சிலுவம்பாளையம் கிளைச் செயலாளராக அ.தி.மு.க.வில் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய எடப்பாடி பழனிசாமி, 10 ஆண்டுகள் அமைச்சர், அதில், நான்கு ஆண்டுகள் முதல்வர் என அரியணையின் ருசியை அனுபவித்தவர். அந்த அதிகாரம் இல்லாததால்தான், அமாவாசை, அமாவாசையாக நாள்களை எண்ணி வருகிறார். இதன் நீட்சியாக, தனக்கு வேண்டப்பட்ட 10 அதிகாரிகளை தி.மு.க வளையத்துக்குள் வைத்து, அவர் உளவு பார்த்து வருவதுதான் அறிவாலயத்தை அதிரவைக்கும் ஹாட் லைன். ``எடப்பாடி பழனிசாமி முகாமில் என்ன நடக்கிறது?'' என அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். `` தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று இரண்டாண்டுகள் கடந்தும் தமிழக மக்களுக்கு பெரியளவில் மகிழ்ச்சி இல்லை. சாதாரணப் பேருந்தில் மகளிருக்கு இலவசப் பயணத்தைத் தவிர சொல்லிக் கொள்ளும்படியாக எந்தத் திட்டங்களும் இல்லை. மாறாக, சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வு, நெய், தயிர் உள்ளிட்ட பால் பொருட்களின் விலை உயர்வு, மதுபான விலை உயர்வு என மக்கள் தினம்தினம் அவதிப்படுகின்றனர். மேலும், சட்டம் ஒழுங்கு பிரச்னையும் தினம்தினம் விஸ்வரூபம் எடுக்கிறது. சமீபத்தில் நெய்வேலி என்.எல்.சி. விவகாரத்திலும் தி.மு.க. அரசின் செயல்பாட்டால் அதிருப்தியே நிலவியது. அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோர் மீதான அமலாக்கத்துறை சோதனையால் அரசுக்கு மக்கள் மத்தியில் அவப்பெயர்தான் ஏற்பட்டுள்ளது. உச்சபட்சமாக மகளிர் உரிமைத் தொகையில் நடந்து வரும் குளறுபடிகள், பெரும்பான்மையான பெண்களை அப்செட்டில் ஆழ்த்தியுள்ளது. தொடரும் ரகசிய சந்திப்புகள்! விடியல் தரப்போவதாகக் கூறித்தான் ஆட்சிக்கு வந்தார் ஸ்டாலின். ஆனால், `எடப்பாடி பழனிசாமி ஆட்சியே மேல்' என்று பேசும் அளவுக்குத்தான் நிலைமை இருக்கிறது. இந்தநிலையில்தான், ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பதுபோல, எடப்பாடியுடன் ரகசிய தொடர்பில் இருக்கும் பல அதிகாரிகள், இப்போதும் கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடியின் வீட்டுக்கே வாரம் ஒருமுறை நேரில் வந்து சந்திக்கிறார்கள்'' என விவரித்தவர், `` கிரீன்வேஸ் இல்ல சாலைக்கு வரவிரும்பாத அதிகாரிகள், சேலத்தில் உள்ள அவரது வீட்டுக்கே சென்று ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த சந்திப்பின் போதெல்லாம் அதிகாரிகள் சொல்லக்கூடிய ரகசிய தகவல்கள், எடப்பாடிக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்து வருகிறது. தலைமைச் செயலகத்தில் வலம்வரும் அந்த உயர் அதிகாரிகள், எடப்பாடியை சந்திக்கும் போதெல்லாம், தி.மு.க. ஆட்சி குறித்தும் ஸ்டாலினின் செயல்பாடு குறித்தும் தங்களது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்க்கின்றனர். அதுமட்டுமின்றி துறைவாரியாக அமைச்சர்கள், அவரது பி.ஏ.