தொழிலாளர் தினமான மே 1, நூற்றாண்டை கொண்டாடவிருக்கும் மகிழ்வான இந்தத் தருணத்தில், தொழிலாளர் சட்டத் திருத்த மசோதாவை அனைத்துக் கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றியிருப்பது பல்வேறு தரப்பினரையும் கடும் அதிர்ச்சியில் தள்ளியுள்ளது.ஒரு ப்ளாஷ்பேக்... 2006 -2011 காலகட்டத்தில் திருப்பூர் தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ-வாக இருந்த கோவிந்தசாமி, அன்றைய தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்த த.மோ.அன்பரசனை சந்தித்து ஒரு கோரிக்கையை வைத்தார். அதாவது, அன்று தொழிலாளர்களின் எட்டு மணி நேர வேலை நேரத்தை பத்து மணி நேரமாக உயர்த்துவது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தை அது. இதையறிந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை கோவிந்தசாமியை கட்சியை விட்டே நீக்கியது. அவரது கோரிக்கையை கருணாநிதி கடைசிவரை ஏற்கவில்லை... அந்த கோவிந்தசாமிதான் தற்போது தி.மு.க. தொழிற்சங்கமான தொ.மு.ச.வின் துணைத் தலைவராக இருக்கிறார். நிகழ்காலத்துக்கு வருவோம்....ஏப்ரல் 12-ம் தேதி நாளொன்று 12 மணி நேரம் வேலை செய்யும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டபோது, பெயரளவுக்கு எதிர்ப்பதாக எதிர்க்கட்சிகளும் தி.மு.க.வின் தோழமைக் கட்சிகளும் கருத்துக்களை பதிவு செய்தனர். ஆனாலும் தி.மு.க. அரசு, விடாப்பிடியாக இந்த மாசோதாவை ஏப்ரல் 21-ம் தேதி நிறைவேற்றியிருக்கிறது.சிறு சிறு விஷயங்களில் கூட நற்பெயர் எடுக்க விரும்பும் திராவிட மாடல் ஆட்சிக்கு, இவ்வளவு பெரிய தொழிலாளர் விரோத சட்ட மசோதாவை நிறைவேற்ற யார் அழுத்தம் கொடுத்தது? என்ற கேள்வியுடன் தொழிலாளர் நலத்துறை அதிகாரி ஒருவரை சந்தித்தோம்....”கடந்த அ.தி.மு.க ஆட்சியின்போது எட்டு மணி நேர வேலையை பத்து மணி நேரமாக அதிகரிக்க திட்டமிட்டபோது அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் கடுமையாக எதிர்த்தார். 1990ல் சென்னை சிந்தாதிரிப்பேட்டை நேப்பியர் பூங்காவிற்கு, ‘மே தினப் பூங்கா’ எனப் பெயர் சூட்டி, அங்கு மே தின நினைவுச் சின்னத்தை அமைத்துக் கொடுத்தவர் அப்போதைய முதல்வராக இருந்த கருணாநிதி. அதேபோல 2006 - 2011 தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்துடன் விவசாயத் தொழிலாளர் நல வாரியம், மீனவர் நலவாரியம் உட்பட 35 அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியங்களை உருவாக்கி, கோடிக்கணக்கான ரூபாயை நலத்திட்ட உதவிகளாக வழங்கியவர் கருணாநிதி. இப்போது அதே தி.மு.க அரசுதான் 12 மணி நேரமாக வேலை நேரத்தை அதிகரிக்கும் சட்ட மசோதாவைக் கொண்டு வந்திருக்கிறது” என்றவர் அதன் பின்னணி குறித்தும் விவரித்தார்.. “உலக முதலீட்டாளர்கள் மாநாடு அடுத்த ஆண்டு ஜனவரி 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் பல நாடுகளிலிருந்து தொழிலதிபர்களை அழைத்து வந்து, தமிழகத்தில் முதலீடு செய்ய வைக்க வேண்டுமென முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதற்காக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சுற்றிச்சுழன்று வேலை பார்த்து வருகிறார்.