புலனாய்வுப் பத்திரிகையின் ஆசிரியர் குழு மீட்டிங் நடந்துகொண்டிருந்தது. உதவி ஆசிரியர் முதல் நிருபர்கள் வரை ஆளாளுக்கு யோசனை சொல்லிக்கொண்டிருந்தார்கள்.“சார், அந்த ..... சினிமாவில் நடித்த நடிகை இப்போ லைம் லைட்ல இருக்காங்க. அவங்களப்பத்தி ஏதாவது நியூஸ் போட்டா...!” நிருபர் ஒருவர் சொல்ல… “சார், இப்பல்லாம் சின்னத்திரை, பெரியதிரைன்னு வித்தியாசம் இல்லாம யூத்தான நடிகைகள்ல இருந்து ஆண்டீஸ் ஆகிட்ட நடிகைகள் வரைக்கும் அவங்களே இன்ஸ்டால தாறுமாறா ஸ்டில்ஸ் போடறாங்க. குத்துப் பாட்டுக்கு டான்ஸ் ஆடறது, ஆண்களோட நெருக்கமா இருக்கறது, தூக்கலான ட்ரெஸ்ஸை துணிஞ்சு போட்டுகிட்டு போஸ் தர்றது இப்படி ஸ்டில்ஸ் மட்டுமல்லாம, வீடியோ ஷாட்ஸே போடறாங்க. நாமகூட அந்த மாதிரி செய்தியையும், படத்தையும் போட முடியாது. அந்த அளவுக்குத் துணிஞ்சு ‘இறங்கிட்டாங்க’ நடிகை நியூஸ் எல்லாம் சரிவராது!” சொன்னார், இன்னொரு நிருபர். “யாராவது அரசியல் கட்சி தலைவரைப்பற்றின கசமுசா காட்சி, ஆடியோ விவகாரத்தை செய்தியாக்கினால் என்ன?”“ஊஹூம்... அரசியல்வாதிகள், சாமியார்கள் லீலையெல்லாம் பற்றி மக்கள் இப்போ பெரிசா கவலைப்படறது கிடையாது. அரசியல்வாதிகளோட கட்சித் தலைமை, தொண்டர்கள், சாமியாரின் சீடர்கள் இதை எல்லாம் கண்டுக்கறதோ, கண்டிக்கறதோ கிடையாது. ‘கூந்தல் இருக்குற கொண்டை போடுறா... நமக்கு என்ன?’ங்கற ரேஞ்சுல இருக்காங்க, எல்லாரும். இன்னும் சொன்னா, ட்விட்டர், ஃபேஸ் புக் இப்படி சமூக வலைதளங்கள்ல இதையெல்லாம் தூக்கி சாப்பிடற மாதிரி பயங்கரமான சீன் எல்லாம் இருக்கு.” “இப்படி எல்லாத்துக்கும் ஒரு காரணம் சொன்னா, வேற என்னதான்யா நியூஸ் போடறது?”“விஜய், அஜித், ரஜினி இப்ப சிவகார்த்திகேயன்னு வெறி பிடிச்ச ரசிகர்கள் இருக்காங்க. நடிகைகள்ல சமந்தா, கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள் இருக்காங்க. இவங்களைப் பத்தி ஏதாவது கோக்க முடியுமான்னு பாருங்க!”“மூன்றெழுத்து நடிகையால் மூன்றெழுத்து நடிகர்கள் இருவருக்கு இடையே அடிதடி தகராறு... இப்படி ஏதாவது செய்ய முடியுமா பாருங்கள். அதுவும் முடியாவிட்டால், சினிமா ஃபீல்டில் இருந்து யாராவது ஒரு இத்துப் போன குஸ்திவீரர், பழைய தயாரிப்பாளர் என்று யாரையாவது பிடித்துப் பேட்டி எடுங்கள்!”