அ.தி.மு.க ஆட்சியில் இருந்தபோதே, மத்திய அரசு கொண்டுவந்த சிறுபான்மையினர் தொடர்பான சட்டங்களை விமர்சிக்கத் தயங்காதவர், முன்னாள் எம்.பி அன்வர்ராஜா. இதனாலேயே கட்சி நீக்க நடவடிக்கைக்கு ஆளானவர், ஓராண்டுக்குப் பிறகு தாய்க்கழகத்தில் ஐக்கியமாகியிருக்கிறார். அவரது பேச்சில் பா.ஜ.க வுக்கு எதிரான கொதிநிலையும் குறையவில்லை. இனி ஓவர் டு அன்வர் ராஜா.அ.தி.மு.க.வில் மீண்டும் உங்களுக்கு உரிய மரியாதை கிடைக்குமா?எல்லாமே ஒருவித நம்பிக்கைதான். கட்சியில் இருப்பவர்களை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பது தலைமைக்கு தெரியும். எனவே, அதற்கேற்றபடி என்னைப் பயன்படுத்திக்கொள்வார்கள். கட்சிக்கு வெளியே இருந்த இந்த நாட்களில், எம்.ஜி.ஆர் தொடங்கிய அ.தி.மு.க என்ற இயக்கத்தில் இருந்து நான் விலகியிருந்ததாக எந்த உணர்வும் இல்லை. வழக்கம்போல், என் வேலையைப் பார்த்துக்கொண்டுதான் இருந்தேன்.’மைனாரிட்டி’ வாக்குகளை உங்களால் பா.ஜ.க.வுக்கு பெற்றுதரமுடியுமா?அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க இருக்கிறது. நான் வசிக்கும் எனது தொகுதியில் பா.ஜ.க போட்டியிட்டால் தேர்தல் வேலை பார்ப்பேன். சிறுபான்மையின மக்களின் வாக்குகளையும் பெற்று தருவேன். இது எனது அரசியல் கடமை. இதுதவிர, அ.தி.மு.க கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் எங்கு தேர்தல் வேலை பார்க்கச் சொன்னாலும் அதில் எந்தவிதக் குறைவும் இல்லாமல் செய்வேன்.அப்படியானால், சிறுபான்மையினர் பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பார்கள் என்கிறீர்களா?யார் பா.ஜ.க.வை விரும்புகிறார்கள். யார் பா.ஜ.க.வை ஒதுக்குகிறார்கள் என்பதை இப்போது சொல்ல முடியாது. தேர்தல் முடிந்த பிறகு பா.ஜ.க.வுக்கு விழுகிற வாக்குகளை வைத்துதான் சிறுபான்மை மக்களின் மனநிலையை சொல்லமுடியும். தற்போதைய நிலவரத்தை பார்த்தால் சிறுபான்மை மக்கள் யாரும் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்கும் மனநிலையில் இல்லை. இதையும் தாண்டி, பின்னால் என்ன நடக்கப் போகிறது? என்பதையும் சொல்ல முடியாது.ஸ்டாலின் தலைமையிலான அரசின் செயல்பாட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்?வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் மிகவும் பின்தங்கியிருக்கிறது. விலைவாசி உயர்வுக்கு மிகப்பெரிய காரணமாக தி.மு.க அரசு இருக்கிறது. சொத்துவரி உட்பட அனைத்து வரிகளையும் உயர்த்திவிட்டார்கள். மின்கட்டணத்தை மிக அதிகமாக உயர்த்திவிட்டார்கள். வரிகளை உயர்த்தினாலே அனைத்து பொருட்களின் விலையும் உயரும். சாதாரண மக்களை மட்டுமின்றி படித்தவர்களையும் ஏமாற்றிவிட்டார்கள். கண்ணுக்கு தெரிந்து நிறைய ஊழல்களும் முறைகேடுகளும் நடக்கின்றன.எடப்பாடியின் மதுரை மாநாடு எதற்காக?’மாநாடு’ என்பது கட்சியின் பலம். கட்சியின் கொள்கைகள் மீது நாங்கள் வைத்திருக்கின்ற பிடிமானம். இதுதொடர்பாக மக்களுக்கு சில செய்திகளை தெரிவிப்போம். கொள்கைகளைப் புதுப்பித்தல் தொடர்பாக விவாதிக்கப்படும். இன்றைக்கு அ.