கேரளாவுக்குப் போகாதீங்க..!ஆ.ராஜாவுக்கு பா.ஜ.க. ஸ்கெட்ச்..? நீலகிரி கிறுகிறு படித்தேன். 2 ஜியில் ஆ... அய்யோ... ஆ.ராசா ஊழல் என்று நாடாளுமன்றத்தில் கத்திக் கதறி கூச்சல் போட்டு சபையை நடத்தவிடாமல் கபட நாடகம் ஆடி மக்களிடம் அவதூறு பிரசாரம் செய்து ஒன்றியத்தில் ஆட்சியைப் பிடித்தது போல் நீலகிரி எம்.பி. ஆ.ராசா மீது பல்வேறு பழிகளைக் கூறி அத்தொகுதியை கைப்பற்ற அண்ணாமலை ஆயத்தமாகிறார். ஆனால், நீலகிரி மட்டுமல்ல தமிழகத்தில் எந்தத் தொகுதியிலும் பா.ஜ.க. வெற்றிபெற வாய்ப்பே இல்லை. மக்கள் தெளிவாக, விழிப்புணர்வோடு உள்ளார்கள். _ பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர். கேரளத்து சாக்கடை தமிழக மக்களுக்கா? தொடரும் முல்லைப் பெரியாறு துயரம் செய்தியின் வாயிலாக, முல்லைப் பெரியாறு விஷயத்தில் தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தக் கூடாது என்ற அடிப்படை உண்மை தெரியவருகிறது. சட்டமன்றம் நடந்து கொண்டிருந்த தக்க சமயத்தில் தமிழக அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றிருந்த விதம் பாராட்டத்தக்கது.._ இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி. குட்கா கைது விறுவிறு..!Õ வம்பானந்தா கோடை வெயிலில்கூட அனல் பறக்க வைத்துவிட்டாரே. ஆட்சியில் இருக்கும்போது எப்படிப்பட்ட வழக்காக இருந்தாலும் அமுக்கிவிடுவார்கள். அதே வழக்கு இப்போது அப்போதைய எதிர்க்கட்சி இன்று ஆளும்கட்சி மாட்டிக்கிட்டோமே என்ற முணுமுணுப்பு காதில் விழாமல் இல்லை. கைதுதான் எப்போது என்று தெரியவில்லை. பெரிய பெரிய மந்திரிகள் எல்லாம் ஊழல் செய்து தப்பித்துக் கொள்ளும்போது சாதாரண குட்கா வழக்கில் ஜெயிலுக்குப் போகவா போறோம் என்கிறார்களோ?_ தே.மாதவன், கோயமுத்தூர்.நூறு நாள் வேலையில் நடக்கும் போலி அடையாள அட்டைகளைப் போட்டு கிளார்க் மூலம் கிராமப் பஞ்சாயத்து தலைவர்கள் கொள்ளை அடிக்கிறார்கள். இதுபற்றி கலெக்டரிடம் புகார் அளித்த மதுரை மாவட்டம் மையிட்டான்பட்டி நாகலட்சுமி, ஓடும் பஸ்ஸில் இருந்து குதித்து தற்கொலை செய்யக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.._ சு.ஆறுமுகம், கழுகுமலை.தமிழக எல்லைக்குள் குப்பைகளை கொட்டுவதும் கழிவு நீரை தமிழக ஆற்றில் கலப்பதும் கடவுளின் தேசம் செய்யத்தக்கவை அல்ல. முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்பது போல, இந்த நிலைமை சரியாகும் வரை தமிழர்கள் கேரளாவுக்கு சுற்றுலா செல்வதை முழுமையாக தவிர்ப்பதுடன் இதர மாநில சுற்றுலாப் பயணிகளிடத்திலும் கேரளாவின் இந்த இழிசெயலை விளம்பரப்படுத்த வேண்டும்._ ஆர்.எஸ்.மனோகரன், முடிச்சூர்.நியூஸ் பெஞ்ச்சில் வெளியான 6 அரசியல் சங்கதிகள் எதிலும் வராத புது அரசியல் வில்லங்கத்தனமான விவரங்களை அக்கு வேறு ஆணி வேறு விவரித்த பாணி அருமையிலும் அருமை. _ த.சிவாஜிமூக்கையா, சென்னை.