தமிழகத்தில் சற்றென்று மாறுகிறது அரசியல் வானிலை. இத்தனை காலம் திராவிட இயக்கங்களுக்கு கைகொடுத்து வந்த தலித் அமைப்புகள் திசை மாறத் தொடங்கியிருக்கின்றன. திராவிட எதிர்ப்பு பட்டியலின, பழங்குடியினர் இயக்கங்களின் கூட்டமைப்பு ஒன்று உருவாகியுள்ளதே இதற்கு சாட்சி. அதில் ஓர் அங்கமாக ஐக்கியமாகி இருக்கும் அம்பேத்கர் மக்கள் கழக நிறுவனத் தலைவர் இளையபாபுவிடம் பேசினோம்.கூட்டமைப்பு சார்பில் திடீர் மாநாடு ஏன்?இது நெடுநாட்களாகத் திட்டமிடப்பட்டு நடத்தப்படும் மாநாடு. அரசியல்ரீதியாகச் செயல்படுவதைவிட சமூகரீதியாக செயல்பட்டு பறையர் இன மக்களை ஒருங்கிணைத்து மாநாடு நடத்துகிறோம். ’திராவிடத்தால் எப்படி வீழ்ந்தோம்?’ என்பதுதான் மாநாட்டின் முதல் நோக்கம். ’திராவிடத்தால் வளர்ந்தோம்’ என்ற தவறான புரிதலைக் கொண்டிருக்கிற எங்கள் மக்களுக்கு உண்மை வரலாற்றைச் சொல்லி அவர்களை மீட்டெடுப்பது இரண்டாவது நோக்கம்.‘சமூக நீதி என்றாலே நாங்கள்தான்' என்கிறதே தி.மு.க.?சாதி இந்துக்களுக்கும் ஆதிக்க சக்தியாக இருப்பவர்களுக்கும் மட்டுமே சமூகநீதி என்பதை தி.மு.க கடைபிடித்து வருகிறது. வன்னியர்கள், முக்குலத்தோர் எனப் பலம் வாய்ந்தவர்கள் பாதிக்கப்பட்டால் மட்டுமே சமூக நீதியைப்பற்றி தி.மு.க.வினர் பேசுவார்கள். பட்டியல் சமூகத்தினருக்கு ஒரு பிரச்னை என்றால் திரும்பிக்கூட பார்க்கமாட்டார்கள். முதுகுளத்தூர் கலவரத்தில் இருந்து வேங்கைவயல் விவகாரம் வரை எங்களுக்குக் கிடைத்த நீதி என்ன, தீர்வுதான் என்ன?தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் உங்கள் சமூகத்தினர் வலுவாக இருக்கிறார்கள்?தமிழகம் முழுவதுமே பறையர்கள் பரவலாக இருக்கிறார்கள். சென்னை என்பதே பறையர்கள் கோட்டைதான். இதுதவிர திருவள்ளூர், காஞ்சிபுரம் என எந்த மாவட்டத்தை எடுத்துக்கொண்டாலும் பறையர்கள் அதிகமாகவே வசிக்கிறார்கள். சென்னை மேயர் பதவியே எங்களுக்கானதுதான். ஆனால், ஸ்டாலினை மேயராக்க வேண்டும் என்பதற்காக, 96-ல் முதல்வராக இருந்த கருணாநிதி, பட்டியல் இன மக்களுக்கான சென்னை மேயர் பதவியைப் பொதுவாக மாற்றினார்.தேசியக் கட்சிகளால் உங்களுக்கு ஏதாவது பலன்கள் கிடைத்து இருக்கிறதா?தமிழகத்தைப் பொறுத்தவரை பா.ஜ.க வளர்ந்து வருகிறது. காங்கிரஸைவிட எங்கள் மீது ஒருவித சாஃப்ட் கார்னரை பா.ஜ.க வைத்திருக்கிறது. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த எல்.முருகனை கட்சித் தலைவராக்கி அழகு பார்த்தது. நாங்கள் முன்னேற வேண்டும் என பா.ஜ.க விரும்புகிறது. ஆனால் காங்கிரஸ், எங்கள் வாக்குகளை வாங்குவதில் காட்டிய ஆர்வத்தை வளர்ச்சியில் காட்டவில்லை.கூட்டமைப்பின் எதிர்காலத் திட்டம் என்ன?தேர்தல் நேரத்தில் அல்லது பொதுவான ஒரு பிரச்னை அடிப்படையில் பல கூட்டமைப்புகள் உருவாக்கப்படும். பின்னர், அவை காணாமல் போய்விடும். ஆனால், நாங்கள் அப்படி அல்ல. எங்கள் மாநாட்டுக்குப் பிறகு கூட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவோம். அதை அரசியல் கட்சியாக மாற்றுவோம். கூட்டணிக்காக எங்களைத் தேடி பிற கட்சிகள் வரக்கூடிய நிலையை ஏற்படுத்துவோம். - கணேஷ்குமார்