- களமிறங்கிய ரிப்போர்ட்டர் டீம் மூச்சுக்கு முந்நூறு முறை ‘சமூக நீதி அரசு, சமூக நீதி அரசு…” என்று முழங்கிக்கொண்டிருக்கும் மாநிலத்தில்தான் இப்படியொரு சமூக அநீதி நடந்திருக்கிறது. இங்கே மாடல்கள் எல்லாம் சொற்களின் வடிவங்களில் அலங்காரமாக மட்டுமே வளையவருகின்றன. நிலைமை தலைகீழாக இருக்கிறது. வேங்கைவயலில் பட்டியல் சமூக மக்களுக்கான குடிநீர் தொட்டியில் மலம் கலந்தது தொடங்கி பட்டியல் சமூக பிரதிநிதிகளை அமைச்சர்கள் அவமதிப்பது வரை இங்கே எதையும் கேட்க ஒரு நாதியும் இல்லை. இப்போது நாக்கை பிடுங்கிக்கொள்ளும்படி கேள்வி எழுப்ப வைக்கிறது நாங்குநேரியில் பள்ளிக் குழந்தைகள் மீது நடந்திருக்கும் கொடூர தாக்குதல். இதற்காவது பதில் வைத்திருக்கிறதா திராவிட மாடல் அரசு? நெல்லை மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த முனியாண்டி-அம்பிகாபதி தம்பதிக்கு சின்னதுரை, சந்திரா செல்வி என்ற இரண்டு குழந்தைகள். கூலித் தொழிலாளியான முனியாண்டி, சில ஆண்டுகளுக்கு முன் உடல்நலமின்றி இறந்துவிட்டார். அம்பிகாபதிதான் கூலிவேலை செய்து, மகனையும் மகளையும் படிக்க வைத்து வருகிறார்.வள்ளியூரில் உள்ள அரசு உதவி பெறும் கன்கார்டியா மேல்நிலைப் பள்ளியில் சின்னதுரை 12ம் வகுப்பும் சந்திரா செல்வி 9ம் வகுப்பும் படித்து வந்தனர். கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி இரவு 10 மணியளவில், சின்னத்துரையும் சந்திரா செல்வியும் இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போதுதான், அந்தக் கொடூர சம்பவம் அரங்கேறியிருக்கிறது.சாட்சி சொன்னா கொன்னுருவாங்க!``மூணு சின்னப்பசங்க திடீர்னு என் வீட்டுக்குள்ள வந்தாங்க. ஒருத்தன் கையில அருவா இருந்துச்சு... என்ன ஏதுன்னு விசாரிக்கிறதுக்குள்ள சாப்பிட்டுக்கிட்டிருந்த எம் மவனை அருவாளால வெட்ட ஆரம்பிச்சிட்டாங்க. மவன் தடுத்ததும் கையில வெட்டு விழுந்துச்சு. பக்கத்துல இருந்த எம் மகளும் தடுக்க, அவளையும் வெட்டிட்டாங்க. நாங்க சத்தம் போட்டு கூச்சல் போட்டதும் அக்கம் பக்கத்துல இருந்தவங்கல்லாம் வந்ததும் அந்தப் பசங்க ஓடிப்போயிட்டாங்க'' எனக் கதறுகிறார், தாய் அம்பிகாபதி.தொடர்ந்து பேசுகையில், ``பள்ளிக்கூடத்துல ஏதோ நடந்திருக்கு, எம் மவனை சில பசங்க கடைக்கு போயிட்டு வான்னு வற்புறுத்தியிருக்காங்க. பாக்கெட்டுல பைசா இருந்தா பிடுங்கியிருக்காங்க. முட்டி போட்டு நிற்கச் சொல்லியிருக்காங்க. இதனால், அவன் ஒரு வாரமா பள்ளிக்கூடம் போகாம பித்துப் பிடிச்சவன்போல் இருந்தான்.டீச்சர் போன் பண்ணி கேட்ட பிறகுதான் நானே கூட்டிக்கிட்டு போய் பள்ளிக்கூடத்துல விட்டேன். அப்போ, மவன்கிட்ட ரெண்டு டீச்சருங்க ஏதோ கேட்டு எழுதி வாங்குனாங்க. நாங்க பள்ளிக்கூடத்துல இருக்கும்போதே மூணு பசங்க சைக்கிள்ல எங்களையே சுத்திச் சுத்தி வந்தாங்க" என்றார்.அடுத்து, பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் மாணவர் சின்னதுரையிடம் பேசினோம். ``ஹெச்.எம்கிட்ட புகார் கொடுத்ததுக்கே என்னை வெட்டிட்டாங்க... போலீஸ் கேஸ் போட்டு சாட்சி சொன்னா நிச்சயம் கொன்னுருவாங்க, இனிமேல் ஸ்கூலுக்கே நான் போகமாட்டேன்'' என்றார், மிரட்சியுடன்.