பாபு படங்கள்: செந்தில்நாதன்மனதில்பட்டதைப் பட்டென்று பேசி சர்ச்சைகளில் சிக்கிக்கொள்வதில், அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகியான பொன்னையனுக்கு நிகராக அக்கட்சியில் வேறுமில்லை. பலநேரங்களில் வெறுமனே கம்பு சுத்தும் பொன்னையனுக்கு கட்சி பற்றி எரியும் நேரத்தில் சொல்லவா வேண்டும்? அவருடனான ஒரு சூடான சந்திப்பு.ஜெயலலிதா ஆதரித்த பொதுசிவில் சட்டத்தை எடப்பாடி எதிர்ப்பதற்கான காரணம் என்ன ?தொண்டர்கள், பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்துகளைக் கேட்டு, கட்சியின் கொள்கையில் மாற்றம் செய்வது என்பது எல்லா கட்சியிலும் நடக்கும் இயல்பான ஒன்று. அந்த அடிப்படையில்தான் பொதுசிவில் சட்டத்தை அ.தி.மு.க எதிர்த்துள்ளது. இந்தியாவில் இருக்க வேண்டிய ஒரே மதம் இந்து மதம். இந்தியாவில் இருக்க வேண்டிய ஒரே மக்கள் இந்து மக்கள். முஸ்லிம், கிறிஸ்துவ, புத்த மதத்தை சேர்ந்தவர்கள், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் எல்லாம் செத்து மடிய வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். நினைக்கிறது. பொதுசிவில் சட்டம் நாட்டிலே மத நல்லிணக்கத்தை, அமைதியை சீர்குலைத்து விடும் என்ற அச்ச உணர்வு இருக்கிறது. இதை உணர்ந்துதான் நாங்கள் எதிர்க்கிறோம்.இந்த விவகாரத்தால் பா.ஜ.க. கூட்டணியில் விரிசல் ஏற்படாதா ?பொதுசிவில் சட்டத்தை எதிர்ப்பதற்கும் கூட்டணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் பா.ஜ.க. கூட்டணி இருந்தது. அதே உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. தனித்துப் போட்டியிட்டது. கூட்டணி என்பது அந்தந்த நேரத்தில் 3 மாதங்களுக்கு முன்பாகத்தான் முடிவு எடுக்கப்படும். எந்தக் கட்சியுடன் கூட்டணி, யார் யார் கூட்டணியில் இருப்பார்கள் என்பது அந்த நேரத்தில் தான் முடிவு செய்யப்படும்.ஜெயலலிதா குறித்து அண்ணாமலை பேசியதை அ.தி.மு.க. மன்னித்துவிட்டதா?அண்ணாமலையின் பேச்சு, ஒன்றரை கோடி அ.தி.மு.க தொண்டர்கள் மத்தியில் பா.ஜ.க. மீது பெரும் கசப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. அண்ணாமலையின் பேச்சு, பண்பு குறைந்த பேச்சு, அரசியல் முதிர்ச்சி இல்லாத பேச்சு என்பதைக் கடுமையான வார்த்தைகளில் கண்டித்திருக்கிறோம். அண்ணாமலையின் பேச்சு பா.ஜ.க.வுக்கு அழிவுகாலம் என்றுகூட பேசியிருக்கிறோம்.பத்திரிகைகள் பூதாகரப்படுத்துவதால், போதை தலைக்கேறி அண்ணாமலை தன்னை கடவுள் அவதாரமாக நினைத்துக்கொண்டிருக்கிறார். இதனை பா.ஜ.க. தலைமை உணர்ந்திருப்பதாக நம்புகிறோம். அண்ணாமலையின் இந்தச் செயலை டெல்லி பா.ஜ.க தலைவர்கள் உணர்ந்து தவறை திருத்திக் கொண்டால், தமிழகத்தில் ஒன்று, இரண்டு சீட்டாவது ஜெயிக்க முடியும்.அமித் ஷா சொன்னதுபோல தமிழகத்திலிருந்து பிரதமர் வேட்பாளராக எடப்பாடி இருப்பாரா ?எம்.