ஃபாஸ்ட் ஃபுட் உணவுகள் கொடுக்கும் உபாதைகளால் சத்தான உணவுகளை நாடும் மக்களின் முதல் சாய்ஸ், வீட் பிரெட் எனப்படும் கோதுமை ரொட்டிதான். `அது வீட் பிரெட் அல்ல...வீட் மாதிரி. சாதாரண நோயாளிகளையும் ஐ.சி.யூ.வுக்கு தள்ளும் ஆபத்து மிக்கவை' என அதிர்ச்சியூட்டுகின்றன, நுகர்வோர் அமைப்புகள்.``என்ன பிரச்னை?'' என ஏ.பி.ஜி.பி எனப்படும் நுகர்வோர் அமைப்பின் தென்னிந்திய அமைப்புச் செயலாளர் எம்.என்.சுந்தரிடம் பேசினோம், “பொதுவாக, நாம் பேக்கரிகளில் வாங்கும் ரொட்டிகள் ‘மில்க் பிரெட்’ என்று அழைக்கப்படுகின்றன. இந்த, ‘மில்க் பிரெட்டுகள்’ மைதா மாவைக் கொண்டு தயாரிக்கப்படுபவை.‘மைதா’என்பது கோதுமையிலிருந்து தயாரிக்கப்படும் சக்கை மாவு. அதில் உடலுக்கு முக்கியமான தேவையாக கருதப்படும் நார்ச்சத்து இருக்காது. எனவேதான், பரோட்டா, கேக் தொடங்கி மைதாவில் உருவான உணவுப்பொருள்கள், உடலுக்கு ஆரோக்கியமில்லாதவையாக கருதப்படுகின்றன.அதேநேரம், ‘கோதுமை’ என்பது மைதாவைவிட சத்தான உணவாக உள்ளது. மக்களிடம் மைதா பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வந்த நிலையில், கோதுமை கேக், கோதுமை ரொட்டி போன்றவை மார்க்கெட்டில் களமிறக்கப்பட்டன. அதில், இளசுகள் முதல் பெரியவர்கள் வரை சாய்ஸ் டிரெண்டிங்கில் இருப்பது வீட் பிரெட்தான். ஆனால், `வீட் பிரெட்' எனக் கூறினாலும் அவை முழுமையான கோதுமை ரொட்டிகள் கிடையாது. மாறாக அவற்றில் அதிகளவில் மைதா கலப்பு உள்ளது என்பதே உண்மை.எஃப்.சி.ஐ என்ப்படும் இந்திய உணவு கார்ப்பரேஷனின் ஆணைப்படி, உணவுப் பாக்கெட்டுகளில், அதை தயாரிக்க பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்கள் மற்றும் அதன் அளவு குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.`வீட் பிரெட்' எனச் சொல்லி விற்கப்படும் பல பிராண்டுகளின் பாக்கெட்டுகளில் 30 சதவிகிதம் வரை மட்டுமே கோதுமை இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சில பெரிய பிராண்டுகளில் அதிகபட்சமாக 60 சதவிகிதம்வரை மட்டுமே கோதுமை உள்ளது. மீதி அனைத்தும் மைதாதான். ஆனால், இதைத்தான் `வீட் பிரெட்' என்று சொல்லி விற்பனை செய்கிறார்கள்.மைதா கலந்த ரொட்டியை, `வீட் பிரெட்', `ஹோல் வீட் பிரெட்' என்று கூறி விற்பனை செய்கிறார்கள். `ஹோல் வீட் பிரெட்' என்றால் முழுக்க முழுக்க கோதுமையைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது என்று அர்த்தம்'' எனக் குறிப்பிட்டவர், கோதுமை ரொட்டியில் சேர்க்கப்படும் நிறமிகளைப் பற்றி விவரித்தார்.