-அபிநவ்இன்றைய தேதியில் செந்தில் பாலாஜியைபோல, பா.ஜ.க.வின் கோபத்துக்கு ஆளாகும் அமைச்சர்களில் சேகர்பாபுவுக்கு தனி இடம் உண்டு. அதனால்தான், அறநிலையத்துறை மீதான புகார்களை அடுக்கிக்கொண்டே செல்கிறது, பா.ஜ.க. அதில் லேட்டஸ்ட் வரவு, ஐ.டி.எம்.எஸ் இணையதள சர்ச்சை..``என்ன பிரச்னை?" என ஆலய வழிபடுவோர் சங்கத்தின் மாநிலத் தலைவர் டி.ஆர்.ரமேஷிடம் பேசினோம். “இந்துக் கோயில்களின் சொத்துகள் எல்லாம் கோயில்களுக்கு மட்டுமே சொந்தம். அதன்மீது அறநிலையத்துறை சொந்தம் கொண்டாட முடியாது. கோயில்களை பராமரிக்கவும் வரவு செலவுகளை தனிக்கை செய்யவும் தேவையான தொகையை மட்டும், கோயில் வருமானத்தில் பெற்றுக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.அந்தவகையில், ஆண்டுக்கு 400 கோடி ரூபாயை கோயில்களிலிருந்து அறநிலையத்துறை எடுத்துக்கொள்கிறது. ஆனால், பராமரிப்பு மற்றும் தணிக்கைக்கு ஆகும் செலவு என்பது வெறும் 120 கோடிதான். இதைத்தாண்டி ஒரு பைசா எடுத்தாலும் அது சட்டவிரோதம்தான். அந்தவகையில், ஐ.டி.எம்.எஸ் எனப்படும் இன்டகிரேட்டடு டெம்பிள் மேனேஜ்மெண்ட் சிஸ்டம் என்ற திட்டத்தின்கீழ் கோடிக்கணக்கில் பணம் கையாடல் செய்யப்படுகிறது..இத்திட்டத்தின்படி, தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கோயிலுக்கும் ஒருங்கிணைந்த இணையதளத்தைத் தொடங்கி, அதில் கோயிலின் தல புராணம், கோயில் சொத்துகள், நிர்வாகம், பக்தர்களுக்கு டிக்கெட் வழங்குவது உள்ளிட்ட பணிகளைச் செய்வதாக சொல்லப்படுகிறது. இதற்காக, கோயில்களின் வருமானத்திலிருந்து ஐந்து லட்சம் முதல் இருபது லட்சம்வரை அதிகாரிகள் எடுத்து வருகின்றனர்.இதற்கான உத்தரவை அப்போதைய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் பிறப்பித்துள்ளார். இதையடுத்து, பட்டீஸ்வரம் கோயிலில் இருந்து 20 லட்ச ரூபாய், காங்கேயம் சிவன்மலை ஆண்டவர் கோயிலில் இருந்து 5 லட்சம், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலில் இருந்து 5 முதல் 10 லட்சம், தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் இருந்து 20 லட்சம், உறையூர் வெக்காளியம்மன் கோயிலில் இருந்து 10 லட்சம் என்று பெறப்பட்டுள்ளது. இவை உதாரணம் மட்டுமே..தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 40 ஆயிரம் கோயில்கள் உள்ளன. அப்படியென்றால், எவ்வளவு கோடிகளை எடுத்திருப்பார்கள் எனப் பாருங்கள். இது சட்டவிரோதம். இந்த இணையதளத்தை பணம் கொட்டும் ஏ.டி.எம் மெஷினாக பார்க்கிறார்கள். ஐ.டி.எம்.எஸ். இணையதளத்தின் பயன்பாடும் சரியாக இல்லை என்ற புகாரும் உள்ளது. பிறகு எதற்காக இவ்வளவு பணத்தை எடுக்கவேண்டும்?" என்று கொதித்தார்.ஐ.டி.எம்.எஸ் தளத்தின் பயன்பாடு குறித்து நம்மிடம் பேசிய கோயில் செயல் அலுவலர் ஒருவர், “ஏற்கெனவே இரண்டுமுறை பணவசூல் நடைபெற்று நடைமுறைப்படுத்த முடியாமல்போன திட்டம்தான், ஐ.