தி.மு.க எப்படி இருக்கிறது என்பதை பொதுமக்களுக்குத் தெரிவிப்போம். 25 வருடங்களுக்கு பிறகு நடக்கும் கட்சியின் மாநாடு என்பதால் தொண்டர்களுக்கும் மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி ‘வொர்க் அவுட்’ ஆகுமா?அ.தி.மு.க மற்றும் பா.ஜ. க கூட்டணி ‘வொர்க் அவுட்’ ஆவது மிகவும் கஷ்டம்தான். நாம் என்னதான் கூட்டணி அமைத்தாலும் மக்கள் ஒரு கூட்டணியை அமைத்துவிடுவார்கள். எனவே, என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம். அம்மாவை (ஜெயலலிதா) மிகவும் பேசி இருக்கிறார் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை. `ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஒரே முதல்வர் ஜெயலலிதாதான்' என அண்ணாமலை சொல்கிறார். அது மட்டுமல்ல. அம்மாவைவிட எனது மனைவி 100 மடங்கு புத்திசாலி. இப்படி எல்லாம் பேசிவிட்ட பிறகு அ.தி.மு.க வாக்குகள் எப்படி பா.ஜ.கவுக்கு விழும்?தேர்தலின்போது மக்கள் இதை மறந்துவிடுவார்களே?தேர்தல் நேரத்தில் நாங்கள் இதை நினைத்துப் பார்க்காவிட்டால்கூட எதிர்க்கட்சியினர் சுட்டிக்காட்டத்தானே செய்வார்கள். இப்படிப் பல விஷயங்கள் இருக்கின்றன. கூட்டணி ஜெயிக்க வேண்டும் என்றால் அ.தி.மு.க வாக்குகள் பா.ஜ.க.வுக்கு ‘ட்ரான்ஸ்பர்’ ஆகவேண்டும். அப்படி விழுந்தால்தானே ஜெயிக்க முடியும்? பா.ஜ.க.வுக்கு தமிழகத்தில் பலம் எதுவும் இல்லை. ஈரோடு கிழக்குத் தேர்தலின்போதே கூட்டணியில் நிறைய குழப்பங்கள் வந்தன. தேர்தலில் மைனாரிட்டிகள் வாக்குகள் கிடைக்காது என்பதற்காக அ.தி.மு.க.வினர் தனித்துச் சென்று வாக்கு சேகரித்தனர். நிலைமை இப்படி இருக்கும்போது இரண்டு பேரும் சேர்ந்து வாக்கு கேட்க முடியும்? இதை மாற்ற அதிக முயற்சிகளை எடுக்க வேண்டும்.ஓ.பி.எஸ் மீண்டும் அ.தி.மு.கவில் சேர்க்கப்படுவாரா?2024ல் நடக்கப்போகும் நாடாளுமன்ற தேர்தல் வரை எதையும் சொல்ல முடியாது. தேர்தல் முடிந்த பிறகு பல அரசியல் மாற்றங்கள் நடக்கும். அதற்குப் பிறகுதான் இதற்குத் தெளிவான பதிலை சொல்ல முடியும்.’மைனாரிட்டிகள்’ குறித்து சீமானின் விமர்சனம் சரியா?ஒரு கட்சியின் தலைவர் சீமான். அவர் எல்லோருக்கும் பொதுவாக இருக்க வேண்டும். ஒரு சாதாரண சின்ன விஷயத்தைக்கூட தெரிந்து கொள்ளாதவர் வருங்காலத்தில் ஒரு கட்சிக்கு எப்படி தலைமை ஏற்று நடத்துவார்? அவர் தெளிவடையும் வரை அவர் கட்சிக்குள் குழப்பங்களும் பிரச்னைகளும் வரத்தான் செய்யும்.ராமநாதபுரத்தில் மீண்டும் போட்டியிடுவீர்களா?அதைக் கட்சியின் பொதுச்செயலாளர்தான் முடிவு செய்யவேண்டும். ராமநாதபுரத்தில் போட்டியிட எனக்கு தலைமை வாய்ப்பு கொடுத்தால் தயங்காமல் நிற்பேன். வெற்றிவாய்ப்பு என்பது அதற்குப் பிறகுதான். வேறு யாரையாவது நிறுத்தி ’இவருக்கு தேர்தல் வேலை பாருங்கள்’ என தலைமை சொன்னாலும் அதையும் ஏற்றுக்கொண்டு கட்சிப்பணி ஆற்ற தயாராக இருக்கிறேன். - கணேஷ்குமார் புகைப்படங்கள்: ம.செந்தில்நாதன்