-பொ.அறிவழகன்எவன் வந்து எப்போது ஏமாற்றிவிட்டு போவான் என்று பை நிறைய பணத்தை வைத்துக்கொண்டு பேராசையில் காத்திருக்கிறார்கள் பலர். எவ்வளவுதான் மோசடி நிதி நிறுவனங்கள் கோடிகளில் கம்பி நீட்டிவிட்டு போனாலும் மீண்டும் மீண்டும் ஏமாறத் தயாராக இருக்கிறார்கள் மக்கள். அந்தவகையில், லேட்டஸ்ட் நியூசென்ஸ், நியோமேக்ஸ் மோசடி நிதி நிறுவனம். இதில், தி.மு.க புள்ளியும் சிக்கித் தவிப்பதுதான், தேனியைக் கலக்கும் ஹாட் நியூஸ்..மதுரையை தலைமையிடமாகக் கொண்டு தமிழகம் முழுவதும் செயல்பட்டு வந்துள்ளது, நியோமேக்ஸ் நிறுவனம். மாநிலம் முழுவதும் மக்களிடம் வசூலித்த பல கோடி ரூபாய்களை வைத்து ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வாங்கி லேஅவுட் போட்டு விற்று ஏகபோக லாபம் பார்த்துள்ளது. ஒருகட்டத்தில், ஆளுக்கு ஆள் பணத்தைச் சூறையாட நியோமேக்ஸ் தள்ளாடத் தொடங்கியது..முதலீட்டாளர்களுக்கு 30 சதவிகித வட்டி கொடுப்பதாகக் கூறியதை நிறைவேற்ற முடியாததால், பிரச்னை வெடித்தது. பொருளாதாரக் குற்றப்பிரிவு, நீதிமன்றம் என பொதுமக்கள் தீவிரம் காட்ட, நிறுவனத்தின் இயக்குநர்கள் தலைமறைவானார்கள். அதில், தேனி மாவட்டம் கம்பம் தெற்கு நகர தி.மு.க. செயலாளராக இருக்கும் சூரியா செல்வக்குமாரும் ஒருவர் என்பதுதான் ஹைலைட். சூரிய செல்வகுமாரால் பாதிக்கப்பட்ட தி.மு.க. பொறியாளர் அணியின் முன்னாள் மாவட்ட துணை அமைப்பாளர் தயாளனிடம் பேசினோம். “நியோமேக்ஸ் நிறுவனத்தின் கம்பம் மண்டல இயக்குநராக சூரியா செல்வக்குமார் இருந்து வருகிறார். இவரின் பாப்புலாரிட்டியை நம்பி 300 கோடி ரூபாய் பணத்தை மக்கள் போட்டுள்ளனர். அந்தப் பணத்தில் சூரியா ரெஸ்டாரன்ட், சூரியா ஃபேஷன் வேர்ல்ட், சூரியா சூப்பர் மார்கெட் என பல நிறுவனங்களை நடத்திவந்தார்.நானும் நியோமேக்ஸில் இவரை நம்பி 2 கோடி ரூபாய் வரையில் முதலீடு செய்திருந்தேன். இவர்களின் நடவடிக்கை சரியில்லாததால், என் பணத்தை திருப்பிக் கேட்டேன். அதில் பிரச்னை ஏற்பட்டது. ஒருகட்டத்தில் என்னை ஆள்வைத்து தாக்கினார். காவல்நிலையத்திலும் மாவட்டச் செயலாளரிடமும் புகார் அளித்தேன். எந்த நடவடிக்கையும் இல்லை.பலகட்ட போராட்டத்துக்குப் பின்பு நான் மட்டுமே பணத்தை திரும்பிவாங்க முடிந்தது. ஆனால், அப்பாவிகளுக்கு இன்னும் கிடைக்கவில்லை. கடந்த 50 நாட்களாக செல்வக்குமார் தலைமறைவாக உள்ளார். கட்சித் தலைமை அறிவித்த நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொள்ளவில்லை" என்றார்..நியோமேக்ஸால் பாதிக்கப்பட்ட ராயர் என்பவர், ”நான் சொந்தமாக கார் வைத்திருந்தேன். நியோமேக்ஸ் நிறுவன மேலாளர் சிவக்குமார் என் பள்ளி நண்பர் என்பதால், காரை வாடகைக்கு கேட்டார். நானும் நம்பிக்கையுடன் போனேன். அவர்களின் பேச்சும் மீட்டிங்கும் எனக்கு பிடித்துப்போனதால் 18 லட்சத்தை முதலீடு செய்தேன்.