்பாடியையும் அவரின் மகனையும் சுற்றிவரத் தொடங்கிவிட்டனர். இதில், முதல் தொகுதியாக இருப்பது திருவள்ளூர். இத்தொகுதியில் இரண்டுமுறை எம்.பியாக இருந்தவர் வேணுகோபால். கட்சியில் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர். ஆனால், சமீபகாலமாக அரசியலைவிட்டு ஒதுங்கியே இருக்கிறார். இடையில் பா.ஜ.க.வில் சேரவும் முயற்சி செய்தார். தேர்தல் நெருங்குவதால் மீண்டும் கட்சி தலைகாட்டத் தொடங்கியிருக்கிறார். `திருவள்ளூரில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காவிட்டால், மாற்று முகாமுக்கு அவர் தாவலாம்' என்கிறார்கள்.``ஓஹோ..".``தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியிலும் இதேபோல் ஒரு பிரச்னை. இங்கு போட்டியிட பா.ஜ.க.வினர் மத்தியில் கடும்போட்டி நிலவுகிறது. ஆனால், தனக்குத் தொகுதி உறுதியாகிவிட்டதாகப் பேசி வருகிறார், எஸ்.ஜி.சூர்யா. `அந்தத் தொகுதியை பா.ஜ.க.வுக்கு அ.தி.மு.க ஒதுக்குமா?' என உறுதியாகாத நிலையில், எஸ்.ஜி.சூர்யாவின் பேச்சை சொந்தக்கட்சியின் நிர்வாகிகளே ரசிக்கவில்லையாம்” எனக் கூறிவிட்டு, சிஷ்யை கொடுத்த ஆப்பிள் துண்டுகளை சுவைத்தபடியே அடுத்த செய்திக்குத் தாவினார் வம்பு.“தமிழக காங்கிரஸில் மாணவர் அணித் தலைவராக இயங்கியவர், அஸ்வத்தாமன். இவர், பிரபல ரவுடி வியாசர்பாடி நாகேந்திரனின் மகன். சமீபத்தில் ஆள்கடத்தல் வழக்கில் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். இவரை காங்கிரஸ் நிர்வாகிகள் யாரும் சென்று பார்க்கவில்லை. இதனால் மனவருத்தத்தில் இருக்கிறார், அஸ்வத்தாமன். இந்தநிலையில் அவர் மீதான வழக்குகளில் ஆஜரான அனைவருமே பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள். இரண்டு வழக்குகளில் அவருக்கு ஜாமீன் கிடைக்கவும் ஏற்பாடு செய்துவிட்டனர். இதனால் பா.ஜ.க.வில் சேர ஆர்வம் காட்டி வருகிறார். விஷயம், பா.ஜ.க தலைமைக்குச் செல்லவே, ‘இப்போதைக்கு வேண்டாம்' என ரெட் சிக்னல் கொடுத்துவிட்டதாம்"“இந்தியா கூட்டணியின் அடுத்த கூட்டம் சென்னையில் என்கிறார்களே?"“சென்னைக் கூட்டத்துக்கு முன்னதாக டெல்லியில் ஒரு கூட்டம் நடைபெற இருக்கிறது. இதற்கு அடுதத் கூட்டத்தை சென்னையில் வைக்குமாறு தி.மு.க தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைக்க உள்ளார். கூடவே, சனாதன சர்ச்சைக்கு முடிவு கட்டும் வகையில் பிரமாண்ட கூட்டம் ஒன்றை நடத்தவும் தி.மு.க திட்டமிட்டு வருகிறது. காரணம், தேர்தல் தேதி நெருங்கிவரும் நிலையில், கூட்டணியை சீர்குலைக்கும் வகையில் உதயநிதியின் சனாதன பேச்சு அமைந்துவிட்டதாக பேச்சு எழுந்துள்ளது.இந்தக் கருத்தை இந்தியா அணியில் அங்கம் வகிக்கும் உத்தவ் தாக்கரே, மம்தா பானர்ஜி ஆகியோர் கண்டித்துள்ளனர். இதனை முடிவுக்குக் கொண்டு வரவே, பொதுக்கூட்டத்தை நடத்தி பஞ்சாயத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, அடுத்தகட்டத்துக்கு நகர விரும்புகிறது, அறிவாலயம்" எனக் கூறிவிட்டு, ஜி20 மாநாடு தொடர்பாக வந்த அப்டேட்டுகளில் ஆர்வம் காட்டத் தொடங்கினார், வம்பு.டெல்லி வாத்தியார்* ஜி 20 மாநாட்டில் முழுக்க முழுக்க சைவ உணவே பரிமாறப்பட்டது. குறிப்பாக, பிற நாட்டுத் தலைவர்களுக்கு திணை உணவுகள்தான் வழங்கப்பட்டன. அந்த உணவை உண்பதற்கு வெளிநாட்டுத் தலைவர்களில் சிலர் ஆர்வம் காட்டவில்லை. திணை உணவுகளால் உடல் கோளாறு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம்தான் காரணமாம். இதனால், தங்கியிருந்த ஓட்டல்களிலேயே பிடித்த உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர்.* பிரதமர் மோடியை பாராட்டுவதில் ரொம்பவே ஆர்வம் காட்டிவருகிறார், காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர். குறிப்பாக ஜி 20 மாநாட்டை பாராட்டி பிரதமருக்கு அவர் எழுதிய கடிதத்தால் காங்கிரஸ் முகாமில் ஏக கடுகடுப்பு. `மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைத்து ‘இந்தியா’ என்ற கூட்டணியை உருவாக்கி, அதை தக்கவைக்க படாதபாடுபடுகிறோம். இவரோ மோடியை பாராட்டி வருகிறார். கட்சியில் உள்ள களைச் செடிகளை களைய வேண்டும்' என்று காங்கிரஸ் வட்டாரத்தில் சலசலப்பு கிளம்பியுள்ளது.* ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்ட விவகாரத்தை, பிரதமர் மோடியின் கவனத்துக்கு சிலர் கொண்டுசென்றுள்ளனர். அதில், `நாயுடுவைக் காப்பாற்றிவிட்டால், ஜெகனுக்கு எதிராக, ஆந்திராவில் பெரும் கூட்டணியை அமைக்கலாம்' என்று உத்தரவாதம் கொடுக்கப்பட்டதாம். இதையறிந்த ஜெகனோ, காங்கிரஸ் கட்சிக்குத் தூதுவிட்டு வருகிறாராம்.* தமிழக முதல்வர் ஸ்டாலின் ஜி20 மாநாட்டில் பங்கேற்றதை ‘இந்தியா’ கூட்டணியின் தலைவர்கள் ரசிக்கவில்லையாம். முதலமைச்சர் என்ற அடிப்படையில் கூட்டத்தில் பங்கேற்றதாக தி.மு.க தரப்பில் இருந்து விளக்கத்தை ஏற்கவில்லையாம். `நிதீஷ் குமாரும் முதலமைச்சர்தான். அவர் கலந்துக்கொள்ளவில்லையே' என்று சுட்டிக்காட்டுகிறார்கள். - சுவாமி வம்பானந்தா