-நந்தன் மாசிலாமணிபுதிய நிருபர் கொடுத்த பென் டிரைவை கணினியில் செருகிய சில நிமிடங்களில் யாரோ ஒருவனின் உருவம் தோன்ற அந்தப் புலனாய்வுப் பத்திரிகையின் ஆசிரியர் உட்பட அத்தனை பேரும் அடென்ஷன் ஆனார்கள். ஆனால், அவர்கள் எதிர்பார்த்ததுபோல் விறுவிறுப்பாக எதுவும் நடக்கவில்லை. சுமார் அரைமணி நேரம் சென்னை அமெரிக்க தூதரகத்தின் வாசலில் நின்று அப்படியும் இப்படியும் தலையைத் திருப்பிப் பார்க்கிறான். சுமார் அரைமணி நேரத்திற்குப் பிறகு தூதரகத்தின் உள்ளே செல்கிறான், அவன். அவ்வளவுதான். இந்த உப்பு சப்பில்லாத வீடியோவைப் பார்த்த அவர்களுக்கு எரிச்சல்தான் வந்தது. “யாருய்யா இவன்? பார்த்தா, மங்கோலியன் மாதிரி இருக்கான். எதுக்காக இவனை வீடியோ எடுத்தே? தினமும் ஆயிரம் பேராவது கொளுத்துற வெயில்ல எம்பஸி வாசல்ல விசாவுக்காக நிக்கிறாங்க. இதுல வாசகர்களுக்கு என்ன சுவாரஸ்யம் இருக்கு? “ ஆசிரியர் கோபத்தின் உச்சிக்கே போய்க் கேட்டார்..“ தெரியல சார், ஆனா அவன் முகத் தோற்றம் வித்தியாசமா..!”புது ரிப்போர்ட்டர் ஏதோ சொல்ல முயற்சிக்க, இடைமறித்தார், துணை ஆசிரியர்“சார், மார்ச் மாசம் ஹாங்காங்ல சீனாவுக்கு எதிரா ஒரு போராட்டம் நடந்துச்சு. அதுல கலந்துகிட்ட கும்பல் படத்தை ஏதோ ஒரு வலைதளத்துல போட்டிருந்தாங்க. இவன் முகத்தையும் அதுல பார்த்தமாதிரி இருக்கு. அவனுக்கும் அமெரிக்காவுக்கும் என்ன தொடர்புன்னு தெரியலை. வலைதளத்துல தேடி, ஏதாவது ஒரு முடிச்சுப் போட முடியுமான்னு பார்க்கறேன்”என்றார். “அதுல ஒரு நடிகையையும் சேர்த்து முடிச்சுப் போடமுடியுமான்னு பாருங்க!” என்றார், உதவி ஆசிரியர் ஒருவர். “ஒண்ணு என்ன, மூணு நடிகைகளை கோத்துவிடப் பார்க்கறேன் ” சிரித்தபடி கிண்டலாகச் சொன்னார், துணை ஆசிரியர்..என்னவோ சொல்றீங்க… ஆனா, கடைசியில நாம ஜோக்கரா மாறிடாமப் பார்த்துக்குங்க. எதுவானாலும் பார்த்து செய்யுங்க. அது வரைக்கும் அந்த நான்கெழுத்து நடிகை ஐந்தெழுத்து இயக்குநரான கணவரை டைவர்ஸ் செய்யக் காரணம், இளம் வயதைக் கடந்தும் திருமணமாகாத மூன்றெழுத்து நடிகர்தான் என்று இந்த இதழுக்கு கவர் ஸ்டோரியை ரெடி பண்ணுங்கள்” என்றார், செய்தி ஆசிரியர். மீட்டிங் கலைந்து எல்லோரும் அவரவர் இருப்பிடம் செல்ல, துணை ஆசிரியர் கணினியில் வலைதள இணைப்பில் இஸ்லாமிய நாடுகள், காஷ்மீர் கலவரம், பயங்கரவாத இயக்கங்கள், மாவோயிஸ்ட் என்று பலவாறு தேடி பார்த்தார். ஊஹூம். சென்னை அமெரிக்கத் தூதரகத்திற்கு வந்த அவனைப் பற்றி எந்தத் தகவலும் சிக்கவில்லை. ‘சே… எதோ ஒரு கலவரச் செய்தியில்தான் பார்த்த முகமாகத் தெரிகிறது. என்றைக்கு எதில் பார்த்தோம் என்றுமட்டும் நினைவுக்கு வரமாட்டேன் என்கிறது. அவசரப்பட்டு சொல்லிவிட்டோம் என்று