தி.மு.க.வுக்கு எட்டாக்கனியாகவே இருந்த கொங்கு மண்டலத்தில் வெற்றிக்கனியைப் பறிக்க வைத்தவர், செந்தில் பாலாஜி. அவர் இப்போது அமலாக்கத் துறையால் திடீர் சிக்கலுக்கு ஆளாகியிருக்கும் சூழலில், இனி கொங்கு மண்ணில் கோலோச்சுமா தி.மு.க? என்பதுதான் உடன்பிறப்புகள் மத்தியில் நடக்கும் உட்டாலக்கடி ஆராய்ச்சி!ஒரு ஃப்ளாஷ் பேக். தமிழக அரசின் கஜானாவுக்கு வருவாயை அள்ளிக் கொட்டும் மாவட்டம் கோவை. அதனாலேயே, அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெறுகிறது கோவை. ஆனால், தி.மு.க.வுக்கு திறமையான மாவட்டச் செயலாளர்கள் அமையாததால் கடந்த காலங்களில் இங்கு தலைதூக்கவே முடியவில்லை. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலிலும் கோவை மாவட்டத்தின் பத்துத் தொகுதிகளிலும் தி.மு.க. தோல்வியைத் தழுவியது..இப்படியான சூழலில்தான் கோவையின் பொறுப்பு அமைச்சர்களாக நியமிக்கப்பட்ட சக்கரபாணி, ராமச்சந்திரன் ஆகியோரை அகற்றிவிட்டு, செந்தில்பாலாஜியை நியமித்தார் கட்சித் தலைவர் ஸ்டாலின். அவர் பொறுப்பேற்ற ஒரே வாரத்தில், பத்துத் தொகுதிகள் அடங்கிய கோவை மாவட்டத்தினை தனது கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவந்தார். செந்தில் பாலாஜியைப் பார்த்தாலே கண்டிப்பான ஹெட்மாஸ்டரைப் பார்ப்பதுபோல் நடுநடுங்கினார்கள், கோவை தி.மு.க. நிர்வாகிகள். இப்போது விஷயத்துக்கு வருவோம்... தற்போது செந்தில்பாலாஜிக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கும் சூழலில், கோவை தி.மு.க.வின் நிலை என்ன? என்று அந்த மாவட்ட தி.மு.க.வின் நெடுநாள் விசுவாசிகளிடம் கேட்டோம். “செந்தில் பாலாஜி கோவை மாவட்டப் பொறுப்பு அமைச்சராக வந்ததுமே, சாட்டையைக் கையில எடுத்துட்டார். கோவையில எல்லா செலவையும் அமைச்சரே பார்த்துக்கிட்டதால நிர்வாகிகளும் நிம்மதியா வேலை பார்த்தாங்க. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்ல, கோவையில முரட்டு மெஜாரிட்டியில எங்க கட்சி ஜெயிச்சதுக்கு ஒரே காரணம், அவரோட செயல்பாடுகள்தான். மேயர், துணை மேயர், மண்டலத் தலைவர்கள்னு பதவிகளை தி.மு.க.வே அள்ள வெச்சார். இது மட்டுமல்லாம மாவட்டம் முழுக்கவே எல்லா நகராட்சிகளையும் தி.மு.க-வே அள்ளிச்சு. இதனால கரூருக்கு சமமா, கோவையிலயும் செந்தில் பாலாஜிக்கு முழு உரிமையையும் கொடுத்தார், தளபதி. அஞ்சு மாவட்டங்களா திசைக்கு ஒண்ணா பிரிந்துகிடந்த கோவை மாவட்ட தி.மு.க-வை மூன்று மாவட்டங்கள் ஆக்கினார். மூன்று மாவட்டங்கள்லயும் அவருக்குத் தோதான ஆட்களை மாவட்டச் செயலாளர்களாக்க முயற்சி பண்ணினார். ஆனா மாநகர் மாவட்டச் செயலாளர் கார்த்திக், சீனியர் அமைச்சர் வேலு மூலமா போராடி தன்னோட பதவியை தக்க வெச்சுக்கிட்டார். மீதி ரெண்டு மாவட்டச் செயலாளர்களும் செந்தில் பாலாஜியோட கைப்பாவைகள்தான்..இது போக, அ.தி.மு.க.வுல ஒதுக்கி ஓரங்கட்டப்பட்ட மாஜி எம்.பி. நாகராஜ், மாஜி மேயர் ராஜ்குமார், மாஜி எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி, செல்வராஜ், இளைஞரணியின் செந்தில் கார்த்திகேயன் இப்படிப் பலரையும் தி.மு.க.