க்கள் செய்யும் முறைகேடுகள் தொடர்பாகவும் சில முக்கிய தகவல்களை கூறி வருகின்றனர். இந்த தகவல்களை எல்லாம் டெல்லி பா.ஜ.க. தலைமைக்கு உடனுக்குடன் அ.தி.மு.க தரப்பில் கொண்டு செல்லப்படுவதால்தான், எடப்பாடிக்கு டெல்லி பா.ஜ.க. தலைமை ஏக மரியாதை கொடுக்கிறது” என்கிறார். தொடர்ந்து, சேலத்தில் முக்கிய நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி பகிர்ந்துகொண்ட விஷயங்களைப் பட்டியலிட்டார். “ஆகஸ்ட் 20-ம் தேதி மதுரையில் நடைபெறவுள்ள மாநாடு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அந்த மாநாட்டில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள், நிகழ்ச்சி நிரல்கள், மாநாடு ஏற்பாடு தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்திய பிறகு, நிர்வாகிகளுடன் அமர்ந்து மதிய உணவை சாப்பிட்டார். மீண்டும் சி.எம். ஆவேன்! அப்போது தன்னை சந்திக்க வந்த அதிகாரிகள் கூறும் தகவல்களை தெரிவித்தவர், ‘ஆட்சியில் நாம் இல்லாவிட்டாலும், நமக்கு விசுவாசமான அதிகாரிகள் 10 பேர் கோட்டையில் இருக்கிறார்கள். அவர்கள், என்னை அடிக்கடி சந்தித்து பல தகவல்களைக் கொடுத்து வருகிறார்கள். என்னிடம் பேசும்போது, ‘யாருடைய கட்டுப்பாடும் இல்லாமல் தி.மு.க. அரசு சென்று கொண்டிருக்கிறது. தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் மாதிரி, ஆளாளுக்கு அதிகாரத்தை கையில் எடுத்து நாட்டாமை செய்து வருகிறார்கள். துறைவாரியாக என்ன நடக்கிறது? எப்படியெல்லாம் முறைகேடு நடக்கிறது என புள்ளிவிவரங்களுடன் கூறுகின்றனர். எனக்கு எதுவும் தெரியாது என நினைக்கிறார்கள். ஆனால், கோட்டையில் நடக்கும் அத்தனை தகவல்களும் எனக்கு அப்டேட் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். துறைரீதியான முறைகேடுகளுக்கான ஆவணங்கள் மட்டும்தான் இன்னும் கைக்கு வரவில்லை. அது மட்டும் கிடைக்கட்டும். அப்போது தெரியும் கொடநாடு வழக்கெல்லாம் ஒன்றுமில்லை என்று' எனக் கூறிவிட்டு, `இன்றைய தேதியில் சட்டமன்றத் தேர்தல் வைத்தால் அ.தி.மு.க. மாபெரும் வெற்றி பெறும். நான் சவால் விட்டுச் செல்கிறேன். மீண்டும் சி.எம். ஆகிவிடுவேன். டெல்லி பா.ஜ.க. தலைவர்களுக்கு தி.மு.க. தொடர்பான அனைத்து தகவல்களையும் கொடுப்பதால்தான், ஓ.பி.எஸ்ஸை டெல்லி கண்டுகொள்ளாமல் இருக்கிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு பெரிய ஷாக் கொடுப்போம். குறைந்தபட்சம் 15 தொகுதிகளுக்கு மேல் அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறும். இந்தத் தேர்தலோடு தமிழகத்துக்கும் சட்டமன்றத் தேர்தல் வந்தால் நமக்கு வெற்றி நிச்சயம். ஆகவே, வரும் காலம், அ.தி.மு.க.வுக்கு வசந்தகாலம்தான்’ என உற்சாகமாக பேசி முடித்தார்” என்றார். யார் அந்த 10 அதிகாரிகள்? அவரிடம், ``யார் அந்த 10 அதிகாரிகள்?'' எனக் கேட்டோம். “அதை வெளிப்படையாக என்னால் கூற முடியாது. கிரிவல அதிகாரி, தங்கத்தின் மாற்று பெயரைக் கொண்ட அதிகாரி, பிரகாசமான அதிகாரி ஒருவர், முருகக் கடவுளின் பெயர் கொண்ட அதிகாரி ஒருவர், காமெடி நடிகரின் பெயரை கொண்ட அதிகாரி உள்ளிட்ட பத்து பேர்” என பூடகமாகக் கூறிவிட்டு நகர்ந்தார். ``எடப்பாடியின் சி.