- கரூர் அரவிந்த்அ.தி.மு.க-தான் அதிகாரப்பூர்வமாகவே ஆன்மிகக் கட்சி. மண் சோறு சாப்பிடுவார்கள், அலகு குத்துவார்கள். ஆனால், பகுத்தறிவு பேசும் கட்சியான தி.மு.க-வில் மேயர் ஒருவர், அமைச்சர் செந்தில்பாலாஜி குணமடைவதற்காக யாகம் நடத்தியிருக்கிறார் என்றால் புல்லரிக்கிறது அல்லவா!.இதுகுறித்து அ.தி.மு.க. மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் தானேஷ் நம்மிடம் பேசினார்., “அறுவை சிகிச்சை செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜிக்காக கரூர் தி.மு.க-வினர் கோயில் கோயிலாக ஏறிவருவதில் எனக்கு மகிழ்ச்சியே. நானும்கூட அவர் சீக்கிரம் குணமடைய இறைவனை வேண்டுகிறேன். அதேசமயம், மேடை தோறும் திராவிட மாடலைப் பற்றி பேசும் மேயர் கவிதா, தி.மு.க. தலைமை நிலையப் பேச்சாளராக மேடைதோறும் கடவுள் மறுப்பு பற்றி பேசும் மேயரின் கணவர் கணேசன் ஆகியோர் செந்தில் பாலாஜியின் உடல்நலனுக்காக, கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் யாகம் நடத்தியிருக்கிறார்கள். இதை கடவுள் மறுப்பு தி.மு.க.வினரே கடுமையாக எதிர்த்துவருகிறார்கள்.இவர்கள் நடத்தியிருப்பதை யாகம் என்று சொல்வதைவிட, நாடகம் என்று வேண்டுமானால் சொல்லலாம். சரியாகச் சொன்னால், கரூர் தி.மு.கவே இப்போது நாடக மேடையாகிவிட்டது. தினமும் ஒவ்வொரு இடத்தில் வழிபாடு நடத்தும் தி.மு.கவினர், அதை ட்விட்டர், வாட்ஸ் அப், ஃபேஸ்புக் என சமூக வலைதளங்கள் எல்லாவற்றிலும் பதிவாகப் போடுகிறார்கள். இதில் ஆளுக்கு ஆள் போட்டிபோடுவதுதான் இப்போதைய கரூர் தி.மு.க டிரெண்டாகிவிட்டது..உண்மையில் இவர்களில் யாரும் செந்தில் பாலாஜி நலம் பெறவேண்டியெல்லாம் வழிபாடு செய்யவில்லை,அவர் நலம் பெற்றுத் திரும்பி வந்ததும் அவரிடம் காரியம் சாதிக்க இந்த போட்டோக்கள் பயன்படும் என்பதால் இதைச் செய்கிறார்கள். இவர்கள் நடத்தும் நாடகம் செந்தில் பாலாஜிக்கு நன்கு தெரியும்.ஆனால், நாங்கள் அதையெல்லாம் கேட்கவில்லை. வார்த்தைக்கு வார்த்தை திராவிட மாடல், திராவிட மாடல் என்று சொல்லும் தி.மு.க, மேயர் கவிதா நடத்திய இந்த யாக நிகழ்ச்சியை நவீன திராவிட மாடல் என்று வைத்துக்கொள்ளலாமா? என்றுதான் கேட்கிறோம்!” என்று கிண்டலாகச் சொல்லி முடித்தார்.இது பற்றி மேயர் கவிதாவிடம் கேட்டோம், யாகம் எதுவும் நான் நடத்தவில்லை. எங்கள் தலைவர் ஸ்டாலினும், எங்கள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் நலமாக இருக்க வேண்டும் என்று சாமிகும்பிடத்தான் கோயிலுக்குச் சென்றேன். அங்கே நான் சென்ற சமயத்தில் வெங்கமேட்டைச் சேர்ந்த ஒருவர் யாகம் நடத்திக்கொண்டிருந்தார். எந்தக் கோயிலுக்கு சென்றாலும் மேயர் என்கிற முறையில் எனக்கு மாலை போடுவார்கள். அப்படித்தான் அங்கேயும் மாலைபோட்டார்கள். இதைவைத்து நானே யாகம் நடத்தியதாகச் சொல்லிவிட்டார்கள். திராவிட மாடல் என்றால் கோயிலுக்குப் போகாமல் இருப்பது என்று சொல்வது வழக்கமாகி விட்டது. திராவிட மாடல் என்பது சமநீதி சம உரிமை பெண்கள் முன்னேற்றம் சுயமரியாதை போன்றவைதான். என் கணவருக்கு சாமி கும்பிடும் பழக்கம் இல்லை. எனக்கு இருக்கிறது என்றார்.