`அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர பகைவனும் இல்லை' என்ற வார்த்தை, எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் இடையே நடக்கும் மோதலுக்கு எந்தக்காலத்திலும் பொருந்தாது. அனைத்து ஆயுதங்களையும் இழந்து நிராயுதபாணியாக நிற்கும் ஓ.பி.எஸ்ஸிடம் இருக்கும் ஒரே பதவி எம்.எல்.ஏ என்ற மூன்றெழுத்து மட்டும்தான். அதற்கும் சிக்கலை ஏற்படுத்த தீவிரம் காட்டி வருகிறது எடப்பாடி தரப்பு. `விரைவில் நான்கு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்' என்பதுதான் தமிழக அரசியலில் ஹாட் சப்ஜெக்ட்! 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தனது ஆட்சியை இழந்த கையோடு, இன்றளவும் பஞ்சாயத்துகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. `பொதுச்செயலாளர்' என்ற ஒற்றைத் தலைமையை நோக்கி, எடப்பாடி நகரத் தொடங்க, அதற்குத் தடைபோட பன்னீர்செல்வம் எடுத்த முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிந்தன. பொதுக்குழு தீர்மானம், உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் என அனைத்து நிலைகளிலும் எடப்பாடி பழனிசாமிக்கே வெற்றி கிடைத்தது. இறுதியாக, பொதுக்குழு தீர்மானங்களுக்குத் தடைகோரி ஓ.பி.எஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவின் மீதான தீர்ப்பும் எடப்பாடிக்கு சாதகமாகவே வந்துள்ளது. இந்த வழக்கில் கடந்த 25ம் தேதி உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் தலையிட முடியாது. அதேபோல், ஓ.பி.எஸ் உள்ளிட்ட நான்கு பேரை நீக்கி நிறைவேற்றப்பட்ட சிறப்புத் தீர்மானத்துக்கும் தடைவிதிக்க முடியாது' எனக் குறிப்பிட்டனர். இதனால், ஓ.பி.எஸ் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், `அரசியல் வாழ்வே அஸ்தமனமாகிவிடுமோ?' என்ற கவலையில் ஆழ்ந்துள்ளனர். `இந்தத் தீர்ப்பின் மூலம் பன்னீர்செல்வத்தின் எம்.எல்.ஏ பதவி மட்டுமல்லாமல், வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், ஐயப்பன் ஆகிய மூவரின் எம்.எல்.ஏ. பதவியும் பறிபோகப்போகிறது' என எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஏக உற்சாகம். ``அடுத்து என்ன நடக்கும்?'' என அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். ``2021 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போடிநாயக்கனூர் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதைத் தொடர்ந்து, சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். அதேபோல், ஒரத்தநாடு தொகுதியில் இருந்து வைத்திலிங்கமும் ஆலங்குளம் தொகுதியில் மனோஜ் பாண்டியனும் உசிலம்பட்டி தொகுதியில் ஐயப்பனும் அ.தி.மு.க. சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றனர். எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, பன்னீர்செல்வம் உள்பட அவரின் ஆதரவாளர்கள் அனைவரும் அ.தி.மு.க.விலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டனர். இதை எதிர்த்து பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பும் வந்துவிட்டது. எடப்பாடியின் நடவடிக்கைக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. இனி அ.தி.மு.க.வின் கொடியையோ, கட்சியின் பெயரையோ ஓ.பன்னீர்செல்வம் உள்பட அவரின் ஆதரவாளர்கள் பயன்படுத்தக்கூடாது. ஜெயலலிதா, எம்.ஜி.ஆரின் ஆகியோரின் படங்களை வைத்து ஃபிளெக்ஸ் பேனரும் வைக்கக்கூடாது. அதேபோல், `இரட்டை இலை சின்னத்தையும் கட்சியின் வண்ணத்தைப் பயன்படுத்தி கொடி கட்டுவதும் சட்டத்தை மீறிய செயல்' என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் எச்சரித்துள்ளார். ஏற்கெனவே, `ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்த எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை முன்னாள் அமைச்சர் உதயகுமாருக்கு வழங்க வேண்டும்' என சபாநாயகர் அப்பாவுவுக்கு அ.