Reporter
நியூரோ இல்லை... ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட் இல்லை... செத்துபோனா போஸ்ட்மார்ட்டம்கூட இல்லை! அடேங்கப்பா அண்ணாமலை மருத்துவக் கல்லூரி...
9 மாதக் குழந்தை குருபிரசாத்திற்கு பிஸ்கெட் ஊட்டும்போது புரையேறி இருக்கிறது. இதையடுத்து, மூச்சுத்திணறல் ஏற்பட, உடனே தூக்கிக்கொண்டு சிதம்பரத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஓடியிருக்கிறார்கள். பரிசோதித்த மருத்துவர்களோ, “குழந்தையின் தலையில் அடிபட்டு, ஏற்கெனவே இறந்துவிட்டது” என்று அதிர்ச்சி கூட்டியவர்கள், போஸ்ட்மார்ட்டம் செய்ய அருகிலுள்ள அரசு காமராஜ் மருத்துவமனைக்கு கொண்டுபோகச் சொல்லிவிட்டனர்.