கள்ளச்சாராய மரணங்களால் ஏற்பட்ட அவப்பெயரில் இருந்து ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்குள், `சேலம் சிறையில் சாராய ஊழல்' என்ற செய்தி, அரசுக்கு கூடுதல் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. `ஊறலின் பின்னணியில் சிறை ஊழியர்கள்' என்ற தகவலால் தள்ளாடுகிறது, சேலம்.சேலம் அஸ்தம்பட்டியில் இருக்கிறது மத்திய சிறைச்சாலை. எட்டு பிளாக்குகள் கொண்ட இந்தச் சிறையில் 1,431 கைதிகளை அடைக்கும் வசதியுள்ளது. தற்போது 1,044 கைதிகள் இருக்கின்றனர். கடந்த வாரம் சிறைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் ஒன்று சென்றுள்ளது. அதில், `சாராயம் காய்ச்சுவதற்காக சில கைதிகள் ஊறல் போட்டிருக்கிறார்கள்' என்பதுதான் அது. இதையடுத்து, ஜெயிலர் மதிவாணன் தலைமையில் அனைத்து பிளாக்குகளிலும் சோதனை நடத்தப்பட்டது.எட்டாவது பிளாக்கில் சோதனை நடந்தபோது, ஓர் இடத்தில் துணிக்கு அடியில் பூமியைத் தோண்டி பள்ளம் ஏற்படுத்தியதுபோல தென்பட்டுள்ளது.அதை ஆராய்ந்து பார்த்தபோது, 2 லிட்டர் பாட்டிலில் தண்ணீர், பேரீச்சை, திராட்சைப் பழங்கள் என நிரப்பில் ஊறல் போட்டு வைத்துள்ளனர். இந்தத் தகவல் உயர் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது. பிற பிளாக்குகளில் நடந்த சோதனைகளில் எதுவும் சிக்கவில்லை.`ஊறலை போட்டது யார்?' என 7 மற்றும் 8வது பிளாக் கைதிகளிடம் விசாரிக்கும்போது, ‘நான் இல்லை.. நீ இல்லை’ என்று மறுத்துள்ளனர். ஒருகட்டத்தில், மாங்கா பிரபு என்ற கைதி மீது சந்தேகம் ஏற்பட்டு தங்கள் பாணியில் விசாரித்துள்ளனர். இதுதொடர்பான விசாரணை நடந்து கொண்டிருந்த நிலையில், கடந்த 6ம் தேதி வழக்கு விசாரணைக்காக மாங்கா பிரபுவை போலீஸார் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது, திடீரென கோர்ட் வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டம் செய்தார், மாங்கா பிரபு.`என்னையும் அய்யனார், அய்யந்துரையையும் ‘சாராயம் ஊறல் போட்டது நீங்கள்தான்’ என்றுகூறி போலீஸார் கொடுமைப்படுத்துகிறார்கள். இல்லை என்று சொன்னாலும் விடுவதாக இல்லை' என்று மாங்கா பிரபு கதறினார். அவரை, போலீஸார் சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றனர்..``என்ன நடக்கிறது சேலம் சிறையில்?'' என சிறைத்துறை அதிகாரிகளிடம் கேட்டோம். ``தண்ணீரில் ஊறல் போட்டிருந்தது உண்மை. ஆனால், `அது சாராய ஊறல்தானா?'ன்னு சொல்ல முடியாது. கைதிகளை விசாரிச்சப்போ, `தண்ணீரில் பழத்தை ஊறப் போட்டு திங்கறதுக்கு வைச்சிருந்தோம். அதைக்கூட நாங்க செய்யக் கூடாதா?' எனப் பதில் சொன்னாங்க.`மேல வைக்கவேண்டியதுதானே. பூமிக்குள்ள ஏன் புதைச்சி வச்சீங்க'ன்னு கேட்டா, `பாதுகாப்புக்கு வச்சோம். திருடி திங்கற டிக்கெட் இங்க நிறைய இருக்கு சார்'ன்னு சொன்னாங்க. சிறைக்குள்ள ஜெயில் அதிகாரிகள், வார்டன்களுக்குள்ளயே நிறைய முட்டல், மோதல், கருத்து வேறுபாடுகள் இருக்கு. அதனால பிரச்னையை ஊதிப் பெரிசாக்கி, கைதிகளைப் பயன்படுத்திக்கிறாங்க'' என்கின்றனர்.