தி.மு.க.வின் சட்டமன்ற கொறடா எஸ்.பி.வேலுமணி கடிதம் அளித்திருந்தார். இதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரியும் தி.மு.க தரப்பில் இருந்து அவ்வளவு எளிதில் பதில் வரவில்லை. இனியும் தி.மு.க.வால் காலம் கடத்த முடியாது..தற்போது தீர்ப்பு எடப்பாடிக்கு சாதகமாக வந்துள்ளதால், ஓ.பன்னீர்செல்வம், அவரின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஐயப்பன் ஆகிய நான்கு பேரை தகுதிநீக்கம் செய்ய வலியுறுத்தி சபாநாயகர் மற்றும் சட்டமன்ற செயலாளர் சீனிவாசன் ஆகியோரிடம் கடிதம் கொடுக்கும் முடிவில் அ.தி.மு.க உள்ளது. இதற்காக விரைவில் சபாநாயகரை சந்திக்கத் திட்டமிட்டுள்ளார், சட்டமன்ற அ.தி.மு.க கொறடா எஸ்.பி.வேலுமணி. காரணம், இவர்கள் நால்வரும் அ.தி.மு.க.வில் இரட்டை இலையில் நின்று போட்டியிட்டனர். இவர்கள் கட்சியிலேயே இல்லாதபோது எம்.எல்.ஏ பதவி மட்டும் எதற்கு? வேறு கட்சிக்கு இவர்கள் சென்றால்தான் உண்டு. தவிர, நான்கில் ஒரு பங்கு எம்.எல்.ஏ.க்கள் இருந்தால் மட்டுமே தனி அணியாக பன்னீர்செல்வத்தால் செயல்பட முடியும். அதாவது, கட்சித்தாவல் தடைச் சட்டத்தின்படி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 66 பேரில் குறைந்தபட்சம் 22 எம்.எல்.ஏ.க்கள் பன்னீர்செல்வத்திடம் இருந்தால்தான் அவர்களின் பதவி தப்பிக்கும். ஆனால், நான்கு பேர் மட்டுமே இருப்பதால், அவர்களின் பதவி பறிபோவதைத் தவிர்க்க முடியாது. பன்னீருக்கு சாதகமாக தி.மு.க நடந்துகொண்டால், அதை எதிர்கொள்ளவும் எடப்பாடி தயாராகிவருகிறார். இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு சட்டமன்றத்தில் ஓ.பி.எஸ்ஸும் அவரின் ஆதரவாளர்களும் அமர முடியுமா என்பது கேள்விக்குறிதான்'' என்றார், உறுதியாக. அ.தி.மு.க தரப்பில் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு அணியின் தேர்தல் பிரிவுச் செயலாளர் சுப்புரத்தினத்திடம் பேசினோம். ``தற்போது இடைக்கால மனு மீதான தீர்ப்புதான் வந்திருக்கிறது. இடைக்கால தடை வழங்கினால், இறுதி வழக்கில் தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்தும் என இந்தத் தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். ஆகவே, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது'' எனக் குறிப்பிட்டவர், `` அதுமட்டுமின்றி, இறுதி வழக்கில் விரைந்து விசாரணையை மேற்கொண்டு முடிக்க உயர்நீதிமன்ற நீதிபதியை வலியுறுத்த முடியும். இதில், மூன்று முதல் ஆறு மாதத்துக்குள் விசாரணை முடிந்து தீர்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த வழக்குகள் முடியும் வரை ஓ.பன்னீர்செல்வம் உள்பட அவரின் ஆதரவு எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்ய முடியாது. எடப்பாடி தரப்பு மேற்கொள்ளும் முயற்சியை சட்டப்படி முறியடிப்போம். எடப்பாடி தேர்தல் களத்துக்குச் செல்லும்போதுதான், அவரை அ.தி.மு.க. தொண்டர்களும் மக்களும் ஆதரிக்கிறார்களா என்பது அனைவருக்கும் புரியும். செப்டம்பர் 3ம் தேதி காஞ்சிபுரத்தில் தொடங்கி 38 மாவட்டங்களில் பன்னீர்செல்வம் மக்களை சந்திப்பதற்காக பயணப்பட இருக்கிறார். அப்போது மக்கள் யார் பக்கம் என்பது தெரிந்துவிடும்" என்றார். எத்தனையோ சுற்றுப்பயணங்களைக் கடந்த சில ஆண்டுகளாக தமிழக மக்களும் பார்த்துவிட்டார்கள். நாடாளுமன்றத் தேர்தல் முடியும்போது, `யாருக்கு என்ன பலம்?' என்பது தெரியத்தான் போகிறது! பாக்ஸ்தி.மு.க.விலும் அதிருப்தி குரல்கள்! ``அ.தி.மு.க.