`பூ விழுந்தா பூ பாதை... தலை விழுந்தா சிங்கப்பாதை' என டாஸ் போடாத குறையாக மதுரை மாநாட்டை முன்வைத்து கபடி ஆடிக் கொண்டிருக்கிறார்கள், அ.தி.மு.க.வினர். மாநாட்டின் மூலம் தென்மாவட்ட மக்களின் பல்ஸ் பார்க்க எடப்பாடி திட்டமிட்டிருப்பதுதான், ஹைலைட்.எப்படி நடக்கிறது மாநாட்டுப் பணி? மதுரை விமான நிலையம் அருகே கருப்பணசாமி கோயில் எதிரே பத்து லட்சம் தொண்டர்கள் ஒரே இடத்தில் கூடும்வகையில் மாநாட்டுப் பந்தல் அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகளில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.தொடக்கத்தில், இடத்தைத் தேர்வு செய்ததில் இவர்கள் மூவருக்கும் முரண்பாடு ஏற்பட்டது. இதனால், `மாநாடு ஒழுங்காக நடக்குமா?' என திண்டுக்கல் சீனிவாசனிடம் புலம்பித் தீர்த்துள்ளனர். இதனைக் கேள்விப்பட்ட வேலுமணியும் தங்கமணியும் தலையிட்ட பிறகே, பணிகள் வேகமெடுத்தன.விமான நிலையத்தின் அருகே மாநாடு நடக்கவிருப்பதால், மாநாட்டில் மைக் செட், வீடியோ கேமராக்கள், ட்ரோன் கேமராக்கள் ஆகியவற்றைப் பயன்படுத்த அனுமதி பெறுவதில் சிக்கல் இருப்பதாகவும் தகவல். மாநாட்டுக்கான பந்தல் அமைந்துள்ள இடத்தின் நடுவே பாழடைந்த கிணறு ஒன்று உள்ளது. அந்த இடத்தைப் பார்வையிட்ட சி.வி.சண்முகம், `திறந்தவெளியில் இப்படி ஒரு பேய்க்கிணறு இருந்தால் கூட்டநெரிசலில் பலர் உள்ளே விழுந்து இறந்துவிடலாம்' என்று சொன்னதோடு, அவரே நேரில் இருந்து அக்கிணற்றை மூடிவிட்டு, காவலுக்கு ஆட்களையும் நியமித்துவிட்டுச் சென்றிருக்கிறார்..எகிறிய எடப்பாடி!கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மாநாடு நடக்க உள்ள இடத்துக்கு திடீர் விசிட் அடித்தார், எடப்பாடி பழனிசாமி. பணிகள் மந்தகதியில் நடப்பதைப் பார்த்துக் கொதித்தவர், “காசும் கொடுத்தாச்சு, பந்தல் அமைக்க ஆள்களையும் அனுப்பியாச்சு, அவங்ககிட்டே வேலை வாங்கறதுல என்ன சுணக்கம்... இப்பவே இப்படி இருந்தீங்கண்ணா, மத்த எல்லா வேலைகளையும் எப்படிச் செய்வீங்க? இதுல மட்டும் ஏதாவது சொதப்பல் நடந்துச்சு, நான் சும்மா இருக்க மாட்டேன்” என எகிறிவிட்டுச் சென்றிருக்கிறார்.`தொண்டர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து தருவதில் மாவட்ட செயலாளர்கள் சொதப்பிவிடக் கூடாது' என்ற எண்ணமும் எடப்பாடிக்கு இருக்கிறது. இதனால், மாநாட்டுக்கு வரும் தொண்டர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்து சமையல்காரர்கள் எனப் பார்த்துப் பார்த்து அனுப்பியுள்ளதாகக் கூறுகின்றனர், அ.தி.மு.க நிர்வாகிகள்.மேலும், ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் தலா பத்தாயிரம் தொண்டர்களை அழைத்துவரவும் மாவட்டச் செயலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அதிகளவில் தொண்டர்களை அழைத்துவரும் மா.