மேற்குலக நாடுகளுக்கு எதிராக வலுவான அமைப்பாக பிரிக்ஸ் பிளஸ் மாற வாய்ப்புள்ளதால் அதிர்ச்சியில் உறைந்துள்ளது அமெரிக்கா. `நேட்டோ அமைப்புக்கு மாற்றாக உருவாக்கி அதற்குத் தலைமை தாங்க வேண்டும்' என்ற ரஷ்யா, சீனாவின் எண்ணத்துக்கும் செக் வைத்திருக்கிறது, இந்தியா. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, சவுத் ஆப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகளைக் கொண்ட பிரிக்ஸ் அமைப்பு, இனிவரும் நாட்களில் 11 நாடுகளாக அதிகரித்து வலுவான அமைப்பாக செயல்பட இருக்கிறது. கொரோனா தொற்றால், இதுவரை ஆன்லைனில் மட்டுமே நடைபெற்று வந்த உச்சி மாநாடு, இந்த ஆண்டு கடந்த ஆகஸ்ட் 22, 23, 24 ஆகிய மூன்று நாட்கள் தென் ஆப்பிரிக்க தலைநகர் ஜோகன்னஸ்பெர்க்கில் நடைபெற்றது. தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா தலைமையில் நடைபெற்ற உச்சி மாநாட்டில், பிரேசில் அதிபர், சீன அதிபர், இந்திய பிரதமர், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் ஆகியோர் கலந்து கொண்டனர். ஈரான் பிரதமர், கம்போடிய அதிபர், வங்கதேச பிரதமர் உள்பட 40 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். ஐந்து நாடுகளுக்கு இடையேயான பொதுவான வர்த்தகம், விவசாயம், உணவு பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகியவை விவாதிக்கப்பட்டன. அதன்பின்னர், பிரிக்ஸ் அமைப்பை `பிரிக்ஸ் பிளஸ்' ஆக்கும் விவாதம் தொடங்கியிருக்கிறது. இந்த விவாதத்தில் பிரதமர் மோடியின் ஆட்டம் அபாரமாக இருந்ததாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட பத்திரிகையாளர் ஒருவரிடம் பேசினோம். “பிரிக்ஸ் கூட்டமைப்பில் சேர 40 நாடுகள் ஆர்வம் காட்டின. அதில், 23 நாடுகள் மட்டும் விண்ணப்பங்களை அளித்திருந்தன. 23 நாடுகளின் பொருளாதாரம், நடத்தை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஆறு நாடுகளை மட்டும் கூட்டமைப்பில் சேர்த்திருப்பதாக தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா அறிவித்தார்..குறிப்பாக, சவுதி அரேபியா, ஈரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அர்ஜென்டினா, எத்தியோப்பியா, எகிப்து ஆகிய ஆறு நாடுகளே அவை. பிரிக்ஸில் சேர பாகிஸ்தான் ரொம்பவே மெனக்கெட்டது. சீனாவும் அவர்களுக்கு ஆதரவாக இருந்தது. ஆனால், இந்தியாவோ பாகிஸ்தானை சேர்க்கவே கூடாது என்று உறுதியுடன் நின்றது. ‘பாகிஸ்தானால் பிரிக்ஸுக்கு எந்த லாபமும் இல்லை, அந்த நாடு திவாலாகிக் கொண்டிருக்கிறது. தவிர, பாகிஸ்தானில் 73 தீவிரவாத இயக்கங்கள் இருக்கின்றன. அதில், 35 இயக்கங்கள் ரொம்பவே ஆக்டிவாக உள்ளன’ என்று இந்தியா விளக்கியது. இதற்கு பிரேசிலும் தென் ஆப்பிரிக்காவும் ஆதரவு கொடுக்க, ரஷ்யா நடுநிலை வகிக்க, பாகிஸ்தான் ஓரம்கட்டப்பட்டது. அதேநேரம், மிகச் சிறிய நாடான எத்தியோப்பியாவை பிரிக்ஸில் சேர்த்திருப்பது இந்தியாவின் வியூகம்தான். பல ஆப்பிரிக்க நாடுகள் சீனாவின் கடன் வலையில் சிக்கியுள்ளன. எத்தியோப்பியா, சீனாவின் தொடர்பை விரும்பவில்லை. இந்தியாவை நம்பி