வை தொடர்ந்து தி.மு.க, பா.ஜ.க.விலும் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மாற்றம் வரலாம்" என்கின்றனர், அரசியல் விமர்சகர்கள். காரணம், திருச்சி லால்குடி சட்டமன்ற உறுப்பினரான சவுந்தரபாண்டியன் அமைச்சர் நேரு மீது அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. முன்னதாக, ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ பழனியாண்டியும் அமைச்சர் மீது அதிருப்தியில் இருப்பதாக செய்தி வெளியானது..அதேசமயம் சில நாட்களுக்கு முன்பு இவர்களை எல்லாம் தனது வீட்டுக்கு நேரில் அழைத்த நேரு, குறிப்பிட்ட துறைகளின் அதிகாரிகள் முன்னிலையில், ‘இவங்களுக்கு என்னென்ன வேலைகள் தரணுமோ கொடுத்துடுங்க’ என்று சொல்லியிருக்கிறார். அப்போதும் சில எம்.எல்.ஏ-க்கள், ’பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை பணிகள் வேண்டும்’ என்று கேட்க, அதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம்தான் கேட்க வேண்டும் என்று கை காட்டியிருக்கிறார் நேரு. மொத்தத்தில் திருச்சி எம்.எல்.ஏ-க்கள் இப்போது ஹேப்பி அண்ணாச்சி என்கிறார்களாம். இதேபோல திண்டுக்கல் வேடசந்தூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வான காந்திராஜன், உள்ளூர் அமைச்சரின் செயல்பாடுகளால் கடும் அதிருப்தியில் இருக்கிறாராம். `சாதி அரசியல் செய்வது மட்டுமல்லாமல், தொகுதியில் பணிகளையே செய்ய முடியவில்லை' என இன்னொரு அமைச்சரிடம் குமுறியிருக்கிறார். தலைநகரிலும் தனித் தொகுதி எம்.எல்.ஏ. ஒருவர் அமைச்சர் ஒருவர் மீது கடும்கோபத்தில் இருக்கிறார். தனது தொகுதியில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு தன்னை அழைக்காததால்தான் இந்தக் கோபமாம். இதையடுத்து, `தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யலாமா?' என உடன்பிறப்புகளிடம் குமுறலைக் கொட்டியிருக்கிறார். அமலாக்கத்துறை ரெய்டு, விசாரணை, குற்றப்பத்திரிகை என செந்தில் பாலாஜி வழக்கு வேகமெடுத்துள்ளது. அவரை நாடாளுமன்றத் தேர்தல் முடியும் வரை சிறையில் வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல். அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டு உறுதியானால், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. பதவியை செந்தில் பாலாஜி இழக்க நேரிடும். இங்கும் இடைத்தேர்தலுக்கான சாத்தியங்கள் இருப்பதாக தி.மு.க வட்டாரத்திலேயே பேசப்படுகிறது. பாக்ஸ்பா.ஜ.க.வில் என்ன நிலவரம்? கோவை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசனும் திருநெல்வேலி தொகுதி எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரனும், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளனர். கோவை தொகுதியை குறிவைத்து வானதியும் நெல்லையை மையமாக வைத்து நயினாரும் போட்டியிட உள்ளதாக பா.ஜ.க நிர்வாகிகள் கூறுகின்றனர். ``இவர்கள் இருவரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றால், தங்களின் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய நேரிடும். அப்படிச் செய்தால், அந்தத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரலாம்" என்கின்றனர், கமலாலய வட்டாரத்தில். பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் சக்கரவர்த்தியிடம் கேட்டபோது, ``நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கின்றன. எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது, யார் வேட்பாளர் என்பது எல்லாம் தேர்தல் நேரத்தில் பா.ஜ.க. தலைமைதான் முடிவு செய்யும். யூகத்துக்கெல்லாம் பதில் சொல்லமுடியாது" என்றார். என்ன நடக்கிறதென்று பார்ப்போம்! - பாபுபடங்கள் : ம.செந்தில்நாதன்