`ஏ டீம்.. பி டீம்.. ஸ்லீப்பர் செல்' - தமிழக அரசியல் களத்தில் அதிகம் உச்சசரிக்கப்படும் வார்த்தைகள் இவை. அந்த வரிசையில், `பா.ஜ.க.வின் ஸ்லீப்பர் செல், சீமான்' என தி.மு.க.வும் `தி.மு.க.தான் ஏ டீம்' என நாம் தமிழரும் வரிந்துகட்டுவதால் அரசியல் வட்டாரத்தில் அனல் கலந்த புகை. ``நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் சிறுபான்மையின மக்களின் வாக்குகள், பா.ஜ.க.வுக்கு கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. இதை பா.ஜ.க.வும் அறிந்து வைத்திருக்கிறது. அதனால்தான் தி.மு.க கூட்டணிக்கு அச்சுபிசகாமல் விழும் வாக்குகளை திருப்பிவிட பலவித முயற்சிகளை பா.ஜ.க மேற்கொண்டு வருகிறது" என்கிறார், அரசியல் விமர்சகர் ஒருவர். தொடர்ந்து, அரசியல் களத்தில் நகர்த்தப்படும் காய்களைப் பற்றி விவரித்தார். ``திராவிடக் கட்சிகள் வந்த பிறகு தமிழகத்தில் காங்கிரஸின் மார்க்கெட் சரியத் தொடங்கியது. அக்கட்சியின் வாக்குவங்கி 34 சதவிகிதத்தில் 8 சதவிகிதமாக சரிந்துவிட்டது. ஆனாலும், காங்கிரஸ் கட்சிக்குப் பலம் சேர்ப்பது தமிழகம்தான். அதாவது, கேரளாவுக்கு அடுத்தபடியாக அதிக இடங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றது தமிழகத்தில்தான். இதனை மிக உன்னிப்பாக பா.ஜ.க கவனித்து வருகிறது. அதனால்தான் 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு பா.ஜ.க தரப்பில் இருந்து தூது வந்தது. `கூட்டணியில் இருந்து காங்கிரஸை கழட்டிவிடுங்கள். நீங்கள் ஆட்சி அமைத்தால், மறைமுகமாக துணைநிற்போம்’ என்றது. ஆனால் ஸ்டாலின் மசியவில்லை. இதையடுத்து, பா.ஜ.க.வின் வலையில் ‘வான்டட்’ ஆக வந்து சிக்கினார் சீமான். தமிழ்த்தேசிய பாதையில் ஆன்மிகத்தை நுழைத்து அவர் அரசியல் செய்து வருகிறார். நெற்றியில் பளிச்சென விபூதி இட்டபடி, `தமிழ் இனத்தின் அப்பன் முருகன்’ எனக் கூறி காவடி எடுத்தார். பிறகு, `மாயோன்’ எனச் சொல்லி, கிருஷ்ணர் வழிபாட்டையும் ஆதரித்தார். சீமானின் செயலை ரசித்தபடியே, பா.ஜ.க. அவருக்கு வலைவிரித்தது. தொடக்கத்தில் கழுவுகிற மீனில் நழுவுகிறவராக இருந்த சீமானை வேறு தரப்பு மூலம் தனது திட்டத்துக்கு சம்மதிக்க வைத்துவிட்டதாகத் தெரிகிறது. இதனால்தான், பா.ஜ.கவுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கையில் எடுத்திருக்கிறார். இலங்கையில் நடந்த இறுதி யுத்தத்துக்குப் பிறகு காங்கிரஸ் மீது தமிழக மக்களுக்கு அதிருப்தி இருந்தது. தற்போது அப்படிப்பட்ட அலை எதுவும் இல்லை. இதைமாற்றி காங்கிரஸ் மீது மீண்டும் வெறுப்பு அலையை வீச வைக்க வேண்டும் என்பதில் பா.ஜ.