மாணவருக்கு நேர்ந்த கொடூர சம்பவத்தைக் கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டபோது, அங்குவந்த சின்னதுரையின் தாத்தா கிருஷ்ணன், மாரடைப்பு ஏற்பட்டு இறந்த சம்பவம் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியது போலாகிவிட்டது..வகுப்பறையில் டார்ச்சர்!தற்போது இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துப் போராடி வரும் விடுதலைச் சிறுத்தை கட்சியின் இளைஞர் எழுச்சிப் பாசறையின் மாநில துணைச் செயலாளர் வக்கீல் கார்த்திக்கிடம் பேசினோம். ``சின்னத்துரை செல்லும் பஸ்ஸில்தான் நாங்குநேரி, மறுகால்குறிச்சி, மஞ்சன்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மாற்று சமுதாய பசங்களும் ஏறுவாங்களாம். சின்னதுரை படிப்பில் கில்லாடி. எனவே வகுப்பு ஆசிரியர் அடிக்கடி, `சின்னத்துரையும் நாங்குநேரியிலிருந்து வருகிறான். நீங்களும் அங்கிருந்துதான் வர்றீங்க. அவனைப் பார்த்து படிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்' என்று கூறியிருக்கிறார்.`என்னடா இது... போயும் போயும் ஒரு தாழ்ந்த சாதிப் பையனோட நம்மள கம்பேர் பண்றாங்களே...' என்று கொதித்த அந்த மாணவர்களின் கோபம் சின்னதுரையின் பக்கம் திரும்பியிருக்கிறது. சின்னத்துரை பையில் வைத்திருக்கும் பணத்தைப் பிடுங்கி விடுவார்களாம். தவிர, பஸ்ஸை விட்டு இறங்கியதும் மாற்று சமூக மாணவர்கள், தங்கள் புத்தகப் பையையும் சின்னதுரையிடம் கொடுத்து சுமந்து வரச்சொல்லியிருக்கிறார்கள்.வகுப்பு நடந்து கொண்டிருக்கும்போது பின் பெஞ்சில் இருந்துகொண்டு பேனாவால் சின்னதுரையின் முதுகில் குத்தி அவர் சத்தம் போடுவதைப் பார்த்து ரசித்திருக்கிறார்கள். இன்டர்வெல் சமயத்தில் கடைக்குப் போய் டீ வாங்கி வரச்சொல்லியிருக்கிறார்கள். சொல்லப்போனால் சின்னத்துரையை தங்கள் அடிமையாகவே பார்த்திருக்கிறார்கள்.இதனால், சின்னதுரையால் நிம்மதியாக படிக்க முடியவில்லை. இனிமேல் பள்ளிக்குப் போகவேண்டாம் என முடிவெடுத்து வீட்டிலேயே பத்து நாட்களாய் இருந்திருக்கிறார். கடந்த 9ம் தேதி காலை தாய் அம்பிகாபதியை தொடர்புகொண்டு பள்ளி ஆசிரியர்கள் பேசியதும், மகனை அழைத்துக் கொண்டு தலைமை ஆசிரியரைப் பார்த்திருக்கிறார். அப்போது, குறிப்பிட்ட மாணவர்கள் தன்னை டார்ச்சர் செய்ததை கூறியிருக்கிறார்.தலைமை ஆசிரியர் அந்த மூன்று மாணவர்களையும் அழைத்து வார்ன் பண்ணியிருக்கிறார். இந்தச் சம்பவம் அந்த மாணவர்களை உசுப்பேற்றிவிடவே, அன்று இரவே வீட்டுக்குள் புகுந்து சின்னதுரையையும் சந்திரா செல்வியையும் அரிவாளால் வெட்டிவிட்டு எஸ்கேப்பாகிவிட்டனர்'' என பின்னணியையும் விவரித்து முடித்தார்..வெட்டிய பிறகும் வேதனைப்படவில்லை!மாணவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்துப் பேசிய போலீஸ் அதிகாரி ஒருவர், ``சுப்பையா, செல்வசுரேஷ், சுரேஷ் வானு, செல்வதுரை, வான்முத்து, கல்யாணி ஆகிய ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சுப்பையா, செல்வசுரேஷ், சுரேஷ் வானு ஆகியோர்தான் வீடு புகுந்து வெட்டியிருக்கிறார்கள்.