எந்தப் பொருளை வாங்கினாலும், `பிளஸ் ஜி.எஸ்.டி' என்ற வார்த்தையைக் கேட்டு கேட்டு மக்களுக்குப் புளித்தே போய்விட்டது. ஆனால், ஜி.எஸ்.டி வரியே இல்லாத ஒரு பொருளுக்கு வரி கட்டியதாக கணக்கு காட்டி சுருட்ட முடியுமா? முடியும் என நிரூபித்திருக்கிறது, சென்னை மாநகராட்சி. சென்னை மாநகராட்சியின் ஆகஸ்டு மாத மாமன்றக் கூட்டம் கடந்த 31-ம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்ட பல டெண்டர்களில் முறைகேடு நடந்திருப்பதாக கணக்கு நிலைக்குழு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையை தாக்கல் செய்த சென்னை மாநகராட்சி கணக்கு நிலைக்குழுவின் தலைவர் தனசேகரிடம் பேசினோம். ``2019-2020 ஆகிய ஆண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சியில் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு தளவாடப் பொருள்கள் மற்றும் விளையாட்டுப் பொருள்கள் வாங்கப்பட்டன. இந்தப் பொருள்களைக் கொள்முதல் செய்தது தொடர்பாக தணிக்கைக் குழுவினர் ஆய்வு செய்தோம். .அதில், மூன்று நிறுவனங்களிடமிருந்து தளவாட மற்றும் விளையாட்டு உபகரணங்களை 81 லட்சத்து 33 ஆயிரத்து 166 ரூபாய்க்கும் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் ஒரு நிறுவனத்திடமிருந்து 14 லட்சத்து 33 ஆயிரத்து 376 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் பொருள்களைக் கொள்முதல் செய்யும்போது, அரசாணையைப் பின்பற்ற வேண்டும். ஆனால், விலைப்புள்ளி அடிப்படையில் இந்தக் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.அடுத்து, 2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளில் திடக்கழிவு மேலாண்மைத்துறை மேற்கொண்ட பணிகளை தணிக்கை செய்தோம். அந்த ஆண்டில் 2 கோடியே 2 லட்சத்துக்கு பிளீச்சிங் பவுடரை மூன்று நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்துள்ளனர். அந்தவகையில், 27 லட்சத்து 85 ஆயிரத்து 572 ரூபாய்க்கு ஜி.எஸ்.டி. வரி செலுத்தப்பட்டுள்ளது.இதில் வேடிக்கை என்னவென்றால், சரக்கு மற்றும் சேவை வரிச்சட்டம் 2017ன் எச்.எஸ்.என். எண்: 28281010, 28289011, 28289060-ன்படி, பிளீச்சிங் பவுடருக்கு ஜி.எஸ்.டி வரி 0 சதவீதம். அதாவது, ஜி.எஸ்.டி.யே இல்லாத பொருளுக்கு, ஜி.எஸ்.டி கட்டியதுபோல் கணக்கெழுதி, நிதியைச் சுருட்டியிருக்கிறார்கள். இதை ஆய்வுக்கு உட்படுத்தாமல் எப்படி ஆணை வழங்கினார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது..அதேபோல், ஒரு நிறுவனத்திடமிருந்து 1 கிலோ பிளீச்சிங் பவுடர் 29.50 க்கும், மற்றொரு நிறுவனத்திடமிருந்து 30.90க்கும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதனால் 2 லட்சம் ரூபாய் கூடுதலாகச் செலவிடப்பட்டுள்ளது. அரசின் விதிகளுக்கு மாறாக அதாவது ஜி.எஃப்.ஆர்.2017 விதி 149ன்படி அரசின் இ-மார்க்கெட்டிங் சந்தையில் கொள்முதல் செய்யாமல் வெளிச்சந்தையில் 2 கோடியே 2 லட்சத்துக்கு பிளீச்சிங் பவுடரை வாங்கியுள்ளனர். இவை எந்தெந்த மண்டலங்கள் மற்றும் துறைகளுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டது என எதுவுமே ஸ்டாக் ரிஜிஸ்டரில் பதிவுசெய்யப்படவில்லை" என்கிறார்.தொடர்ந்து பேசுகையில், ``2019 மற்றும் 2020ம் ஆண்டுகளில் அதிகாரிகள் பயன்பாட்டுக்கென டாடா இண்டிகா கார்கள், 11 மாதங்களுக்கு வாடகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 11 மாத வாடகையாக 5 லட்சத்து 11 ஆயிரம் பணம் தரப்பட்டுள்ளது. இந்தக் கார் பெரும்பாலான நாட்கள் ஓடிய அதிகபட்ச தூரம் 40 கிலோமீட்டர்தான். அதே ஆண்டில் மாநகராட்சியில் 13 உபரி வாகனங்கள் இருந்துள்ளன என்பதுதான் கொடுமை..அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் நடந்த இந்த முறைகேடுகள் ஒருபுறம் இருக்க, சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள சுடுகாடுகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக வந்த புகார்களின்பேரில் ஆய்வு நடத்தினோம்.அந்த ஆய்வில் கடந்த மூன்று ஆண்டுகளில் ஒரு உடலை எரிப்பதற்காகத் தரப்பட்ட தொகை வருடா வருடம் 6 சதவீதம் உயர்வு அளிக்கப்பட்டு முறையே 2,796 ரூபாய், 2,963 ரூபாய் மற்றும் 3,141 ரூபாய் வழங்கப்பட்டு வந்துள்ளது. இந்தத் தொகை, கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக, நடப்பு நிதியாண்டில் வெறும் 1,400 ரூபாய் மட்டுமே வழங்கப்படுவது அதிர்ச்சியளிக்கிறது.முன்பு இரண்டு வாட்ச் மேன், ஒரு மேனேஜர், ஒரு ஆப்ரேட்டர், ஒரு உதவியாளர் உள்பட ஆறு பணியாளர்களுடன் சுடுகாடுகள் இயங்கி வந்தன. தற்போது பல சுடுகாடுகளில் வெறும் இரண்டு பணியாளர்கள்தான் வேலை பார்த்து வருகின்றனர். போதிய ஊழியர்கள் இல்லாததால் சமூக விரோதிகளின் புகலிடமாக அவை மாறிவருகின்றன. இதுகுறித்து, அதிகாரிகளிடம் கேட்டால் அலட்சியமான பதிலே கிடைக்கிறது. இவர்கள் மீது நிர்வாகரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்றார்.தனசேகரின் குற்றச்சாட்டுகள் குறித்து சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜனிடம் விளக்கம் கேட்டோம். “பிளீச்சிங் பவுடர் தொடர்பான ஆவணங்களை சரிபார்க்க உத்தரவிட்டுள்ளோம். சுடுகாடு தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடத்தி உள்ளோம். தணிக்கைக்குழு சுட்டிக்காட்டியுள்ள அனைத்து விஷயங்களின் மீதும் உரிய ஆய்வு நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார் உறுதியாக.அதையும் பொறுத்திருந்து பார்ப்போம்! - ரய்யான் பாபுபடங்கள்: செந்தில்நாதன்