க உறுதியாக இருக்கிறது. அதற்கு செயல்வடிவம் கொடுத்து வருகிறார், சீமான். அது காவிரி விவகாரத்திலும் எதிரொலித்தது. காவிரியில் தண்ணீரை திறந்துவிட அங்குள்ள காங்கிரஸ் ஆட்சி எதிர்ப்பு காட்டியது. கூடவே, பாலாற்றின் குறுக்கே அணை கட்டவும் தீவிரம் காட்டி வருகிறது. `இதுதான் நேரம்' என நினைத்த சீமான், காங்கிரஸுக்கு எதிராக வரிந்துகட்டிக் கொண்டு கிளம்பியிருக்கிறார். மேலும், `காங்கிரஸை தி.மு.க கூட்டணியில் இருந்து கழட்டிவிட்டால் தி.மு.க கூட்டணியை ஆதரிப்பதாகவும் அத்தேர்தலில் நாம் தமிழர் போட்டியிடாது' எனவும் அறிவித்தார். இதை மேலோட்டமாக பார்த்தால், சீமானின் தமிழ்ப்பற்று எனத் தோன்றும். ஆனால், இது பா.ஜ.க.வுக்கு மறைமுகமாக வாக்குகளை சேகரிக்கும் யுக்திதான். சீமானின் கணக்குப்படி தி.மு.க கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறினால், இடதுசாரிகளும் வெளியேறுவார்கள். அ.தி.மு.க அணியில் இருந்து பா.ஜ.க விலகினால், அ.தி.மு.கவுடன் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் இணைந்துவிடுவார்கள். பா.ஜ.க தனித்து நிற்கும். சிறுபான்மை வாக்குகள் சிதறும்' என்பதுதான் அரசியல் கணக்கு. இதெல்லாம் நடப்பதற்கான வாய்ப்பு அரிது என்றாலும் களமிறங்கியிருக்கிறார், சீமான்" எனக் கூறி முடித்தார். ``இதெல்லாம் உண்மையா?" என நாம் தமிழர் கட்சியின் `சாட்டை' துரைமுருகனிடம் கேட்டோம். ``நாம் தமிழர் பா.ஜ.க.வின் ‘பி’ டீம் என்றால் மோடி தமிழகத்துக்கு வந்தபோது கருப்புக் குடைபிடிக்காமல், வெள்ளை குடையைப் பிடித்தது யார்? தமிழக சிறைகளில் நீண்டகாலமாக இருக்கும் இஸ்லாமியர்களின் விடுதலைக்காக நாம் தமிழர் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. ஆனால், `அவர்களை விடுதலை செய்யக்கூடாது' என சொல்லி உச்சநீதிமன்றம் வரை சென்று வாதாடி வருகிறது தி.மு.க. அப்படியென்றால் இவர்கள் யாருடைய ‘பி’ டீம்? கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில்கூட நடக்காத ஆர்.எஸ்.எஸ். பேரணி தமிழகத்தில் நடக்கிறது. அதற்கு யார் காரணம்? ராமநாதபுரத்தில் மோடி போட்டியிட்டால் அவரை எதிர்த்து போட்டியிடுவோம் என தைரியமாக சொல்கிறோம். அதேபோல் ஸ்டாலின் சொல்வாரா? பா.ஜ.கவை ஆதரிக்கும் ‘ஏ’ டீம் தி.மு.கதான்" என்றார் ஆவேசமாக. தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் பேசியபோது, ``நீங்கள் சொல்லக்கூடிய நபரை நாங்கள் கண்டுகொள்வது கிடையாது. அவரை ஒரு அரசியல் கட்சித் தலைவராக நினைத்து அதற்குப் பதில் சொல்வதும் இல்லை. தி.மு.க கூட்டணி வலுவாக இருக்கிறது. அதை யாராலும் உடைக்க முடியாது. கூட்டணியில் சில சலசலப்புகள் வரலாம். அதற்காக கூட்டணியை உடைத்துவிடலாம் என யார் நினைத்தாலும் அது நடக்காது" என்றார் உறுதியாக. `யார் ஏ டீம்.. யார் பி டீம்?' என்பது தேர்தல் நெருக்கத்தில் தெரியத்தானே போகிறது? - கணேஷ்குமார்