ஜோதிடர் தன் மொபைலில் அந்த அமைச்சரின் எண்ணை டயல் செய்ய, அது அமைச்சரின் மொபலை குக்கூ குரலில் அலற வைத்தது. போனை எடுத்து, “ஆங்...என்ன விஷயம் சொல்லுங்க!” என்று அசுவாரசியமாய்க் கேட்ட அமைச்சர், மறுமுனையில் ஜோதிடர் விஷயத்தைச் சொல்லச் சொல்ல படிப்படியாக அதிர்ந்தார். அவர் முகம் வியர்வையில் நனைய, உடலில் லேசான நடுக்கம் தொற்றிக்கொண்டது. ‘அரசியல்ல இறங்கி இத்தனை வருஷம் தேவுடு காத்ததுக்குப் பலனா, இப்போதான் ஏதோ நாலு காசு சேர ஆரம்பிச்சிருக்கு. அதுக்கும் வேட்டு விழுந்திடுச்சா!’ மனதின் குரலை கொஞ்சம் சத்தமாகவே உதிர்த்துவிட்டு, “என்னோட பதவிக்கு ஒண்ணும் ஆபத்து இல்லையே!” தடுமாறும் குரலில் ஜோதிடரிடம் கேட்டார். " ம்ம்ம்... இப்போதைக்கு எதுவும் இருக்காதுன்னு தோணுது...ஆனா, இன்னும் கொஞ்சம் நாள்ல குருபெயர்ச்சி நடக்கப் போகுது... அது உங்களுக்கு எப்படி இருக்குனு பார்க்கணும். ஜாதகப்படி நேரம் சரியா இல்லைன்னாலும், கோச்சாரப்படி என்ன மாற்றம் வருதுன்னு பார்க்கணும் பார்த்துட்டு சொல்றேன்!” ஜோதிடர் சொன்னது எரிச்சலை ஏற்படுத்தியது அமைச்சருக்கு. ‘கிடைத்த தகவலின்படி வேறு எதாவது விஷயம் தெரியுமா, விஷயத்தைச் சொன்ன சோர்ஸ், விபரீதமாக ஏதாவது சொல்லியிருக்கிறார்களா, ஆபத்து பணத்துக்கா, பதவிக்கா? இப்படி எல்லாம் அர்த்தத்தில் கேட்டால், இவர் கிரஹம் அது இது என்று சொந்த சரக்கை எடுத்துவிட்டுக்கொண்டு...’ மனதுக்குள் கடுகடுத்தாலும், ஜோதிடரைப் பகைத்துக்கொள்ள முடியாது. அப்புறம் இப்படித் தகவல் கிடைப்பது ஆஃப் ஆகிவிடும். இப்போதைக்கு அவர் சொன்ன விவரத்தை வைத்துக்கொண்டு வேறு இடத்தில் விசாரித்துக் கொள்ளவேண்டியதுதான்!’ மனதுக்குள் அவசர அவசரமாக கணக்குப் போட்டுக்கொண்டு, “சரி ஜோஸியரய்யா, விவரம் சொல்லி எச்சரிச்சதுக்கு தேங்க்ஸ். நீங்க கட்டத்தைக் கணக்குப் போட்டுப் பார்த்துட்டுச் சொல்லுங்க. நான் அதுக்குள்ளே எதுக்கும் தயாராகிக்கறேன்!” போனை ஆஃப் செய்துவிட்டு, முன் நெற்றி சுருக்கி யோசிக்கத் தொடங்கினார், அமைச்சர்..அமெரிக்க அதிபர் மாளிகையில் உள்ள பெரிய கடிகாரம், அந்த நாட்டு நேரப்படி பகல் ஒன்றரை மணியைக் காட்டியது. ஓவல் அறைக்கு அருகே உள்ள சிறிய டைனிங் ஹாலில், அமெரிக்க அதிபர், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர், வெளியுறவு அமைச்சர் என எல்லோரும் அங்கே இருந்த மெகா சைஸ் டி.வி.யில் நியூஸ் பார்த்தபடியே பாஸ்தா சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். ‘நம் நாட்டின் அதிபர், சமீபகாலமாக அமைச்சர்களை அடிக்கடி தன் மாளிகைக்கு அழைத்து, அதிக நேரம் அவர்களோடு பேசுகிறார். ஏதேனும் முக்கியமான தீர்மானமாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது. அநேகமாக வடகொரிய பிரச்னையை ஒரு முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்று அதிபர் முன்பு சொன்னதை செயல்படுத்தும் தீர்மானமாக இருக்கலாம். அவர்களை அணு ஆயுத ஒப்பந்த இசைவில் கையெழுத்திடச் செய்ய