காயத்ரி ரகுராம். முதலாம் சந்திப்பில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலையிடம் அறிமுகமானவர் இடைப்பட்ட சந்திப்புகளில் இதயம் கசந்து கட்சியைவிட்டே வெளியேறிவிட்டார். இப்போது அம்மணியின் பிரதான வேலையே அண்ணாமலையை டிவிட்டர் பக்கத்தில் வறுத்தெடுப்பதுதான். சும்மாவே ஆடுபவருக்கு கர்நாடகா சலங்கை கிடைத்தால் விடுவாரா? இதோ அண்ணாமலைக்கு எதிரான காயத்ரியின் லேட்டஸ்ட் கரகாட்டம்....கர்நாடக மாநில தேர்தல் முடிவுகள் குறித்து..?ஏற்கெனவே எதிர்பார்த்ததுதான். ஆரம்பத்திலிருந்தே களம் காங்கிரஸுக்கு சாதகமாகத்தான் இருந்தது. வெற்றியை தக்க வைக்க பா.ஜ.க பல்வேறு வியூகங்களை வகுத்தும் பலன் இல்லை. வாக்காளர்கள் ஆரம்பத்தில் இருந்தே காங்கிரஸை வெற்றி பெற வைப்பதிலேயே உறுதியாக இருந்தனர். அதுதான் நடந்திருக்கிறது.வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸின் இந்த வெற்றி தொடருமா?அப்படிச் சொல்ல முடியாது. அரசியல் வானிலை எப்படி வேண்டுமானாலும் மாறலாம். பா.ஜ.க தன் தவறுகளை சரிசெய்து கொண்டால் மீண்டும் ஆட்சியை பிடிக்கும். இதுதான் எனது நம்பிக்கை.அண்ணாமலையால்தான் 38 தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெற்றதாகச் சொல்கிறார்களே?அவரது ஜால்ராக்கள் அப்படிச் சப்பைக் கட்டுகட்டியும், முட்டுக்கொடுத்தும் பார்க்கிறார்கள். ஏன்? அதே தொகுதிகளில் நமீதா பிரசாரம் செய்திருக்கிறார். பல ‘செலிபிரிட்டீஸ்’முகாம் அமைத்து தேர்தல் வேலை பார்த்திருக்கிறார்கள். பிரதமர், மத்திய அமைச்சர்கள், கர்நாடக பா.ஜ.க தலைவர்களைத் தாண்டியா அண்ணாமலைக்காக வாக்களிக்கப் போகிறார்கள்?இதுவரை அங்கு பா.ஜ.க வெற்றி பெற்றதற்கும், இப்போது வெற்றி பெற்றதற்கும் இடையே இருக்கும் வாக்கு வித்தியாசத்தைப் பார்த்தாலே அண்ணாமலையின் மவுசு தெரிந்துவிடும்.கர்நாடக தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அண்ணாமலையின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா? சர்வாதிகாரம் என்பது பா.ஜ.கவில் எப்போதும் கிடையாது. ஆனால், தான் ஒரு சர்வாதிகாரி என்ற பிம்பத்தை அண்ணாமலைதான் பா.ஜ.கவில் உருவாக்கினார். அவர் பேச்சுக்கும், செயலுக்கும் எந்தத் தொடர்பும் இருக்காது. சர்வசாதாரணமாக பொய் சொல்லக்கூடியவர் . ‘மோடிஜி இப்போதுதான் என் லைனில் வந்தார். இதைச் சொன்னார்’என்று இஷ்டத்துக்கு ரீல் விடுவார். கர்நாடக தேர்தல் முடிவுகள் மூலம் அந்த ரீல் அறுந்துவிட்டது.மீண்டும் பா.ஜ.கவில் இணைய முயற்சி செய்தீர்களா அல்லது வேறு கட்சியில் இணையும் திட்டம் இருக்கிறதா?இதுதொடர்பாக நான் பா.ஜ.க மேலிட தலைவர்களை பார்க்கவில்லை. பேசவில்லை. சாதாரண மனிதர்களை நோக்கி அரசியல் இருக்கவேண்டும். தொண்டர்களுக்கு உரிய மரியாதை தர வேண்டும். ஆனால், அண்ணாமலை கமலாலயத்தை காவல் நிலையமாக மாற்றி அங்கு ரவுடிகளை உட்கார வைத்து பஞ்சாயத்து செய்கிறார். அவர் அங்கு இருக்கும் வரை பா.ஜ.க-வில் இணைவது குறித்து யோசிக்கமாட்டேன். எனக்கென்று ஒரு தர்மம் இருக்கிறது. தேர்தல் அரசியலுக்கு கூடிய விரைவில் வருவேன். அது எந்தக் கட்சி என்பதை விரைவில் அறிவிப்பேன்.தமிழகத்தில் மீண்டும் கள்ளச்சாராய சாவு அதிகரித்து வருகிறதே?கள்ளச்சாராயம் தயாரிக்கிறவர்களை மட்டும் அல்ல, குடிப்பவர்களையும் தண்டிக்க வேண்டும். இதற்காக சட்டம் ஒழுங்கு பிரச்னையில் தமிழக அரசு சறுக்கிவிட்டது எனச் சொல்ல முடியாது. மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நன்றாகத்தான் இருக்கிறது.ஸ்டாலின் ஆட்சி திருப்தி அளிக்கிறதா?தமிழக அரசு மற்றும் ஆட்சி நிர்வாகம் ஒரே குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது என்பதை மாற்றிக் காட்ட வேண்டும். அரசு நிர்வாகத்தில் இன்னும்கூட கண்டிப்பு காட்டலாம். ’யார் தவறு செய்தாலும் தண்டனை உண்டு’என்பதை நிரூபிக்க வேண்டும். செப்டம்பர் மாதம் முதல் பெண்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்படும் எனச் சொல்லி இருக்கிறார்கள். மகிழ்ச்சி. ஸ்டாலின் ஆட்சி மிக மோசமாக இல்லை. வெளிப்படை நிர்வாகம் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.ஐ.டி ரெய்டை மத்திய பா.ஜ,க உள்நோக்கத்துடன் நடத்துகிறது என்று சொல்லப்படுவது உண்மையா?வருமானவரித்துறையினர் வெளிப்படையாக எதுவும் சொல்வதில்லை. ஆனால், அண்ணாமலையோ, ‘நான் சொன்னதால்தான் ஐ.டி ரெய்டு நடந்தது’ என்று ரீல் விடுகிறார். வருமான வரித்துறைக்குத் தெரியாமல் எதுவும் நடக்க போவதில்லை. மோடியை பற்றி தவறான புரிதலை அண்ணாமலைதான் ஏற்படுத்துகிறார்.அண்ணாமலை கவர்னராக வாய்ப்பு இருக்கிறதா? அவர் என்ன வேண்டுமானாலும் ஆகட்டும். ஆனால், தயவு செய்து தமிழ்நாட்டுக்கு அவர் வேண்டவே வேண்டாம். அதேசமயம் பொதுத்தேர்தலில் போட்டியிட்டு மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவர் அல்ல அண்ணாமலை. ஆடியோ, வீடியோ கலாசாரத்தை வைத்து பெரிய தலைவராக ஆகிவிடலாம் என்று அவர் நினைத்தால் அது நடக்காது. அண்ணாமலை என்ற பூனைக்கு மோடி, அமித் ஷா ஆகியோர் விரைவில் மணி கட்டுவார்கள்.- கணேஷ்குமார்படங்கள்: ம.செந்தில்நாதன்