சமீபத்தில், ’எட்டு மணி நேரம், 35 பெண்களுடன் முழு நீள லீலை’ என்று மராத்தி சேனல் ஒன்று கிளுகிளுப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டது. அந்த வீடியோவில் அந்தரங்க லீலையில் ஈடுபட்டிருந்தவர் வேறு யாருமல்ல… மகாராஷ்டிர அரசியலில் தன் அதிரடிகளால் கவனம் ஈர்த்த மாநில பா.ஜ.க. துணைத்தலைவர் கிரித் சோமையாதான்! அவருடன் நெருக்கத்தில் இருந்த பெண்களில் பலர் அரசு உயரதிகாரிகள் என்பது அதைவிட அதிர்ச்சியான விஷயம்! இதுதொடர்பாக பேசியிருக்கும் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ அம்பாதாஸ் தான்வே, “எனக்கு ஒத்துழைக்கவில்லையென்றால் ஈ.டி ரெய்டை ஏவிவிடுவேன்’என்று மிரட்டியே கிரித், பெண்களை பயன்படுத்தியிருக்கிறார்” என்று குற்றம்சாட்டியிருக்கிறார். ஏற்கெனவே எதிர்க் கட்சியினரை மிரட்டுவதற்காகவே அமலாக்கத்துறையை மத்திய அரசு பயன்படுத்துகிறது என்று விமர்சனம் எழுந்துள்ள நிலையில், அதே மிரட்டலை வைத்து அக்கட்சியின் தலைவர் அரசு பெண் அதிகாரிகளிடம் தவறாக நடந்துள்ளது, பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. ஆடியோ இல்லாமல் வெளியாகியிருக்கும் அந்த வீடியோவில், அரைகுறை உடையில் 35 பெண்களுடன் கிரித் சோமையா இருக்கும் காட்சிகள் விரிகின்றன. மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு சீனியர் பா.ஜ.க தலைவரிடம் பேசினோம். “மகாராஷ்டிராவைப் பொறுத்தவரை பா.ஜ.க கட்சியின் பிராண்ட், கிரித் சோமையாதான். ஜெய்பிரகாஷ் நாராயணனின் ஆதரவாளராக அரசியல் பயணத்தைத் தொடங்கியவர், பிறகு பா.ஜ.கவிற்குத் தாவினார். 1995-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் முலுந்த் தொகுதியில் வெற்றிபெற்றார். அதன்பிறகு அவருக்குத் தொடர்ச்சியாக ஏறுமுகம்தான். 1999-ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் குர்தாஸ் காமத் என்கிற பெரும் தலையை முறியடித்து, முதல் முறையாக எம்.பியானார். அதன்பிறகுதான் சோமையாவின் டிராக்கே வேறு விதமாக மாறியது. அரசியலில் உள்ள பொருளாதாரக் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்காக ‘ஃபாரன்சீக் ஆடிட்டர்ஸ்’குழு ஒன்றை ரகசியமாக அமைத்த சோமையா, அதன்மூலமாக தனது அதிரடி அரசியலைத் தொடங்கினார். பொதுவாக அரசியல்வாதிகள் செய்யும் ஊழல், லஞ்சப் பண முதலீடு, பினாமி சொத்து என்று சகலமும் அவர்களின் ஆடிட்டர்ஸ் பார்வைக்கு வராமல் செல்லாது. அப்படிப்பட்ட ஆடிட்டர்களைத் தனது கைக்குள் போட்டுக்கொண்ட சோமையா பிற கட்சித் தலைவர்களின் ஊழல் தகிடு தத்தங்களை ஒவ்வொன்றாக வெளியிடத் தொடங்கினார் நிலக்கரி ஊழல், ஆதர்ஷ் ஊழல், மகாராஷ்டிரா சாதான் ஊழல், கோதுமை கொள்மு0தல் ஊழல், டீமாட் தேர்வு ஊழல், மகாராஷ்டிரா பாசன ஊழல், என்.எஸ்.இ.எல் ஊழல் என்று இவர் வெளியிட்ட ஊழல்களின் பட்டியலை அடுக்கிக்கொண்டே போகலாம். ஊழலைத் தோலுரிப்பதே தன் அடையாளம் என்பதுபோல் நடந்துகொண்ட கிரித்தைப் பார்த்தாலே, மகாராஷ்டிர அரசியல்வாதிகள் நடுநடுங்கினர். ஐ.