வேண்டும். அதற்கு பொதுவான ஒரு நாட்டில் சந்திப்பு நடத்தலாமா என்று அமைச்சர்களோடு விவாதிக்கிறாரோ எனத் தோன்றுகிறது’ ஹேஷ்யங்களை செய்திகளாகச் சொல்லிக்கொண்டிருந்தாகள் சேனலில். அப்போது வேகவேகமாக அங்கே வந்தார், அரசியல் ஆலோசகர். அவரது முகமே அவர் கொண்டுவந்திருக்கும் செய்தி மிகமிக முக்கியமானது என்பதை சொல்லாமல் சொன்னது. பார்வையாலேயே அதிபரிடம் அனுமதி பெற்று மெல்ல அவரை நெருங்கிச் சென்று, மிகச் சன்னமான குரலில், “இந்தியாவில் இருந்து ஃபாசிலின் டி.என்.ஏ. ரிப்போர்ட் வந்திருக்கிறது” பாதுகாப்பு அமைச்சர் சொல்ல, பளிச்சென்று ஒரு வெளிச்சம், அதிபர் முகத்தில் பரவியது. தெலங்கானா மாநிலம். மஹாராஷ்டிராவை ஒட்டிய குஞ்சல எனும் சிறிய கிராமம். இந்த கிராமத்தில் கிட்டத்தட்ட ஆயிரம் பேர் வசிக்கிறார்கள். இவர்கள் பேசும் மொழி, கோண்டி. இம்மொழியைப் பேசும் பத்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, சட்டிஸ்கர், உத்தரப்பிரதேசம், தெலங்கானா, ஆந்திரம், பீகார், ஒடிசா என நாடு முழுக்கப் பரந்து இருக்கின்றனர். இவர்களின் பூர்வீகம் தென் தமிழ்நாடு. தமிழில் இருந்து பிறந்த பிற மொழிகள் போலவே இந்த மொழியும். இந்த மொழி பேசுபவோர், பல்வேறு மாநிலங்களில் வசிக்கின்றனர். எந்த மாநிலங்களில் வசிக்கிறார்களோ அந்தந்த மாநில மொழி பேசும் மக்களாக மாறி விட்டார்கள். இந்த கிராமத்தில் சீதம்மா என்றொரு பாமரப் பெண்மணி தன் இரண்டு குழந்தைகளோடு வாழ்ந்தார். படிப்பறிவு என்பது மருந்துக்கும் இல்லாதவர். பள்ளியோ ஆசிரியரோ இல்லாத கிராமத்தில் இது பெரிய குறையாகவே யாருக்கும் தோன்றவில்லை. படிப்பு வராவிட்டால் என்ன, ’இலவசமாக நான் தருகிறேன்’இயற்கை அவளுக்கு அழகை தாராளமாக வழங்கியிருந்தது. நான்கு ஆண்டுகளுக்கு முன் கணவனை இழந்தவள். அதற்குப் பிறகு தன் குடும்பச் சுமையை உறவுகள் யாரும் இன்றி ஒற்றை ஆளாக தனியாகச் சுமப்பவள். கணவனுக்குச் சொந்தமான கொஞ்சமே கொஞ்சம் நிலத்தில் விவசாயம் பார்த்துக்கொண்டிருந்தாள். பெற்றோரும் சகோதரிகளும் இருக்கிறார்கள். என்றாலும் இவள் புகுந்த வீட்டைவிடவும் அங்கே வறுமை வளமையாய் இருந்தது. இரண்டு தங்கைகள். அவர்களுக்கு இன்னும் எந்த வழியும் அமையவில்லை. இந்த நிலையில் அங்கே செல்லவும் முடியாது. இருக்கும் கொஞ்சம் நிலத்தை விற்றுவிடலாம் என்றால், அதன்பிறகு என்ன செய்வது? இரண்டு மகள்களைக் காப்பாற்றியாக வேண்டும். அதோடு நிலத்தை யாரிடம் விற்பது என்றெல்லாம் எதுவுமே அவளுக்குத் தெரியவில்லை. படிப்போ, பணமோ இல்லாவிட்டாலும் இயற்கையாய்க் கிடைத்த அழகே அவளுக்குப் பல தொல்லைகளை வரவழைத்தது. இளம் விதவைகளும், கணவனால் கைவிடப்பட்டவர்களும் என்னென்ன பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்குமோ அத்தனையும் இவளுக்கும் வந்தன. எப்படியோ மனத்தைக் காத்துக்கொண்டு, பிரச்னைகளை சமாளித்தாள். அத்தகைய சமயங்களில், உதவுவதற்காக இல்லாவிட்டாலும், குடும்பத்தில் ஆண்பிள்ளை