எம் கனவு சரிதானா?'' என அரசியல் விமர்சகர் ஒருவரிடம் பேசினோம். “ஓவர் தன்னம்பிக்கை உடம்புக்கு ஆகாது என்பார்கள். அதுபோல எடப்பாடியின் பகல் கனவு பலிக்கப் போவதில்லை. பா.ஜ.க.வுடன் ஒருமுறை கூட்டணி வைத்து மத்திய அரசில் அங்கம் வகித்ததற்கே தற்போது வரையில் தி.மு.க அவப்பெயரை தூக்கிச் சுமக்கிறது. ஒருமுறை கூட்டணிக்கே தி.மு.க.வுக்கு இந்தப் பெயர் என்றால், தொடர்ந்து மூன்று முறை தேர்தல் கூட்டணியை வைத்த எடப்பாடியின் நிலைமையை யோசித்துப் பாருங்கள். சிக்கல் கொடுக்கும் 3 விஷயங்கள்! கருணாநிதி ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட அந்தக் கறையைத் துடைக்கத்தான் ஸ்டாலின் தொடர்ந்து பா.ஜ.க எதிர்ப்புப் புள்ளியில் உறுதியாக இருக்கிறார். ஆனால், தன்னைத் தற்காத்துக் கொள்ள பா.ஜ.க.வை தோளில் சுமக்கிறார், எடப்பாடி. அவரது கனவுக்கு வேட்டுவைக்கும் மிக முக்கியமான முதல் பாயிண்ட் இது. அடுத்ததாக, முக்குலத்தோர் சமூகத்தின் வாக்குகள் எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க.வுக்குக் கிடைக்கப் போவதில்லை. காரணம், சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் என மூன்று முக்கியமான நபர்களின் முதுகில் அவர் குத்தியதுதான். இதனால் தென்மாவட்டங்களில் உள்ள 65 தொகுதிகளில் அ.தி.மு.க வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. என்னதான் மாநாடு போட்டாலும் அந்தச் சமூக மக்கள், நிச்சயமாக எடப்பாடியை ஆதரிக்க மாட்டார்கள். மூன்றாவதாக, எடப்பாடியின் சொந்தத் தொகுதியில்கூட பா.ம.க.வின் ஆதரவு இல்லாமல் அவரால் வெற்றி பெற முடியாது என்பதுதான் எதார்த்த நிலவரம். வடமாவட்டங்களில் வன்னியர் வாக்குகளைப் பெறுவதற்காக 10.5 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வந்தாலும் 2021 சட்டமன்றத் தேர்தலில் அது பெரிதாக எடுபடவில்லை. இப்போது, அ.தி.மு.க-பா.ம.க கூட்டணி என்பது தொங்கலில் இருக்கும் சூழலில் வடமாவட்டங்களை எடப்பாடியால் எட்டிப் பிடிக்க முடியுமா என்பது மில்லியன் டாலர் கேள்வி. இவ்வாறாக, முக்கோண சிக்கலில் தவிக்கும் எடப்பாடி பழனிசாமி, வெறும் 10 அதிகாரிகளைக் கைக்குள் போட்டுக் கொண்டு, `ஆட்சியைப் பிடித்துவிடுவேன்' என சவடால் விடுவதெல்லாம் வெற்று கோஷம்தான். அதை சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. தமிழக பா.ஜ.க.வினர் கொடுக்கும் குடைச்சல்களை எதிர்த்தே அரசியல் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்ட எடப்பாடி பழனிசாமி, மீண்டும் கோட்டையை எட்டிப் பிடிப்பதற்கு கடுமையான போராட்டங்களைத் தாண்டித்தான் வர வேண்டியது இருக்கும்'' என்கிறார் உறுதியாக. எடப்பாடியின் எண்ணம் ஈடேறுமா என்பதற்கான விடையும் விரைவில் தெரியத்தானே போகிறது? - பாபு படங்கள் : ம.செந்தில்நாதன்