பிரிக்ஸில் இணைந்திருக்கிறது. இதனால், எத்தியோப்பியாவில் உள்ள தங்கச் சுரங்கங்கள் இனி இந்தியாவின் கையில்” என்றவர், “பிரிக்ஸ் பிளஸ் அமைப்பை அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்புக்கு மாற்றாக கொண்டுசெல்ல வேண்டும். அதற்கு தலைமை தாங்கவேண்டும் என்பது ரஷ்யா, சீனாவின் எண்ணம், அதற்கும் செக் வைத்திருக்கிறது இந்தியா. இவ்விரு நாடுகளும் தாங்கள் விரும்பும் நாடுகளை பிரிக்ஸில் சேர்க்க முயன்றன. அதற்கு இந்தியா கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது. தவிர, பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளுக்கு தலா 11 சதவிகித அதிகாரங்கள் உள்ளன. அதன்படி பார்த்தால் 55 சதவிகித அதிகாரங்களை இவை கொண்டிருக்கும். இனி சேரப்போகும் நாடுகளுக்கு 45 சதவிகித அதிகாரம்தான் இருக்கும். இதில், பிரேசிலும் தென்ஆப்பிரிக்காவும் இந்தியாவின் விசுவாசிகள் என்பதால் இந்தியாவின் கை ஓங்கும்..தற்போது, ஈரான், சவுதி அரேபியா, யு.ஏ.இ ஆகிய நாடுகளை பிரிக்ஸில் சேர்த்ததன் மூலம், 80 சதவிகித எண்ணெய் உற்பத்தி நாடுகள் பிரிக்ஸின் ஓர் அங்கமாக மாறியுள்ளன. ஐந்து பிரிக்ஸ் நாடுகளில் 50 சதவிகித கோதுமை உற்பத்தி இருக்கிறது. 15 சதவிகித தங்கமும் இருப்பில் இருக்கிறது. எனவே, அமெரிக்கா தலைமையிலான நேட்டோவுக்கு மிகப்பெரிய சவாலாக பிரிக்ஸ் பிளஸ் மாறப்போகிறது. தவிர, பிரிக்ஸ் நாணயம், பிரிக்ஸ் வங்கி, பிரிக்ஸ் கேபிள், பிரிக்ஸ் வேக்சின் என நேட்டோவுக்கு எதிரான எல்லா நடவடிக்கைகளிலும் பிரிக்ஸ் பிளஸ் ஈடுபடப்போகிறது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட இருக்கும் பிரிக்ஸ் நாணயம் சீனாவின் யுவானாக இருக்க வேண்டும் என்பதில் சீனா ஆர்வம் காட்டியது. இதற்காக பிரிக்ஸ் வளர்ச்சி வங்கியில் யுவான் நாணயங்களை கடனாக வழங்க தீர்மானம் கொண்டுவந்தது. ஆனால், இந்தியா இதை முறியடித்திருக்கிறது. `பிரிக்ஸ் வளர்ச்சி வங்கி மூலம் பிரிக்ஸ் நாடுகளுக்கு அந்தந்த நாடுகளின் நாணயங்களில் கடன் கொடுக்க வேண்டும்' என்று கூற, அதையே இறுதி செய்திருக்கிறது பிரிக்ஸ். இதன்மூலம் உலக வர்த்தக சந்தையில் டாலரின் மதிப்பு குறையும் என்பதால் அமெரிக்காவுக்கு பயங்கர அதிர்ச்சி. தவிர, ஈரான், சவுதி அரேபியா போன்ற நாடுகளில் ரூபாயில் இந்தியா வர்த்தகம் செய்யத் தொடங்கும். உலகில் சுமார் பத்து நாடுகளுடன் ரூபாயில் இந்தியா வர்த்தகம் செய்யத் தொடங்கியிருப்பது வரலாற்றுச் செய்தி. அடுத்த பிரிக்ஸ் பிளஸ் மாநாடு ரஷ்யாவில் அதிபர் புடின் தலைமையில் நடைபெறப்போகிறது. அப்போது, நேட்டோவுக்கு எதிராக புடின் அறிவிக்கும் திட்டங்கள், டாலர் தேசத்தின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வரும்” என்றார். அதேநேரம், பிரிக்ஸ் விரிவாக்கம் தொடர்பாக பேசும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், `இந்த நாடுகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. அமெரிக்காவுக்கு எதிரான புவிசார் அரசியல் போட்டியாளர் உருவாகும் வாய்ப்பு தென்படவில்லை' என்கிறார். ஆட்டம் இனிதான் ஆரம்பமாகப் போகிறது. - அ.துரைசாமி