- பாபுபடங்கள் : ம.செந்தில்நாதன்ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியில் மனுஷனையேக் கடித்த கதை என்பார்கள். அப்படித்தான் முதலில் ஆளும் கட்சியைக் கடித்து, அப்புறம் கூட்டணிக் கட்சியைக் கடித்து, இப்போது ஆளுநரையே கடித்துவைத்திருக்கிறார் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை. சமீபத்தில் அவர், “ஆளுநர் அரசியல் பேசக் கூடாது, அதற்குதான் நாங்கள் இருக்கிறோம்…” என்று கொளுத்திப்போட்ட விவகாரம் செங்கோட்டை வரை பற்றி எரிகிறது!.இது தொடர்பாக சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவன் அதிகாரி ஒருவரிடம் பேசினோம். ÔÔதமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையிலான மோதல் கடந்த சில மாதங்களாகவே அதிகரித்துவருகிறது. ஆன்லைன் ரம்மி தடை தொடர்பான சட்ட மசோதா, சட்டப்பேரவை புறக்கணிப்பு நிகழ்வு, செந்தில் பாலாஜி விவகாரம் உள்ளிட்ட பல நிகழ்வுகளில் ஆளுநர், தன் அதிகாரத்துக்கு அப்பாற்பட்டு தன்னிச்சையாக அரசியல் செய்வதாக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், கூட்டணி கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.இந்த நிலையில்தான், அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி பதவியில் தொடர்வது தொடர்பான கோப்புக்கு ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டார் ஆளுநர். அதோடு விடாமல் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாகவும் முதலமைச்சருக்கு கடிதம் எழுதி நாட்டையே அதிர வைத்தார். கடும் கொதிப்படைந்த முதல்வர் ஸ்டாலின், ஆளுநரின் அறிவிப்பை ஏற்க மறுத்து செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என்று அறிவித்ததுடன் அதற்கான அரசாணையும் வெளியிட்டார். இது தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தவே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தலின் பேரில் செந்தில் பாலாஜி நீக்கம் தொடர்பான உத்தரவை நிறுத்திவைத்து பிரச்னைக்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்தார் ஆளுநர். இதையடுத்து, ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ள அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது நீதிமன்ற விசாரணை தொடங்க அனுமதிக்குமாறும், நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்குமாறும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆளுநருக்கு கடிதம் எழுதினார். இந்த விவகாரத்திலும் கருத்து மோதல் ஏற்பட்டது.இந்த நிலையில்தான் திடீரென ஆளுநர் ஆர்.என்.ரவி ஜூலை 7-ம் தேதி மாலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். ஜூலை 13ம் தேதி வரை டெல்லியில் தங்கும் அவர், மாநில அரசின் செயல்பாடு குறித்தும் செந்தில் பாலாஜி விவகாரம் குறித்தும் ஆலோசித்து முடிவெடுக்க திட்டமிட்டுள்ளார்ÕÕ என்றனர்.இதற்கிடையே, ஆளுநர் டெல்லி சென்றதன் நோக்கமே வேறு. தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகள் குறித்து ரிப்போர்ட் கொடுக்கவே 6 நாள் பயணமாக சென்றுள்ளார் என்கிறது கமலாலய வட்டாரம்.. சீனியர்கள் கொடுத்த அழுத்தம்!இதுபற்றி பா.ஜ.