“ ஆட்டோ சங்கர், வீரப்பன், சாமியார்கள், அரசியல் பேட்டி என்று எல்லோரும் செம்மையா செய்கிறார்கள். யூடூப் சேனல் வேறு தொடங்கி விஷூவலாக போடுகிறார்கள். ஏதாவது செய்து நாமும் இருக்கிறோம் என்று காட்டிக்கொள்ள வேண்டும். அப்போது தான் நமக்கு மரியாதை. பரபரப்பாக பேசப்பட்டால்தான், பத்திரிகைக்கு விளம்பரமும் வரும். அரசு அதிகாரிகள் யாராவது லஞ்சம் வாங்கினால் அவர்களைப் பற்றி செய்தி ஆக்குங்கள்; அதுதான் பிரச்னை வராது. ஐடியாக்கள் இப்படியே போனால் நாம் சீக்கிரம் கடையை மூடிக்கொண்டு போகவேண்டியதுதான்” என்றார், ஆசிரியர்..அதுவரை அமைதியாக இருந்த புது நிருபர், எழுந்தான்.“நேற்று ஒரு பைட்டு கிடைத்தது சார், இதோ இதைப் பாருங்கள் “என்று பென் டிரவ் ஒன்றைக் கொடுத்தான்.“என்னது இது?”என்றபடியே கம்பியூட்டர் சாக்கெட்டில் அதைச் செருகினார், ஆசிரியர். நடிகை, அரசியல் பிரமுகர், அல்லது சாமியார் என்று யாரோ ஒருவருடைய அஜால் குஜால் மேட்டராக இருக்கும் என்று ஆளுக்கு ஆள் வாய்பிளந்து காத்திருக்க, பென் ட்ரைவில் பதியப்பட்டிருந்த அந்தக் காட்சி, கம்ப்யூட்டர் திரையில் விரியத்தொடங்கியது. ஆர்கன்சாஸ் மாநிலத்தில் பென்டோன்வில் உள்ள வால் மார்ட்டின் தலைமையகம். அன்றைய தினம் அங்கே நடந்த மீட்டிங்கில் முக்கிய மேலாளர்கள் எல்லாம் குழுமியிருந்தார்கள்.1962ம் ஆண்டு சிறியளவில் தொடங்கப்பெற்ற ஒரு கடை, வால்மார்ட். இன்று இருபத்தேழு நாடுகளில் 11,000 கடைகள். 22 லட்சத்துக்கும் அதிகமானோர் அங்கே வேலை செய்கிறார்கள். முதன்மைச் செயல் அலுவலர், பகுதி மேலாளர்கள், ஸ்டோர் மேலாளர்கள் ஆகியோர்தான் நிர்வாகம் செய்கிறார்கள். எடுக்கப்படும் முடிவுகளை ஸ்டோர் மேலாளர்கள், மற்ற துறை தலைவர்களுக்கு தகவலாக அனுப்புவர். இவர்களுக்கு என்றே ஒரு பிரத்தியோக மென்பொருள் உள்ளது.உலகம் முழுவதும் தங்களின் கடையில் என்னென்ன பொருட் கள் விற்பனையாகின்றன. எந்த விலையில் எந்த மாநில மக்கள் வாங்குகிறார்கள், என்று சப்ளை செய்பவர்கள் அவர்களின் இடத்திலிருந்தே பார்க்கலாம். “நமக்கு நம்பகமான சில தகவல்கள் வந்திருக்கின்றன. காங்கிரஸ் உறுப்பினர், தொலைக்காட்சி நிறுவனம், பத்திரிகை நிறுவனம், பங்கு சந்தை என எல்லா இடங்களிலும் இத்தகவலை உறுதி செய்திருக்கிறார்கள். எனவே, நாம் இந்த விஷயத்தை எளிதில் ஒதுக்க முடியாது.சீனாவில் 180 நகரங்களில் 400க்கும் அதிகமாக நம்முடைய கிளைகள் இருக்கின்றன. நம்முடைய கிடங்கில் எப்போதும் எழுபது பில்லியன் மதிப்புள்ள பொருட்கள் இருக்கும். அப்படி இருந்தால்தான் எந்த சரக்கு தேவைப்பட்டாலும் உடனடியாக நம்மால் சமாளிக்க முடியும். இப்போது மேலும் சரக்கு தேவைப்படுமா? அல்லது கடைகளை மூடவேண்டிய நிலை உருவாகுமா? இந்த இருவேறு நிலைகளில் எதனை எப்படி எதிர்கொண்டு சமாளிப்பது?” செயல் இயக்குநர் கேட்க, அங்கே இருந்த அனைவரின் முகமும் பேயறைந்ததுபோல் ஆயிற்று..