``கோதுமை ரொட்டிகளை நோக்கி மக்களை வெகுவாக கவர்ந்திழுப்பது அவற்றின் நிறம்தான். சாதாரண மைதா ரொட்டிகள் வெள்ளை நிறத்தில் காணப்படும் நிலையில், கோதுமை ரொட்டிகள் சாக்லேட் அல்லது பிரவுன் நிறத்தில் காணப்படும்..அதனால், கோதுமையை வைத்து தயாரிக்கப்பட்ட ரொட்டியும் பிரவுன் நிறத்தில் இருக்கிறது என்று நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம். அதுதான் இல்லை. கோதுமை ரொட்டி என்று சொல்லப்படும் ரொட்டிக்கு கேரமெல் கலர் `150a' என்ற செயற்கை நிறமியைக் கொடுத்தே கலர் கொடுக்கப்படுகிறது.இதே 150a என்ற நிறம்தான் கிட்டத்தட்ட அனைத்து குளிர்பானங்களுக்கும் பிரவுன் நிறத்தைக் கொடுக்க பயன்படுத்தப்படுகிறது. அதாவது, ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும் என்று நினைப்பவர்கள்தான் கோதுமை ரொட்டியை உட்கொள்கிறார்கள். ஆனால், செயற்கை நிறத்தால், அதன் நோக்கமே வீணாகிவிடுகிறது. அதுமட்டுமல்ல.. ‘150a’ செயற்கை நிறத்தில் ‘மெதிலிமிடசோல்’ என்ற ஒரு வேதியியல் பொருள் உள்ளது. இது ஒரு கார்சினோஜென். அதாவது, புற்றுநோயை உண்டாக்கும் தன்மைகொண்ட பொருள். அதிகளவு இதை உட்கொள்ளும்போது அது நுரையீரல் புற்றுநோயை உண்டாக்கும் தன்மையைக் கொண்டது.தற்போது பல காரணங்களுக்காக மக்கள் கோதுமை ரொட்டியை உட்கொள்கின்றனர். நாளொன்றுக்கு காலை, மாலை என்று 4 ரொட்டிகளை உட்கொள்கிறார்கள் என்றால், ஒரு மாதத்துக்கு 120 ரொட்டிகளும் ஒரு ஆண்டுக்கு 1440 ரொட்டிகளை உட்கொள்வார்கள். இதனால், நிச்சயம் உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.ரொட்டிப் பிரச்னை என்பது கோதுமை ரொட்டியுடன் மட்டும் முடியவில்லை. இன்னமும், `மல்டி கிரெயின் பிரட்' என்றுகூறி சில ரொட்டிகள் விற்கப்படுகின்றன. அதாவது, நவதானியங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுவதாக சொல்கிறார்கள்.ஆனால், அவற்றிலும் பெரும்பாலும் இரண்டு தானியங்களுக்கு மேல் பயன்படுத்தப்படுவது இல்லை. மேலும், கோதுமை ரொட்டியில் என்னென்ன பிரச்னைகள் உள்ளதோ, அதே பிரச்னைகள் இதிலும் உள்ளன. கோதுமை ரொட்டியின் பயன்பாடு அதிகரித்து வரும் சூழ்நிலையில், மக்கள் விழிப்புடன் இருப்பது நல்லது’’ என எச்சரித்து முடித்தார்.நுகர்வோர் அமைப்பு கூறும் தகவலை உறுதிப்படுத்த களத்தில் இறங்கினோம். நாம் வாங்கிய பிரபல பிராண்ட் பிரெட்டில் வெறும் 57.3 சதவிகிதம் மட்டுமே கோதுமை இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற மற்றொரு பிராண்ட் பிரட்டிலோ 62 சதவிகிதம் மட்டுமே கோதுமை உள்ளது. மேலும், அதே பிராண்டில் செயற்கை நிறமூட்டியான 150a இருப்பதும் தெரிந்தது.மக்கள் சர்வசாதாரணமாக புழங்கும் வாட்டர் பாட்டில் தொடங்கி பீரட் வரை விஷமாகிப் போனால் என்னதான் செய்வது? - அபிநவ்