தோன்றுகிறது’ மனதுக்குள் சலிப்போடு கூகுளில் தேடிக்கொண்டிருந்த அவரது பார்வையில் அந்தப்படம் தட்டுப்பட, சட்டென்று உயிர்த்தெழுந்தது அவரது உற்சாகம். இதோ இதோ, இஸ்லாமிய நாட்டில் நடந்த ஏதோ ஒரு தாக்குதலின்போது, அந்த நபர் தப்பித்து ஓடுகிறார். அந்த விபத்து தற்செயலாகத் தோன்றவில்லை. ஒன்று, அந்த விபத்தை ஏற்படுத்தியவர் அவராக இருக்க வேண்டும். அல்லது அந்த விபத்து அவருக்கு வைக்கப்பட்ட குறியாக இருக்க வேண்டும். அதில் இருந்து தப்பி ஓடுகிறார். சுவாரஸ்யம் தொற்றிக் கொள்ள, அந்தச் சிறு புள்ளியை வைத்துக்கொண்டு, மேலும் விவரங்களைத் தேடத்தொடங்கினார்..அந்தச் செய்தி வெளியான மாதம், அந்த நாள் என்று தேடத்தேட பல விஷயங்கள் தெரியவந்தன. குறிப்பாக, இரண்டு இடங்களில் அந்த நபருக்குக் குறிவைக்கப்பட்டு அவன் தப்பித்து ஓடுவது தெரியவந்தது. ஆனால், அவன் யார்? அவனுக்குக் குறிவைத்தவர்கள் யார்? என்ன காரணம் என்றெல்லாம் எதுவும் தெரியவில்லை. முக்கியமாக அவன் எதற்காக அமெரிக்க துணை தூதரகத்திற்குச் சென்றிருக்கிறான்? என்றெல்லாம் எந்த விவரமும் கிடைக்கவில்லை. இஸ்லாமிய நாடுகளில் உயிருக்குக் குறிவைக்கப்பட்ட ஒருவன், அமெரிக்க துணைத்தூதரகத்திற்கு வந்திருக்கிறான். ஏன்? எதற்காக? யார் அவன்? அதை எப்படிப் பரபரப்புச் செய்தியாக்குவது? அதன்மூலம் பத்திரிகை விற்பனையை எப்படிக் கூட்டுவது? மூளை வேகமாக சிந்திக்க, வலைதளத்தில் மும்முரமாகத் தேடத்தொடங்கினார்..தைவானில் இருக்கும் அந்த நேஷனல் நிறுவனம் உலகம் முழுவதற்கும் பொருட்களை அனுப்பி வைக்கிறது. தைவான் ஓர் ஆண்டில் நானூறு பில்லியன் அமெரிக்கா டாலருக்கும் அதிகமாக ஏற்றுமதி செய்கிறது. சீனா, அமெரிக்கா, ஹாங்காங், ஜப்பான், சிங்கப்பூர், கொரியா, வியட்நாம் மற்றும் மலேசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. இதை தவிர ஐம்பது கோடி முதல் ஐயாயிரம் கோடி ரூபாய் மதிப்பு வரை எலக்ட்ரானிக்ஸ், தகவல் தொடர்பு சாதனங்கள், ஆடியோ வீடியோ கருவிகள், உலோகங்கள், பிளாஸ்டிக், ரப்பர், இயந்திரங்கள் என பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. இவர்கள் வால்மார்ட்டில் பொருட்கள் கொடுத்ததே ஒரு விபத்துதான். ஒரு சப்ளையர் தன்னால் அனுப்ப இயலாத ஒரு பொருளை இவர்களை அனுப்பச் சொல்லி, லிங்க் அனுப்பி வைத்தார். இவர்களும் அதை அனுப்பினார்கள். அன்று அப்போது அதை இவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் அதுதான், இவர்கள் மட்டுமல்ல, தைவான் பொருளாதாரமும் முன்னுக்கு வரக் காரணமாக அமைந்தது. வால்மார்ட்டில் ஒரு விசேஷம் என்னவென்றால் யார் வேண்டுமானாலும் பொருட்களை சப்ளை செய்யலாம். அவர்களிடத்தில் நாற்பத்தாறு பக்க புத்தகம் ஒன்று கொடுக்கப்படும். அதில் அவர்கள் துறை வாரியாக நூறு கேள்விகள் கேட்பார்கள்..