வன்னியர்களுக்கு, 10.5 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக முதல்வர் இன்னும் ஒரு மாதத்தில் முடிவு அறிவிக்க வேண்டும்; இல்லையெனில் என் தம்பிகளை என்னால் கட்டுப்படுத்த முடியாது...’ என்று திடீரென பொங்கியிருக்கிறார், பா.ம.க. தலைவரான அன்புமணி. காரணம் என்னவென்றால், நாடாளுமன்றத் தேர்தல் சடுகுடு.இதுகுறித்து பேசிய தி.மு.க. நிர்வாகி ஒருவர், ‘‘கடந்த 13ம் தேதி சட்டமன்றத்தில் இடஒதுக்கீடு குறித்து கவனஈர்ப்பு தீர்மானத்தை பா.ம.க. கொண்டுவந்து ஸ்கோர் செய்ய நினைத்த்து. ஆனால், அன்றைய தினம் கே.பி.முனுசாமி, வேல்முருகன், கொங்குநாடு ஈஸ்வரன் போன்றோர் காரசாரமாகப் பேசி பா.ம.க.விற்கு சட்டசபையில் செக் வைத்துவிட்டனர். இதை ரசித்த முதல்வர் ஸ்டாலினும் தனது பங்கிற்கு, ‘இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. உச்ச நீதிமன்றம் வரை சென்றோம். அதற்காக ஜி.கே.மணி கூட நேரில் என்னை சந்தித்து திமுக அரசு சிறப்பான நடவடிக்கை எடுத்து இருப்பதாக பாராட்டினார் என கோத்துவிட்டார். முதல்வர் பதிலை கேட்டு அரண்டு போன ஜி.கே.மணி, ‘10.5 சதவீத இடஓதுக்கீட்டை முதல்வர் செயல்படுத்துவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. டாக்டர் ராமதாஸ் ஒரு நாள் கூட முதல்வருக்கு எதிராக பதிவிட்டதில்லை. முதல்வரை பாராட்டியே வருகிறார்’ என்று பம்மினார். இட ஒதுக்கீட்டை வைத்து சட்டசபையில் சலசலப்பு உண்டாக்க நினைத்து தோற்றுப் போயிருக்கிறார்கள்’’ என்றார்..இப்போது இட ஒதுக்கீடு குறித்து அன்புமணி பேசியது குறித்து பா.ம.க. மூத்த நிர்வாகி ஒருவரிடம் கேட்டதும், ‘‘அ.தி.மு.க.வை கட்டாயப்படுத்தி எப்படியோ 10.5% இடஒதுக்கீட்டை ராமதாஸ் வாங்கிவிட்டார். ஆனால், நீதிமன்றத்தில் இடஒதுக்கீடுக்கு தடை நீடித்து வருகிறது. இந்த விஷயத்தில் தி.மு.க. சுணக்கமாக இருப்பதால், தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு பா.ம.க. தள்ளப்பட்டுள்ளது.நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதற்குள் வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு விவகாரத்தில் மீண்டும் ஒரு பிரமாண்ட போராட்டத்தை முன்னெடுக்க பா.ம.க. முடிவு எடுத்துள்ளது. இதற்காக பா.ம.க., வன்னியர் சங்கம் சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டு, அந்த நிர்வாகிகள் வன்னியர் சமுதாயத் தலைவர்கள், நிர்வாகிகளை நேரில் சந்தித்துப் பேசி வருகின்றனர். ஒட்டுமொத்த வன்னிய அமைப்புகளையும் திரட்டி ஆர்ப்பாட்டம், போராட்டம், உண்ணாவிரதம், பொதுக்கூட்டம், சாலை மறியல், கலெக்டர் அலுவலகம் முற்றுகை, ரயில் மறியல் என பல்வேறு வகையான போராட்டங்கள் நடத்தி தி.மு.க. அரசுக்கு நெருக்கடி கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த போராட்டம் மூலம் மீண்டும் பா.ம.க.வை வலிமையடையச் செய்துவிட முடியும் என்று நம்புகிறார் அன்புமணி. இதற்காக வன்னிய சங்கங்கள் கூட்டாக நடத்தும் போராட்டங்களுக்கு எல்லாம் அன்புமணியே தலைமை தாங்கவும் முடிவு செய்திருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் பா.ம.க.