வுக்கு இழுத்துகிட்டு வந்து அவங்களை பிரதானப்படுத்தினார். அதேசமயம், காலங்காலமா கோவையில தி.மு.க.வுக்கு உயிரைக் கொடுத்து உழைச்சவங்களை கைகட்டி வெறும் பார்வையாளரா உட்கார வெச்சதால, பலரும் ஏகத்துக்குக் கொதிச்சுக் கிடந்தாங்க. பொறுத்துப் பொறுத்து பார்த்துட்டு ஃபேஸ்புக்ல வடவள்ளி தங்கம் உள்ளிட்ட நபர்கள் ஓப்பனா பொங்கத் தொடங்கினாங்க. இன்னைக்கு செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால கைதாகி, இதய ஆபரேஷன் நடந்த நிலையில இருக்கிறார். அவர் மீண்டும் கோவைக்கு மாவட்டப் பொறுப்பாளரா வர்றதை இங்கே யாரும் விரும்பலை. கோவையில கட்சியை உயர்த்தினாரே தவிர, மக்கள் மனசை வெல்லல. சிட்டியில அத்தனை ரோடுகளும் பல்லாங்குழியாவும், பொங்கி வழியற குப்பைகளால நாறிப் போயிருக்கறதுமே சாட்சி. செந்தில் பாலாஜி இந்த நிலைமைல இருக்கறதால, இடைக்கால பொறுப்பாளர்களாக கோவையைப் பார்த்துக்க அமைச்சர்கள் முத்துசாமி, சாமிநாதன் ரெண்டு பேரையும் தலைமை கேட்டிருக்கார். ஆனா, ரெண்டுபேருமே ‘எங்களால சமாளிக்க முடியாதுங்க தலைவரே’னு சொல்லி ஒதுங்கியிருக்காங்க. காரணம், இங்கே நிர்வாகம், கான்ட்ராக்ட் மாதிரியான விஷயத்துல எல்லாம், செந்தில் பாலாஜி என்னென்ன பண்ணி வெச்சிருக்கார்னு தெரியலை. ‘ இப்போ பொறுப்பை ஏத்துக்கிட்டா நாளைக்கு அமலாக்கத் துறை இங்கேயும் நுழைஞ்சு அலசுறப்ப சிக்கிக்க நேரிடலாம்’ன்னு பயப்படுறாங்க. தொண்டாமுத்தூர் மற்றும் அன்னூர் ஒன்றியங்களுக்கு செயலாளர்களை நியமிக்கச் சொல்லி சமீபத்துல கோவை நிர்வாகிகள் அறிவாலயம் போயிருக்காங்க. அதுக்கு ‘இன்னும் நாலு மாசத்துக்கு எந்த மாற்றமோ, புது நியமனமோ இருக்காது. கௌம்புங்க’னு அன்பகம் கலை திருப்பி அனுப்பிட்டாராம். செந்தில் பாலாஜி திறமையான, கண்டிப்பான நிர்வாகிதான். ஆனா, மக்கள் மனசை வெல்லாதவரால் எப்படி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியை சம்பாதிக்க முடியும்? அதேசமயம், செந்தில் பாலாஜி இல்லாத கோவை தி.மு.க., மறுபடியும் சரிவுக்குப் போறதும் கண்கூடா தெரியுது. .கடந்த ஜூன் 23ம் தேதி நடந்த மாவட்டத் திட்டக்குழு உறுப்பினர் தேர்தல்ல பா.ஜ.க.வைச் சேர்ந்த கோபால் வெற்றி பெற்றிருக்கறதே இதுக்கான உதாரணம். தி.மு.க. கவுன்சிலர்களும் அவருக்கு ரகசியமா ஓட்டுப் போட்டிருக்காங்க அப்படிங்கிறது தெளிவாத் தெரியுது. செந்தில் பாலாஜி இருந்திருந்தா இப்படி பா.ஜ.க. வெற்றி பெறக்கூடிய அதிர்ச்சி நடந்திருக்குமா?னு யோசிக்கத் தோணுது. அதனால ஜனநாயக ரீதியில கட்சியை வளர்க்கக் கூடிய, மக்களோட நலன்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து செயல்படக்கூடிய ஒரு அமைச்சரை இங்கே பொறுப்புல அமரவைக்க வேண்டியது முதல்வரோட கடமை!” என்று விளக்கி முடித்தனர்.இதுபற்றி கோவை மாவட்ட தி.மு.க. செயலாளர்களான கார்த்திக், முருகேஷ் மற்றும் ரவியிடம் கேட்டபோது, “கட்சியில பதவி கிடைக்காத சிலர் சில விமர்சனங்களை வைக்கலாம். அதுக்காக பொறுப்பு அமைச்சரைக் குறைசொல்லக்கூடது. அமைச்சர் பூரண நலமாகி, பொய் வழக்கிலிருந்தும் விடுபட்டு மீண்டு வருவார்” என்றார்கள்.