சென்னை கிண்டியில் உள்ள இந்திய அரசின் புலனாய்வு துறையின் அலுவலகம். காவல் தலைமையின் ஆணைப்படி, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் குறிப்பிட்டதேதியில் பணியாற்றிய எல்லோரும் அங்கே குழுமியிருந்தார்கள். அவர்களின் முன், டி.சி.,ஏ.சி., கமிஷனர் ஆகியோருடன், டெல்லியில் இருந்துவந்த அதிகாரிகளும் இருந்தார்கள். ‘குறிப்பிட்ட தினத்தில் வித்தியாசமாக எதையாவது பார்த்தார்களா?’ என்று அவர்களிடம் உயரதிகாரிகள் கேட்டனர். கான்ஸ்டபிள் பழனியும், மணியும் ஒன்றாக எழுந்து அந்த விஷயத்தைச் சொல்ல, அதிர்ந்தார்கள் அதிகாரிகள்.”சார்... கோவிச்சுக்கக் கூடாது. அன்னைக்கு நடந்த விஷயம் வித்தியாசமா இருந்ததால, எதுக்கும் இருக்கட்டும்னு அதை மொபைல்ல பதிவு செய்தேன்..!”பழனி தயங்கித் தயங்கிச் சொல்ல, துள்ளிக் குதித்தார்கள் அதிகாரிகள். “வெல்டன்... எங்கே அது போன்ல இருக்கா?” கேட்டார்கள்.திட்டப்போகிறார்கள் என்று எதிர்பார்த்ததற்கு மாறாக, பாராட்டவே நிம்மதியடைந்த பழனி, “யெஸ் சார். போன்ல இருந்தா சேஃபா இருக்காதுன்னு பென் டிரைவ்ல காப்பி செஞ்சு வைச்சிருக்கேன் சார்..!” சொன்னபடியே அந்த பென் ட்ரைவை கொடுத்தான்.அவன் கொடுத்த அந்த பென் டிரைவ்வை கம்யூட்டரில் போட்டவர்கள், அதில் விரிந்த நபரின் உருவத்தை உற்றுப் பார்த்தார்கள்.தொலைவில் இருந்து எடுக்கப்பட்டது. போதாக்குறைக்கு பிக்ஸல் மிகக் குறைவான கேமரா. அதோடு செல்ஃபி எடுப்பதுபோல் ஃப்ரெண்ட் கேமராவால் எடுக்கப்பட்டது. இதனால் தெளிவின்றி இருந்தது, படம். ‘’கம்ப்யூட்டர் செக்ஷன்ல இருந்து, ஃபோட்டோ ஷாப் ஒர்க் தெரிஞ்ச யாரையாவது உடனே கூப்பிடுங்க!” கமிஷனர் உத்தரவு பறக்க, அடுத்த நிமிடம் வந்து நின்ற கணினிக் கலைஞர், தெளிவில்லா அந்தப் படத்தை ஜூம் செய்து, திருத்தங்கள் செய்து, ‘’ இதோ இப்போ பாருங்க சார்!” என்று சொல்ல, அங்கே குழுமி இருந்த அத்தனைபேரும் கம்ப்யூட்டரை நோக்கித் திரும்பினார்கள். அதில் தெளிவாக இருந்தது அன்றைய தினம் சென்னை அமெரிக்க துணை தூதரகத்தின் முன்பாக வந்து நின்ற நபரின் உருவம்.அவசர அவசரமாக அதைப் பிரிண்ட் செய்து, உலகம் முழுக்க தேடப்படும் குற்றவாளிகளின் படங்களோடு ஒப்பிடத் தொடங்கினார்கள். (பார்வை விரியும்)- நந்தன் மாசிலாமணி