`காற்றில்கூட ஊழல் செய்த தி.மு.க-காங்கிரஸ்' என 2ஜி அலைக்கற்றையை முன்வைத்து பா.ஜ.க ஆடிய கபடி, பத்தாண்டுகளாக காங்கிரஸை அரியணை பக்கம் அமரவிடவில்லை. இப்போது சி.ஏ.ஜி வீசிய அதே யார்க்கர் பந்து, பா.ஜ.க பக்கம் திரும்பியிருப்பதால் காங்கிரஸ் மைதானத்தில் ஏக உற்சாகம்!சி.ஏ.ஜி. பட்டியிடும் புகார்கள் இதுதான்!பாரத் மாலா திட்டம்நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகள், விரைவுச் சாலைகள் என அனைத்து சாலைகளையும் இணைக்கும் திட்டம் இது. இதன்படி, முதல்கட்டமாக 34,800 கி.மீ சாலைகளை அமைக்க, மத்திய அமைச்சரவை 5,35,000 கோடி ரூபாயை ஒதுக்கியது. இதனைக் கணக்கிட்டால், ஒரு கி.மீ சாலையை அமைக்க 15.37 கோடி ரூபாய் செலவாகும்.இந்தத் திட்டத்தில் 26,316 கி.மீ சாலையை அமைக்க 8,46,588 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, ஒரு கி.மீ சாலையை அமைக்க 32.17 கோடியாக செலவு அதிகரித்துள்ளது. அதாவது, இத்திட்டத்தின் நிதி இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது..ஒரு கி.மீட்டருக்கு ரூ. 250 கோடி?நாட்டின் முதல் எட்டுவழி விரைவுச் சாலையை சுமார் 9000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டத் திட்டமிடப்பட்டது. ஹரியானாவில் 18.9 கி.மீ தூரத்துக்கும் டெல்லியில் 10.1 கி.மீ தூரத்துக்குமான இத்திட்டத்தில் ஒரு கி.மீ சாலையை அமைக்க 18 கோடி ஆகும் என்று முடிவு செய்திருந்த நிலையில், தற்போது அது ஒரு கி.மீட்டருக்கு 250 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, 14 மடங்கு மதிப்பீடு உயர்த்தப்பட்டுள்ளது.டோல்கேட் கோல்மால்ஐந்து சுங்கச்சாவடிகளில் வாகன ஓட்டிகளிடம் இருந்து வசூல் செய்யப்பட்ட தொகையை ஆய்வு செய்தபோது, ரூ.154 கோடி அளவுக்கு அதிக தொகையை வசூல் செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது..ஆயுஷ்மான் பாரத்2018ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் அறிமுகப்படுத்தப்பட்டது, மத்திய அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டமான ஆயுஷ்மான் பாரத். இத்திட்டத்தின்கீழ், ஆகஸ்ட் 1ம் தேதி நிலவரப்படி 24.3 கோடி மருத்துவக் காப்பீடு அட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 7.5 லட்சம் காப்பீடு அட்டைகள் ஒரே செல்போன் எண்ணைக் கொண்டு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் இருந்து ஏழு ஆதார் எண்களுடன் 4,761 காப்பீடு அட்டைகள், பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் சி.ஏ.ஜி. சுட்டிக் காட்டியிருக்கிறது.சிகிச்சையின்போது இறந்த 88,670 நபர்களுக்கு புதிதாக சிகிச்சை பார்த்ததாக காப்பீடு பெறப்பட்டிருப்பதாகவும் இதில் பல்லாயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாகவும் சி.ஏ.ஜி. குறிப்பிட்டுள்ளது..