செல்வதுரை, வான்முத்து, கல்யாணி ஆகியோர் அவர்களை பைக்கில் கொண்டுவந்து விட்டுவிட்டு கூட்டிச் சென்றவர்கள். இதில், சுப்பையாவின் தாத்தா ம.தி.மு.க ஒன்றியச் செயலாளர், செல்வசுரேஷின் பெரியப்பா தி.மு.க ஒன்றியச் செயலாளர். `சின்னதுரையை வெட்டிவிட்டோமே' என்கிற கவலையே இல்லாமல் சிரித்துப் பேசுகிறார்கள்'' என்றார், வேதனையுடன்.களமிறங்கிய ரிப்போர்ட்டர் டீம்நாங்குநேரி மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதுமே ஏராளமான சாதிக் கொடுமைகள் தலைவிரித்தாடுகின்றன. `என்ன நடக்கிறது?' என்ற களநிலவரத்தை அறிய மாநிலம் முழுவதும் நமது ரிப்போர்ட்டர் டீம் களமிறங்கியது.முதலில் மேற்கு மண்டலத்துக்கு வருவோம். ``கோவை கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர், பொள்ளாச்சி போன்ற பகுதிகளில் உள்ள சில கோயில்களுக்குள் பட்டியலின மக்கள் உள்ளே சென்று சாமி கும்பிட முடியாது. `காலங்காலமா இதுதான் வழக்கம்’ என்று சகித்துக் கொள்கிறார்கள்.அரசியலிலும் இந்த சாதி வன்மம் வெளிப்படையாகவே தெரிகிறது. தன் கட்சியைச் சேர்ந்த பட்டியலின நிர்வாகிகளின் வீட்டு சுபகாரியங்களுக்கோ, துக்க நிகழ்வுகளுக்கோ செல்கையில் மரியாதை நிமித்தமாக தண்ணீர்கூட குடிப்பதில்லை" என்கின்றனர், இப்பகுதிகளைச் சேர்ந்த பட்டியலின அரசியல் கட்சிப் பிரமுகர்கள்.பெரியார் மண்ணில் தீண்டாமை`` பெரியார் பிறந்த மண்ணான ஈரோட்டிலும் தீண்டாமை தொடர்கிறது. சில சமுதாயத்தைச் சேர்ந்த குடும்பங்களின் திருமணங்களில் அருந்ததியர் சமுதாய மக்கள் அமர்ந்து சாப்பிட அனுமதியில்லை. மண்டபத்தின் பின்புற வாசல் வழியாக வந்து பாத்திரத்தில் உணவு வாங்கிச் செல்லலாம். அவ்வளவுதான் உரிமை'' என்கிறார்கள்.இவ்வளவு ஏன், பவானிசாகர் தொகுதியின் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான பண்ணாரி, “அரசு அதிகாரிங்க என்னை மதிக்கிறதுமில்லை, நான் வைக்கிற கோரிக்கைகளை நிறைவேத்துறதுமில்லை. சாதிரீதியா என்னைப் பரிகாசம் பண்றாங்க” என்று நம் குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் ஓப்பனாக வெடித்திருந்ததைவிட வேறு உதாரணங்கள் தேவையில்லை.புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் உள்ள குளத்திலும் கறம்பக்குடிக்கும் கந்தர்வகோட்டைக்கும் இடையில் உள்ள மீனம்பட்டி கிராமத்தில் உள்ள குளத்திலும் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் குளிப்பதற்கு அனுமதி கிடையாது..`தப்பு' அடித்த தலைமை ஆசிரியர்!புதுக்கோட்டை மாவட்டம், வண்ணாரப்பட்டி பஞ்சாயத்துத் தலைவராகப் போட்டியிட பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரான கருப்பையாவின் கழுத்தில், `தப்பு' என்கிற தோல் கருவியை மாட்டிவிட்டு அதனை அடித்தபடி சாமியிடம் அனுமதி கேட்கும்படி வற்புறுத்திய வன்மம் அரங்கேறியது. அதையும் செய்துவிட்டுத்தான் அவர் தேர்தலில் நின்று வெற்றிபெற்றார்.திருச்சி மாவட்டம், பண்ணாங்கொம்பு அரசு துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கியசாமி, ஒரு தரப்பு மாணவர்களுக்கு வகுப்பறையையும் பட்டியலின மாணவர்களுக்கு கழிவறையையும் சுத்தப்படுத்தும் வேலையைக் கொடுத்தார். இது மாவட்ட கல்வி அதிகாரியின் கவனத்துக்குச் சென்றதால், தலைமை ஆசிரியரையும் தனலட்சுமி என்கிற வகுப்பு ஆசிரியையும் சஸ்பெண்ட் செய்தார்.