மத்தளத்துக்கு இரண்டு பக்கம் அடி என்பதைப்போல, ஜி.எஸ்.டி.க்குள் அமலாக்கத்துறையின் கரங்கள் நீள்வதை ஏற்க முடியாமல் வணிகர்கள் கொந்தளிக்க, போதாக்குறைக்கு தமிழக அரசின் வணிகவரித் துறையும் வதைப்பதால், அபாய சங்கினை ஊதத் தொடங்கியுள்ளனர் வியாபாரிகள்.சென்னை கலைவாணர் அரங்கில், கடந்த 23-ம் தேதியன்று வணிகவரித் துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் கருத்துக் கேட்பு மற்றும் கலந்தாய்வுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற வணிகர்கள் பலரும் தங்களின் மனக்கொதிப்பை கொட்டித் தீர்த்துள்ளனர்.``என்ன பிரச்னை?'' என கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜாவிடம் கேட்டோம். “ஜி.எஸ்.டி வரிச் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்து ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், அதில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதால்தான் 900 முறைகளுக்கு மேல் பல்வேறு மாற்றங்களை செய்து வந்துள்ளனர்.அதேநேரம், ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு மூலம் மத்திய அரசுக்கு மாதம் ஒன்றுக்கு 1.65 லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. ஆனால், இதற்கு ஆதாரமாக உள்ள வணிகர்களுக்கு இது மிகப்பெரும் சவாலாகவும் பாதிப்பை உண்டாக்குவதாகவும் மாறிவிட்டது.காரணம், ஜி.எஸ்.டி வரியின் சட்ட நுணுக்கங்கள், இன்றுவரை பெரும்பான்மையான அரசு அதிகாரிகளுக்கே முழுமையாகத் தெரியவில்லை. மேலும், வணிகர் மீது ஜி.எஸ்.டி வரி தொடர்பாக தொடுக்கப்படும் வழக்குகளுக்கான தீர்வுகளை காண்பதற்கான டிரிபியூனல்கள் இன்னும் முழுமையாக அமைக்கப்பட்டு நடைமுறைக்கு வரவில்லை..இதனால், எந்தவகையான வழக்கு என்றே புரியாத நிலையில் பலமடங்கு அபராதம் செலுத்தும் அவலநிலைக்கு வணிகர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்தநிலையில், திடீரென ஜி.எஸ்.டி வரிச்சட்ட நடைமுறையின்கீழ், அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க ஒப்புதல் அளிக்கும் நடைமுறையை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.நிதி மோசடிகளில் ஈடுபடக்கூடியவர்கள் மீது அமல்படுத்தப்படக்கூடிய சட்ட நடவடிக்கையை சட்டத்துக்குட்பட்டு, உரிய உரிமங்களைப் பெற்று நேர்மையாக தொழில் செய்யும் வணிகர்கள் மீது மத்திய அரசு திணிப்பதில் உள்நோக்கம் இருக்கிறது'' எனக் கொந்தளித்தவர், தமிழக அரசின் வணிகவரித் துறை விவகாரத்துக்குள் வந்தார்.``மத்திய அரசால் வணிகர்கள் துயரப்படுவது ஒருபுறம் என்றால், மறுபுறம் தமிழக அரசின் வணிகவரிதுறை அதிகாரிகளாலும் வணிகர்கள் ஏராளமான தொல்லைகளை அனுபவித்து வருகின்றனர். வணிக நிறுவனங்களில் ஆய்வு செய்ய வருகின்ற அதிகாரிகள், விதிமீறல்கள் இருப்பின் அதற்குரிய நோட்டீஸை வழங்கி, வரிஏய்ப்பு இருந்தால் மட்டுமே அபராதம் விதிக்கும் நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்.