க. சீனியர் நிர்வாகி ஒருவர் கூறுகையில், ÔÔதமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றது முதல் சீனியர்களை மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. அதேபோல கட்சி நிர்வாகிகளை அரவணைத்து செல்லாமல், காவல்துறை அதிகாரி போலவே செயல்படுகிறார். யாருக்கும் மரியாதை தருவது கிடையாது. ஆகவே, அண்ணாமலையின் அதகளத்திற்கு கடிவாளம் போடுவது யர் என்று கணக்குப் போட்டு வந்தனர்.அதற்குத் தகுந்தாற்போல் தமிழகத்திற்கு செப்டம்பர் மாதம் ஆளுநராக ஆர்.என்.ரவி வந்தார். டெல்லியின் பிரதிநிதியாக வந்த ஆர்.என்.ரவி, அரசு ரீதியான நடவடிக்கையில் மட்டுமே ஈடுபடுவார் என்றிருந்த நிலையில், அரசியல் ரீதியாகவும் செயல்பட ஆரம்பித்தார். இதுதான் சமயம் என்று சீ'னியர் தலைவர்கள், அண்ணாமலையால் தாங்கள் பழிவாங்கப்படுவதாக மனக்குமுறலாக கொட்டினர். அண்ணாமலையை தலைவர் பதவியிலிருந்து மாற்ற வேண்டுமென அவர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தனர்.தலைவராக நியமிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் பூர்த்தியான நிலையில், அண்ணாமலையின் செயல்பாடு எப்படி இருக்கிறது என ஆளுநர் ஆர்.என்.ரவியும் கடந்த 2 மாதங்களாக ரிப்போர்ட் ஒன்றை தயார் செய்து வந்தார். அதன்படி தொழிலதிபர்கள், முக்கிய அரசியல் பிரமுகர்கள், அரசியல் விமர்சகர்கள், ஆதினங்கள், மடாதிபதிகள், மூத்த பத்திரிகையாளர்கள் என பல தரப்பினருக்கும் ராஜ்பவன் சார்பில் தனித்தனியே அழைப்பு விடுக்கப்பட்டு, ஆர்.என்.ரவி சந்தித்தார். இந்த சந்திப்பின் போது தமிழக அரசியல் களம் தொடர்பாக பல்வேறு விஷயங்களை பேசியவர், அண்ணாமலை குறித்துதான் அதிகம் விசாரித்தார்.அதில் முக்கியமாக மூன்று கேள்விகளை முன்வைத்தார். Ôபா.ஜ.க மாநிலத் தலைவராக அண்ணாமலையின் செயல்பாடு எப்படி?Õ, Ôஅண்ணாமலை செய்யும் அரசியல் தமிழகத்தில் எடுபடுகிறதா?Õ, Ôதலைவர் ஆன பிறகு பா.ஜ.க.வின் கட்டமைப்பை அண்ணாமலை வளர்த்திருக்கிறாரா?Õ.இந்த மூன்று கேள்விக்கும் பெரும்பான்மையானவர்கள் நெகட்டிவ்வான பதிலையே தந்துள்ளனர். அதாவது, ’அண்ணாமலையின் செயல்பாடு சரியில்லை, தமிழகத்தில் பா.ஜ.க.வை வளர்ப்பதைவிட தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதில் முக்கியத்துவம் அளிக்கிறார், மீடியாக்களிடம் தொடர்ந்து அண்ணாமலை அநாகரிகமாக நடந்துகொள்கிறார் என்கிறரீதியிலான பதில்களே கிடைத்தன.இப்படியான சூழலில்தான் கிளம்பியது செந்தில் பாலாஜி விவகாரம். இதில் ஆளுநர் மேற்கொண்ட நடவடிக்கைகளால், தனக்கு அரசியல் வெளிச்சம் கிடைக்காமல் போனதை அண்ணாமலையால் ஜீரணிக்கவே முடியவில்லை. இந்த நிலையில்தான் தன்னைப் பற்றி ஆளுநர் ஆர்.என்.ரவி எடுத்து வரும் ரிப்போர்ட் குறித்து தெரிந்துகொண்ட அண்ணாமலை, ஜூலை 6-ம் தேதி விழுப்புரம் நிகழ்ச்சியில், ‘ஆளுநர் அரசியல் பேசக்கூடாது. இதில் நான் தெளிவாக இருக்கிறேன். தி.மு.க தவறு செய்வதை பா.ஜ.க விமர்சிப்பது வேறு, ஆளுநர் விமர்சிப்பது வேறு. என்னைப் போல பேச ஆரம்பித்தால், ஆளுநர் பதவிக்கு மாண்பு இல்லாமல் போய்விடும். ஆளுங்கட்சி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி. மக்கள் மன்றத்தில் விமர்சிக்க எங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆளுநர் விமர்சித்தால் மரபு சரியாக இருக்காது’ என்றெல்லாம் பேசி ஆளுநர் மாளிகையை அதிர வைத்தார்.