-ரய்யான் பாபு, படங்கள் : ம.செந்தில்நாதன்எப்படியாவது அ.தி.மு.க.வில் சேர்ந்துவிட வேண்டுமென சசிகலா காய்நகர்த்தி வரும் நிலையில், அவரின் அரசியல் ஆட்டத்தைக் கலைக்கும் வேலையில் தினகரன் ஈடுபட்டுள்ளதாக வெளியான தகவல், சசிகலா வட்டாரத்தின் லேட்டஸ்ட் ஷாக்..என்ன நடக்கிறது அ.ம.மு.க.வில்? அக்கட்சியின் நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். ``2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல் என இரண்டிலும் சிறிய அளவில் கூட்டணி அமைத்து அ.ம.மு.க. போட்டியிட்டது. ஆனால், இந்த இரு தேர்தல்களிலும் வெற்றி பெறமுடியவில்லை. இருந்தாலும், நாடாளுமன்றத் தேர்தலில் 5.38 சதவிகித வாக்குகளை அ.ம.மு.க. பெற்றது.சட்டமன்றத் தேர்தலில் 2.4 சதவிகித வாக்குகளைப் பெற்றது. அடுத்துவந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 102 வார்டுகளில் வெற்றிபெற்றது. ஆனாலும், அ.ம.மு.க.வில் இருந்து பலர் கட்சியைவிட்டு விலகிச் சென்றனர். இதனால், `2019 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. அல்லது காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பது' என தினகரன் முடிவெடுத்தார்.`அ.ம.மு.க. பிரிக்கும் வாக்குகள் அனைத்தும் அ.தி.மு.க.வின் முக்குலத்தோர் வாக்குகள்தான்' என்பதை பா.ஜ.க. தலைமையும் உணரத் தொடங்கியது. தி.மு.க-காங்கிரஸ் எனும் வலுவான கூட்டணியை எதிர்க்க வேண்டுமென்றால், சிதறிக்கிடக்கும் அ.தி.மு.க. வாக்குகளை ஒருங்கிணைக்க வேண்டுமென பா.ஜ.க. திட்டமிட்டது.அதனால், `சசிகலாவையும் தினகரனையும் அ.தி.மு.க.வில் சேர்த்துக்கொள்ளவில்லை என்றாலும் பரவாயில்லை அ.ம.மு.க.வை கூட்டணியிலாவது சேர்த்துக்கொள்ளலாம்' என எடப்பாடியிடம் பா.ஜ.க. தலைமை வலியுறுத்தியது. இதற்காக தேசிய நிர்வாகிகள் சிலரை டி.டி.வி.தினகரனுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறும் பா.ஜ.க. பணித்தது.அதில், 2 நாடாளுமன்றத் தொகுதிகளை தரவேண்டுமென அ.ம.மு.க. தரப்பில் பா.ஜ.க.விடம் கோரிக்கை வைக்கப்பட்டது. குறிப்பாக, சிவகங்கை, தேனி, தஞ்சாவூர், மதுரை, விருதுநகர் அடங்கிய பட்டியலைத் தந்து அதில் இரண்டு தொகுதிகளை ஒதுக்குமாறு தினகரன் தரப்பு கோரிக்கை வைத்தது..இதற்குப் பதில் அளித்த பா.ஜ.க நிர்வாகிகள், `நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் எந்தத் தொகுதி என்பதை முடிவு செய்துகொள்ளலாம்' எனக் கூறிவிட்டனர். கிட்டத்தட்ட பா.ஜ.க.வுடன் கூட்டணி என்பது முடிவாகிவிட்ட சூழலில், ஓ.பன்னீர்செல்வமும் தினகரனுடன் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.மேலும், தனது மகனும் தற்போதைய தேனி எம்.பி.யுமான ரவீந்திரநாத்தை அ.ம.மு.க. வேட்பாளராக குக்கர் சின்னத்தில் போட்டியிடவும் ஓ.பி.எஸ் விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. பன்னீர்செல்வமும் தன்னோடு இணைந்துவிட்டதால், கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டுமென பா.ஜ.க.விடம் தினகரன் தரப்பு கோரிக்கை வைத்திருக்கிறது.