ஆனால், அப்படிச் செய்வதில்லை. ஒரு சில தவறுகளுக்கு வணிகவரித் துறை சட்டத்தின்படி ஐநூறு முதல் ஐந்தாயிரம் ஆயிரம் ரூபாய்வரை அபாரதம் விதிக்கலாம் என இருக்கிறது. ஆனாலும், இருபதாயிரம், முப்பதாயிரம் என அபராதம் விதிக்கின்றனர். அதைவிடப் பெரும் பிரச்னை சரக்குகளைக் கொண்டு செல்லும்போது இவர்கள் செய்யும் அட்ராசிட்டிகளும் கொஞ்சம் நஞ்சமல்ல.சென்னை அடையாறில் இருந்து அசோக் நகருக்கு சரக்கை கொண்டு செல்வதாக பில்லில் குறிப்பிட்டிருக்கிறது என வைத்துக்கொள்வோம். அதனை எடுத்துக்கொண்டு சைதாப்பேட்டை வழியாக வந்தால், `ஏன் கிண்டி வழியாக செல்லவில்லை?' என வாகனத்தை பிடித்துவைத்துக் கொள்கின்றனர்.அதேபோன்று, சனிக்கிழமை இரவில் சரக்கு கொண்டு வரப்பட்டால், இறக்கிவைக்கக் கூலி ஆட்கள் வருவதில்லை. எனவே. மறுநாள் அந்த சரக்கை இறக்கலாம் என குடோன் அருகே அந்த வாகனத்தை நிறுத்தி வைத்தால், அதற்கும் 2 லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கிறார்கள்..அந்த வாகனத்தில் இருக்கும் சரக்கின் மதிப்பே ஒரு லட்சம்கூட இருக்காது. ஆனால், அபராதம் 2 லட்சம் என்றால் எங்கே செல்வது? ஆனால் இப்படி அபராதம் விதிக்கும் அதிகாரிகள், பின்னர் பேரம் பேசி ஒரு தொகையை வாங்கிக் கொள்கிறார்கள். அரசுக்குச் செல்லவேண்டிய பணம், அதிகாரிகளின் பாக்கெட்டுக்கு செல்கிறது.இதைவிடக் கொடுமை, வணிகவரித்துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசு இலக்கு நிர்ணயம் செய்கிற போக்குதான். இது எந்த மாநிலத்திலும் இல்லை. இதுவே, அதிகார அத்துமீறலுக்கும் பல முறைகேடுகளுக்கும் வழிவகுக்கின்றது. இதனை அரசு கவனத்தில் கொண்டு இலக்கு நிர்ணயத்தைக் கைவிட்டு ஜி.எஸ்.டி விதிகளுக்கு உட்பட்டு நியாயமான நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.வணிகவரித்துறை ஆணையரால் அவரின் பிரத்யேக அதிகாரத்துக்குட்பட்டு வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை எண். 10/2019-ஐ வணிகவரித்துறை அதிகாரிகள் முறைப்படி பின்பற்ற அறிவுறுத்தி முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதனை வலியுறுத்தி அமைச்சர் மூர்த்தியிடம் மனு அளித்திருக்கிறோம்” என்றார் விரிவாக.வணிகர்களின் குமுறல் குறித்து, வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமியிடம் பேசினோம் “ஆலோசனைக் கூட்டத்தில் வணிகர் ஒருவர், தன்னிடம் ஒன்றரை லட்ச ரூபாய் பணத்தை அதிகாரி ஒருவர் வாங்கியதாக குற்றம்சாட்டினார். அப்போது குறுக்கிட்ட அமைச்சர், `யார் அந்த அதிகாரி?' எனக் கூறுமாறு கேட்டனர். ஆனால், அந்த வணிகர் தெரிவிக்கவில்லை.`அதிகாரிகளுக்கு பணம் கொடுத்து நீங்களே கெடுத்துவிடாதீர்கள்?' என அந்த மேடையிலேயே அமைச்சர் அறிவுறுத்தினார். மேலும், சிறு சிறு தவறுகளுக்கு குறைந்தபட்ச அபராதம் மட்டும் விதிக்க வேண்டுமென சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் சரக்கு வாகனங்கள் தொடர்பான பிரச்னையைத் தீர்த்து வைக்க, இரவு நேரங்களில் தொடர்பு கொள்ள சில எண்களையும் கொடுத்திருக்கிறோம்” என்றார். வணிகர்களை வதைப்பது நல்லதல்ல! - ரய்யான் பாபு படங்கள் : செந்தில்நாதன்