இதனால்தான் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் சனாதனம், ஆன்மிகம் பேசும் ஆளுநர் ஜூலை 7-ம் தேதி சென்னை சைதாப்பேட்டையில் நடந்த மீன்வள பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டும் எந்த உரையும் நிகழ்த்தாமல் நழுவிச் சென்றுவிட்டார். தன்னை சீண்டிய அண்ணாமலைக்கு சரியான பாடம் புகட்ட வேண்டுமென முடிவெடுத்த ஆளுநர், தான் தயாரித்து வைத்திருந்த ரிப்போர்ட்டை எடுத்துக்கொண்டு அன்று மாலையே டெல்லி கிளம்பினார்..அமித் ஷாவுடன் 50 நிமிடம்மறுநாள் ஜூலை 8-ம் தேதி உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். சுமார் 50 நிமிடங்கள் வரை நீடித்த இந்த சந்திப்பின்போது, செந்தில் பாலாஜி விவகாரம், தி.மு.க. அரசு செயல்பாடுகள், அ.தி.மு.க. மாஜி அமைச்சர்கள் மீது வழக்கு தொடர அனுமதி கேட்டு தமிழக அரசு கடிதம் எழுதியிருப்பது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து சுமார் 30 நிமிடம் வரை ஆலோசனை நடத்தப்பட்டது.அடுத்த 20 நிமிடம் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை குறித்த ரிப்போர்ட் தொடர்பாக அமித் ஷாவிடம் ஆளுநர் விளக்கியுள்ளார். இதை எல்லாம் அமித் ஷா அமைதியாக கேட்டுக்கொண்டார். ஆந்திரா, தெலங்கானா, ஜார்கண்ட் மற்றும் பஞ்சாப் மாநில பா.ஜ.க. தலைவர்கள் மாற்றப்பட்டது போல, தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் பதவிக்கு வேறு ஒரு நியமனம் செய்ய வேண்டும் என்றும் அப்போது ஆளுநர் வலியுறுத்தியிருக்கிறார். அதற்கு அமித் ஷா ‘நோ, இப்போது அவசரப்பட வேண்டாம், பேக் ஃபயராகிவிடும்’ என்று சமாதானம் செய்து அனுப்பியிருக்கிறார்.அமித் ஷாவுடன் ஆலோசனை நடத்திவிட்டு வெளியே வந்த ஆளுநர், அதற்குப் பிறகு தனக்கு நெருக்கமான சில அதிகாரிகளிடம் ஆவேசப்பட்டிருக்கிறார். அப்போது, Ôமத்திய புலனாய்வு அமைப்பில் பணிபுரிந்த காலத்தில், சுரங்க மாஃபியாக்கள் உட்பட ஒழுங்கமைக்கப்பட்ட கிரிமினல் கும்பல்களுக்கு எதிராக பல ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை எடுத்தவன். ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மற்றும் மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக இயல்பைக் கொண்டுவந்தவன். நாடு முழுவது 26 இன்டெலிஜென்ட்ஸ் குழுக்களைக் கையாண்டவன். ஜாயின் இன்டெலிஜென்ட்ஸ் கமிட்டியின் சேர்மனாக இருந்திருக்கிறேன். ஆஃப்ட்ரால் எஸ்.பி.யாக இருந்த அண்ணாமலை எனக்கு எதிராக அரசியல் செய்கிறாரா, அதையும் ஒரு கை பார்த்துவிடுகிறேன்’ என கோபாவேசத்தை வெளிப்படுத்திவிட்டு யுள்ளார்ÕÕ என்றார்.ஆளுநருக்கும் அண்ணாமலைக்குமான மோதல் குறித்து அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேட்டோம். “ஆளுநர், அண்ணாமலை மோதல் தொடர்பாக நீங்கள் கேள்விப்பட்ட விஷயத்தைதான் நானும் கேள்விப்பட்டேன். ஆனால், இந்த விவகாரத்தில் நான் எந்த கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை” என்றார் சிம்பிளாக.தொடர்ந்து டெல்லியில் ஜூலை 13 வரை டெல்லியில் இருக்கும் ஆளுநர் சில முக்கிய அதிகாரிகளையும் சந்தித்து ஆலோசனை நடத்தவிருக்கிறார்.ஆக, ராஜ்பவனுக்கும் கமலாலயத்திற்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் யாருடைய பதவிக்கு வேட்டு வைக்கப் போகிறது என பொறுத்திருந்து பார்ப்போம்!