சமீப காலமாக பள்ளி சிறார்களின் போக்கு அச்சமூட்டுவதாக உள்ளது. ஒருகாலத்தில் பெற்றோருக்கும் ஆசிரியருக்கும் மரியாதையும் மதிப்பும் அளித்த மாணவ சமூகம், இன்று தவறு செய்வதே ஹீரோயிசம் என கஞ்சா, காதல், காமம் கலந்துகட்டி விளையாடத் தொடங்கியிருக்கிறது. அதிலும், தலைநகரில் அரங்கேறிய அடுத்தடுத்த சம்பவங்களால் கதிகலங்கிப் போயிருக்கிறார்கள் பெற்றோர். பாதை மாறிய போதை மாணவன்! திருவொற்றியூர், விம்கோ நகரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த சம்பவம் இது. ஆசிரியர் தினமான செப்டம்பர் 5-ம் தேதி, 12-ம் வகுப்புக்கான 2ம்கட்ட பருவத் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது. வகுப்பறையில் ஒரு மாணவர் தேர்வு எழுதாமல் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அந்த மாணவரை ஆசிரியர் சேகர் தட்டி எழுப்பியுள்ளார். தடுமாறியபடியே எழுந்த மாணவரின் சட்டைப் பையில் இருந்து தடை செய்யப்பட்ட போதைப் பொருள் கீழே விழுந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர், மாணவரைக் கண்டித்துள்ளார். அந்தப் பொருளைக் கொடுக்குமாறு ஆசிரியரிடம் தகராறு செய்தவர், ஒருகட்டத்தில் ஆசிரியரின் முகத்தில் சரமாரியாக தாக்கியுள்ளார். ஆசிரியரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த சக ஆசிரியர்கள், சேகரை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவரை கைது செய்த போலீஸார், அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர். பள்ளி மாணவியின் பருவக்கோளாறு! சென்னை முகப்பேரில் உள்ள தனியார் பள்ளி அது. பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர், மன்னார்குடியை சேர்ந்த அருண் என்பவரைக் காதலித்துள்ளார். இதனை உறவினர்கள் சிலர் பார்த்துவிட்டு, பெற்றோரிடம் கூறியுள்ளனர். அவர்களும், மகளைக் கண்டித்துள்ளனர். ஆனாலும் இருவரும் ஊர் சுற்றுவதை நிறுத்தவில்லை. இந்தநிலையில், தன் மகளை பாலியல்ரீதியாக தொந்தரவு செய்ததாக நொளம்பூர் காவல்நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளிக்க, ஸ்டேஷனுக்கு வரவழைக்கப்பட்டார், அருண். இதையடுத்து, நடந்த சம்பவங்களை நம்மிடம் விவரித்தார், நொளம்பூர் காவல்நிலைய அதிகாரி ஒருவர். “மாணவி அழைத்தன் பேரில்தான் அருண் அவரின் வீட்டுக்குச் சென்றுள்ளார். முன்னதாக, பெற்றோர், பாட்டி ஆகிய மூவருக்கும் பாலில் தூக்க மாத்திரையைக் கலந்துகொடுத்து தூங்க வைத்திருக்கிறார், மாணவி. பின்னர், காதலன் அருணை வீட்டுக்கு வரவழைத்து உல்லாசமாக இருந்திருக்கிறார். மாணவிக்கு செல்போன் உள்ளிட்ட பல பொருள்களை அருண் வாங்கிக் கொடுத்திருக்கிறார். இருப்பினும் 15 வயது மாணவியை ஏமாற்றியதற்காக அருண் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளோம்” என்றார். இன்ஸ்டா காதல்...மிரட்டிய காதலன்! சென்னை கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் பெற்ற மகள் மீதே நகை திருடியதாக பெற்றோர் புகார் அளித்த பின்னணி கதை இது. 11-ம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் வேல்முருகன் என்ற இன்ஜினீயர் பழக்கமானார். இது நாளடைவில் காதலாக மாற, காதல் மயக்கத்தில் இருந்த மாணவியை வேல்முருகன் தவறாக பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார். இதன்பிறகு நடந்த சம்பவங்களை நம்மிடம் விவரித்தார், காவல்நிலைய பெண் அதிகாரி ஒருவர், `` ஒருகட்டத்தில் மாணவியை மிரட்டி நகை, பணம் வாங்கியுள்ளார். நாங்களும் வேல்முருகனை அழைத்து விசாரித்தோம். ஆரம்பத்தில் அவர் எதையும் ஒப்புக்கொள்ளவில்லை. மாணவியின் செல்போனையும் வேல்முருகனின் செல்போனையும் சைபர் கிரைம் போலீஸாரின் உதவியோடு ஆய்வு செய்தோம். அதில், மாணவி தனது ஆபாச வீடியோக்கள், போட்டோக்களை வேல்முருகனுக்கு அனுப்பியிருப்பது தெரியவந்தது. கூடவே, ஆன்லைன் சூதாட்டத்தையும் வேல்முருகன் ஆடி வந்திருக்கிறார். அதற்குப் பணம் தேவைப்பட்டதால், மாணவியின் ஆபாசப் படங்களைக் காட்டி மிரட்டியிருக்கிறார். மாணவியும் வீட்டுக்குத் தெரியாமல் பணத்தை அனுப்பியிருக்கிறார். பணம் இல்லாததால், வீட்டிலிருந்த நகைகளைத் திருடி அதை குரியர் மூலம் அனுப்பிவைத்திருக்கிறார். அந்தவகையில் 12 சவரன் நகைகளை வேல்முருகன் பறித்துள்ளது உறுதியானது. இதையடுத்து, வேல்முருகனை கைதுசெய்து புழல் சிறையில் அடைத்தோம்" என்றார். ``படிக்க வேண்டிய வயதில் ஏன் இவ்வளவு தடுமாற்றம்?" என அரசு மனநல மருத்துவர் பூர்ண சந்திரிகாவிடம் கேட்டோம். “மாணவர்களின் திறனை மேம்படுத்தும் நிகழ்வுகளில் ஆர்வத்தைக் கூட்ட வேண்டும். அதேபோன்று, மாணவர்களுடன் பெற்றோர் சகஜமாக பழகவேண்டும். தவிர, மாணவர்கள் பள்ளிகளில் எப்படி இருக்கிறார்கள் என்பதை ஆசிரியர், பெற்றோர் ஆலோசனை கூட்டங்களில் பேசப்பட வேண்டும். சில வழிமுறைகளை பின்பற்றினால் தவறான வழிகளில் செல்வதைத் தடுக்க முடியும்” என்கிறார். பள்ளிகளின் அருகில் போதைப் பொருள் நடமாட்டத்தைக் கண்டறியுமாறு அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும், பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. கூடவே, மாணவர்களின் பற்களில் போதையால் ஏற்படும் கறை உள்ளதா என்பதைக் கண்டறிய வேண்டும் எனவும் தெரிவிததுள்ளது. வாரத்தின் முதல் நாள் காவல் ஆய்வாளர், உளவியல் நிபுணர் மூலம் தேவையான ஆலோசனைகளை வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. மனங்களை மாற்றட்டும், மனநல ஆலோசனைகள்! - அரியன் பாபு