தமிழகத்தில் முதலீடு செய்யவும், தொழிற்சாலைகளை தொடங்கவும் அமைச்சர் தங்கம் தென்னரசு அழைப்புவிடுத்தபோது, தமிழகத்தில் தொழிற்சாலைகளில் வேலை நேரம் 8 மணி நேரமாக இருப்பதை பல பன்னாட்டு நிறுவனங்கள் அதிருப்தியுடன் சுட்டிக்காட்டின.இதனால் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புதிய தொழிற்சாலைகள், முதலீடுகளை ஈர்ப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து முதல்வர் ஸ்டாலினுடன், அமைச்சர் தங்கம் தென்னரசு நடத்திய ஆலோசனைக்குப் பிறகுதான் புதிய சட்ட மசோதா கொண்டுவர முடிவு செய்யப்பட்டு, தற்போது மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இதன் தொடர்ச்சியாக மே 2-ம் தேதி நடைபெறவுள்ள தமிழக அமைச்சரவையில் புதிய முதலீடுகள், வெளிநாட்டு தொழிற்சாலைகள் தமிழகத்தில் தொடங்குவதற்கு சில சலுகைகள் வழங்குவது தொடர்பாக அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்படவுள்ளது” என்றார்..சி.ஐ.டி.யு. தொழிற்சங்க நிர்வாகியும் ஹூண்டாய் போராட்டங்களை முன்னெடுத்தவருமான எஸ்.கண்ணணிடம் இதுபற்றி பேசினோம். “மத்திய பா.ஜ.க. அரசு 2020, மே 20 அன்று தொழிலாளர் சட்டத் திருத்தங்களை அமல்படுத்தியது. அதன் ஒரு சாரத்தைத்தான் தி.மு.க. அரசு திருத்தம் செய்து தற்போது நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதா தொழிலாளர்களுக்கு பயன்தராது, முதலாளிகளுக்குத்தான் பலன் தரும்.எட்டு மணி நேரத்திற்கு மேலாக வேலை செய்தால், ஓவர் டூட்டியாக கருதப்பட வேண்டும். தற்போது ஓவர் டூட்டிக்கு தொழிற்சாலைகள் சம்பளம் கொடுத்துவருகின்றன. இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால் ஓவர் டூட்டிக்கு சம்பளம் கிடைக்காது. தொழிற்சாலைகளின் உரிமையாளர்களுக்கு பல கோடி ரூபாய் மிச்சமாகும். அதன் பின்னணியில்தான் இதை சட்டமாக்கத் துடிக்கிறது தி.மு.க அரசு. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் செய்த வேலையை தி.மு.க. அரசு தற்போது செய்துள்ளது அதிர்ச்சியிலும் அதிர்ச்சி” என்றார்..மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் கனகராஜ் நம்மிடம், “தமிழக அரசு நிறைவேற்றியுள்ள சட்டத் திருத்த மசோதாவில் புதிதாகக் கொண்டு வந்துள்ள 65ஏ விதியின்படி 12 மணி நேரம் அல்ல, 20 மணி நேரம்கூட வேலை நேரத்தை அதிகரித்து தொழிலாளர்களிடம் வேலை வாங்க முடியும். மேலும் 12 மணி நேரமாக வேலை நேரத்தை அதிகரிப்பதன் மூலம் ஆட்குறைப்பு செய்வதோடு வேலையில்லா திண்டாட்டம்தான் அதிகரிக்கும்.நோக்கியா தொழிற்சாலையை தமிழகத்தில் தொடங்க முதல் 10 ஆண்டுகளுக்கு 50 சதவிகித வரிச் சலுகை வழங்கப்பட்டது. ஆனால், அந்த தொழிற்சாலையை 10 ஆண்டுகளுக்குப் பிறகு மூடிவிட்டுச் சென்றுவிட்டனர். அவர்களிடமிருந்து எந்த வரிப்பணத்தையும் தமிழக அரசால் பெற முடியவில்லை. ஆகவே, புதிய தொழிற்சாலைகள் வருவதாக சலுகைகள் வழங்குவதாக நினைத்து தொழிலாளர்களை வஞ்சிக்கக்கூடாது” என்றார்..