இந்தச் சூழலில், ஆகஸ்ட் 6-ம் தேதி நடைபெற்ற அ.ம.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் தினகரன் பேசும்போது, `அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டு, பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.ஆனால், நாம் கூட்டணியில் இடம்பெறுவதை விரும்பாமல் சிலர் இடையூறு செய்து வருகின்றனர். இதனால் மீண்டும் அ.ம.மு.க. தலைமையில் தனிக் கூட்டணி அமைய வாய்ப்பு உள்ளது. ஆகவே, தனித்துப் போட்டியிடவும் தயாராக இருக்க வேண்டும்' என கட்சிக்காரர்களை உற்சாகமூட்டினார்.அதுமட்டுமின்றி, அ.ம.மு.க.வுடன் கூட்டணியில் இடம்பெற்றிருந்த கட்சிகளுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். ஆனால், சசிகலாவோ எடப்பாடியை சமாதானப்படுத்தி எப்படியாவது அ.தி.மு.க.வில் ஐக்கியமாகிவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்'' என்றார்.``எடப்பாடியோடு சமாதானப்படலம் நடப்பது உண்மையா?'' என சசிகலா ஆதரவாளர் ஒருவரிடம் பேசியபோது, ``அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டாலும், `நான்தான் பொதுச்செயலாளர்' என சசிகலா செயல்பட்டு வருகிறார். எடப்பாடியுடன் சசிகலாவின் சகோதரர் திவாகரன் பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறார். இதற்காக நான்கு முறை எடப்பாடி ஆதரவு மூத்த நிர்வாகிகள், திவாகரனை சந்தித்துப் பேசியுள்ளனர்.இந்தப் பேச்சுவார்த்தையை பா.ஜ.க.தான் முன்னெடுத்து வருகிறது. இதில் உடன்பாடு ஏற்படும்வரை, தினகரன், பன்னீர்செல்வம் ஆகியோரிடமிருந்து விலகி இருக்க வேண்டுமென சசிகலா நினைக்கிறார். அதனால்தான், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் இல்லத் திருமணத்துக்குக்கூட செல்லாமல் தவிர்த்தார். அதேபோல, தன்னைச் சந்திக்க பலமுறை பன்னீர்செல்வம் நேரம் கேட்டும் சசிகலா சம்மதிக்கவில்லை..அ.தி.மு.க.வில் ஐக்கியமாவதை சசிகலா விரும்புவதால்தான், `அ.ம.மு.க.வின் தலைவர் பதவி வேண்டாம்' எனவும் கட்சி பேனர், லெட்டர் பேடு ஆகியவற்றில் இருக்கும் தனது படத்தை நீக்குமாறும் கூறிவிட்டார். தவிர, ஜெயா டி.வி.யில் தினகரன் தொடர்பான செய்திகளை வெளியிடவும் சசிகலா தடை விதித்துள்ளார்.இந்த நடவடிக்கைகளை எல்லாம் சுட்டிக்காட்டி எடப்பாடியை கூல் செய்துவிடலாம். அதன்மூலம் அ.தி.மு.க.வில் ஐக்கியமாகிவிடலாம் என்பதுதான் அவரின் திட்டம். அதன்பின் பன்னீர்செல்வம், தினகரன் என்று அடுத்தடுத்து அ.தி.மு.க.வுக்குள் இழுத்துவிடலாம் என நினைக்கிறார்'' என்றார்.`` தினகரனின் தனித்துப் போட்டியிடும் முடிவு, சசிகலாவுக்கு பின்னடைவா?'' என சசிகலாவின் ஆதரவாளர் பூவை கந்தனிடம் கேட்டோம். ``சசிகலாவை பொருத்தவரை சிதறிக்கிடக்கும் அ.தி.மு.க.வை ஒருங்கிணைத்து தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்பதுதான். அதைநோக்கியே அவர் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார். பிரிந்து கிடப்பவர்கள் எல்லாம் சசிகலாவின் தலைமையை ஏற்று விரைவில் ஒருங்கிணைவார்கள்'' என்கிறார், நம்பிக்கையுடன்.எடப்பாடி மனது வைக்க வேண்டுமே?