நானும் பலரிடமிருந்து ஒரு கோடி ரூபாய் வசூல் செய்துகொடுத்து சிக்கிக்கொண்டேன். தற்போது காரை விற்றுவிட்டு ஆக்டிங் டிரைவராக உள்ளேன். என்னைப்போல பாதிக்கப்பட்ட 26 பேர் வக்கீல் மூலம் மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் கொடுத்துள்ளோம். சிவக்குமார் தற்கொலை செய்துகொண்டதால், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளேன். நீதிமன்றத்தைத்தான் நாங்கள் பெரிதாக நம்பியுள்ளோம்" என்றார் கவலையுடன்.இதற்கிடையே, நியோமேக்ஸ் மேலாளர் சிவக்குமாரின் மனைவி ஜெனிதா உட்பட 16 பேர், கடந்த 5ம் தேதி தி.மு.க. நகரச் செயலாளர் சூரியா செல்வக்குமார் மற்றும் அவரின் மனைவி சுனோதா மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தருமாறு தேனி எஸ்.பி. பிரவீன் உமேஸ் டோக்கராவிடம் புகார் கொடுத்து பரபரப்பை கிளப்பியுள்ளனர்..``உங்களை நோக்கி கைகாட்டுகிறார்களே?" என தலைமறைவாக இருக்கும் தி.மு.க. நகர செயலாளர் சூரியா செல்வக்குமாரிடம் கேட்டோம். “கட்சித் தலைவரை நேரில் சந்தித்து விளக்கம் கொடுத்துவிட்டேன். கடந்த பத்து வருடமாக நியோமேக்ஸ் நிறுவனத்தில் இயக்குநராக வேலை செய்து வந்தேன். ஒரு வருடத்துக்கு முன்பு நியோமேக்ஸ் நிர்வாகத்தில் கோளாறு ஏற்பட்டது. அது சரிப்பட்டு வரவில்லை.நான் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருப்பதால், என்னால் எந்தப் பிரச்னையும் வரக்கூடாதென்று விலகிவிட்டேன். அதைக் கடந்த ஆண்டே நாளிதழ் மூலம் அறிவித்துவிட்டேன். அதில், என்னை சார்ந்து முதலீடு செய்தவர்கள் பத்திரத்தை பதிந்து கொள்ளுமாறும் தெரிவித்திருந்தேன். நிறைய பேர் பத்திரமும் பதிந்தார்கள். பலர், `பத்திரம் வேணாம், பணம்தான் வேண்டும். நாங்களே கம்பெனியிடம் வாங்கிக் கொள்கிறோம்' என்றார்கள். கடந்த ஒரு வருடமாக எந்த பிரச்னையும் இல்லை.தற்போது நியோமேக்ஸில் பிரச்னை ஏற்பட்டதும், என் வளர்ச்சி மீது பொறாமைப்பட்ட சிலர், வீண் வதந்திகளை பரப்பிவருகிறார்கள். முதலீட்டாளர்களையும் தூண்டிவிடுகிறார்கள். கடந்த ஒரு வருடமாக நியோமேக்ஸ் நிறுவனத்தின் செயல்பாடுகளில் நான் பங்கேற்கவில்லை. பொருளாதார குற்றப்பிரிவினருக்கு, நான் விலகியதும் தெரியாது, என்னைப் பற்றிய விவரங்களும் தெரியாது. கைது செய்யப்பட்ட பிறகு நிரூபித்து வெளியே வருவது எந்த பயனும் தராது என்பதால் சட்டரீதியாக காவல்துறைக்கு விளக்கம் கொடுக்கும் வேலையைச் செய்து வருகிறேன்" என்றார் விரிவாக.நியோமேக்ஸ் நிறுவனம் தனது தாரக மந்திரமாக வைத்துள்ள வார்த்தை, `முடிவில்லாத செழிப்பு'. அது யாருக்கு என்பதில்தான் பிரச்னையே!