இந்திய மல்யுத்த வீரர்களுக்கு இது போதாத காலம்! ஏற்கெனவே பாலியல் புகாரால் மல்யுத்த களத்தில் அனல் கொளுந்துவிட்டு எரியும் நிலையில், அடுத்த இடியாக மல்யுத்த வீரர்களின் மெடல் கனவுகளுக்கு வேட்டு வைத்துள்ளது, இந்திய மல்யுத்த கூட்டமைப்பு. உபயம்: பிரிஜ் பூஷன் சிங்!``என்ன பிரச்னை?'' என இந்திய மல்யுத்த சம்மேளனத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவரிடம் பேசினோம். ‘‘இந்தியாவில் மல்யுத்த விளையாட்டை நிர்வாகம் செய்து, வீரர்களை தயார்படுத்தும் அமைப்பு டபிள்யூ.எஃப்.ஐ எனப்படும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு ஆகும். டெல்லியை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் இந்த அமைப்பின் தலைவராக செயல்பட்டு வருபவர், பா.ஜ.க.வின் பவர்ஃபுல் எம்.பி. பிரிஜ் பூஷன் சரண் சிங்.பிரிஜ் பூஷன் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் குவிய, `அவை முறையாக விசாரிக்கப்பட வேண்டும்' என்று இந்தியாவின் முக்கிய பெண் வீராங்கனைகள் டெல்லியில் போராட்டத்தில் குதித்தனர். ஆனால் குற்றம்சாட்டப்பட்ட நபர் மீது விசாரணை முடுக்கிவிடப்படுவதற்கு பதிலாக, போராட்டத்தில் ஈடுபட்ட வீரர், வீராங்கனைகளை கைது செய்து நடவடிக்கை எடுத்தது மத்திய அரசு.இந்த விவகாரம், சர்வதேச அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றியது. அதன் எதிரொலியாக இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. மல்யுத்த கூட்டமைப்பைப் பொறுத்தவரை, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை தலைவர், செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளை தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று விதி உள்ளது..இந்தத் தேர்தலில் ஆந்திரா, தமிழகம், கேரளா, ஹரியானா உள்ளிட்ட 28 மாநில மல்யுத்தக் கூட்டமைப்பு நிர்வாகிகளும் வாக்களிக்க வேண்டும். அப்படி வாக்களித்தால்தான் தேர்தல் செல்லும். 28 மாநில மல்யுத்த கூட்டமைப்புகள் இருந்தாலும், சக்தி வாய்ந்த கூட்டமைப்பு என்றால் அது ஹரியானா மாநில கூட்டமைப்புதான். காரணம், அந்த மாநிலத்திலிருந்துதான் அதிகளவில் மல்யுத்தப் போட்டிக்கு சர்வதேச வீரர்கள் தயாராகின்றனர். இதுவரை மல்யுத்தப் போட்டியில் கலந்துகொண்டு அதிக மெடல்களை வாங்கிய வீரர்களும் அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களே.பிரிஜ் பூஷனுக்கு எதிராக ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா உள்ளிட்ட வீரர்கள் போராட்டத்தில் குதிக்க, அவர்களுக்கு ஆதரவாக ஹரியானா மாநில மல்யுத்த கூட்டமைப்பின் நிர்வாகிகளான ஜாஜர் மாவட்டத்தைச் சேர்ந்த வீரேந்தர் சிங் தலால், ஹிசார் மாவட்டத்தைச் சேர்ந்த சஞ்சய் சிங் மாலிக், மேவாட் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெய் பகவான் ஆகியோரும் குரல் கொடுத்தனர்.இது பிரிஜ் பூஷனுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. இதனை முறியடிக்க ஹரியானா கூட்டமைப்பின் தலைவரும் தனது வலதுகரமுமான ரோடாஷ் சிங் மூலம் மேற்கண்ட மூன்று நிர்வாகிகளையும் சஸ்பெண்ட் செய்ய வைத்தார். இந்த விவகாரம் ஹரியானாவில் பூதாகரமாக வெடித்தது. ‘ரோடாஷ் சிங் மேற்கொண்ட நடவடிக்கை சட்டவிரோதமானது. அது செல்லாது’ என ஹரியானா கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ராகேஷ் சிங் பதிலடி கொடுத்தார்.இதையடுத்து, ஹரியானா மாநில கூட்டமைப்பு பிரிஜ் பூஷன் ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் என இரு கோஷ்டியாக பிரிந்து அடித்துக்கொண்டது. இதற்கு நடுவேதான், இந்திய மல்யுத்த தேர்தலை நடத்தியே தீரவேண்டிய சூழல் ஏற்பட்டது. இறுதியாக, `அடுத்த 45 நாட்களுக்குள் இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கான தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்' என்று கடந்த ஜூலை மாதம் சர்வதேச மல்யுத்த அமைப்பு கெடுவிதித்தது. இந்தக் கெடுவைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி தேர்தல் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது. ஆனால் தேர்தல் நாளில், `யார் ஹரியானா கூட்டமைப்பு?' என்ற குழப்பம் நிலவியதால், `அதுவரை தேர்தலை நடத்தக்கூடாது' என்றுகூறி ஹரியானா உயர் நீதிமன்றத்தில் தடை ஆணை பெறப்பட்டது. இதனால் தேர்தலை நடத்த முடியாமல் போய்விட்டது. அதன் எதிரொலியாகவே இப்போது இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது..அந்தவகையில், பிரிஜ் பூஷன் என்ற ஒரு தனி மனிதருக்காக அடித்துக்கொண்டு, மல்யுத்த கூட்டமைப்பின் அங்கீகாரத்தையும் மொத்தமாக ரத்து செய்ய காரணமாக அமைந்துவிட்டனர். இதனால் பாதிக்கப்பட்டிருப்பது என்னவோ, சாதிக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு, அயராது உழைத்துவரும் வீரர்கள்தான்.தற்போது கூட்டமைப்பின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், அவர்களால் வரும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது மொத்த நாட்டுக்கும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ள செயலாகும். மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார் ஆதங்கத்துடன்.``இந்தப் பிரச்னை எப்போது சரியாகும்?'' என தமிழ்நாடு மல்யுத்தக் கூட்டமைப்பின் செயலாளர் லோகநாதனிடம் கேட்டபோது, “ஹரியானா என்ற ஒரு மாநிலத்தில் மட்டுமே பிரச்னை. அதுதான் ஒட்டுமொத்த தேர்தலையும் நிறுத்தி வைத்துள்ளது. இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுவது வழக்கம்தான். `அப்படி பிரச்னை ஏற்பட்டாலும், தேர்தலை நடத்தலாம்' என்று ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் வழிகாட்டியுள்ளது. எனவே, யாரும் கவலைப்படத் தேவையில்லை. விரைவில் தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது” என்றார்.விளையாடுவதற்கு வீரர்களின் வாழ்க்கைதான் கிடைத்ததா?- அபிநவ்