டி.எம்.எஸ். அந்தப்பணம் என்னவானது என்று தெரியவில்லை. தற்போது மீண்டும் பணம் வசூலித்து வருகின்றனர். ஒவ்வோர் ஆண்டும், ஐ.டி.எம்.எஸ் திட்டத்துக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்குமாறு கோருகிறோம். ஆனால், நடப்பதில்லை. தவிர, கோயில் நிதியில் பணம் கொடுக்குமாறு அழுத்தமும் வருகிறது" என்றார்..அறநிலையத்துறையின் முன்னாள் ஆணையர் குமரகுருபரனிடம் இதுகுறித்துக் கேட்டபோது, “அறநிலையத்துறையின் நிர்வாகத்துக்கு கோவில் நிதியில் இருந்து 16 சதவிகிதம் பெறப்படுவது உண்மைதான். அதேநேரம், ஐ.டி.எம்.எஸ் என்பதும் கோயில் நிர்வாகத்துக்காக பயன்படுவதுதான். எனவே, இதற்கான நிதியை பெறுவது சட்டப்படி குற்றமல்ல. எல்லா கோயில்களும் இந்த நிதியை தந்தே ஆக வேண்டும் என்று கட்டாயமும் கிடையாது. அனைத்துக் கோயில்களையும் மொத்தமாக பராமரிக்க ஐ.டி.எம்.எஸ் மாதிரியான திட்டம் அவசியம். இதுதெரியாமல் அவதூறு பரப்புகின்றனர்’' என்றார்..பாக்ஸ்...``குத்தகையும் வரல...வாடகையும் வரல!"ஐ.டி.எம்.எஸ் இணையதளம் மீதான சர்ச்சை ஒருபுறம் இருந்தாலும், கோயில் நிலங்களையும் ஆக்ரமித்துள்ளதாக, அறநிலையத்துறை மீது பகீர் புகார் ஒன்றும் கிளம்பியுள்ளது.“கோயில் சொத்துகளை யார் அபகரித்தாலும், அது கிரிமினல் குற்றம். ஐ.பி.சி 409-ன்கீழ் அவர்களுக்கு 10 ஆண்டுகள்வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். இந்த விதியை மீறி, அறநிலையத்துறையின் இணை ஆணையர்களுக்கான அலுவலகங்கள் கோயில் நிலத்தில் கோயில் பணத்திலேயே கட்டப்பட்டுள்ளன. சேலம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, மயிலாடுதுறை போன்ற இடங்களில் உள்ள அலுவலகங்கள் இப்படிக் கட்டப்பட்டவைதான்" என்கிறார், ஆலய வழிபடுவோர் சங்கத்தின் தலைவர் டி.ஆர்.ரமேஷ்.தொடர்ந்து பேகிய அவர், ``கோயில் நிலத்தில் அலுவலகம் கட்டவேண்டும் என்றால் முறைப்படி, அந்த நிலத்தை குத்தகைக்கு எடுக்க வேண்டும். அதற்கான தொகையை செலுத்த வேண்டும். இந்த நடைமுறையை அறநிலையத்துறை அப்பட்டமாக மீறியுள்ளது..அறநிலையத்துறையில் முன்னாள் ஆணையர்களாக இருந்த தனபால், வீரசண்முகமணி காலத்தில் இருந்தே இது நடைபெற்று வருகிறது. இதனை எதிர்த்து வழக்கு தொடுத்தேன். ‘கோயில் நிலத்தில்தான் கட்டியிருக்கிறோம். பணத்தைத் தந்துவிடுகிறோம்’ என்றனர். ஆனால், இதுவரை தரவில்லை" என்கிறார்.கோயில் நிலங்கள் மீதான சர்ச்சை குறித்து, இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவிடம் கேட்டபோது, ‘‘நாட்டுல எவ்வளவோ பிரச்னைகள் இருக்கும்போது இதைப்போய் கேட்கலாமா? கோயில் நிலத்தில் கட்டப்பட்ட இடங்களுக்கு நாங்கள் வாடகையைக் கொடுத்துவிடுவோம். எல்லாம் முறைப்படி நடக்கும்" என்று மட்டும் பதில் அளித்தார்.