சம்பளம் வாங்கு... சமையல் செய்யாதே!மணப்பாறை பகுதி பின்னத்தூர் பள்ளியில் சமையலராக பட்டியலினத்தைச் சேர்ந்த புஷ்பம் என்ற பெண் நியமிக்கப்பட்டதால் மற்ற சமூகத்தினர் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை. அதன்பின்னர் `சம்பளத்தை வாங்கிக்கோ, சமையல் செய்யக்கூடாது' என்று கூறிய ஊர்க்காரர்கள் வேறு ஒருவரை நியமனம் செய்தார்கள்.திருப்பூரில் பல பகுதியிலும் பெரம்பலூர் மாவட்டம் பேரளியிலும் திருவண்ணாமலை மாவட்டம் சிறுவள்ளூரிலும் இரட்டைக் குவளை முறை தாண்டவமாடுகிறது.கோயில் குளத்தில் கரன்ட் கம்பி!பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே கொளப்பாடி கிராமத்தில், `தாங்கள் சாமி கும்பிடும் கோயிலில் பட்டியலினத்தவர் நுழையக்கூடாது' என்ற கட்டுப்பாட்டை பிற சாதியினர் விதித்திருந்தனர். மீறி நுழைந்ததால் கோயில் குளத்தில் கரன்ட் கம்பியை செலுத்தி பட்டியலின மக்கள் சிலர் இறந்த சோகம் சில ஆண்டுகளுக்கு அரங்கேறியது.தேனி மாவட்டம் குள்ளப்புரத்தில் உள்ள காளியம்மன் கோயிலில் பட்டியல் சமூகத்தினரை சாமி கும்பிட அனுமதிப்பது இல்லை. டொம்புசேரி கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின மாணவ, மாணவிகள் பஸ்ஸில் அமர்ந்து செல்ல அனுமதிப்பதில்லை..சிறைவைக்கப்பட்ட அதிகாரிகள்!சமீபத்தில். கரூர் வீரணம்பட்டி காளியம்மன் கோயிலில் சாமி கும்பிடச் சென்ற பட்டியலின இளைஞரை அடித்து உதைத்த மாற்று சமூகத்தினரை விசாரிக்கச் சென்ற, குளித்தலை ஆர்.டி.ஓ. புஷ்பலதா, தாசில்தார் முனிராஜ் ஆகியோரை சிறைவைத்த கொடுமையும் நடந்தது.கரூர் ரங்கமலை அருகேயுள்ள மலைப்பட்டி கிராமத்தில் உயர்சாதியினரைத் தவிர, மற்றவர்கள் காலில் செருப்பை அணிய தடை, `பட்டியலினத்தவர் டூவீலர்களை தள்ளிக்கொண்டுதான் செல்ல வேண்டும்' என்ற நிலை இன்னமும் நீடிக்கிறது.மயிலாடுதுறை மாவட்டம் கப்பூர் ஊராட்சி வாளவராயன்குப்பம் கிராம கோயில் திருவிழாவில் பட்டியலின மக்கள் தீ மிதிக்க அனுமதிப்பதில்லை. மாப்படுகையில் சுவாமி வீதியுலாவின்போது பட்டியலின மக்கள் வசிக்கும் தெரு புறக்கணிக்கப்படுகிறது.அதேபோல். வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி, மயிலாடுதுறை நகராட்சியில் உள்ள கடைகளை பட்டியலின மக்களுக்கு வாடகைக்கு கொடுப்பதில்லை. நீடூர் அருகே உள்ள கொற்கை கிராமத்தில் பட்டியலின மக்களுக்கு சலூன் கடைகளில் முடி வெட்டுவதில்லை.சாதியை தூண்டிய ஆடியோ!தூத்துக்குடி மாவட்டத்திலோ நிலைமை இன்னும் கொடூரம். ஸ்ரீவைகுண்டம் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே முறுக்கு கடை வைத்திருக்கும் செந்தில்நாதனின் மகனும் ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய முன்னாள் தி.மு.க. செயலாளர் வைகுண்டபாண்டியனின் மகனும் ஒரே பள்ளியில் பிளஸ் 1 படிப்பவர்கள். இவர்களுக்குள் நடந்த சண்டையில், வைகுண்ட பாண்டியன் மகன், தன்னுடன் இரண்டு பேரை அழைத்துக் கொண்டுபோய் செந்தில்நாதனை கடைக்குள் புகுந்து வெட்டிக் கொலை செய்துவிட்டார்.