டி மற்றும் ஈ.டி துறையில் பல உயரதிகாரிகளிடம் நெருக்கமாக பழகினார். அவர்களிடமிருந்து எதிர்கட்சித் தலைவர்களின் வழக்கு விவரங்களைப் பெற்று உடனுக்குடன் இணைய தளங்களில் பதிவேற்றி, பதறவைத்தார்., இந்நிலையில், 2013ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வென்று எம்.பியான கிரித் சோமையாவிற்கு, 2019- ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. அவருக்குக் கிடைத்திருக்க வேண்டிய சீட், கூட்டணிக் கட்சியாக இருந்த சிவசேனாவிற்கு சென்றுவிட்டது. இதனால் சிவசேனா மீது கடுப்பானவர் தொடர்ந்து உத்தவ் தாக்கரேயை சீண்டினார். பா.ஜ.க - சிவசேனா கூட்டணி உடைந்ததில் கிரித்திற்கும் முக்கியப் பங்கு உள்ளது. இப்படி சோமையா, ஈ.டியை பயன்படுத்தி அரசியலில் பலரை மிரட்டியது தெரிந்த கதைதான். ஆனாலும், அதே அஸ்திரத்தால், அரசுபணியில் உள்ள பெண்களை மிரட்டி தன் இச்சைக்கு இரையாக்கிக் கொண்டிருக்கிறார் என்பதுதான் பேரதிர்ச்சி!” என்றார்.. இந்த சம்பவம் குறித்து, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும், மேற்கு வங்க மாநிலத்தின் பொறுப்பாளருமான செல்லகுமார் கூறும்போது, “கண்ணியமான கட்சி என்ற பிம்பத்தை மக்களிடம் ஏற்படுத்தி, ஆட்சியைப் பிடித்தது பா.ஜ.க. ஆனால் அக்கட்சி, பெண்களை ஒரு போக பொருளாக மட்டுமே பார்த்து வருகிறது என்பது அடுத்தடுத்த சம்பவங்களால் வெளிப்பட்டு வருகிறது. கர்நாடக சட்டமன்றத்தில் பா.ஜ.க. உறுப்பினர்கள் ஆபாச வீடியோவை ரசித்துப் பார்த்ததில் தொடங்கி மணிப்பூரில் பெண்கள் நிர்வாணமாக இழுத்து வரப்பட்டது வரை எத்தனையோ உதாரணங்களைச் சொல்லலாம். இதில் கிரித் சோமையாவின் செயல், எதிர்க்கட்சிகளை மிரட்ட மட்டுமல்ல, பெண்களைப் மிரட்டி பணிய வைத்து தங்களின் இச்சைகளை தீர்த்துக் கொள்ளவும் பா.ஜ.க.வினர் ஈ.டி.யைப் பயன்படுத்துகிறார்கள் என்பதை வெட்ட வெளிச்சம் ஆக்கி உள்ளது.' என்று முடித்தார். இந்த விவகாரம் தொடர்பாக மகாராஷ்டிரா பா.ஜ.க எம்.எல்.ஏவும், மாநிலச் செய்தித் தொடர்பாளருமான ராம் கதமிடம் பேசினோம். “ கிரித் சோமையா ஏகப்பட்ட அரசியல் பெருச்சாளிகளின் தோலை உரித்தவர். அதனால், அவருக்கு தேசிய அளவில் எதிரிகள் உண்டு. அவர்களில் யாரோதான் இப்படி ஒரு வீடியோவை மார்ஃபிங் செய்து வெளியிட்டுள்ளனர்.!” என்றார். இது பற்றி விளக்கம் கேட்பதற்காக கிரித் சோமையாவை தொடர்பு கொண்ட போது, அவர் போனை எடுத்த அவரது பி.ஏ. “சார் இதுதொடர்பாக பேசமாட்டார்” என்று சொல்லி, லைனை கட் செய்தார். இறுதியாக காவல்துறை தரப்பில் விசாரித்தபோது, ‘விசாரணை இப்போதுதான் தொடங்கியுள்ளது. எடிட் செய்யப்படாத முழு வீடியோ கிடைத்தால்தான் அது உண்மையான வீடியோவா என்பதே தெரியவரும்” என்று முடித்துக்கொண்டனர். அமலாக்கத்துறையை இன்னும் எதுஎதுக்கெல்லாம் யூஸ் பண்ணப்போறாங்களோ! - அபிநவ்