அயோத்தியா மேம்பாடு திட்டம்அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு வருவதைத் தொடர்ந்து, அயோத்யா மேம்பாட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது. இதில், ஒப்பந்தாரர்கள் பணி ஆணையைப் பெறும்போது, உத்தரவாத தொகையாக குறிப்பிட்ட தொகையைச் செலுத்தவேண்டும். உதாரணமாக, 62.17 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் எடுக்கும் ஒரு ஒப்பந்ததாரர் உத்தரவாத தொகையாக 3.11 கோடியை செலுத்த வேண்டும். ஆனால், இந்த விதி மீறப்பட்டு, வெறும் 1.86 கோடி மட்டுமே செலுத்தியவர்களுக்கு ஒப்பந்தங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.இதன்படி பார்த்தால், சுமார் 19.73 கோடி ரூபாய்வரை அதிக லாபத்தை ஒப்பந்ததாரர்கள் பெற்றிருப்பார்கள். இந்தத் திட்டத்தை செயல்படுத்தியதால் அரசுக்கு சுமார் 8.22 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சி.ஏ.ஜி. கூறுகிறது.விளம்பரத்திலும் முறைகேடா?கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் ஓய்வூதியத் திட்டத்துக்கான நிதி, விளம்பரத்துக்காகச் செலவிடப்பட்டுள்ளது. 2017ம் ஆண்டு இத்திட்டத்தை 19 மாநிலங்களில் விளம்பரப்படுத்த முடிவெடுக்கப்பட்டது. இதற்காக தலா 5 விளம்பரப் பலகைகளை வைக்க 2.44 கோடி ரூபாய் பணத்தை ஓய்வூதியத் திட்ட நிதியில் இருந்து செலவு செய்துள்ளதாக சி.ஏ.ஜி. கூறுகிறது..விமான என்ஜின் வடிவமைப்புஇந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் (ஹெச்.ஏ.எல்), தவறான திட்ட வடிவமைப்புக் கோளாறுகள், உற்பத்தியில் தாமதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 2022 மார்ச் நிலவரப்படி சுமார் 159.23 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக சி.ஏ.ஜி கூறுகிறது.``சி.ஏ.ஜி அறிக்கையை எப்படிப் பார்க்கிறீர்கள்?'' என தமிழக பா.ஜ.க. துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம். “துவாரகா நெடுஞ்சாலை என்பது டெல்லி முதல் ஹரியானா இடையே சாலை அமைக்கும் திட்டம். மற்ற சாலைகளை அமைப்பதுபோல இந்தத் திட்டத்தை எளிதாக நிறைவேற்ற முடியாது. உதாரணத்துக்கு மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்தைப் பாருங்கள். அதற்காக, எத்தனை கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்டது?.அதேபோல், துவாரகா நெடுஞ்சாலை திட்டத்துக்கும் நிதி ஒதுக்கப்பட்டது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் எண்ணை மட்டுமே பதிவு செய்ய முடியும். சாதாரண போன் வைத்திருப்பவர்களுக்கும் பயனாளிகளுக்கும் பொதுவாக, ஒரு குறிப்பிட்ட எண்ணைத்தான் பதிவு செய்ய முடியும். ஆனால், ஆதார் எண்ணை தனித்தனியே குறிப்பிட்டுள்ளனர். சி.ஏ.ஜி.வெளியிட்டுள்ள புகார் குறித்து மத்திய அரசு விரைவில் உரிய விளக்கம் அளிக்கும்” என்றார்.சி.ஏ.ஜி சுட்டிக் காட்டிய விஷயங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத், `பிரதமரின் நேரடி பார்வையின்கீழ் முக்கிய திட்டங்கள் அனைத்தும் செயல்படுகின்றன. அப்படியானால், அவருக்குத் தெரிந்துதான் இந்த ஊழல்கள் நடைபெற்றதா என்ற கேள்வி எழுகிறது. இந்த விவகாரத்தில் பிரதமர் தனது மௌனத்தைக் கலைக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டார்.`சி.ஏ.ஜி அஸ்திரத்தை காங்கிரஸ் எப்படி கையாளப் போகிறது?' என்பது வரும் நாள்களில் தெரிந்துவிடும். - அரியன் பாபு