தொடர்ந்து பேசும்போது, சில தகவல்களையும் பட்டியலிட்டனர். ``சேலம் சிறைத்துறை கண்காணிப்பாளராக வினோத் என்ற அதிகாரி புதுசா நியமிக்கப்பட்டுள்ளார். அவர், கைதிகள் பாதுகாப்பு விஷயங்கள்ல கடுமை காட்ட ஆரம்பிச்சார். சிறைக்குள் கருப்பு திராட்சை, பச்சை திராட்சை, மா, கொய்யா உள்ளிட்ட பழங்களுக்கு தடை விதிச்சார். ஆப்பிள், மாதுளைப் பழங்களைக் கொண்டு செல்ல அனுமதி கொடுத்தார்.இதெல்லாம் முன்னரே இருந்த விதிமுறைகள்தான். ஆனாலும், தீவிரமாக நடைமுறைப்படுத்தினார். கைதிகளைப் பார்க்க பார்வையாளர்கள், வக்கீல்கள்னு வருவாங்க. அவங்ககிட்டயும் செக்அப் நடைமுறைகள்ல கடுமை காட்டினார். இதனால், கைதிகளுக்குப் போக வேண்டிய சில வசதிகள்ல சிக்கல் ஏற்பட்டுச்சு.குறிப்பாக, கஞ்சா, செல்போனை எல்லாம் ஆசனவாயில் வச்சு கடத்துவாங்க. இந்தமாதிரி குற்றம் செய்யறவங்க 25 பேர் சேலம் ஜெயில்ல இருக்காங்க. `அவங்களை வெளியே கூட்டிட்டுப் போகும்போதும் வரும்போதும் கடுமையாக செக் பண்ணுங்க'ன்னு சொன்னதால, அவங்களால எதுவும் செய்ய முடியலை.கஞ்சா கிடைக்காம போனதால, `ஊறலாவது போடலாம்'னு பிளான் செஞ்சிருக்காங்க. அதையும், சக கைதிகள் அதிகாரிகள்கிட்ட சொன்னதால மாட்டிகிட்டாங்க. அப்படி சந்தேக வலையில சிக்கியவர்களை தனி அறையில போட்டதால கடுப்பாகித்தான் கோர்ட்ல தர்ணா செஞ்சாங்க. இந்தப் போராட்டமேகூட, சில அதிகாரிகளோட ஐடியாதான்.சேலம் சிறையில் கரூர் மாங்கா பிரபு, சென்னையைச் சேர்ந்த தினேஷ், மதுரை அப்பளம் ராஜா, மேட்டூர் கூழை நாகராஜ், எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு தௌபீக், அப்துல், பொள்ளாச்சி பாலியல் வழக்கு கைதிகள் என முக்கியமான கைதிகள் அடைக்கப்பட்டிருக்காங்க. இதுல சில கைதிகள் வேறு ஜெயிலுக்கு மாறவும் திட்டம் போடறாங்க.`அதிகாரிகள் மேல ரிட் போட்டுருவேன், மனித உரிமை கேஸ் போடுவேன், கோர்ட்ல சொல்லுவேன்'னு மிரட்டுறாங்க. அதிகாரிகள் மேல் பழி சொன்னால் அரசாங்கம் ட்ரான்ஸ்பர் பண்ணிடும்னு சில கைதிகள் போட்ட பிளான்தான் சாராய ஊறல்'' எனப் பேசி முடித்தனர்.``இதெல்லாம் உண்மையா?'' என சேலம் சிறைத்துறை எஸ்.பி. வினோத்திடம் பேசினோம். ``நீங்கள் சொல்வது மாதிரி எதுவும் இல்லை. வெளியில சாராய ஊறல்னு தகவல் பரவிவிட்டது. சில பழங்களை நாங்கள் அனுமதிப்பதில்லை. பிறகு எப்படி ஊறல் போட முடியும்? கைதிகளின் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவது உண்மைதான். மற்றபடி வேறு எந்தப் பிரச்னைகளும் இல்லை'' என்று மட்டும் முடித்துக்கொண்டார்.அடுத்து, சுரங்கப் பாதை பிளான் இருக்கான்னு செக் பண்ணுங்க சார்! - கே.பழனிவேல்