மேற்கண்ட திட்டத்தை வரவேற்கிறார் திருப்பூர் ஏற்றுமதி மற்றும் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் முத்துரத்தினம். “திருப்பூர் வொர்க் ஸ்டைல் 12 மணி நேரம்தான். முன்பெல்லாம் 16 முதல் 20 மணி நேரம்கூட உழைத்தனர். இப்படி தொழிலாளர்கள் நேரம், காலம் பார்க்காமல் உழைத்ததன் காரணமாகத்தான் நகராட்சி, மாநகராட்சி, மாவட்டம் என திருப்பூர் வளர்ச்சி அடைந்துள்ளது.ஆண்டுக்கு 65 ஆயிரம் கோடி அளவிற்கு உள்நாட்டு, வெளிநாட்டு உற்பத்தியை திருப்பூர் தொழிலாளர்கள் செய்துதருகிறார்கள். திருப்பூர் தொழிலாளர்களின் உழைப்பைப் பார்த்துத்தான் இன்று 12 மணி நேர வேலை நேரத்தை தமிழக அரசு அதிகரித்துள்ளதாகக் கருதுகிறேன். இது வரவேற்கத்தக்கது” என்றார்.திருச்செங்கோடு எம்.எல்.ஏ.வும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவருமான ஈஸ்வரனும் இந்தத் திட்டத்தை வரவேற்கிறார். “தி.மு.க. அரசு கொண்டு வந்துள்ள இந்த சட்ட மசோதா தொழிலாளர்களுக்கும் தொழில் நிறுவனங்களும் பயனுள்ளதாகத்தான் இருக்கும்.சீனா உள்பட பல நாடுகளில் வேலை நேரம் என்பது 12 மணி நேரமாக இருக்கிறது. வெளிநாட்டு நிறுவனம் ஒன்று தமிழகத்திற்கு வருவதாக இருந்தால், வெளிநாட்டில் இருப்பது போன்ற கட்டமைப்பு இருந்தால் மட்டுமே அவர்களால் முதலீடு செய்ய முடியும்.ஏற்கெனவே 12 மணி நேரம்தான் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். தற்போது சட்டத்தின் மூலம் அதை வரைமுறைப்படுத்துகிறார்கள். இதனால் தொழிலாளர்களுக்கு விபத்து ஏற்படும் போது இழப்பீடு கிடைக்க வழிவகை ஏற்படும். 1 மாதம் சம்பளம் வாங்கும் தொழிலாளர்கள் இனி ஒன்றரை மாதம் சம்பளம் வாங்குவார்கள். இந்த மசோதாவால் தொழிலாளர்கள் பயனடைவார்கள்” என்கிறார்.சட்டமசோதா நிறைவேற்றியது தொடர்பாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசனிடம் பேசினோம். “தற்போது கொண்டுவந்துள்ள சட்ட மசோதா, எல்லா தொழிற்சாலைகளுக்கும், தொழிலாளர்களுக்கும் பொருந்தாது. புதிதாக வரக்கூடிய நிறுவனங்களில் எந்த நிறுவனம் கேட்கிறதோ அந்த நிறுவனம் மட்டுமே பயன்படுத்திக்கொள்ள முடியும். அதற்கும் அங்கு பணியும் தொழிலாளர்களின் சம்மதம் தேவை.அதேபோன்று தொழிலாளர் நலன் தொடர்பான புதிய விதிகளையும் வகுக்க உள்ளோம். இந்த புதிய விதிகளில் தொழிலாளர்களுக்கு விரோதமான எந்த சாராம்சமும் இடம் பெறாது. ஆகவே, இந்த புதிய சட்ட மசோதா தொடர்பாக யாரும் அச்சம் அடையத் தேவையில்லை” என்றார்.1923ம் ஆண்டுதான் இந்தியாவில் முதல்முறையாக மே தினம் கொண்டாடப்பட்டது. வரும் மே 1-ம் தேதி நூற்றாண்டு விழாவில் அடியெடுத்து வைக்கும் நேரத்தில், “ இது என்ன தி.மு.க அரசு உழைக்கும் வர்க்கத்தினருக்குக் கொடுத்திருக்கும் மே டே கிஃப்ட்டா? என்று கொந்தளிக்கிறார்கள் தொழிலாளர்கள். காட்சிகள் மாறுமா என்று காத்திருந்து பார்ப்போம்!பாபு, படங்கள் : ம.செந்தில்நாதன்