Reporter
அடேங்கப்பா ஐந்து நட்சத்திர மோசடி! - நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?
ஆலந்தூரில் ஒரு ஹோட்டலில் 2018-19 நிதியாண்டுக்கு முன்புவரை அரையாண்டு வரியாக 57 லட்சத்து 41 ஆயிரத்து 410 ஆக இருந்த சொத்துவரி, அதன்பின்னர் 19 லட்சத்து 43 ஆயிரத்து 25 ரூபாயாக அதாவது, 66 சதவீதம் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது. அந்த ஹோட்டலில் 101 அறைகள் உள்ள நிலையில், 75 அறைகளாகக் குறைத்துக் காட்டப்பட்டுள்ளன.