திரையுலகில் ஹீரோக்களுடன் மோதும் நெம்பர் ஒன் வில்லனான நடிகர் பிரகாஷ் ராஜ், சமீபகாலமாக பிரதமர் மோடியுடன் மோதுவதை ரொம்பவே ரசித்து செய்கிறார். அதிலும், சந்திரயான் விவகாரத்தில் அவர் மோடியை வம்புக்கு இழுத்ததால், பற்றியெறிகிறது ட்விட்டர் தளம்! ‘இஸ்ரோ’விஞ்ஞானிகளால் கடந்த ஜூலை 14ம் தேதி சந்திரயான் - 3 ஏவப்பட்டது. நிலவின் சுற்றுவட்டப்பாதையை வெற்றிகரமாக அடைந்த சந்திரயான், அவ்வப்போது நிலவின் புகைப்படங்களை அனுப்பி வருகிறது. இந்த நிலையில், ‘சந்திரயான் 3’ அனுப்பிய லேட்டஸ்ட் நிலவின் புகைப்படம் என்று ஒரு ட்வீட்டை வெளியிட்ட பிரகாஷ் ராஜ், ஒருவர் டீ ஆத்தும் ‘கேரிகேச்சர்’ புகைப்படத்தையும் வெளியிட, பா.ஜ.க.வினரின் ஒட்டுமொத்த கோபமும் பிரகாஷ்ராஜ் மீது பாய்ந்திருக்கிறது..`இப்படியொரு ட்வீட்டை வெளியிட்டதன் மூலம் இஸ்ரோ விஞ்ஞானிகளையும் இந்தியாவையும் பிரகாஷ்ராஜ் கொச்சைப்படுத்திவிட்டார்' என்று பா.ஜ.க தொடங்கி பல்வேறு அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அத்துடன் விவகாரம் முடிந்திருந்தால் பரவாயில்லை. “ட்வீட்டில் உள்ள புகைப்படம், முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவனின் புகைப்படம். அவரை இழிவுபடுத்தவே இப்படியொரு படத்தை வெளியிட்டுள்ளார்” என்று சிலர் கிளப்பிவிட்டனர். அதற்குப் பதில் அளித்த பிரகாஷ்ராஜ், ‘நான் கேரளாவைச் சேர்ந்த டீக்கடைக்காரர்களை குறித்தே பதிவிட்டேன். நீங்கள் எந்த டீக்கடைக்காரர் (மோடி) என்று நினைக்கிறீர்கள்? என்று பதிலடி கொடுக்க, ட்விட்டர் தளமே கலவரமயமாகிவருகிறது. பிரகாஷ் ராஜின் ட்வீட் மீது நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடகம் மாநிலம் பாகல்கோட் மாவட்டத்திலும் சென்னை ஆணையர் அலுவலகத்திலும் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. பிரகாஷ் ராஜ் மீது புகார் கொடுத்த தமிழக பா.ஜ.க.வின் மாநில செயலாளர் அஸ்வத்தாமனிடம் பேசினோம். “காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுபட்ட இந்தியா, எந்தத் துறையிலும் சாதிக்க முடியாது என்பதே பல்வேறு நாடுகளின் எண்ணமாக இருந்தது. குறிப்பாக, ஆகஸ்ட் 15, 1969-ம் ஆண்டு இஸ்ரோ தொடங்கப்பட்டபோது, இந்தியாவுக்கு இதெல்லாம் தேவையா? என்ற கேள்விகூட பலரிடம் எழுந்தது..ஆனால், இந்திய விஞ்ஞானிகள் இதுபோன்ற பரிகாசங்களைக் காதில் போட்டுக்கொள்ளவில்லை. மாறாக, தொடர்ந்து மேற்கொண்ட ஆராய்ச்சிகள் மூலமாக செயற்கைக்கோள்களைத் தயாரித்தனர். பிறகு, சவுண்டிங் ராக்கெட்டுகளை தயாரித்தனர். அதைத் தொடர்ந்து பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி போன்ற ராக்கெட்டுகளை தயாரித்து சொந்தமாக விண்வெளிக்கு செயற்கைக்கோள்களை ஏவும் திறனைப் பெற்றனர். அதன் அடுத்தகட்டமாக, நிலவுக்கு சந்திரயான் அனுப்பும் திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது இஸ்ரோ விஞ்ஞானிகளால் ஏவப்பட்டுள்ள சந்திரயான் 3 விண்கலம் விண்வெளித்துறையில் ஒரு மைல்கல். காரணம், நிலவில் ஏராளமான இயற்கை வளங்கள் உள்ளன. அதை ஆராய்ச்சி செய்ய அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற முன்னணி நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதுவரை யாருமே நிலவில் எட்டிடாத பகுதிதான் நிலவின் தென் துருவம். சந்திரயான் -2 திட்டம், பாதி தோல்வியில் முடிந்த நிலையில், முந்தையை தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, இஸ்ரோ விஞ்ஞானிகள் மீண்டும் சந்திரயான் 3ஐ அனுப்பியுள்ளனர். அதுவும் திட்டமிட்டபடி தனது பயணத்தை சரியாக செய்துகொண்டு வருகிறது. முன்பு விண்வெளியின் சூப்பர்பவராக திகழ்ந்த ரஷ்யா கூட, இந்தியாவுக்கு போட்டியாக அனுப்பிய லூனா, வெடித்துச் சிதறிவிட்டது. ஆனால், நம்முடைய கலம் சரியாக சென்றுகொண்டிருக்கிறது. இதைக் கொண்டாட வேண்டாமா? அதைவிடுத்து இப்படி கேவலமான படங்களை வெளியிடுவது பிரகாஷ்ராஜ் போன்ற நடிகர்களுக்கு அழகா?'' எனக் கொந்தளித்தவர், ``இந்தியா விண்வெளித்துறையில் சாதிக்கும்போதெல்லாம், அதை சகித்துக்கொள்ள முடியாமல் வெளிநாடுகள் அதைக் கேலி செய்வதை வழக்கமாக வைத்துள்ளன. செவ்வாய் கிரகத்துக்கு வெற்றிகரமாக சாட்டிலைட் அனுப்பியபோது, மாடு மேய்க்கும் ஒருவர், சர்வதேச விண்வெளி விஞ்ஞானிகளின் கிளப்பில் நுழைவதுப்போல படம் போட்டு அவமானப்படுத்தினார்கள். அந்த பரிகாசத்திற்கு துளியும் குறைவில்லாதுதான், பிரகாஷ் ராஜின் ட்வீட்'' என்றார்..ட்வீட் சர்ச்சை குறித்து இஸ்ரோ முன்னாள் தலைவர் கைலாசவடிவு சிவனிடம் பேசினோம். ``மற்றவர்கள் எப்படி எடுத்துக்கொண்டார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. பொதுவாக, உலகில் எங்கு சென்றாலும் அங்கு மலையாளிகள் இருப்பார்கள் என்பது ஜாலியாக பலரும் பேசும் விஷயம். அந்த உதாரணத்தின் அடிப்படையில், சந்திரயான் 3 கலம் எடுத்த நிலவின் புகைப்படத்திலும் உள்ளே மலையாளி ஒருவர் டீ ஆத்துவதுபோல காட்டும் ஒரு படம் வெளியாகியுள்ளது. இதுபோன்ற விமர்சனம் வருவது முதல்முறையல்ல. மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தை அடைந்தபோதும், அங்கே மலையாளிகள் இருப்பதுபோல ஜாலி கமெண்டுகள் வெளியாகியிருந்தன. நான் இந்த விவகாரத்தை அப்படித்தான் பார்க்கிறேன். மற்றபடி, அந்த கேரிக்கேச்சரில் இருப்பது நான் என்று சிலர் கருதுவதை ஏற்கவில்லை'' என்று மட்டும் பதில் அளித்தார். இந்த சர்ச்சைகளுக்கு பிரகாஷ் ராஜ் என்ன பதில் சொல்லப் போகிறார் என்பதையறிய அவரைத் தொடர்பு கொள்ள முயன்றோம். அவரிடம் பேச முடியாததால் அவரின் உதவியாளரிடம் பேசினோம். நாம் கூறிய தகவல்களைக் கேட்டவர், கன்னடத்தில் கோபமாகத் திட்டிவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டார். சர்ச்சைக்கு முடிவு கட்டுங்க செல்லம்! - அபிநவ்