செ-க்களுக்கு தகுதிக்கேற்ப பரிசுகளும், புதிய பொறுப்புகளும் வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது.இன்னொரு பக்கம், சர்ச்சைகளும் சலங்கை கட்டி ஆடாமல் இல்லை… மதுரையில் இப்படியொரு மாநாட்டை நடத்தச் சொன்னதே, செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், ராஜன்செல்லப்பா ஆகியோர்தான். ஆனால் அவர்களுக்கு முக்கியத்துவமும் தரப்படவில்லை என்றொரு தகவலும் வலம் வருகிறது. இதனால் எந்தப் பொறுப்பையும் ஏற்காமல் சிலர் கழன்று கொள்ள, மாநாட்டுப் பணிகளில் சற்று தொய்வு ஏற்பட்டது. அதைச் சரிசெய்து பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர், கொங்கு மண்டல நிர்வாகிகள்..சீண்டிய தேவர் அமைப்பு!``ஜெயலலிதா இருந்தபோது கட்சி மாநாடு என்றால் மா.செ.க்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், அமைச்சர்கள் என எல்லோரும் வரிந்து கட்டிக்கொண்டு வேலை செய்வார்கள். இப்போது அப்படியொரு சுறுசுறுப்பை பார்க்க முடியவில்லை. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் என்ற அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் எடப்பாடிக்கு வழங்கிவிட்டாலும், தென் மாவட்டங்களில் தனக்கு ஆதரவு இருப்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு இருக்கிறது. அதற்காகவே இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்தவேண்டும் என நினைக்கிறார்'' எனக் குறிப்பிடும் மதுரை மாவட்ட அ.தி.மு.க நிர்வாகி ஒருவர்,``தென்மாவட்டங்களில் உள்ள சில அ.தி.மு.க நிர்வாகிகள், சசிகலாவின் சமூகத்துக்கு சாதகமாக நடந்து கொள்ள வாய்ப்பிருப்பதால்தான் மேற்கு மண்டலம், சென்னை, மத்திய மண்டலம் என பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்களைக் களமிறக்கும் வேலைகள் நடந்து வருகின்றன'' என்கிறார்.சாதி மாநாடு அல்ல!அதேநேரம், மாநாடு நடைபெறும் நாளில் எடப்பாடியை கண்டித்து, தேவரின கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக செய்தி ஒன்று வெளியானது, அ.தி.மு.க தரப்பை அப்செட் ஆக்கியுள்ளது. இதுகுறித்துப் பேசும் ஆர்.பி.உதயகுமார், “தேவர் கூட்டமைப்பினர் போராட்டம் நடத்தப்போவதாகச் சொல்வது, வெறும் விளம்பரத்துக்காக. அது வெற்றிபெறாது. அ.தி.மு.க. நடத்துவது, அரசியல் மாநாடே தவிர சாதி மாநாடு அல்ல. எனவே, பிறரின் விளம்பரக் கனவு பலிக்காது” என்கிறார்.ராஜன் செல்லப்பாவோ, ``என்னுடைய தொகுதிக்குள்தான் மாநாடு நடைபெறும் இடம் வருகிறது. மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இருந்துவரும் தொண்டர்களே மாநாட்டுப் பந்தலை நிரப்பிவிடுவார்கள். அவர்கள் வந்து செல்வதற்கான வாகனங்களைக் கொடுக்க முடியாததால், நாங்களே தொண்டர்கள் எண்ணிக்கையைக் குறைத்துக் கொண்டிருக்கிறோம். இதுதான் யதார்த்தம்” என்கிறார்.தென்மாவட்ட மக்களின் பல்ஸ், தேர்தல் வரும்போது தெரிந்துவிடும்! - பாலாபடங்கள்: எம். இராமசாமி