-நந்தன் மாசிலாமணிஅமெரிக்காவின் தூதரக அலுவலகம். புதிதாக தூதரகப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு முன்பாக உரையாற்றிய அந்தத் தூதரக பயிற்சியாளர், பேச்சை நிறைவு செய்து விட்டு வாழ்த்துகள் என்று சொன்னதும் கூட்டம் கலைந்தது.. பெக்கெட் உலகம் சுற்றும் கனவுடன், தன்னை எந்த நாட்டுக்கு அனுப்பப்போகிறார்கள் என்ற சிந்தனையில் ஆழ்ந்திருக்க, அவன் நண்பன் ஜய்டன் சோகத்தில் மூழ்கினான். சற்று நேரத்துக்குப் பின் சுயநினைவுக்கு திரும்பிய பெக்கெட். ஜய்டனின் சோகத்தை கவனித்தான். “என்ன ஒரு மாதிரியாக இருக்க, ஹனி டிராப் பத்தி தானே?” என்றான் பெக்கெட். “ அது மட்டும் இல்லை, எந்த நாட்டிற்கு அனுப்பப் போகிறார்கள், செல்லும் இடம் எனக்கு ஏற்ற மாதிரி இருக்குமா? என்றெல்லாம் நினைத்தால்தான்...”வார்த்தைகளை நிறுத்தினான், ஜய்டன். "நம் வாழ்க்கை நம் கையில்தான் இருக்க வேண்டும். கவனமாகவும் அதேசமயத்தில் என் விருப்பப்படி தான் வாழ்வேன் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். அப்படி வாழ்வதில் நாம் ராஜதந்திரத்தைக் கையாளவேண்டும்!” என்றான், கிராண்ட் ஆலிவர்..நண்பர்கள் மூவரும் தினமும் பணி முடிந்தவுடன் ஒன்றாக சுற்றத் தொடங்கினார்கள். மூவரும் நட்பாக இருந்தார்களே தவிர, மூவருக்கும் எல்லா விஷயத்திலுமே தனித்தனி டேஸ்ட். குணாதிசயமும் அப்படித்தான். ஒவ்வொரு நாளும் ஒரு நாட்டின் உணவை சுவைப்பது, கூடவே விதவிதமான ஒயின் என்று உல்லாசமாக இருந்தார்கள். மற்ற இருவரிடமிருந்து ஜய்டன் கொஞ்சம் அதிகமாகவே மாறுபட்டான். சாப்பாடு, ஒயின் என்று எல்லாவற்றிலுமே ஓர் அளவுதான். அதை மீறமாட்டான். காரணம், அவனது தோழி ஜாய்ஸ். பள்ளிக்கூடத்தில் அவனுடன் படித்தவள். அந்த நட்பின் அடிப்படையில் அடிக்கடி அவள் வீட்டுக்குச் சென்றவன், அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட காதலில் விழுந்து, அவளையே திருமணம் செய்துகொள்ளக் காத்திருக்கிறான். ஜாய்ஸ் ஒரு நிறுவனத்தில் பணிபுரிவதால், வார இறுதியில்தான் அவளை சந்திக்க முடியும். அதற்காக இருவரும் காத்துக்கொண்டிருப்பார்கள். இருவருக்குள்ளும் அப்படி ஒரு காதல். நண்பர்கள் மூவரும் ஒருநாள் வெளியே சென்றுவிட்டுத் திரும்பியபோது, அவர்களுக்கான மெசேஜ் வந்திருந்தது..பெக்கெட் சிரியாவுக்கு, ஜய்டன் மொராக்கோவுக்கு, ஆலிவர் நபிபியாவுக்கு அமெரிக்கத் தூதர்களாகச் செல்லவேண்டும். இரண்டு வாரங்களில் தயாராகும்படி உத்தரவு வந்துவிட்டது. முதலில் அதிர்ச்சி அடைந்தது ஆலிவர்தான், “ஐரோப்பிய நாடுகள் ஏதாவது ஒன்றை எதிர்பார்த்தேன், இங்கே போய் என்ன செய்வது?” என்று அலுத்துக்கொண்டான். “நீ தான் ராஜ தந்திரம் தெரிந்தவன் ஆச்சே... உன் திறமையைக் காட்ட நல்ல சந்தர்ப்பம், விட்டுவிடாதே!” என்றான், பெக்கெட். ஜய்டன் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளவில்லை.“எனக்கு ஜாய்ஸ்கூட வந்தால் போதும்... உலகத்தின் எந்த மூலையில் இருக்கிற நாடாக இருந்தாலும் சரி. அவள் என்ன யோசிக்கிறாள் என்று தெரியவில்லை. முதலில் அவளுக்கு போன் செய்து கேட்க வேண்டும்!’’ அவன் பேச்சில் காதல் வழிந்தது. பெக்கெட் மட்டும் எந்த வருத்தமும் இல்லாமல் கனவுகளில் மூழ்கினான். அடுத்த வாரமே அவரவர் செல்லவேண்டிய நாடுகளின் விவரங்களைச் சொல்லி ட்ரெயினிங் கொடுக்க ஆரம்பித்தார்கள்.. சீனக்குடிமகன் ஃபாசில், இந்தியாவில் சென்னையில் உள்ள நம் துணைத்தூதரகத்திற்கு அடைக்கலம் கேட்டு வந்திருக்கிறானா? என்று அதிபர் கேட்டதுமே, வெளியுறவுத்துறை அமைச்சரின் உடல் லேசாக நடுங்கியது. அதற்குக் காரணம், திகைப்பு என்பதைவிட, நம்மையும் இப்படிக் கண்காணிப்பார்களோ என்ற அச்சம் அவர் மனதில் உள்ளுக்குள் ஓடியதுதான். முந்தைய நாள் இரவு ஒரு விருந்தில் கலந்து கொண்டதும், அங்கே மெக்ஸிகோ நாட்டின் இளம் பெண் ஒருத்தியை சந்தித்துப் பேசியதும் அவர் கண் முன்னே வந்து சென்றன. ‘நல்லவேளை ‘அவளிடம் பிறகு சந்திக்கலாம்!’ என்றுதான் சொன்னோம்’என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டார் . பேச்சை அதிபர்தான் தொடங்கினார். " வந்திருப்பவனை, சீனாவே நம்மை உளவுப் பார்க்க அனுப்பி இருக்குமோ என்ற கோணத்திலும் விசாரிக்கச் சொல்லுங்கள்” என்றார், பாதுகாப்பு ஆலோசகரிடம். அவர் சரி எனச் சொல்ல, “இந்த ஆபரேஷனுக்கு என்ன பெயர் வைத்திருக்கிறீர்கள்?” கேட்டார், அதிபர். "ஆபரேஷன் ’ரெட் கிரேன்’ என்று பெயரிட்டுள்ளார்கள். அவனைப் பற்றிய எல்லா விவரங்களையும் நம் ஆட்கள் இன்னும் நான்கு நாட்களில் எடுத்து விடுவார்கள்.”" அது என்ன பெயர்? அவனது விவரங்களை மிக கவனமாக எடுக்கச் சொல்லுங்கள் "" அது ஒரு பறவையின் பெயர் " என்று சொன்ன பாதுகாப்பு ஆலோசகர், அந்தப் பறவையின் சிறப்பையும் சொன்னார். கவனமாகக் கேட்டுக்கொண்ட அதிபர், "ஓகே " என்றார்.."முதலில் நம்முடைய பாதுகாப்பு கருதியும் அவனுடைய பாதுகாப்பிற்காகவும், மருத்துவப் பரிசோதனை செய்யச் சொல்லியிருக்கிறோம். அதோடு, சீனாவில் உள்ள அவனின் குடும்பத்தினரைக் கண்டுபிடித்து, அவர்களிடம் DNA டெஸ்ட் எடுக்க ஏற்பாடு செய்துள்ளோம். அவன் பிறந்தது முதல் இன்று வரையிலான மொத்த விவரங்களையும் சேகரிக்க, முப்பது பேர் கொண்ட குழு முழுமூச்சாக வேலை செய்துகொண்டிருக்கிறது. அதோடு, மிஸ்டர் ப்ரெசிடெண்ட், நீங்கள் சொன்ன மாதிரி சீனாவின் உளவாளியா என்ற கோணத்திலும் விசாரிக்கிறார்கள்" என்றார், பாதுகாப்பு ஆலோசகர். " சரி, இந்த விஷயத்தில் பிற நாடுகளில் உள்ள நம் நாட்டு தூதரகங்கள்... குறிப்பாக, இஸ்லாமிய நாடுகளிலும் சீனாவிலும் உள்ள தூதரகங்கள் செய்ய வேண்டியது என்ன? பொருளாதாரம், பாதுகாப்பு, வெளியுறவுப் பிரச்னை, சீனாவில் உள்ள நம் நாட்டு முதலீடுகள், சீனா நம் நாட்டில் செய்துள்ள முதலீடுகள், சீனாவின் நேச, எதிர்ப்பு நாடுகள், ரஷ்யா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் எந்த மாதிரி நிலைப்பாடு எடுப்பார்கள்? என்பது குறித்தெல்லாம் அவரவருக்குத் தோன்றும் கருத்தைச் சொல்லுங்கள். அதோடு, இந்த விஷயத்தை நாம் எப்படி அணுக வேண்டும் என்பதையும் கூறுங்கள்" என்று அனைவரையும் பார்த்துச் சொன்னார் அமெரிக்க அதிபர். சற்று நேர விவாதங்களுக்குப் பிறகு, “நமது வெளியுறவுத் துறை அலுவலகத்தில் இருந்து, இந்தியாவில் டெல்லியில் உள்ள அமெரிக்காவின் இந்தியத் தூதரை தொடர்புகொண்டு , அவரை உடனே சென்னைக்கு சென்று அங்கு உள்ள நிலைமையை கண்காணிக்கச் சொல்லுங்கள். மௌனமாக இருப்பதோடு, இந்த விஷயத்தை வெளியே யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொள்ளச் சொல்லுங்கள்!” என்றார் உத்தரவு தொனியில். சென்னை விமான நிலையம். காலை ஒன்பது மணி. டெல்லியில் இருந்து வந்த விமானம் தரையில் கட்டுப்பாட்டு அறையின் அனுமதியோடு அலுங்காமல் மெதுவாக இறங்கியது. அமெரிக்காவின் இந்திய தூதர் ஹென்றி வந்து இறங்கினார். முந்தைய நாள் தூக்கத்தைத் தொலைத்த அடையாளமும் ஒருவித கவலையும் ஒருசேர அவர் முகத்தில் ஒட்டிக்கொண்டிருந்தன.அவரை வரவேற்க சென்னை துணைத் தூதரக அலுவலர் வந்திருந்தார். அவரின் ஒரு சிறிய பெட்டியை எடுத்துக் கொண்டு விமான நிலையத்தில் இருந்து கிளம்பினார்கள்.சென்னையில் அண்ணா சாலையில் இருக்கும் துணைத் தூதரக அலுவலகத்தின் வாசலுக்கு நெருக்கமாக காரை நிறுத்தி இறங்கி, மின்னல் வேகத்தில் உள்ளே நுழைந்தார்கள். “இந்த விஷயம் வெளியில் யாருக்கும் தெரியாதுதானே?’’ மிகமிக மெல்லிய குரலில் கேட்டார். (பார்வை விரியும்)