“வஞ்சர மீன் இருக்குன்றான், வாளை மீன் இருக்குன்றான், நெய் மீன் இருக்குன்றான், நெத்திலி மீன் இருகுன்றான்… ஆனா, நீங்க கேட்ட ஜாமீன் மட்டும் இல்லைன்னுட்டாங்கண்ணே” வடிவேலு காமெடி யாருக்கு பொருந்துகிறதோ இல்லை, செந்தில்பாலாஜிக்காக அட்ராசிட்டி செய்த கரூர் உடன்பிறப்புகளுக்கு இப்போது ரொம்பவே பொருந்துகிறது!கரூரில் கடந்த மே மாதம் 26ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, வருமான வரித்துறை அதிகாரிகளான பிரசாத், அர்ஜூன், காயத்திரி ஆகியோரை தாக்கிய தி.மு.க.வினர், அவர்களின் வாகனத்தையும் அடித்து உடைத்தனர். இதில், காயத்ரி என்ற அதிகாரிக்கு கையில் காயம் ஏற்பட்டது. அவர், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கரூர் காவல் நிலையத்தில் புகாரும் கொடுத்தனர்..இதன்பிறகு நடந்த சம்பவங்களை நம்மிடம் விவரித்தார், கரூர் மாவட்ட காவல்துறை அதிகாரி ஒருவர், `` அதிகாரிகளிடம் புகாரை வாங்கிய போலீஸார், சம்பவம் நடந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ, சி.சி.டி.வி ஃபுட்டேஜ் மூலம் பலரையும் காவல் நிலையத்துக்குக் கூட்டிச் சென்றனர். இதில் சிலர், ’எனக்கு பொண்டாட்டி புள்ளைங்க இருக்காங்க, விட்டுருங்க..’ எனக் கதறியுள்ளனர்.`சரி, ஜெயிலுக்கு போறது யாரு?'ன்னு கேட்டதுக்கு, `சாதா கேஸ்தானே.. ஜாமீன்ல வந்துரலாம், கட்சியிலயும் ஒரு வெளம்பரம் கிடைக்கும்'னு சிலர் கையை தூக்குனாங்க. அப்படி கை தூக்குன பதினைந்து பேரை மட்டும் எஃப்.ஐ.ஆர். போட்டு ஜெயிலுக்கு அனுப்பினோம். இதுல கரூர் மாநகராட்சி கவுன்சிலர்கள் புல்லட் பூபதி, ஜிம் பாலாஜி, லாரன்ஸ் ஆகிய மூவரும் அடக்கம்.அவங்க நெனச்ச மாதிரியே கரூர் நீதிமனறத்தில் ஐந்து நாளில் ஜாமீன் கிடைத்தது. அவங்களும் கெத்தாக வெளியே வந்தாங்க, ஜாமீனை எதிர்த்து வருமான வரித்துறையினர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த ஐகோர்ட், `ஜாமீனை ரத்து செய்து, பதினைந்து பேரும் கரூர் கோர்ட்டில் சரணையடைய வேண்டும், கரூர் கோர்ட் மீண்டும் முதலில் இருந்து விசாரிக்க வேண்டும்' என உத்தரவிட்டது.ஆகஸ்ட் 1ம் தேதி 15 பேரும் கோர்ட்டில் ஆஜரானார்கள், வழக்கு விசாரணைக்கு வந்தது, ஆனால் ஜாமீன் கிடைக்கவில்லை. மீண்டும் 7ம் தேதி விசாரணைக்கு வந்தபோது சென்னையில் இருந்தெல்லாம் வக்கீல்கள் வந்து வாதாடினார்கள். ஜாமீன் கிடைக்கும் என்று தி.மு.கவினரும் நம்பியிருந்தனர், ஜாமீன் கிடைக்கவில்லை. இதனால் மனம் நொந்துபோய் சிறைக்குச் செல்லும் வேனில் ஏறும்போது, அங்கிருந்த தி.மு.க.வினரிடமும் குடும்பத்தாரிடமும் கதற ஆரம்பித்துவிட்டார்கள்..அப்போது பேசிய அவர்கள், ’நாங்கள் மட்டுமா அன்னைக்கு பிரச்னையில் ஈடுபட்டோம். ஐ.டி அதிகாரி காயத்ரியின் கையை பிடித்து இழுத்தவர், கரூர் மாநகராட்சியில் உயர் பதவியில் இருக்கும் பெண்மணி, கட்சியில் மகளிர் அணியில் இருக்கும் பெண்மணி, இவர்களை எல்லாம் ஏன் கைது செய்யவில்லை? கூட்டத்தில் கோவிந்தா போட்ட எங்களை மட்டும் கைது செய்து இந்த நிலைமைக்குத் தள்ளிட்டாங்களே?’ என்று புலம்பினார்கள்.மீண்டும் கடந்த 15ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதும், ஜாமீன் கிடைக்கவில்லை. உடனே ஐகோர்ட்டில் ஜாமீன் மனு போட்டார்கள். அந்த மனுவும் நேற்று தள்ளுபடியாகிவிட்ட நிலையில் ஐகோர்ட்டில் வருமானவரித்துறை தாக்கல் செய்த அஃபிடவிட் வெளியாகியிருக்கிறது. அதில், தங்களைத் தாக்கியவர்களின் பட்டியல் என்று கரூர் தி.மு.கவில் உள்ள முக்கிய பிரமுகர்கள் பலரின் பெயர்களை அதில் குறிப்பிட்டுள்ளனர். இந்த அஃபிடவிட்டில் உள்ளவர்கள் மீதும் எஃப்.ஐ.ஆர். தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டால் கரூர் தி.மு.கவில் பல பெரிய தலைகள் சிக்க வேண்டிவரும்..`எந்தப் பிரச்னையாக இருந்தாலும் நமக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி இருக்கிறார். அவர் உதவுவார்' என்கிற நம்பிக்கையில் இருந்த கரூர் தி.மு.கவினர், கதிகலங்கிப்போய் இருக்கிறார்கள். வருமான வரித்துறையினர் இதனை கவுரவப் பிரச்னையாக எடுத்துக்கொண்டு வேகம் காட்டி வருகிறார்கள். அவ்வளவு சீக்கிரம் இது முடிவுக்கு வராது" என்றார்.``இந்த வழக்கில் மேலும் சில தி.மு.க புள்ளிகள் சிக்க வாய்ப்புள்ளதாகக் கூறுகிறார்களே?” என்று கரூர் டவுன் டி.எஸ்.பி. சரவணனிடம் கேட்டோம். ``போனில் பேசவிரும்பவில்லை. நான் ஓய்வாக இருக்கும்போது அழைக்கிறேன். நேரில் பேசலாம்” என்று மட்டும் பதில் அளித்தார்.`நானும் ரவுடி'தான்னு வான்டட்டா வந்து வண்டியில ஏறுனா இதுதான் கதி!- கரூர் அரவிந்த்