நிலவில் கந்தகமும் பிளாஸ்மாவும் இருப்பதையும் விக்ரம் லேண்டர் கண்டறிந்து அனுப்பியதை நாடே கொண்டாடிக் கொண்டிருக்க, சந்திரயான் ராக்கெட் ஏவுதளத்தை அமைத்த கனரக பொறியியல் ஊழியர்கள் 15 மாத சம்பள பாக்கிக்காக போராடி வருவதுதான் கொடுமையிலும் கொடுமை.`நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு’ எனும் புதிய சரித்திரத்தை சந்திரயான் 3 விண்கலம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. ஆனால், இதற்கான ராக்கெட் ஏவுதளத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டது, மத்திய அரசின் கனரக பொறியியல் நிறுவனம்தான். இங்கு வேலைபார்க்கும் ஊழியர்கள்தான், தற்போது போராட்டக்குரல் எழுப்பி வருகின்றனர்.``என்ன பிரச்னை?" என இஸ்ரோவில் பணியாற்றும் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டோம். ``ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் கனரக பொறியியல் நிறுவனம் (ஹெவி இன்ஜினீயரிங் கார்ப்பரேஷன்) இயங்கி வருகிறது. கடந்த 1958ம் ஆண்டு 22,000 ஊழியர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தில் தற்போதைய நிலவரப்படி 3,400 பேர் மட்டுமே உள்ளனர்.இந்நிறுவனம் ஸ்டீல், சுரங்கம், ரயில்வே, மின்சாரம், ராணுவம், விண்வெளி ஆராய்ச்சி, அணுசக்தி உட்பட பல்வேறு துறைகளுக்கு தேவையான முதன்மை உபகரணங்களை தயாரித்து விநியோகித்து வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரோ இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்துக்கு தேவையான ஏவுதளத்தை இந்நிறுவனம் தயாரித்து தந்தது.இங்கு ஐ.ஐ.டி உட்பட முன்னணி கல்வி நிலையங்களில் பயின்ற பொறியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆனால், இந்த நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருவதால் ஊழியர்களுக்கு கடந்த ஓர் ஆண்டாகவும் அதிகாரிகளுக்கு 15 மாதங்களாகவும் சம்பளம் வழங்கப்படவில்லை.இதனால் ஊழியர்கள் கடும் நிதி நெருக்கடியில் தவித்து வருகின்றனர். சிலர், குழந்தைகளின் கல்விச்செலவு, மருத்துவ செலவுகளுக்கு பணமின்றி தற்காலிகமாக காய்கறி, பழங்கள், டீ விற்பனை செய்து சமாளித்து வருகிறார்கள். மத்திய அரசிடம் போராடி சம்பள பாக்கியை பெறுவதற்காக ஊழியர்கள், அதிகாரிகள் ஒன்று சேர்ந்து ஒரு குழுவை உருவாக்கியுள்ளனர்.இதன்மூலம், ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி, உச்சநீதிமன்ற தலைமை டி.ஒய்.சந்திரசூட் ஆகியோருக்கு தங்கள் பிரச்னைகளை விளக்கி இமெயில் அனுப்பியுள்ளனர். இஸ்ரோ, பாதுகாப்பு அமைச்சகம், ரயில்வே ஆகியவற்றிடம் இருந்து ரூ.1,500 கோடி மதிப்பிலான ஆர்டர்கள் வந்தாலும், நிறுவனத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் முடிவுக்கு வந்தபாடில்லை. தவிர, ‘கோல் இந்தியா’ மற்றும் ஸ்டீல் துறையின் 80 சதவிகித பணிகள் நிதி பற்றாக்குறையால் அப்படியே முடங்கி கிடக்கிறது..இதனால், 1000 கோடி செயல்பாட்டு மூலதனத்தை வழங்குமாறு கனரக தொழில்துறை அமைச்சகத்திடம் ’ஹெச்.இ.சி’ பலமுறை கோரிக்கை வைத்தும், `எந்த வகையிலும் உதவ முடியாது’ என கைவிரித்துவிட்டது. இதனால்தான் நிலுவையில் இருக்கும் சம்பளத்தொகையை வழங்கக் கோரி நிறுவன வாசலில் கோரிக்கை பதாகைகளை ஏந்தியபடி தினமும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.2022ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நிறுவன ஊழியர்கள் அனைவரும் சம்பளம் வழங்கக்கோரி பல நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பணிகள் முடங்கின. இதன்பிறகு ஒரு மாத சம்பளம் கொடுத்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.வரலாற்றில் முதல்முறையாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கடும் நெருக்கடியில் இந்த நிறுவனம் சிக்கித் தவிக்கிறது. இதனால் நிரந்தர சி.எம்.டியும் நியமிக்கப்படவில்லை. இதை வைத்தே ஹெச்.இ.சி மீதான அரசின் அக்கறையின்மை புரிந்துவிடும்.பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் மற்றும் கனரக பொறியியல் நிறுவன பொறுப்பு சி.எம்.டி நளின் சிங்கால், இதுவரை கனரக பொறியியல் நிறுவனத்தின் பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை. இஸ்ரோவின் செயற்கைக்கோள்களுக்கான ஏவுதளங்களை கனரக பொறியியல் நிறுவனம்தான் மிகுந்த சிரமத்துக்கு நடுவே தயாரித்து வழங்கியது.அதாவது, ஏவுதளங்கள் அமைக்கத் தேவையான இரும்பு நிறுவனத்திடம் இல்லை. உபகரணங்களைத் தயாரிக்கத் தேவையான சிறப்பு எஃகுகளை மத்திய அரசின் ‘சாயில்’ நிறுவனம் இதுவரை வழங்கிவந்தது. அதேநேரம் ‘சாயில்’ நிறுவனத்துக்கு 5 கோடி ரூபாயை பாக்கி வைத்திருந்ததால், முந்தைய பாக்கியை செலுத்தாமல் எஃகு வழங்க ’சாயில்’ மறுத்துவிட்டது.இப்படி அபாயகட்டத்தில் இருந்தபோதும்கூட, `சந்திராயன் 3’க்காக ஏவுதளங்களை அமைத்து கொடுத்தது, கனரக பொறியியல் நிறுவனம். விரைவில் சம்பள பிரச்னைக்கு தீர்வு ஏற்படவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவதுதான் ஒரே வழி" என்றார் வேதனையுடன்.``கனரக பொறியியல் நிறுவனத்தை மத்திய அரசு காப்பாற்ற முன் வராதது ஏன்?" என இஸ்ரோவின் முன்னாள் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரையிடம் கேட்டோம். ``இஸ்ரோ என்பது மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடியது. ஆனால், கனரக பொறியியல் நிறுவனம் அப்படி அல்ல.சந்திராயன் திட்டம் உட்பட இஸ்ரோவின் எந்த திட்டம் என்றாலும் அதில் பல பொதுத்துறை நிறுவனங்கள் இணைந்து செயல்படும். அப்படிப்பட்ட நிறுவனங்களில் ஒன்றுதான் கனரக பொறியியல் நிறுவனம் என நினைக்கிறேன். எனவே இதில் இஸ்ரோ தலையிட முடியாது. மத்திய அரசுதான் முடிவெடுத்து செயல்படுத்தவேண்டும்’ என்றார்.தேசத்தின் பெருமையைக் கட்டிக் காப்பவர்களை அரசு கைவிடலாமா? - கணேஷ்குமார்