அவர்கள் ஒரு சில்லறை வியாபாரத் தொடர்பு தள லிங்கை அனுப்புவார்கள். அதைப் பார்த்து சப்ளை செய்பவர்கள், தங்கள் பொருட்களின் தரம், விலை, தங்களைப் போலவே சப்ளை செய்பவர்களின் விலை, தரம், எங்கு விற்பனையாகிறது என்றெல்லாம் தெரிந்து கொள்ளலாம். சப்ளை செய்பவர்கள் விலையை ஏற்றவோ தரத்தைக் குறைக்கவோ முடியாது. வாங்குபவர்களுக்கும், சப்ளை செய்பவர்களுக்கும் மெலிதான லாபத்தில் தான் இயங்குகிறது என்று வால்மார்ட் சொல்கிறது. அன்றையதினம், இவர்களிடம் பொருட்களை வாங்கும் சீன நிறுவனம் ஒன்றிலிருந்து அழைப்பு வந்தது. “ஒரு முக்கியமான தகவல்… அமெரிக்காவும் சீனாவும் முட்டிக்கொள்ளும் அபாயம் ஏற்பட்டாலும் ஏற்படலாம். எனவே வியாபாரத்தைப் பார்த்துச் செய்யவும்!” தகவலைக் கேட்டதும் வால் மார்ட் முழுக்க ஒருவித அதிர்ச்சியும் பரபரப்பும் தொற்றிக்கொண்டது. வால்மார்ட், தங்கள் தயாரிப்புகளை மட்டும் ஏற்றுமதி செய்வது இல்லை, பலரிடம் வாங்கி தரம் சரிபார்த்து பின் ஏற்றுமதி செய்கிறார்கள். இந்த வகையில் இவர்களை நம்பி பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் இருக்கிறர்கள். இப்போது ஒரு பிரச்னை என்றால், பல வகையிலிலும் பலருக்கு பாதிப்பு வரும். பொருட்களை வாங்குவது, பணம் தருவது எல்லாமே சிக்கல் ஆகும். எனவே பலமுறை யோசித்துவிட்டு, என்று தாங்களுக்கு மிகவும் வேண்டிய சப்ளையரை அழைத்தார்கள்..1985ம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் தலைமைப் பதவிக்கு வந்தார், கோர்பச்சேவ். வந்ததுமே நாட்டின் இரும்புத் திரை கட்டுப்பாடுகளை நீக்கி நாட்டை உலகுக்குத் திறந்து விட்டார். ஆப்கானில் இருந்து சோவியத் படை விலகிக்கொள்ளும் என்று அறிவித்தார். ஆனால், இதுவே சோவியத் யூனியன் உடையவும் காரணாமாயிற்று. ஆப்கான் குழுக்களுடன் சண்டை வந்தது. சோவியத் யூனியனும் உடைந்தது. சோவியத் விலகியவுடன் அமெரிக்காவும் விலகி விட்டது. அதுவரை நடந்த போரில் குறைந்தது இருபது லட்சம் பேர் இறந்திருப்பார்கள். சோவியத் நாட்டுக்கும் மட்டுமல்ல… அதில் சம்பந்தப்பட்ட நாடுகளுக்கும் பொருள், ராணுவச் சேதாரம் எக்கச்சக்கம். பாகிஸ்தானை தவிர. போர்ப் படை தளபதிகள் ஆப்கானில் இருந்து விலகி தங்களின் சொந்த நாட்டிற்குச் சென்றபோது தாங்கள் கற்ற போர் முறைகளை வைத்து சர்வ தேச ஜிகாதுக்குத் தயாரானார்கள். அவர்களுள் பின் லேடனும் ஒருவர். 1990ம் ஆண்டு குவைத் மீது ஈராக் படையெடுத்தது. அதற்கான முக்கியக் காரணம், சதாம் உசேன் சவூதியில் உள்ள எண்ணெய்க் கிணறுகளை இலக்கு வைத்திருப்பதுதான் என்று கூறப்படவே, சவூதியில் பெரும் அதிர்வு ஏற்பட்டது. (பார்வை விரியும்)