- பி.கோவிந்தராஜ்பெண்கள் எவ்வளவுதான் ஜாக்கிரதையாக இருந்தாலும் அவர்களைக் குறிவைத்து குற்றச்செயல்கள் தொடந்துகொண்டேதான் இருக்கின்றன. கதவை நன்றாக சாத்திக்கொண்டோம் என்ற பாதுகாப்பு உணர்வுடன் துணிக்கடை ட்ரையல் ரூமில் தனது ஆடைகளைக் களைந்தபெண், தற்செயலாக மேலே பார்த்தபோது, ஒரு செல்போன் தன்னைப் படம் பிடித்துக்கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ந்து கதறியிருப்பது கள்ளக்குறிச்சி அதிர்ச்சி..இந்தியாவின் பிரபல கார்ப்பரேட் நிறுவனமான ரிலையன்ஸ், 'ட்ரெண்ட்ஸ்' என்ற பெயரில் நட்சத்திர துணிக்கடைகளை டெல்லி, மும்பை, பெங்களூர், சென்னை போன்ற பெரு நகரங்களில் நடத்தி வருகிறது. தற்போது அந்த துணிக்கடைகள் தமிழ்நாட்டில் சிறிய நகராட்சிகள் வரை கிளை பரப்பியுள்ளன. அந்த வரிசையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் செயல்படும் ரிலையன்ஸ் ட்ரெண்ட்ஸ் துணிக்கடையில்தான் நடந்திருக்கிறது அந்த பகீர் சம்பவம். இதுகுறித்து காவல்துறை வட்டாரங்களில் விசாரித்தோம். “கடந்த நான்கு மாதங்களுக்கு முன்புதான் இந்தக் கடை திறக்கப்பட்டது. இதன் மேலாளராக விழுப்புரம், வெள்ளையம்பட்டு கிராமத்தை சேர்ந்த ஏழுமலை என்பவர் இருக்கிறார். கடந்த ஜூன் 25-ம் தேதி அரகண்டநல்லூர் டி.தேவனூரைச் சேர்ந்த அண்ணன், தங்கை துணி எடுப்பதற்காகச் சென்றுள்ளனர். அப்போது அந்தப் பெண் ட்ரையல் ரூமுக்கு சென்று உடைகளை மாற்ற முயலும்போது, மேலே பொருத்தப்பட்டிருந்த ஏ.சியின் நடுவே செல்போன் ஒன்று இருப்பதை பார்த்து அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்திருக்க்கிறார். இது தொடர்பாக அவர்கள் இருவரும் மேலாளர் ஏழுமலையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்..இப்படி வாக்குவாதம் நடந்துகொண்டிருந்தபோது, முதல்நாள் துணிகள் எடுத்துவைத்து, போதிய பணம் இல்லாததால் அன்று வாங்க வந்த இஸ்லாமிய பெண் ஒருவர், ‘அய்யோ நானும் நேற்று அந்த ரூமில்தான் ஆடை மாற்றினேன்’ என்று அலறி, துடிக்கிறார். அப்போது வேலை செய்யும் பெண்ணொருவர் , 'இந்த செல்போன் என் அண்ணன் விக்னேஷுடையதாயிற்றே' என்று பதறி அவரைக் காப்பாற்றும் நோக்கில் செல்போனை எடுக்க முயற்சிக்கிறார். அவரின் அண்னன் விக்னேஷ் அதே துணிக்கடையில் ஹவுஸ் கீப்பிங் பணியில் இருக்கிறார். இந்த களேபரத்தில் செல்போனில் இருந்த மெமரி கார்டை சிலர் எடுத்துவிடுகிறார்கள். இதற்குள்ளாக போலீசுக்கு தகவல் சொல்லப்பட்டு அவர்கள் வந்து மெமரி கார்டைக் கைப்பற்றியபோது அதிலும் எந்த வீடியோவும் இல்லை. அதனால் சம்பந்தப்பட்டவர்களோ மெமரி கார்டை மாற்றியிருப்பார்களோ அல்லது அதில் உள்ள தகவல்களை அழித்திருப்பாரோ என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.. தொடர்ந்து கடையின் சி.சி.டி.வி. பதிவுகளை போலீசார் சோதனை செய்தபோது, ஆண்களுக்கான ஆடைகளை விற்பனை செய்யும் முதல் தளத்தில் வேலை செய்துவந்த விக்னேஷ், பெண்களுக்கான டிரையல் ரூமிற்கு சென்று இரண்டு நிமிடங்கள் கழித்து வெளியே வந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து மேலாளர் ஏழுமலை, விக்னேஷ், மற்றும் அவரின் சகோதரி மூவர் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார் மேலாளர் ஏழுமலையை மட்டும் ஸ்டேஷன் பெயிலில் அனுப்பிவிட்டார்கள். விக்னேஷும் அவரின் சகோதரியும் சிறைக்கு அனுப்பபட்டுள்ளனர்..கைதாகியுள்ள விக்னேஷ், ஏற்கெனவே ஒரு தனியார் கல்லூரியில் வேலை செய்தபோது அங்கே இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டதால் அவரை அங்கிருந்து வெளியே அனுப்பி விட்டார்கள். இதில் சகோதரனுக்காக உதவச் சென்று மாட்டிக்கொண்ட அந்த பெண்ணை நினைத்தால்தான் பரிதாபமாக இருக்கிறது...” என்று சொல்லி முடித்தார். இதுகுறித்து திருக்கோவிலூரை சேர்ந்த சி.பி.ஐ. மாநிலக்குழு உறுப்பினர் சரவணன் நம்மிடம், “இந்தக்கடையில் உடைமாற்றும் அறையில் செல்போன் மூலம் வீடியோ எடுத்த விவகாரம் என்பது சாதாரணமானது அல்ல. இதனால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையே நிலவுகிறது. ஆகையால், தற்போது மூடியுள்ள அந்தக்கடை அப்படியே மூடியே கிடக்கட்டும். மீண்டும் திறந்தால் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம்” என்றார் ஆவேசத்துடன்.. துணிக்கடை மேனஜர் ஏழுமலையிடம் பேசுவதற்காக அவரது செல்போனுக்கு தொடர்புகொண்டோம். அந்த செல்போனை எடுத்த அவரது மனைவியோ, ’ஏழுமலை வெளியில் போயிருக்கிறார். அவர் வந்த பிறகு பேசச் சொல்கிறேன்’ என்றுகூறி இணைப்பை துண்டித்துவிட்டார். பிறகு வாட்ஸ் ஆப் மெசேஜ் மூலம் தொடர்பு கொண்டபோதும் முறையான பதில் இல்லை. இதுகுறித்து திருக்கோவிலூர் டி.எஸ்.பி. மனோஜ்குமாரிடம் பேசியபோது, ’’விக்னேஷ் அவட்சோர்சிங்க் முறையில் பணியில் சேர்க்கப்பட்ட ஊழியர். முதல்கட்ட விசாரணையின் அடிப்படையில் அவரை ரிமாண்ட் செய்துள்ளோம். இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு அனைத்து நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கும் உரிய எச்சரிக்கை செய்திருக்கிறோம்” என்று முடித்துக்கொண்டார்.மகளிரே சுற்றிலும் மனிதக் கழுகுகள். கவனமாக இருங்கள்.