வின் பலத்தை காட்டவேண்டிய அவசியம் இருப்பதால், அதற்காக இடஒதுக்கீடு பிரச்னையை மீண்டும் எழுப்புகிறார். ஆனால், உண்மையில் இடஒதுக்கீடு கிடைத்துவிடக் கூடாது என்றே அன்புமணி நினைக்கிறார். தி.மு.க.வும் அதையே விரும்புகிறது. அ.தி.மு.க.வும் இந்த பிரச்னை தீர்வதை விரும்பவில்லை. எல்லா கட்சிகளும் வன்னியர்களை ஏமாற்றுகின்றன’’ என்றார் வேதனையுடன்..இடஒதுக்கிடு தொடர்பாக வன்னிய சமூக நற்பணி மன்றத்தைச் சேர்ந்த நாகரத்தினமிடம் பேசினோம். ‘‘10.5 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக பாரதிதாசன் தலைமையில் ஒரு கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. எங்களது சங்கத்தின் சார்பில் சில தினங்களுக்கு முன்பு பாரதிதாசனை நேரில் சந்தித்து, விரைந்து செயல்பட்டு தீர்வு தரவேண்டுமென கோரிக்கை வைத்தோம்.. அப்போது பாரதிதாசன், ‘தணிகாசலம், அம்பாசங்கர் கமிஷன் கொடுத்த தரவுகள் மட்டுமே தற்போது அரசிடம் இருக்கின்றன. ஆனால் உச்சநீதிமன்றம் கேட்கும் புதிய தரவுகள் நம்மிடம் இல்லை. எனவே அரசிடம் இதுகுறித்து கேட்டிருக்கிறேன்’ என தெரிவித்ததைக் கேட்டு அதிர்ந்துவிட்டோம். இப்போது புதிய தரவுகள் திரட்டுவதில் தி.மு.க. சுணக்கம் காட்டி வருகிறது. அதே நேரத்தில் பா.ம.க.வுக்கும் இடஒதுக்கீடு விவகாரத்திற்கு போராடுவதாகத் தெரியவில்லை. ஏனென்றால், இடஒதுக்கீட்டை வைத்து மட்டும் தான் அரசியல் செய்ய முடியும் என பா.ம.க.விற்கு தெரியும். இழந்த செல்வாக்கை இடஒதுக்கீடு போராட்டம் மூலம் பெற்றுவிடலாம் என அன்புமணி பகல் கனவு காண்கிறார்...’’ என்றார். இடஒதுக்கீடு நடவடிக்கை தொடர்பாக எடுத்துவரும் நடவடிக்கை குறித்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் கேட்டதும், ‘‘பல்வேறு சமுதாய மக்கள் இங்கு வாழ்கின்றனர் எனவே, எடுத்தோம் கவிழ்த்தோம் என இட ஒதுக்கீட்டு விசயத்தில் செயல்பட முடியாது. எண்ணிக்கை அடிப்படையில் எந்த ஜாதிக்கும் இட ஒதுக்கீடு கொடுக்க கூடாது என நீதிமன்றம் கூறியுள்ளதாகவும், அதற்குரிய சமூக, பொருளாதார தரவுகளை திரட்ட வேண்டும் என்பதால் வன்னியர் உள் ஒதுக்கீட்டிற்காக முதலமைச்சர் உத்தரவுப்படி செயல்பட்டு வருகிறோம்..’’ என்றார். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பா.ம.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ. ரவிராஜிடம் கேட்டோம். ‘‘பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது போல ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் தள்ளிப்போட்டுவிட்ட தி.மு.க. அரசு சட்டமன்றத்திலும் சரியாக பதில் சொல்லவில்லை. தமிழ்நாடு என்பது சமூகநீதிக்கான மண், இங்கிருந்து தான் சமூக நீதி தொடங்குகிறது. அப்படிப்பட்ட சமூக நீதி மண்ணிலே இடஒதுக்கீட்டிற்கு தடையாக இந்த அரசு இருக்கிறதோ என்ற ஐயம் ஏற்படுகிறது. சாராய கடைக்கும், சாராய விற்பனைக்கும் முக்கியத்துவம் தரும் முதல்வர், இடஒதுக்கீட்டிற்கும் முக்கியத்துவம் கொடுத்து இடஒதுக்கீட்டை அமுல்படுத்த வேண்டும். இல்லையென்றால், 1987 போன்று தமிழகத்தை ஸ்தம்பிக்க வைக்கும் மாபெரும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்...’’ என்றார். தேர்தல் வரப்போகுதுன்னா, போராட்டமும் வரத்தானே செய்யும். _ ரய்யான் பாபு