அதேபோல், குளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியையே மாணவன் ஒருவனிடம் சாதியைத் தூண்டும் வகையில் பேசிய ஆடியோ பெரும் வைரலானது.சேலம் மேச்சேரியை அடுத்த காமனேரி என்ற ஊரில் 6 மாதங்களுக்கு முன்பு பட்டியலின மாணவர்கள், உயர்தர செருப்பு வாங்கியதற்காக அடிதடி பிரச்னை ஆகி காவல்நிலையம் வரை பஞ்சாயத்து போனது. வன்னியனூரில், `பட்டியலின ஆசிரியரை பள்ளியைவிட்டு இடமாற்றினால் மட்டுமே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியும்' என்று இதர ஜாதியினர் உறுதியாக நின்றுவிட, இதனால் ஒரு வாரகாலம் பள்ளிக்கு பூட்டு போடப்பட்டது.நாமக்கல் பெரிய மணல் பள்ளி பேருந்து நிறுத்தத்தில், இதர ஜாதி மாணவர்கள் இருக்கும் சமயத்தில் பட்டியலின மாணவர்கள் தனித்து நின்றுதான் பஸ் ஏறவேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாக இன்றளவிலும் கடைப்பிடிக்கப்படுகிறது.தர்மபுரி மாவட்டத்தில், கே.ஈச்சம்பாடி என்ற கிராமத்தில் இரண்டு அரசுப் பள்ளிகள் 22 ஆண்டுகளாக சாதி வேறுபாடுகளால் இயங்கி வருகிறது என்று சொன்னால் ஏற்க முடிகிறதா? சாதி ஆதிக்கத்துக்காக இரண்டு இடங்களில் பள்ளி நடப்பது தமிழ்நாட்டிலே இங்கு மட்டும்தான். `சாதிதான் முக்கியம்னு சொல்லி பிஞ்சு மனதில் நஞ்சை விதைக்கும் இந்தப் பிரச்னைக்கு எப்போது விடிவு வரும்?' என்று வேதனைப்படுகிறகிறார், கே.ஈச்சம்பாடி பஞ்சாயத்து உறுப்பினர் ராசி. தமிழரசன்.`சாதி இரண்டொழிய வேறில்லை' என்ற நீதிநெறி வகுப்பறைகளுக்கு மட்டுமல்ல, சில அரசியல் கட்சிகளுக்கும் அவை சொல்லப்பட வேண்டும். பாக்ஸ் பா.ரஞ்சித், மாரி.செல்வராஜ் மற்றும் நாங்குநேரி ‘... தமிழ்நாட்டில் தீவிர சாதிப் பற்றால் பட்டியலின மக்கள்மீது வெறுப்பை வளர்த்தெடுத்ததன் விளைவாகவே நாங்குநேரியில் சக மாணவன் மீது சாதி வன்மம் கொண்டு இத்தகைய கொடூரத் தாக்குதலை நிகழ்த்தி இருக்கிறார்கள். ‘... கடந்த இரண்டு நாட்களாக இந்த படிக்கட்டுகளில் சொட்டிக்கொண்டிருக்கும் சூடான இரத்தத்தின் கதையை யாரிடமாவது சீக்கிரம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். காய்ந்து போனால் அதை பழைய புண்ணாக்கி எளிதாக எல்லாரையும் கடந்து போகச்சொல்லி உங்கள் இதயம் உங்களுக்கே தெரியாமல் எல்லாரிடமும் மன்றாட ஆரம்பித்துவிடும்...’இவை முறையே இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் ஆகியோரின் ட்விட்டர் பதிவுகள்.இவற்றுக்கு வந்த கமென்ட்கள் சில சாம்பிள்கள்… ‘... உங்க படங்களை எல்லாம் பார்க்கும் முன்பு வரை நானே சாதியைப் பற்றி பேசியது கிடையாது, நீங்கள் மத்த சாதிக்காரனை தூண்டுவதுபோல படம் எடுப்பதால் எல்லாரும் வெளிப்படையா ஜாதி பெருமை பேச ஆரம்பிக்கின்றனர்.’ ‘... மக்களும் மாணவர்களும் மறந்த சாதிய உணர்வை இவர்கள் போன்ற ஆட்கள் பிழைப்பு நடத்த பயன்படுத்திக் கொண்டதன் விளைவு தான் இது.. இவர்கள் சாதியப்படம் எடுத்துவிட்டு மினி கூப்பர் கார்களையும் பல கோடி ரூபாய்களை சம்பளமாகவும் பெற்றுக்கொள்கின்றனர்.’ - ரிப்போர்ட்டர் டீம்