ஒருவன் இருக்கிறான் என்ற தற்காப்பு தைரியத்துக்காகவாவது தனக்கு ஒரு சகோதரன் இருந்திருக்கலாம் என்று எண்ணிக்கொள்வாள். தான் வாடினாலும் தன்னை நம்பியிருக்கும் இரு மகள்களை வாடவிடக்கூடாது என்பதற்காக வெளியூருக்குச் சென்று சிலகாலம் குடியேறினாள். உள்ளூரில் இருந்த ஓநாய்களைவிட வெளியூர் வெறிநாய்களின் தொல்லை மோசமான அனுபவங்களைத் தரவே, மீண்டும் சொந்த ஊருக்கே திரும்பினாள். நாட்கள் நரகமாக நகர்ந்துகொண்டிருந்த நிலையில்தான், அவளைப் பார்க்க வந்தான், ரங்கராஜுலு. அதே ஊர்க்காரன்தான். “ஊருக்குள் பெரிய கடை வைக்க வந்திருக்கிறார்கள் வெளியூர்க்காரர்கள். மொத்த விலையில் விற்கப்போகிறார்களாம்’’ என்று அவன் சொன்னது அவளுக்கு அவ்வளவு பெரிய ஆர்வத்தைத் தரவில்லை. “சரி, அதுக்கு என்ன?” என்றுதான் அசுவாரசியமாகக் கேட்டாள். “கடைக்குத் தேவையானவற்றை கொள்முதல் செய்வதற்கு, சிறுசிறு விவசாயிகளின் விளைபொருட்களை எல்லாம், முன் கூட்டியே நல்ல விலைக்கு எடுத்துக் கொள்ள இருக்கிறார்கள். அதோடு உற்பத்தியைப் பெருக்கிக்கொள்ள விருப்பம் உள்ளோர்க்கு, விசேஷ பயிற்சியும் தரவிருக்கிறார்கள். நீங்களும் சிறிய விவசாயிதானே அதனால்தான்…” அவன் சொல்ல, சட்டென்று ஓர் ஆர்வம் தொற்றிக்கொண்டது அவளை. கூடவே ஒரு சந்தேகமும் எட்டிப்பார்க்க, அதை மறைத்துக்கொண்டு, “இந்த விஷயத்தை என்கிட்டே சொல்லணும்னு உனக்கு எப்படிப்பா தோணிச்சு? ஊருக்குள்ளே வேற யாருக்கிட்டேயாச்சும் சொல்லியிருக்கலாம் இல்லையா?” கேட்டாள். “ஊருக்குள்ளே பலபேர்கிட்டே சொன்னேன். அவங்கள்ளாம் ரொம்பவே தயங்கறாங்க. நேர்ல போய் பேசிப்பாருங்க. அவங்க சொல்ற விஷயங்கள் சரிப்பட்டு வந்தா, மேற்கொண்டு வியாபாரம் பேசிக்குங்க. இல்லைன்னா பொருளைத் தரவேண்டாம். இது ஒண்ணும் கட்டாயமில்லைன்னும் சொல்லிட்டேன். இருந்தாலும் யோசிக்கிறாங்க.” “சரி, என்கிட்டே சொல்லலாம்னு எப்படித் தோணிச்சுன்னு கேட்டேனே!” “அந்த நிறுவனத்துல பெண்களுக்கு முன்னுரிமை தர்றதா சொன்னாங்க. உங்க நினைப்புதான் முதல்ல வந்திச்சு... அதான்...” அவன் சொல்லச் சொல்ல, அவளுக்குள் நம்பிக்கை அதிகமாயிற்று. ஏதாவது ஒரு பிடிமானம் கிடைக்காதா என்று நினைப்பவர்களுக்கு, நம்பிக்கையான எந்த ஒரு சொல்லும் ஆறுதல் தரும். அப்படித்தான் இருந்தது அவளுக்கு. நல்லதொரு வாய்ப்பு வரும்போது அதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சீதம்மாவுக்கு ஏதோ ஓர் உள்ளுணர்வு சொன்னது. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள அவள் தயாரானாள். ரங்கராஜுலுவிடம் மேலும் சில விவரங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டாள். அடுத்த நாளே, குறிப்பிட்ட நிறுவனைத்துக்குச் சென்றாள். அதன் அலுவலக அமைப்பே அவளை மிரளச் செய்தது. கொஞ்சம் தயங்கியவள் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு உள்ளே சென்றாள். அங்கே... அவள் சற்றும் எதிர்பாராத அந்த விஷயம் நடந்தது. (பார்வை விரியும்) - நந்தன் மாசிலாமணி