ஜி.ஆர்., அம்மா ஆகியோரின் அணுகுமுறையைப் பின்பற்றி தொண்டர்களின் நம்பிக்கையாக எடப்பாடி மாறியிருக்கிறார். இந்தியாவில் எந்த முதல்வரும் செய்யாத சாதனையாக நாலரை ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை தந்த எடப்பாடிக்கு பிரதமராகக் கூடிய வாய்ப்பு அன்றும் இன்றும் என்றும் உண்டு.சசிகலா - எடப்பாடி இணைப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக திவாகரன் கூறியிருக்கிறாரே?என்னைப் பொறுத்தவரை சசிகலா மீண்டும் அ.தி.மு.க.வுக்கு வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. பத்திரிகைகள்தான் இதுபோன்ற செய்திகளை வெளியிடுகின்றன. இனி ஓ.பன்னீர்செல்வத்தையும் சசிகலாவையும் அ.தி.மு.க. தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் இருவரும் முடிந்துபோன சேப்டர்..ரவீந்திரநாத் எம்.பி. பதவி சொல்லாது என்ற நீதிமன்ற உத்தரவை எப்படி பார்க்கிறீர்கள் ?ரவீந்திரநாத் எங்கள் கட்சியில் கிடையாது. கட்சியில் இல்லாத நபர் குறித்துப் பேச வேண்டிய அவசியம் இல்லை.செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது சரியா?நீதிமன்ற உத்தரவுகளைத்தான் அமலாக்கத்துறை செய்து வருவதாக நினைக்கிறேன். செந்தில் பாலாஜி மீது வழக்குகள் பதியப்பட்டு, அதன்மீது விசாரணை நடத்தியுள்ளனர். அதனடிப்படையில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்திருக்கிறது. அதனை எப்படி தவறு எனக் கூற முடியும்?தமிழகத்திலும் ஏக்நாத் ஷிண்டே போல, அஜித் பவார் போல சிலர் இருப்பதாக அண்ணாமலை சொல்வது உண்மையா?கூட்டணிக் கட்சியின் முதுகில் குத்திவிட்டு 5 மாநிலங்களில் பா.ஜ.க. இதுபோன்ற அட்டகாசத்தை செய்துள்ளது. அதே ஃபார்முலாவை தமிழகத்திலும் செயல்படுத்திவிடலாம் என அண்ணாமலை நினைப்பாரேயானால், தமிழகத்தில் பா.ஜ.க.வின் பருப்பு வேகாது. இது திராவிட மண், பெரியார், அண்ணா பூமி. பா.ஜ.க.வினர் கற்பனையில் மிதக்கிறார்கள். அவர்களின் பகல் கனவு பலிக்காது.ஆளுநர் ஆர். என்.ரவி பேசுவது எல்லாம் சரியா ?ஆளுநர் பல சமயங்களில் பா.ஜ.க.வின் குரலாக ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளைப் பேசுகிறார். அந்தப் பதவியில் இருந்து கொண்டு இப்படி அரசியல் பேசுவது தவறு.தி.மு.க.வின் 2 ஆண்டு ஆட்சியை எப்படிப் பார்க்கிறீர்கள் ?கொள்ளை அடிப்பதையே 24 மணிநேர பணியாகக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின். இரவு தூங்கும்போதுகூட எந்தத் துறையில் எவ்வளவு கொள்ளை அடிக்கலாம் என தி.மு.க குடும்ப உறுப்பினர்கள் சிந்தித்துக் கொண்டு இருக்கிறார்கள்.நடிகர் விஜய் அரசியல் வருவது யாருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ?இதைத்தான் பல வருடங்களாக விஜய்யும் அவரது தந்தையும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். வரட்டும் பார்க்கலாம்.